Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

ஒன்பதாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி

புவியியல்

அலகு: 3

வளிமண்டலம்

TEST 1/10

1. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்தக் கோளாகத் திகழ்வது எது?

2. அனைத்து உயிரினங்களும் புவியில் வாழ்வதற்கு மிக அவசியமானது எது? 

3. புவியைச்சூழ்ந்து காணப்படும் காற்று படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

4. புவியை வளிமண்டம் சூழ்ந்து காணப்படுவதற்கு காரணம்?

3.1 வளிமண்டல கூட்டமைப்பு

5. புவியின் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுபவை எவை? 

6. புவியின் வளிமண்டலத்தில் உள்ள நிரந்தர வாயுக்கள் எவை? 

7. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது? 

8. புவியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் எத்தனை சதவீதம் உள்ளது? 

9. புவியின் வளிமண்டலத்தில் (99%) விகிதத்தில் எவ்வித மாறுதலுக்கும் உட்படாமல் நிரந்தரமாக காணப்படும் வாயுக்கள் எவை?

10. புவியின் வளிமண்டலத்தில் ஒரு சதவீதத்தில் உள்ள வாயுக்கள் எவை? 

REVISION 1/10

அறிமுகம்

1. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்தக் கோளாகத் திகழ்வது எது?

விடை: புவி

2. அனைத்து உயிரினங்களும் புவியில் வாழ்வதற்கு மிக அவசியமானது எது? 

விடை: காற்று 

3. புவியைச்சூழ்ந்து காணப்படும் காற்று படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: வளிமண்டலம்

4. புவியை வளிமண்டம் சூழ்ந்து காணப்படுவதற்கு காரணம்?

விடை: புவியின் ஈர்ப்பு விசையே காரணமாகும். 

3.1 வளிமண்டல கூட்டமைப்பு

5. புவியின் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுபவை எவை? 

விடை: வாயுக்கள், நீராவி மற்றும் தூசுகள் 

6. புவியின் வளிமண்டலத்தில் உள்ள நிரந்தர வாயுக்கள் எவை? 

விடை: நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்  

7. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 78%

8. புவியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 21%

9. புவியின் வளிமண்டலத்தில் (99%) விகிதத்தில் எவ்வித மாறுதலுக்கும் உட்படாமல் நிரந்தரமாக காணப்படும் வாயுக்கள் எவை?

விடை: நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள்.

10. புவியின் வளிமண்டலத்தில் ஒரு சதவீதத்தில் உள்ள வாயுக்கள் எவை? 

விடை: ஆர்கான், கார்பன்-டை ஆக்சைடு , நியான் , ஹீலியம், ஓசோன் மற்றும் ஹைட்ரஜன் வாயு.

TEST 11/20

11. புவியின் வளிமண்டலத்தில் ஆர்கான் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

12. புவியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை ஆக்சைடு வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

13. புவியின் வளிமண்டலத்தில் நியான் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

14. புவியின் வளிமண்டலத்தில் ஹீலியம் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

15. புவியின் வளிமண்டலத்தில் ஓசோன் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

16. புவியின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

17. புவியின் வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்படும் வாயுக்கள் எவை? 

18. புவியின் வளிமண்டலத்தில் நீராவி எத்தனை சதவீதம் உள்ளது? 

19. புவியின் வானிலை நிகழ்வுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருப்பது எது? 

20. புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் பிற திடப் பொருட்கள் எவை? 

REVISION 11/20

11. புவியின் வளிமண்டலத்தில் ஆர்கான் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 0.93% 

12. புவியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை ஆக்சைடு வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 0.03%

13. புவியின் வளிமண்டலத்தில் நியான் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 0.0018%

14. புவியின் வளிமண்டலத்தில் ஹீலியம் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 0.0005% 

15. புவியின் வளிமண்டலத்தில் ஓசோன் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 0.00006% 

16. புவியின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் வாயு எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை: 0.00005%

17. புவியின் வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்படும் வாயுக்கள் எவை? 

விடை: கிரிப்டான், செனான் மற்றும் மீத்தேன் 

18. புவியின் வளிமண்டலத்தில் நீராவி எத்தனை சதவீதம் உள்ளது? 

விடை : 0 – 0.4%

19. புவியின் வானிலை நிகழ்வுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருப்பது எது? 

விடை : நீராவி 

20. புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் பிற திடப் பொருட்கள் எவை? 

விடை: தூசுத் துகள்கள், உப்புத் துகள்கள், மகரந்த துகள்கள், புகை, சாம்பல் மற்றும் எரிமலைச் சாம்பல் 

TEST 21/30

21. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது எது?

22. புவியின் வளிமண்டலம் வெப்பமாக இருப்பதற்கான காரணம்? 

23. புவியின் வளிமண்டலத்தில் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறியூட்டும் வாயுவாக இருப்பது எது?

24. சூரியனிலிருந்து வரும் கேடு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து புவியை காக்கும் படலம் எது? 

25. புவியின் வளிமண்டலத்தில் நீராவி சுருங்குதல் எவ்வாறு நிகழ்கிறது? 

26. புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீராவி குளிர்விக்கப்படுவதால் ஏற்படுவது? 

3.2 வளிமண்டல அடுக்குகள்

27. புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுவது எது?

28. புவியின் வளிமண்டலம் எத்தனை அடுக்குகளாகக் காணப்படுகின்றது?

வளிமண்டல கீழடுக்கு (Troposphere)

29. ‘ட்ரோபோஸ்’ என்பது எந்த மொழிச் சொல்? 

30. ‘ட்ரோபோஸ்’ என்பதற்கு பொருள்?

REVISION 21/30

21. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது எது?

விடை: ஆக்சிஜன்

22. புவியின் வளிமண்டலம் வெப்பமாக இருப்பதற்கான காரணம்? 

விடை: சூரியக்கதிர்வீசல் மற்றும் சூரியவெப்ப அலைகளிலிருந்து வரும் வெப்பத்தினை கார்பன்-டை ஆக்ஸைடு ஈர்த்து வைப்பது 

23. புவியின் வளிமண்டலத்தில் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறியூட்டும் வாயுவாக இருப்பது எது?

விடை: நைட்ரஜன்

24. சூரியனிலிருந்து வரும் கேடு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து புவியை காக்கும் படலம் எது? 

விடை: ஓசோன் படலம் 

25. புவியின் வளிமண்டலத்தில் நீராவி சுருங்குதல் எவ்வாறு நிகழ்கிறது? 

