2. சுற்றுலா
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ______________
அ) சமயச் சுற்றுலா
ஆ) வரலாற்றுச் சுற்றுலா
இ) சாகசச் சுற்றுலா
ஈ) பொழுதுபோக்குச் சுற்றுலா
விடை: அ) சமயச் சுற்றுலா
2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
அ) இராஜஸ்தான்
ஆ) மேற்கு வங்காளம்
இ) அசாம்
ஈ) குஜராத்
விடை: இ) அசாட்
3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
அ) கோவா
ஆ) கொச்சி
இ) கோவளம்
ஈ) மியாமி
விடை: ஈ) மியாமி
4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
அ) குஜராத்திலுள்ள நல்சரோவர்
ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
விடை: ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
அ) தருமபுரி
ஆ) திருநெல்வேலி
இ) நாமக்கல்
ஈ) தேனி
விடை: ஆ) திருநெல்வேலி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது.
விடை: A3
2. ‘காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் ___________ அம்சத்தை குறிக்கின்றது
விடை: கலாச்சார
3. சுருளி நீர்வீழ்ச்சி ___________ என்றும் அழைக்கப்படுகிறது
விடை: நிலநீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி
4. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ___________
விடை: மெரினா கடற்கரை
5. TAAI என்பதன் விரிவாக்கம் ___________.
விடை: இந்திய பயண முகவர்கள் சங்கம்
III. பொருந்தாததை வட்டமிடுக:
1. போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்
விடை: போக்குவரத்து
2. நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா
விடை: திகா
3. கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி
விடை: மயானி
4. ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு
விடை: களக்காடு
5. ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி
விடை: கோத்தகிரி
IV. பொருத்துக:
1. ஆனைமலை வாழிடம் – மேற்கு வங்காளம்
2. குரங்கு அருவி – கோவா
3. டார்ஜிலிங் – கோயம்புத்தூர்
4. இயற்கையின் சொர்க்கம் – உயர் விளிம்பு
5. அகுதா கடற்கரை – ஜவ்வாது
விடை:
1. ஆனைமலை வாழிடம் – உயர் விளிம்பு
2. குரங்கு அருவி – கோயம்புத்தூர்
3. டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்
4. இயற்கையின் சொர்க்கம் – ஜவ்வாது
5. அகுதா கடற்கரை – கோவா
V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்:
1. கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
2. கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது