Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

2. நிலவரைபடத்தை கற்றறிதல்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது …………………….

அ) புவியியல் (ஜியோகிராஃபி)

ஆ) கார்டோகிராஃப்ட்

இ) பிஸியோகிராபி

ஈ) பௌதீக புவியியல்

விடை: ஆ) கார்டோகிராஃப்ட்

 

 

2. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் …………………. திசைகள் ஆகும்.

அ) முக்கியமான

ஆ) புவியியல்

இ) அட்சரேகை

ஈ) கோணங்கள்

விடை: அ) முக்கியமான

 

 

3. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ……………………. அமைப்புகளைக் காட்டுகின்றன.

அ) இயற்கையான

ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட

இ) செயற்கையான

ஈ) சுற்றுச்சூழல்

விடை: ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக: 

1. புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக …………………. அமைகிறது.

விடை: நிலவரைபடம்

2. முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ………………… எனப்படும்.

விடை: திசைகள்

3. நிலவரைபடத்தில் உள்ள …………………. வரைபடத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.

விடை: குறிப்பு

4. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் …………………… என அழைக்கப்படுகின்றன

விடை: கிராமம் (அல்லது) நகர்ப்புற நிலவரைபடம்

5. சிறிய அளவை நிலவரைபடங்கள் ……… மற்றும் ………. போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.

விடை: கண்டங்கள், நாடுகள்

 

 

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக: 

1. வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.

விடை: அளவை

2. வெண்மை , பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.

விடை: வெண்மை

3. நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.

விடை: நிலவரைபட நூல்

4. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.

விடை: காலநிலை

 

 

IV. பொருத்துக: 

1. மேல் வலது மூலை – அடர்த்தி மற்றும் வளர்ச்சி

2. குறிப்பு – மாவட்டம் அல்லது நகரம்

3. பெரிய அளவை நிலவரைபடம் – இயற்கை நில அமைப்பு

4. இயற்கை அமைப்பு வரைபடம் – வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்

5. மக்கள் தொகை வரைபடம் – ‘N’ எழுத்து

விடை:

1. மேல் வலது மூலை – ‘N’ எழுத்து

2. குறிப்பு – வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்

3. பெரிய அளவை நிலவரைபடம் – மாவட்டம் அல்லது நகரம்

4. இயற்கை அமைப்பு வரைபடம் – இயற்கை நில அமைப்பு

5. மக்கள் தொகை வரைபடம் – அடர்த்தி மற்றும் வளர்ச்சி

 

 

 

 

 

 

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க: 

1. i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட நகர் தொகுதி ஆகும்.

ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.

iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அ) 1 மற்றும் iii சரி

ஆ) ii மற்றும் iii சரி

இ) i மற்றும் ii சரி

ஈ) i, ii மற்றும் iii சரி

விடை: ஈ) i, ii மற்றும் iii சரி

 

 

2. கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.

கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

அ) கூற்று 1 சரி, 2 தவறு

ஆ) கூற்று 1 தவறு, 2 சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

விடை: அ) கூற்று 1 சரி, 2 தவறு

Join the conversation