விடை: திடத்துகள்கள் நீர்க்குவி புள்ளிகளாக செயல்பட்டு நீராவி சுருங்குதல் நிகழ்கிறது.

26. புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீராவி குளிர்விக்கப்படுவதால் ஏற்படுவது? 

விடை: மழைப்பொழிவு

3.2 வளிமண்டல அடுக்குகள்

27. புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுவது எது?

விடை: வளிமண்டலம்

28. புவியின் வளிமண்டலம் எத்தனை அடுக்குகளாகக் காணப்படுகின்றது?

விடை : ஐந்து . அவை வளிமண்டல கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும். 

வளிமண்டல கீழடுக்கு (Troposphere)

29. ‘ட்ரோபோஸ்’ என்பது எந்த மொழிச் சொல்? 

விடை: கிரேக்க மொழிச் சொல்

30. ‘ட்ரோபோஸ்’ என்பதற்கு பொருள்?

விடை: ‘மாறுதல்’ என்று பொருள்.

TEST 31/40

31. புவியில் வளிமண்டலத்தின் கீழடுக்கு எது? 

32. புவியில் வளிமண்டல கீழடுக்கின் துருவப்பகுதியில் உயரம்? 

33. புவியில் வளிமண்டல கீழடுக்கின் நிலநடுக்ககோட்டுப் பகுதியில் உயரம்? 

34. புவியின் வளிமண்டல கீழடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை எவ்வாறு அமையும்? 

35. அனைத்து வானிலை நிகழ்வுகளும் புவியில் எங்கு நடைபெறுகின்றன?

36. புவியில் வளிமண்டல கீழ் அடுக்கின் வேறு பெயர்?

37. புவியில் வளிமண்டல கீழடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மீள்அடுக்கு (Stratosphere) 

38. புவியின் வளிமண்டலத்தில் மீள் அடுக்கு எங்கு அமைந்துள்ளது?

39. புவியின் வளிமண்டலத்தில் மீள்அடுக்கு எத்தனை கிலோமீட்டர் வரை பரவியுள்ளது?

40. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கில் அதிகம் உள்ள மூலக்கூறுகள் எவை? 

REVISION 31/40

31. புவியில் வளிமண்டலத்தின் கீழடுக்கு எது? 

விடை: ‘ட்ரோபோஸ்’   

32. புவியில் வளிமண்டல கீழடுக்கின் துருவப்பகுதியில் உயரம்? 

விடை: 8 கி.மீ. உயரம் வரை காணப்படுகிறது.

33. புவியில் வளிமண்டல கீழடுக்கின் நிலநடுக்ககோட்டுப் பகுதியில் உயரம்? 

விடை: 18 கி.மீ உயரம் வரை காணப்படுகிறது.

34. புவியின் வளிமண்டல கீழடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை எவ்வாறு அமையும்? 

விடை : வெப்பநிலை குறையும்.  

35. அனைத்து வானிலை நிகழ்வுகளும் புவியில் எங்கு நடைபெறுகின்றன?

விடை: புவியின் வளிமண்டல கீழடுக்கில் நடைபெறுகின்றன.

36. புவியில் வளிமண்டல கீழ் அடுக்கின் வேறு பெயர்?

விடை: வானிலையை உருவாக்கும் அடுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. 

37. புவியில் வளிமண்டல கீழடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ‘ட்ரோபோபாஸ்’ (Tropopause) என்று அழைக்கப்படுகிறது. 

மீள்அடுக்கு (Stratosphere) 

38. புவியின் வளிமண்டலத்தில் மீள் அடுக்கு எங்கு அமைந்துள்ளது?

விடை: கீழடுக்கிற்கு மேல் மீள் அடுக்கு அமைந்துள்ளது

39. புவியின் வளிமண்டலத்தில் மீள்அடுக்கு எத்தனை கிலோமீட்டர் வரை பரவியுள்ளது?

விடை: 50 கி.மீ. வரை பரவியுள்ளது.

40. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கில் அதிகம் உள்ள மூலக்கூறுகள் எவை? 

விடை: ஓசோன்

TEST 41/50

41. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள் அடுக்கின் வேறு பெயர்? 

42. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை எவ்வாறு அமைகின்றது?

43. புவியின் வளிமண்டலத்தில் ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ள அடுக்கு எது? 

44. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இடையடுக்கு (Mesosphere)

45. புவியின் வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம் வரை காணப்படும் அடுக்கு எது? 

46. புவியின் வளிமண்டலத்தில் உள்ள இடையடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை எப்படி அமைகிறது? 

47. புவியை நோக்கி வரும் விண்கற்கள் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன?

48. புவியின் வளிமண்டலத்தில் உள்ள இடையடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வெப்ப அடுக்கு (Thermosphere)

49. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கு எங்கு காணப்படுகிறது?

50. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் பரவல்?

REVISION 41/50

41. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள் அடுக்கின் வேறு பெயர்? 

விடை: ‘ஓசோனோஸ்பியர்’ 

42. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை எவ்வாறு அமைகின்றது?

விடை: வெப்பநிலை அதிகரிக்கின்றது

43. புவியின் வளிமண்டலத்தில் ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ள அடுக்கு எது? 

விடை: புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கு ஆகும்.

44. புவியின் வளிமண்டலத்தில் உள்ள மீள்அடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ஸ்ரேடோபாஸ் (Stratopause) 

இடையடுக்கு (Mesosphere)

45. புவியின் வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம் வரை காணப்படும் அடுக்கு எது? 

விடை: இடையடுக்கு (மீசோஸ்பியர்) 

46. புவியின் வளிமண்டலத்தில் உள்ள இடையடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை எப்படி அமைகிறது? 

விடை: வெப்பநிலை குறைகின்றது

47. புவியை நோக்கி வரும் விண்கற்கள் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன?

விடை: இடையடுக்கில்

48. புவியின் வளிமண்டலத்தில் உள்ள இடையடுக்கின் மேல் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ‘மீசோபாஸ்’ (mesopause) 

வெப்ப அடுக்கு (Thermosphere)

49. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கு எங்கு காணப்படுகிறது?

விடை: இடையடுக்கிற்கு மேல் காணப்படுகிறது. 

50. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் பரவல்?

விடை: 600 கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது

TEST 51/60

51. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

52. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் கீழ்பகுதி ஹோமோஸ்பியர் அடுக்கு என அழைக்கப்படுவதற்கு காரணம் 

53. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் மேல்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

54. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் மேல்பகுதி ‘ஹெட்ரோஸ்பியர்’ என அழைக்கப்படுவதற்கான காரணம்?

55. புவியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை எவ்வாறு அமைகிறது?

56. புவியின் வளிமண்டலத்தில் ‘அயனோஸ்பியர்’ (lonosphere) எங்கு அமைந்திருக்கிறது?

57. புவியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப அடுக்குப் பகுதியில் காணப்படுபவை எவை? 

58. புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் வளிமண்டலத்தில் எந்த அடுக்கில் இருந்து புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன?

வெளியடுக்கு

59. புவியின் வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

60. வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படும் புவியின் வளிமண்டல அடுக்கு எது?

REVISION 51/60

51. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: ஹோமோஸ்பியர்

52. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் கீழ்பகுதி ஹோமோஸ்பியர் அடுக்கு என அழைக்கப்படுவதற்கு காரணம் 

விடை: வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் ‘ஹோமோஸ்பியர் (Homosphere) என அழைக்கப்படுகின்றது

53. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் மேல்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: ‘ஹெட்ரோஸ்பியர்’ (heterosphere) 

54. புவியின் வளிமண்டலத்தில் வெப்ப அடுக்கின் மேல்பகுதி ‘ஹெட்ரோஸ்பியர்’ என அழைக்கப்படுவதற்கான காரணம்?

விடை: வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் ’ஹெட்ரோஸ்பியர்’ (heterosphere) என அழைக்கப்படுகின்றது.  

55. புவியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப அடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை எவ்வாறு அமைகிறது?

விடை: அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

56. புவியின் வளிமண்டலத்தில் ‘அயனோஸ்பியர்’ (lonosphere) எங்கு அமைந்திருக்கிறது?

விடை: வெப்ப அடுக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.

57. புவியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப அடுக்குப் பகுதியில் காணப்படுபவை எவை? 

விடை : அயனிகளும் மின்னணுக்களும் (Electron) காணப்படுகின்றன. 

58. புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் வளிமண்டலத்தில் எந்த அடுக்கில் இருந்து புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன?

விடை: வெப்ப அடுக்கிலிருந்து புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

வெளியடுக்கு

59. புவியின் வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: வெளிஅடுக்கு

60. வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படும் புவியின் வளிமண்டல அடுக்கு எது?

விடை: வெளியடுக்கு 

TEST 61/70

61. புவியின் வளிமண்டலத்தில் வெளியடுக்கின் மேல்பகுதி படிப்படியாக எதனோடு கலந்து விடுகிறது?

62. புவியின் வளிமண்டலத்தில் உள்ள வெளி அடுக்கில் நடைபெறும் விநோத ஒளிநிகழ்வுகள் எவை? 

3.3 வானிலை மற்றும் காலநிலை

63. புவியின் வளிமண்டல நிகழ்வுகளுடன் தொடர்புடையவை எவை? 

64. புவியின் வளிமண்டலத்தில் ஒரு நாளில் ஓர் இடத்தில் நடைபெறும் வளிமண்டல நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

65. புவியின் வளிமண்டலத்தில் நீண்டகால வானிலையின் சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வானிலை

66. ‘வானிலை’ என்றால் என்ன? 

67.ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக் கூடியதாக உள்ளது எது? 

68. வேறுபட்ட வானிலை நிகழ்வுகள் எப்படி ஏற்படும்? 

69. ஒவ்வொரு நாளும் வானிலை விவரங்கள் எங்கு சேகரிக்கப்படுகின்றன?

70. வானிலையைப் பற்றிய படிப்பு?

REVISION 61/70

61. புவியின் வளிமண்டலத்தில் வெளியடுக்கின் மேல்பகுதி படிப்படியாக எதனோடு கலந்து விடுகிறது?

விடை: அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.

62. புவியின் வளிமண்டலத்தில் உள்ள வெளி அடுக்கில் நடைபெறும் விநோத ஒளிநிகழ்வுகள் எவை? 

விடை: அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis)  

3.3 வானிலை மற்றும் காலநிலை

63. புவியின் வளிமண்டல நிகழ்வுகளுடன் தொடர்புடையவை எவை? 

விடை: வானிலை மற்றும் காலநிலை

64. புவியின் வளிமண்டலத்தில் ஒரு நாளில் ஓர் இடத்தில் நடைபெறும் வளிமண்டல நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: “வானிலை” (Weather)

65. புவியின் வளிமண்டலத்தில் நீண்டகால வானிலையின் சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: காலநிலை (Climate)

வானிலை

66. ‘வானிலை’ என்றால் என்ன? 

விடை: ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்டல மாற்றத்தைப் பற்றி அறிவது

67.ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக் கூடியதாக உள்ளது எது? 

விடை: வானிலை

68. வேறுபட்ட வானிலை நிகழ்வுகள் எப்படி ஏற்படும்? 

விடை: ஒரே நாளில் ஓர் இடத்தில் காலைநேரத்தில் வெப்பமாகவும் நண் பகலில் மழைப் பொழிவாகவும் இருக்கும்.

69. ஒவ்வொரு நாளும் வானிலை விவரங்கள் எங்கு சேகரிக்கப்படுகின்றன?

விடை: வானிலை ஆராய்ச்சி மையங்களில் சேகரிக்கப்படுகின்றன.

70. வானிலையைப் பற்றிய படிப்பு?

விடை: வானிலையியல் 

TEST 71/80

காலநிலை

71. காலநிலை என்றால் என்ன? 

72. புவியின் வளிமண்டலத்தில் ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருப்பது எது? 

73. காலநிலை எப்படி காணப்படும்?

74. வானிலைத் தகவல்களின் சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

75. காலநிலையைப் பற்றிய படிப்பு?  

76. வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?

நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்

77. புவியின் நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் எவ்வாறு விழும்? 

78. புவியின் நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும்?

79. புவியின் நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் எப்படி விழும்? 

80. புவியின் நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் வெப்பநிலை எவ்வாறு இருக்கும்? 

REVISION 71/80

காலநிலை

71. காலநிலை என்றால் என்ன? 

விடை: நீண்ட காலத்திற்கு மிகப்பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே காலநிலையாகும்.   

72. புவியின் வளிமண்டலத்தில் ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருப்பது எது? 

விடை : காலநிலை

73. காலநிலை எப்படி காணப்படும்?

விடை: ஓரிடத்தில் ஒரே வகையான காலநிலை காணப்படும். 

74. வானிலைத் தகவல்களின் சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: காலநிலை

75. காலநிலையைப் பற்றிய படிப்பு?  

விடை: காலநிலையியல்

76. வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?

