Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

3. தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. 

1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

அ) விஜயாலயன்

ஆ) முதலாம் ராஜராஜன்

இ) முதலாம் ராஜேந்திரன்

ஈ) அதிராஜேந்திரன்

விடை: அ) விஜயாலயன்

 

 

2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?

அ) கடுங்கோன்

ஆ) வீரபாண்டியன்

இ) கூன்பாண்டியன்

ஈ) வரகுணன்

விடை: அ) கடுங்கோன்

 

 

3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

அ) மண்ட லம்

ந ஆ) நாடு

இ) கூற்றம்

ஈ) ஊர்

விடை: ஈ) ஊர்

4. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

அ) வீர ராஜேந்திரன்

ஆ) ராஜாதிராஜா

இ) ஆதி ராஜேந்திரன்

ஈ) இரண்டாம் ராஜாதிராஜா

விடை: இ) ஆதி ராஜேந்திரன்

 

 

5. சோழர்களின் கட்டக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?

அ) கண்ணாயிரம்

ஆ) உறையூர்

இ) காஞ்சிபுரம்

ஈ) தஞ்சாவூர்

விடை: ஈ) தஞ்சாவூர்

 

 

6. கீழக்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

அ) சோழமண்டலம்

ஆ) பாண்டிய நாடு

இ) கொங்குப்பகுதி

ஈ) மலைநாடு

விடை: ஆ) பாண்டிய நாடு

 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. _______________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.

விடை: முதலாம் ராஜராஜன்

2. _______________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.

விடை: முதலாம் ராஜேந்திரன்

3. _____________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.

விடை: ஐடில பராந்தக நெடுஞ்சடையன்

4. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது.

விடை: எழுத்து மண்டபம்

 

 

III. பொருத்துக.

1. மதுரை – உள்நாட்டு வணிகர்

2. கங்கை கொண்ட சோழபுரம் – கடல்சார் வணிகர்

3. அஞ்சு வண்ணத்தார் – சோழர்களின் தலைநகர்

4. மணி – கிராமத்தார் – பாண்டியர்களின் தலைநகர்

விடை:

1. மதுரை – பாண்டியர்களின் தலைநகர்

2. கங்கை கொண்ட சோழபுரம் – சோழர்களின் தலைநகர்

3. அஞ்சு வண்ணத்தார் – கடல்சார் வணிகர்

4. மணி – கிராமத்தார் – உள்நாட்டு வணிகர்

 

 

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. 

பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்.

1. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.

ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.

iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.

iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்

அ) i), ii) மற்றும் iii)

ஆ) ii), iii) மற்றும் iv)

இ) i), ii) மற்றும் iv)

ஈ) i), iii) மற்றும் iv)

விடை: இ) i), ii) மற்றும் iv)

 

 

2. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.

ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.

iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.

iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

அ) i) மற்றும் ii)

ஆ) iii) மற்றும் iv)

இ) i), ii) மற்றும் iv)

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

3. கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

காரணம் : நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று தவறு, காரணம் சரி.

ஈ) கூற்றும் காரணமும் தவறு

விடை: அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

 

4. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.

1. நாடு

2. மண்ட லம்

3. ஊர்

4. கூற்றம்

விடை:

1. மண்டலம்

2. நாடு

3. கூற்றம்

4. ஊர்

 

 

5. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.

1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.

2) உள்நாட்டுப்போர் தொடங்கியது.

3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.

4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.

5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.

6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.

விடை: 4, 1, 2, 5, 6, 3

 

6. கண்டுபிடிக்கவும்.

பிரம்மதேயம் 

 

 

தேவதானம் 

 

 

பள்ளிச்சந்தம் 

 

 

வேளாண்வேதம் 

 

 

 

 

விடை:

 

 

பிரம்மதேயம் 

பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலம்

தேவதானம் 

அரசு அதிகாரிகளுக்கும், பிராமணர்களுக்கும் அளிக்கப்பட்ட வரிவிலக்கு பெற்ற நிலங்கள் 

பள்ளிச்சந்தம் 

சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் 

வேளாண்வேதம் 

வேளாளர்களின் நிலங்கள் 

 

 

Join the conversation