4. டெல்லி சுல்தானியம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. _______________ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அ) முகமதுகோரி
ஆ) ஜலாலுதீன்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) இல்துமிஷ்
விடை: இ) குத்புதீன் ஐபக்
2. குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
அ) லாகூர்
ஆ) புனே
இ) தௌலதாபாத்
ஈ) ஆக்ரா
விடை: அ) லாகூர்
3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
அ) ரஸ்ஸியா
ஆ) குத்புதீன் ஐபக்
இ) இல்துமிஷ்
த ஈ) பால்பன்
விடை: இ) இல்துமிஷ்
4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பிரோஷ் ஷா துக்ளக்
இ) ஜலாலுதீன்
ஈ) கியாசுதீன்
விடை: ஈ) கியாசுதீன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்
விடை: கியாசுதீன் துக்ளக்
2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.
விடை: தேவகிரி
3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை __________ ஆதரித்தார்.
விடை: பால்பன்
4. டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
விடை: குத்புதீன் ஐபக்
5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _____________ ஆட்சியின் போது ஏற்பட்டது.
விடை: இல்துமிஷ்
III. பொருத்துக.
1. துக்ரில்கான் – காராவின் ஆளுநர்
2. அலாவுதீன் – ஜலாலுதீன் யாகுத்
3. பகலூல் லோடி – வங்காள ஆளுநர்
4. ரஸ்ஸியா – சிர்கந்தின் ஆளுநர்
விடை:
1. துக்ரில்கான் – வங்காள ஆளுநர்
2. அலாவுதீன் – காராவின் ஆளுநர்
3. பகலூல் லோடி – சிர்கந்தின் ஆளுநர்
4. ரஸ்ஸியா – ஜலாலுதீன் யாகுத்
IV. சரியான விடையை (✓) டிக் செய்யவும். கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக.
1) கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
விடை: அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
2) சரியான இணையைத் தேர்வு செய்க.
1. ஹொய்சாளர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரம்
3. காகதியர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
விடை: 3) காகதியர் – வாராங்கல்
3) தவறான கூற்றினை கண்டறியவும்.
அ) 1206 இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்.
ஆ) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.
இ) மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்.
ஈ) இப்ராகிம் லோடி 1526 இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை : ஆ) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்