விடை :

நிலநடுக்கோட்டிலிருந்து தூரம் 

கடல் மட்டத்திலிருந்து உயரம்

கடலிலிருந்து தூரம்

வீசும் காற்றின் தன்மை

மலைகளின் இடையூறு

மேக மூட்டம்

கடல் நீரோட்டங்கள்

இயற்கைத் தாவரங்கள்

நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்

77. புவியின் நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் எவ்வாறு விழும்? 

விடை: செங்குத்தாக விழும்.

78. புவியின் நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும்?

விடை: அதிகமாக இருக்கும். 

79. புவியின் நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் எப்படி விழும்? 

விடை: சாய்வாக விழும்.

80. புவியின் நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் வெப்பநிலை எவ்வாறு இருக்கும்? 

விடை: குறைவாக இருக்கும்.

TEST 81/90

81. புவியில் வெப்ப வேறுபாட்டிற்கு காரணம் என்ன?

கடல் மட்டத்திலிருந்து உயரம்

82. ஓர் இடத்தின் உயரத்தை எதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம்?

83. இயல்பு வெப்ப குறைவு விகிதம் (Normal Lapse Rate) என்றால் என்ன? 

84. உயரமானப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கான காரணம் ?

கடலிலிருந்து தூரம்

85. ஓர் இடத்தின் காலநிலை, எதை பொறுத்து அமைகின்றது?

86. கடலோரப் பகுதிகளில் சமமான காலநிலை நிலவுவதற்கு காரணம்?

87. கண்டக் காலநிலை எங்கு நிலவுகிறது?

வீசும் காற்றின் தன்மை

88. ஓர் இடத்தின் காலநிலை எதனால் தீர்மானிக்கப்படுகிறது?

89. வெப்பமான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை எப்படி வைக்கிறது? 

90. குளிர்ச்சியான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை எப்படி வைக்கிறது? 

REVISION 81/90

81. புவியில் வெப்ப வேறுபாட்டிற்கு காரணம் என்ன?

விடை: புவி கோள வடிவில் உள்ளதே காரணம் ஆகும்.

கடல் மட்டத்திலிருந்து உயரம்

82. ஓர் இடத்தின் உயரத்தை எதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம்?

விடை: சராசரி கடல்மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம்.  

83. இயல்பு வெப்ப குறைவு விகிதம் (Normal Lapse Rate) என்றால் என்ன? 

விடை: ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் 6.5 °C வெப்பநிலை குறைவது இயல்பு வெப்ப குறைவு விகிதம் (Normal Lapse Rate) என்று அழைக்கின்றோம். 

84. உயரமானப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கான காரணம் ?

விடை: இயல்பு வெப்ப குறைவு விகிதம்

கடலிலிருந்து தூரம்

85. ஓர் இடத்தின் காலநிலை, எதை பொறுத்து அமைகின்றது?

விடை: கடலிலிருந்து உள்ள தூரத்தை பொறுத்து அமைகின்றது.

86. கடலோரப் பகுதிகளில் சமமான காலநிலை நிலவுவதற்கு காரணம்?

விடை: கடலிலிருந்து வீசும் காற்றின் தாக்கத்தினால் கடலோரப் பகுதிகளில் சமமான காலநிலை நிலவுகிறது.

87. கண்டக் காலநிலை எங்கு நிலவுகிறது?

விடை: கடலிலிருந்து தொலைவில் அமைந்துள்ள நிலப் பகுதிகளில் கடற்காற்றின் தாக்கம் இல்லாத காரணத்தினால் கண்டக் காலநிலை நிலவுகிறது.

வீசும் காற்றின் தன்மை

88. ஓர் இடத்தின் காலநிலை எதனால் தீர்மானிக்கப்படுகிறது?

விடை: காற்று உருவாகி வீசும் இடத்தினை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. 

89. வெப்பமான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை எப்படி வைக்கிறது? 

விடை: வெப்பமாக வைக்கிறது. 

90. குளிர்ச்சியான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை எப்படி வைக்கிறது? 

விடை: குளிர்ச்சியாக வைக்கிறது

TEST 91/100

91. கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுகள் எதைத் தருகின்றன? 

92. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் எதை உருவாக்குகிறது?

மலைகளின் இடையூறு (Mountain barriers)

93. மலைகளின் அமைவிடம் எதை தீர்மானிக்கிறது? 

94. காற்றினைத் தடுக்கும் ஒர் இயற்கை காரணி எது? 

95. மிகவும் குளிர்ச்சியான காற்றைத் தடுத்து குளிரிலிருந்து பாதுகாப்பது எது? 

96. பருவக்காற்றினைத் தடுத்து மழைப் பொழிவையும் அளிப்பது எது? 

மேகமூட்டம் (Cloud Cover)

97. வளிமண்டலத்தில் சூரியக்கதிர் வீச்சினை அதிக அளவு பிரதிபலிப்பது எது? 

98. மேகங்கள் எதை தடுக்கிறது?

99. மேகம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு எப்படி காணப்படும்? 

100. மேகங்கள் காணப்படும் இடங்களில் வெப்பத்தின் அளவு எப்படி காணப்படும்?

REVISION 91/100

91. கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுகள் எதைத் தருகின்றன? 

விடை: மழைப் பொழிவைத் தருகின்றன. 

92. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் எதை உருவாக்குகிறது?

விடை: வறட்சியான வானிலையை உருவாக்குகிறது. 

மலைகளின் இடையூறு (Mountain barriers)

93. மலைகளின் அமைவிடம் எதை தீர்மானிக்கிறது? 

விடை: ஒரு இடத்தின் காலநிலையை தீர்மானிக்கிறது.

94. காற்றினைத் தடுக்கும் ஒர் இயற்கை காரணி எது? 

விடை: மலைத்தொடர்கள்

95. மிகவும் குளிர்ச்சியான காற்றைத் தடுத்து குளிரிலிருந்து பாதுகாப்பது எது? 

விடை: மலைகள்

96. பருவக்காற்றினைத் தடுத்து மழைப் பொழிவையும் அளிப்பது எது? 

விடை: மலைகள்

மேகமூட்டம் (Cloud Cover)

97. வளிமண்டலத்தில் சூரியக்கதிர் வீச்சினை அதிக அளவு பிரதிபலிப்பது எது? 

விடை: மேகங்கள்

98. மேகங்கள் எதை தடுக்கிறது?

விடை: புவியின் மீது விழும் வெப்பத்தினைத் தடுக்கிறது.

99. மேகம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு எப்படி காணப்படும்? 

விடை: அதிகமாக காணப்படும்.

