2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
அ) கடற்கரைக் கோவில்
ஆ) மண்டகப்பட்டு
இ) கைலாசநாதர் கோவில்
ஈ) வைகுந்தபெருமாள் கோவில்
விடை: அ) கடற்கரைக் கோவில்
2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால். எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
அ) 1964
ஆ) 1994
இ) 1974
ஈ) 1984
விடை: ஈ) 1984
3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
அ) புடைப்புச் சிற்பங்கள்
ஆ) விமானங்கள்
இ) பிரகாரங்கள்
ஈ) கோபுரங்கள்
விடை: ஆ) விமானங்கள்
4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
அ) திருக்குறுங்குடி
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) திருவில்லிபுத்தூர்
விடை: அ) திருக்குறுங்குடி
5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நந்திவர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் ராஜராஜன்
விடை: ஆ) நந்திவர்மன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ………………… என்ற இடத்தில் உள்ளது.
விடை: மண்டகப்பட்டு
2. முற்கால சோழர் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றியது.
விடை: செம்பியன் மகாதேவி
3. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் …………………. ஆகும்.
விடை: 1000- கால் மண்டபம்
4. பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ……………………. பெயர்பெற்றது.
விடை: கோபுரங்கள்
5. விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ………………… ஆகும்.
விடை: மண்டபம்
III. பொருத்துக:
1. ஏழு கோவில்கள் – மதுரை
2. இரதிமண்டபம் – தாராசுரம்
3. ஐராவதீஸ்வரர் கோவில் – திருக்குறுங்குடி
4. ஆதிநாதர் கோவில் – கடற்கரைக்கோவில்
5. புதுமண்டபம் – ஆழ்வார் திருநகரி
விடை:
1. ஏழு கோவில்கள் – கடற்கரைக்கோவில்
2. இரதிமண்டபம் – திருக்குறுங்குடி
3. ஐராவதீஸ்வரர் கோவில் – தாராசுரம்
4. ஆதிநாதர் கோவில் – ஆழ்வார் திருநகரி
5. புதுமண்டபம் – மதுரை
IV. தவறான இணையைக் காண்க
1. 1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
விடை: 2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
2. கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை: ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
3. பொருந்தாததைக் கண்டுபிடி
திருவில்லிபுத்தூர் அழகர்கோவில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை
விடை: பொருந்தாதது எதுவுமில்லை (ஐந்து கோவில்களிலும் விஜயநகர நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன)
4. பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600-850
ஆ) கி.பி. 850-1100
இ) கி.பி. 1100-1350
ஈ) கி.பி. 1350-1600
விடைகள் :
அ) கி.பி. 600-850 : பல்லவர் காலம்
ஆ) கி.பி. 850-1100 : முற்காலச் சோழர் காலம்
இ) கி.பி. 1100-1350 : பிற்காலச் சோழர் காலம்
ஈ) கி.பி. 1350-1600 : விஜயநகர / நாயக்கர் காலம்
5. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர் காலகட்டடக்கலைப்பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.