3. இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி ………………….
அ) இடர்
ஆ) பேரிடர்
இ) மீட்பு
ஈ) மட்டுப்படுத்தல்
விடை: ஆ) பேரிடர்
2. பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்.
அ) தயார் நிலை
ஆ) பதில்
இ) மட்டுப்படுத்தல்
ஈ) மீட்பு நிலை
விடை: இ) மட்டுப்படுத்தல்
3. ஒரு திடீர் நகர்வு அல்லது புவிமேலோட்டின் திடீர் நடுக்கம் …………………… என அழைக்கப்படுகிறது.
அ) சுனாமி
ஆ) புவி அதிர்ச்சி
இ) நெருப்பு
ஈ) சூறாவளி
விடை: ஆ) புவி அதிர்ச்சி
4. கனமழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் …………………….. என அழைக்கப்படுகிறது.
அ) வெள்ளம்
ஆ) சூறாவளி
இ) வறட்சி
ஈ) பருவ காலங்கள் 15
விடை: அ) வெள்ளம்
5. …………………… வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
அ) ரேஷன் அட்டை
ஆ) ஓட்டுநர் உரிமம்
இ) அனுமதி
ஈ) ஆவணங்கள்
விடை: ஆ) ஓட்டுநர் உரிமம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு ……………
விடை: பேரழிவுகள்
2. பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் …………… என அழைக்கப்படுகிறது.
விடை: பேரிடர் மேலாண்மை
3. மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ………….. எனப்படும்.
விடை: சுனாமி
4. தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் …………..
விடை: 101
5. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ………….. பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.
விடை: பாதுகாப்பது
III. பொருத்துக:
1. புவிஅதிர்ச்சி – இராட்சத அலைகள்
2. சூறாவளி – பிளவு
3. சுனாமி – சமமற்ற மழை
4. தொழிற்சாலை விபத்து – புயலின் கண்
5. வறட்சி – கவனமின்மை
விடை:
1. புவிஅதிர்ச்சி – பிளவு
2. சூறாவளி – புயலின் கண்
3. சுனாமி – இராட்சத அலைகள்
4. தொழிற்சாலை விபத்து – கவனமின்மை
5. வறட்சி – சமமற்ற மழை
IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க:
1. கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது
காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
2. கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.
காரணம் (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன
அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.