100. மேகங்கள் காணப்படும் இடங்களில் வெப்பத்தின் அளவு எப்படி காணப்படும்?

விடை: குறைவாக காணப்படும்.

TEST 101/110

101. கடற்கறைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளை வெப்பமாக வைக்கும் நீரோட்டங்கள்? 

102. கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப்பகுதிகளை குளிர்ச்சியாக வைக்கும் நீரோட்டங்கள்? 

இயற்கைத்தாவரங்கள் (Natural Vegetation)

103. வளிமண்டலக் காற்று எதனால் குளிர்விக்கப்படுகிறது?

104. புவியில் வெப்பநிலை குறைவாக உள்ள பகுதிகள்? 

105. புவியில் வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிகள் ?

3.4 காற்று (Wind)

106. புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

107. புவியின் வளிமண்டலத்தில். காற்று செங்குத்தாக அசையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

108. காற்று எப்பொழுதும் எந்தப் பகுதியில் இருந்து எந்தப் பகுதியை நோக்கி வீசும்?

109. காற்றின் பெயர் எதைப் பொறுத்து அமைகிறது? 

110. கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

REVISION 101/110

101. கடற்கறைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளை வெப்பமாக வைக்கும் நீரோட்டங்கள்? 

விடை: வெப்ப நீரோட்டங்கள்

102. கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப்பகுதிகளை குளிர்ச்சியாக வைக்கும் நீரோட்டங்கள்? 

விடை: குளிர்நீரோட்டங்கள்

இயற்கைத்தாவரங்கள் (Natural Vegetation)

103. வளிமண்டலக் காற்று எதனால் குளிர்விக்கப்படுகிறது?

விடை: தாவரங்களில் நடைபெறும் நீராவிப் போக்கினால் குளிர்விக்கப்படுகிறது.

104. புவியில் வெப்பநிலை குறைவாக உள்ள பகுதிகள்? 

விடை: அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகள் 

105. புவியில் வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிகள் ?

விடை: காடுகளற்ற பகுதிகள் 

3.4 காற்று (Wind)

106. புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ‘காற்று’

107. புவியின் வளிமண்டலத்தில். காற்று செங்குத்தாக அசையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: காற்றோட்டம் (Air Current)

108. காற்று எப்பொழுதும் எந்தப் பகுதியில் இருந்து எந்தப் பகுதியை நோக்கி வீசும்?

விடை: உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி வீசும்.

109. காற்றின் பெயர் எதைப் பொறுத்து அமைகிறது? 

விடை: திசையை பொறுத்து அமைகிறது.

110. கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ‘கீழைக்காற்று’ 

TEST 111/120

111. காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி எது? 

112. காற்றின் திசையை அறிய பயன்படும் கருவி எது?

113. காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு?

காற்றின் வகைகள்

114. காற்று எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

கோள்காற்றுகள் (Planetary Winds)

115. வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

116. கோள் காற்றின் வேறு பெயர் 

117. கோள் காற்றுகள் என்பவை எவை? 

வியாபாரக்காற்று

118.’வியாபாரக்காற்று’ என்பது?

119. வியாபாரக்காற்றுகள் எப்படி வீசுகின்றன?

120. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு உதவியாக இருந்தவை ?

REVISION 111/120

111. காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி எது? 

விடை: காற்று வேகமானி (Anemometer) 

112. காற்றின் திசையை அறிய பயன்படும் கருவி எது?

விடை: காற்றுதிசைகாட்டி (Wind Vane) 

113. காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு?

விடை : கிலோமீட்டர்/மணி அல்லது கடல்மைல் (Knots) 

காற்றின் வகைகள்

114. காற்று எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

விடை: நான்கு. அவை

கோள் காற்றுகள் (Planetary Winds)

காலமுறைக் காற்றுகள் (Periodic Winds)

மாறுதலுக்குட்பட்ட காற்றுகள் (Variable Winds)

தலக்காற்றுகள் (Local Winds)

கோள்காற்றுகள் (Planetary Winds)

115. வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: கோள்காற்று எனப்படும்.

116. கோள் காற்றின் வேறு பெயர் 

விடை: ‘நிலவும்காற்று’ (Prevaling Winds) 

117. கோள் காற்றுகள் என்பவை எவை? 

விடை: வியாபாரக்காற்றுகள்’ (TradeWinds) ‘மேலைக்காற்றுகள்’ (westerlies) மற்றும் துருவகீழைக்காற்றுகள்’ (Polar Easterlies)

வியாபாரக்காற்று

118.’வியாபாரக்காற்று’ என்பது?

விடை: வட மற்றும் தென் அரைக் கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று ‘வியாபாரக்காற்று’ எனப்படும்.

119. வியாபாரக்காற்றுகள் எப்படி வீசுகின்றன?

விடை: தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.

120. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு உதவியாக இருந்தவை ?

விடை: வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு வியாபாரக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று வியாபாரக்காற்று என அழைக்கப்படுகின்றது.

TEST 121/130

மேலைக் காற்றுகள் (Westerlies)

121. நிலையான காற்றுகள் என்பவை?

122. மேலைக் காற்றுகள் வட, தென் அரைக்கோளங்களில் எந்த மண்டலத்திலிருந்து எந்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன?

123. மேலைக் காற்றுகள் வட அரைக்கோளத்தில் எவ்வாறு வீசும்?

124. மேலைக் காற்றுகள் தென் அரைக்கோளத்தில் எவ்வாறு வீசும்? 

125. மேலைக் காற்றுகள் எப்படி வீசக்கூடியவை?

126.தென் கோளத்தில் மேலைக் காற்றுகள் 40° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

127. தென் கோளத்தில் மேலைக் காற்றுகள் 50° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

128. தென் கோளத்தில் மேலைக் காற்றுகள் 60° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

துருவ கீழைக்காற்றுகள் (Polar Esterlies)

129. துருவ கீழைக்காற்றுகள் என்பது? 

130. துருவ கீழைக்காற்றுகள் வட அரைக்கோளத்தில் எந்த திசையில் இருந்து வீசுகின்றன?

REVISION 121/130

மேலைக் காற்றுகள் (Westerlies)

121. நிலையான காற்றுகள் என்பவை?

விடை: மேலைக் காற்றுகள் ஆகும். 

122. மேலைக் காற்றுகள் வட, தென் அரைக்கோளங்களில் எந்த மண்டலத்திலிருந்து எந்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன?

விடை: வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.

123. மேலைக் காற்றுகள் வட அரைக்கோளத்தில் எவ்வாறு வீசும்?

