வரலாறு
8. பாமினி அரசு (கி.பி. 1347 -1526)
சுல்தான்கள்:
ஹசன்ககு (கி.பி. 1347 – 1357)
முதலாம் முகமது ஷா ( கி.பி. 1358 – 1377)
இரண்டாம் முகமது ஷா ( கி.பி. 1378 – 1397)
பெரோஷ் ஷா பாமினி (கி.பி. 1397 – 1422)
அகமது ஷா (கி.பி. 1422 – 1435)
மூன்றாம் முகமது ஷா (கி. பி. 1463 – 1482)
பாமினி பேரரசிலிருந்து பிரிந்த அரசுகள்
பாமினி அரசின் கடைசி மன்னர் 1524 முதல் 1527 வரை ஆட்சி செய்த கலிமுல்லா ஷா ஆவார்.
இவருக்குப் பிறகு பாமினி பேரார் ஐந்தாக சிதறியது. இவற்றை ஐந்து வம்சங்கள் ஆண்டன. அவை,
சுல்தானம்
வம்சம்
குறிப்பு
1.
அஹமது நகர்
நிஜாம்சாகி
(அகமது நிஜாம்சாகி)
• ஷாஜகானால் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
2.
பிஜபூர்
அடில் சாகி
(யூசஃப் அடில்ஷா)
• ஔரங்கசீப்பால் முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
* இப்ராஹிம் அடில்வதா இப்பாபின் சிறந்த அரசர் ஆவார்.
• இவர் பாரசீக மொழிக்கு பதிலாக டக்கினி எனும் மொழியை அறிமுகப்படுத்தினார்.
• மற்றொரு ஆட்சியாளரான முகமது அடில்ஷா கோல்கும்பாசை கட்டினார்.
3.
பீரார்
இமாம் சாகி (பதேயுல்லாகான்-II)
• தலைநகரம் – தௌலதாபாத் பின்னர் அகமதுநகரின் நிஜரம் சாஹி மன்னர்களால் இணைத்துக்கொள்ளப்பட்டது.
4.
கோல்கொண்டா
குதுப் சாகி (குலிகுதுப்ஷா)
• கோல்கொண்டா தலைநகர். இங்கு ஒரு புகழ்பெற்ற கோட்டை கட்டப்பட்டது.
• இம்மரபின் தலைசிறந்த மன்னர் முகமது குலித்துப்ஷா, இவர் ஐதராபாத் நகரை நிர்மானித்தார். புகழ்பெற்ற சார்பினாரைக் கட்டினார். இவரின் முக்கியத் துறைமுகம் மசூலிப்பட்டினம் ஆகும். ஒளரங்கசீப் இதனை முகலாயப் பேரரசுடன் இணைத்துக்கொண்டார்.
5.
பீதார்
பரீத் சாகி (அலிபரீத்)
• பீஜப்பூரின் அடில் சாகிகளாய் இணைத்துக்கொள்ளப்பட்டது.
நிர்வாகம்
+ பாமினி அரசின் நிர்வாகம் நிலமானிய முறையில் அமைந்தது. நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அவை தராஃபுகள் எனப்பட்டன.
+ தராஃப் ஒவ்வொன்றையும் தராஃப்தார் அல்லது அமீர் நிர்வகித்தார். ஆளுநர்கள் போர்க்காலங்களில் மன்னருக்குப் படைவீரர்களையும், போர்த் தளவாடங்களையும் அனுப்பி உதவினர், ஆளுநர்கள் வலிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.
பாமினி அரசின் கொடைகள்
* பாமினி அரசர்கள் கல்விக்காகச் சிறப்பு கவனம் செலுத்தினர். குறிப்பாக அரபு பாரசீக மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர். உருது மொழி வளர்ச்சியுற்றது. எண்ணற்ற மசூதிகள், மதரஸாக்கள், நூலகங்கள் கட்டப்பட்டன.
• முகமது கவான் கட்டிய மதாளா மற்றும் கல்தான்களால் கட்டப்பட்ட குல்பர்கா ஜூம்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, பீஜப்பூரில் உள்ள கோல்கும்பாஸ் கட்டடம் ஆகியன அவர்களின் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.