விடை: தென் மேற்கிலிருந்து, வடகிழக்காக வீசும்.

124. மேலைக் காற்றுகள் தென் அரைக்கோளத்தில் எவ்வாறு வீசும்? 

விடை: வடமேற்கிலிருந்து, தென் கிழக்காக வீசும்.

125. மேலைக் காற்றுகள் எப்படி வீசக்கூடியவை?

விடை: மிகவும் வேகமாக வீசக்கூடியவை. 

126.தென் கோளத்தில் மேலைக் காற்றுகள் 40° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: கர்ஜிக்கும் நாற்பதுகள் என்று அழைக்கப்படுகிறது.

127. தென் கோளத்தில் மேலைக் காற்றுகள் 50° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: சீறும் ஐம்பதுகள் என்று அழைக்கப்படுகிறது.

128. தென் கோளத்தில் மேலைக் காற்றுகள் 60° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: “கதறும் அறுபதுகள்” என்று அழைக்கப்படுகிறது.

துருவ கீழைக்காற்றுகள் (Polar Esterlies)

129. துருவ கீழைக்காற்றுகள் என்பது? 

விடை: துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன.  

130. துருவ கீழைக்காற்றுகள் வட அரைக்கோளத்தில் எந்த திசையில் இருந்து வீசுகின்றன?

 விடை: வடகிழக்கிலிருந்து வீசுகின்றன.

TEST 131/140

131. துருவ கீழைக்காற்றுகள் தென்அரைக்கோளத்தில் எந்த திசையில் இருந்து வீசுகின்றன?

132. துருவகீழைக்காற்றுகள் என்பவை? 

காலமுறைக்காற்றுகள் (Periodic Winds)

133. காலமுறைக் காற்றுகளின் தன்மை? 

134. காலமுறைக் காற்றுகள் திசையை மாற்றிக் கொள்வதற்கு காரணம்? 

135. காற்றுகள் தன் திசையைப் பருவத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

136. பருவக்காற்றின் வேறு பெயர்?

137. இந்திய துணைக்கண்டத்தில் வீசும் காற்று?

மாறுதலுக்குட்பட்டக் காற்றுகள் (Variable Winds)

சூறாவளிகள் (Cyclone) 

138. சைக்ளோன் என்பது எந்த மொழிச் சொல்?

139. சைக்ளோன் என்பதற்கு பொருள் என்ன?

140. சூறாவளி (Cyclone) என்பது?

REVISION 131/140

131. துருவ கீழைக்காற்றுகள் தென்அரைக்கோளத்தில் எந்த திசையில் இருந்து வீசுகின்றன?

விடை: தென் கிழக்கிலிருந்து வீசுகின்றன.

132. துருவகீழைக்காற்றுகள் என்பவை? 

விடை: வலுவிழந்தக் காற்றுகளாகும்.

காலமுறைக்காற்றுகள் (Periodic Winds)

133. காலமுறைக் காற்றுகளின் தன்மை? 

விடை: பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கின்ற தன்மையுடையது. 

134. காலமுறைக் காற்றுகள் திசையை மாற்றிக் கொள்வதற்கு காரணம்? 

விடை : நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதே காரணமாகும்.

135. காற்றுகள் தன் திசையைப் பருவத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: பருவக்காற்று 

136. பருவக்காற்றின் வேறு பெயர்?

விடை: மான்சூன்

137. இந்திய துணைக்கண்டத்தில் வீசும் காற்று?

விடை: பருவக்காற்று

மாறுதலுக்குட்பட்டக் காற்றுகள் (Variable Winds)

சூறாவளிகள் (Cyclone) 

138. சைக்ளோன் என்பது எந்த மொழிச் சொல்?

விடை: கிரேக்கச் சொல்

139. சைக்ளோன் என்பதற்கு பொருள் என்ன?

விடை: சுருண்ட பாம்பு என்பதாகும்.

140. சூறாவளி (Cyclone) என்பது?

விடை: அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது

TEST 141/150

141. புவியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைகோளத்தில் எந்த திசையில் வீசுகிறது?

142. புவியின் சுழற்சியினால் சூறாவளி தென் அரைகோளத்தில் எந்த திசையில் வீசுகிறது? 

143. சூறாவளிகள் எத்தனை வகைப்படும்? 

144. வெப்பச் சூறாவளிகள் வெவ்வேறு பெயர்களில் எதை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றன?

145 . வெப்பச்சூறாவளிகள் இந்தியப்பெருங்கடல் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

146. வெப்பச்சூறாவளிகள் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

147. வெப்பச் சூறாவளிகள் கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

148. வெப்பச் சூறாவளிகள் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

149. வெப்பச் சூறாவளிகள் ஜப்பானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

150. வெப்பச் சூறாவளிகள் ஆஸ்திரேலியாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

REVISION 141/150

141. புவியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைகோளத்தில் எந்த திசையில் வீசுகிறது?

விடை: கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையில் வீசுகிறது.

142. புவியின் சுழற்சியினால் சூறாவளி தென் அரைகோளத்தில் எந்த திசையில் வீசுகிறது? 

விடை: கடிகாரத்திசையில் வீசுகிறது.

143. சூறாவளிகள் எத்தனை வகைப்படும்? 

விடை: மூன்று. அவை

வெப்பச்சூறாவளிகள்

மித வெப்பச்சூறாவளிகள்

கூடுதல் வெப்பச்சூறாவளிகள்

வெப்பச்சூறாவளிகள் (Tropical Cyclones)

144. வெப்பச் சூறாவளிகள் வெவ்வேறு பெயர்களில் எதை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றன?

விடை: பெருங்கடல்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றன.

145 . வெப்பச்சூறாவளிகள் இந்தியப்பெருங்கடல் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: சூறாவளிகள் (Cyclone) 

146. வெப்பச்சூறாவளிகள் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: டைஃபூன்கள் (Typhoons) 

147. வெப்பச் சூறாவளிகள் கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: ஹரிக்கேன்கள் (Hurricanes) 

148. வெப்பச் சூறாவளிகள் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: பேக்யுஸ் (Baguios) 

149. வெப்பச் சூறாவளிகள் ஜப்பானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: டைஃபூன் 

150. வெப்பச் சூறாவளிகள் ஆஸ்திரேலியாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : வில்லிவில்லி (Wily Wily)

TEST 151/160

151. வெப்பச்சூறாவளிகள் எப்போது நிலப்பகுதியைச் சென்றடையும்?

மித வெப்பச்சூறாவளிகள் (Temparate Cyclones)

152. மித வெப்பச் சூறாவளிகள் எந்தப் பகுதியில் உருவாகின்றன?

153. நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காத வெப்பச் சூறாவளி எது?

155. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் மித வெப்பச்சூறாவளிகள் எந்த பகுதி வரை பரவி வீசுகின்றன?

156. இந்தியாவை அடையும் மித வெப்பச் சூறாவளி காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கூடுதல் வெப்பச்சூறாவளிகள் (Extra Tropical Cyclones)

157. கூடுதல் வெப்பச் சூறாவளிகள் எந்தப் பகுதியில் வீசுகின்றன? 

158. கூடுதல் வெப்பச்சூறாவளியின் வேறு பெயர்? 

159. கூடுதல் வெப்பச்சூறாவளிகள் தன் ஆற்றலை எங்கிருந்து பெறுகின்றன? 

160. கூடுதல் வெப்பச்சூறாவளிகள் தருகின்ற மழைப்பொழிவுகள் எவை? 

REVISION 151/160

151. வெப்பச்சூறாவளிகள் எப்போது நிலப்பகுதியைச் சென்றடையும்?

விடை: கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும், பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்

மித வெப்பச்சூறாவளிகள் (Temparate Cyclones)

152. மித வெப்பச் சூறாவளிகள் எந்தப் பகுதியில் உருவாகின்றன?

விடை: 35° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் உருவாகின்றன. 

மித வெப்பச்சூறாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன

153. நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காத வெப்பச் சூறாவளி எது?

விடை : மித வெப்பச் சூறாவளிகள் 

155. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் மித வெப்பச்சூறாவளிகள் எந்த பகுதி வரை பரவி வீசுகின்றன?

விடை: ரஷ்யா மற்றும் இந்தியப்பகுதி வரை பரவி வீசுகின்றன.

156. இந்தியாவை அடையும் மித வெப்பச் சூறாவளி காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: மேற்கத்திய இடையூறு காற்று (Western Disturbance) என்று அழைக்கப்படுகிறது.

கூடுதல் வெப்பச்சூறாவளிகள் (Extra Tropical Cyclones)

157. கூடுதல் வெப்பச் சூறாவளிகள் எந்தப் பகுதியில் வீசுகின்றன? 

விடை: 30° முதல் 60° வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன.

158. கூடுதல் வெப்பச்சூறாவளியின் வேறு பெயர்? 

விடை: மைய அட்ச சூறாவளிகள் (Mid Latitudes Cyclones) 

159. கூடுதல் வெப்பச்சூறாவளிகள் தன் ஆற்றலை எங்கிருந்து பெறுகின்றன? 

விடை: உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன.

160. கூடுதல் வெப்பச்சூறாவளிகள் தருகின்ற மழைப்பொழிவுகள் எவை? 

விடை: லேசான சாரல்மழை (Mildshowers) முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவையும் (Heavy hails), இடியுடன் கூடிய மழைப்பொழிவையும் (Thunder storms), பனிப்பொழிவையும் (Blizzards) மற்றும் சுழல் காற்றுகளையும் (Tomadoes) அளிக்கின்றன.

TEST 161/170

எதிர்ச் சூறாவளிகள் (Anti-Cyclones)

161. தாழ்வழுத்த சூறாவளிகளின் நேர் ௭திர் மறையான அமைப்பு கொண்டது எது?

162. எதிர்ச் சூறாவளி எப்படி காணப்படுகிறது? 

163. எதிர் சூறாவளியில் காற்று எவ்வாறு வந்தடைகிறது?

164. எதிர்ச் சூறாவளிகள் எப்படி காணப்படுகின்றன?

தலக்காற்றுகள் (Local Winds)

165. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

166. தலக்காற்றின் தாக்கம் எந்தப் பகுதிகளில் காணப்படும்?

167. தலக்காற்றுகள் எப்போது வீசுகின்ற காற்று? 

168. தலக் காற்றுகள் ஆல்ப்ஸ் – ஐரோப்பா இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

169. தலக் காற்றுகள் ஆப்பிரிக்காவின் வட கடற்கரைப் பகுதியில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

170. தலக் காற்றுகள் ராக்கி மலைத்தொடர்- வட அமெரிக்கா பகுதியில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

REVISION 161/170

எதிர்ச் சூறாவளிகள் (Anti-Cyclones)

161. தாழ்வழுத்த சூறாவளிகளின் நேர் ௭திர் மறையான அமைப்பு கொண்டது எது?

விடை: எதிர்ச் சூறாவளி 

162. எதிர்ச் சூறாவளி எப்படி காணப்படுகிறது? 

விடை: உயர் அழுத்த மண்டலம் மையத்திலும், தாழ்வழுத்தங்கள் அதனைச் சூழ்ந்தும் காணப்படுகிறது. 

163. எதிர் சூறாவளியில் காற்று எவ்வாறு வந்தடைகிறது?

விடை: உயர் அழுத்தமுள்ள மண்டலத்திலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு சுழல் வடிவத்தில் காற்று வந்தடைகிறது.

164. எதிர்ச் சூறாவளிகள் எப்படி காணப்படுகின்றன?

விடை: பெரும்பாலும் வெப்ப மற்றும் குளிர் அலைகளுடன் காணப்படுகின்றன.

தலக்காற்றுகள் (Local Winds)

165. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: தலக்காற்று

166. தலக்காற்றின் தாக்கம் எந்தப் பகுதிகளில் காணப்படும்?

விடை: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும்.

167. தலக்காற்றுகள் எப்போது வீசுகின்ற காற்று? 

விடை: குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் வீசுகின்ற காற்றாகும்.  

168. தலக் காற்றுகள் ஆல்ப்ஸ் – ஐரோப்பா இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: ஃபான் காற்று (Foehn)

169. தலக் காற்றுகள் ஆப்பிரிக்காவின் வட கடற்கரைப் பகுதியில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: சிராக்கோ (Sirocco) 

170. தலக் காற்றுகள் ராக்கி மலைத்தொடர்- வட அமெரிக்கா பகுதியில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: சின்னூக் (Chinnook) 

TEST 171/180

171. தலக் காற்றுகள் தார் பாலைவனம் – இந்தியா இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

172. தலக் காற்றுகள் மத்தியத் தரைக்கடல்பகுதி — பிரான்ஸ் இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

173. தலக் காற்றுகள் மத்தியத் தரைக்கடல் பகுதி – இத்தாலி இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

3.5 மேகங்கள் (Clouds) 

174. ஒவ்வொரு நாளும் கடல் நீர் நீராவியாக மாறும் அளவு?

175. மேகங்கள் எதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது? 

176. உயரத்தின் அடிப்படையில் மேகங்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?

177. மேல்மட்ட மேகங்களின் (High clouds) உயரம்? 

178. இடைமட்ட மேகங்களின் (Middle clouds) உயரம்? 

179. கீழ்மட்டமேகங்களின் (Low clouds) உயரம்? 

180. மேல்மட்ட மேகங்கள் (High Clouds) வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது? 

REVISION 171/180

171. தலக் காற்றுகள் தார் பாலைவனம் – இந்தியா இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: லூ (Loo)

172. தலக் காற்றுகள் மத்தியத் தரைக்கடல்பகுதி — பிரான்ஸ் இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: மிஸ்ட்ரல் (Mistral)

173. தலக் காற்றுகள் மத்தியத் தரைக்கடல் பகுதி – இத்தாலி இடங்களில் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: போரா (Bora) 

3.5 மேகங்கள் (Clouds) 

174. ஒவ்வொரு நாளும் கடல் நீர் நீராவியாக மாறும் அளவு?

விடை: மிக அதிக அளவில் மாறுகிறது.

175. மேகங்கள் எதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது? 

விடை: வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது.

176. உயரத்தின் அடிப்படையில் மேகங்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?

விடை: மூன்று. அவை,

மேல்மட்டமேகங்கள் (High clouds)

இடைமட்டமேகங்கள் (Middle clouds)

கீழ்மட்டமேகங்கள் (Low clouds)

177. மேல்மட்ட மேகங்களின் (High clouds) உயரம்? 

விடை: 6 முதல் 20 கி.மீ உயரம் வரை காணப்படுகிறது.

178. இடைமட்ட மேகங்களின் (Middle clouds) உயரம்? 

விடை: 2.5 முதல் 6 கிமீ உயரம் வரை காணப்படுகிறது.

179. கீழ்மட்டமேகங்களின் (Low clouds) உயரம்? 

விடை: புவியின் மேற்பரப்பிலிருந்து 25 கி.மீ. உயரம் வரை காணப்படுகிறது.

180. மேல்மட்ட மேகங்கள் (High Clouds) வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது? 

விடை: மூன்று. அவை,

1. கீற்று மேகங்கள் (Cirrus) 

2. கீற்றுத் திரள் மேகங்கள் (Cirro Cumulus) 

3. கீற்றுப்படை மேகங்கள் (Cirro Stratus) 

TEST 181/190

181. இடைமட்ட மேகங்கள் (Middle Clouds) வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?

182. கீழ்மட்டமேகங்கள் (Low Clouds) அளவு மற்றும் வடிவத்தின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது? 

மேல்மட்ட மேகங்கள் (High Clouds)

கீற்று மேகங்கள்(Cirrus): 

183. கீற்று மேகங்கள் எந்த உயரத்தில் காணப்படுகின்றன? 

184. கீற்று மேகங்கள் எந்த தோற்றத்தில் காணப்படுகின்றன?

185. ஈரப்பதம் இல்லாத மேகங்கள்?

186. மழைப்பொழிவை தராத கீற்று மேகங்கள்? 

கீற்று திரள் மேகங்கள் (Cirro Cumulus):

187. கீற்றுத் திரள் மேகங்கள் எப்படி அமைந்திருக்கும்? 

188. கீற்றுத் திரள் மேகங்கள் எதனால் உருவாகினவை?

கீற்றுப்படை மேகங்கள் (Cirro Stratus):

189. கீற்றுப்படை மேகங்கள் எப்படி காணப்படும்? 

இடைமட்ட மேகங்கள் (Middle Clouds) 

இடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status): 

190. இடைப்பட்ட படை மேகங்கள் எப்படி காணப்படும்? 

REVISION 181/190

181. இடைமட்ட மேகங்கள் (Middle Clouds) வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?

விடை: மூன்று. அவை,

1. இடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status) 

2. இடைப்பட்ட திரள்மேகங்கள் (Alto Cumulus) 

3. கார்படைமேகங்கள் (Nimbo Stratus) 

182. கீழ்மட்டமேகங்கள் (Low Clouds) அளவு மற்றும் வடிவத்தின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது? 

விடை: மூன்று. அவை

1. படைத்திரள் மேகங்கள் (Strato Cumulus) 

2. படைமேகங்கள் (Stratus) 

3. கார்திரள் மேகங்கள் (Cumulo – Nimbus)

மேல்மட்ட மேகங்கள் (High Clouds)

கீற்று மேகங்கள்(Cirrus): 

183. கீற்று மேகங்கள் எந்த உயரத்தில் காணப்படுகின்றன? 

விடை: வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன.

184. கீற்று மேகங்கள் எந்த தோற்றத்தில் காணப்படுகின்றன?

விடை: மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன. 

185. ஈரப்பதம் இல்லாத மேகங்கள்?

விடை: கீற்று மேகங்கள் முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும்.

186. மழைப்பொழிவை தராத கீற்று மேகங்கள்? 

விடை: பனித்துகள்களை கொண்ட கீற்று மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.

கீற்று திரள் மேகங்கள் (Cirro Cumulus):

187. கீற்றுத் திரள் மேகங்கள் எப்படி அமைந்திருக்கும்? 

விடை: வெண்மையான திட்டுக்களாகவோ, விரிப்பு போன்றோ. அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். 

188. கீற்றுத் திரள் மேகங்கள் எதனால் உருவாகினவை?

விடை: பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.

கீற்றுப்படை மேகங்கள் (Cirro Stratus):

189. கீற்றுப்படை மேகங்கள் எப்படி காணப்படும்? 

விடை: மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். கீற்றுப்படை மேகங்கள் மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகமாகும்.

இடைமட்ட மேகங்கள் (Middle Clouds) 

இடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status): 

190. இடைப்பட்ட படை மேகங்கள் எப்படி காணப்படும்? 

விடை: சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும். 

TEST 191/200

191. இடைமட்ட மேகங்கள் கொண்டிருப்பது? 

இடைப்பட்ட திரள்மேகங்கள் (Alto Cumulus):

192. இடைமட்ட மேகங்கள் எந்த வடிவங்களில் காணப்படும்? 

193. ‘செம்மறியாட்டு மேகங்கள்’ (Sheep Clouds) அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள்’ (Wool Pack Clouds) என்று அழைக்கப்படும் மேகங்கள்? 

194. இடைப்பட்ட திரள்மேகங்கள் ‘செம்மறியாட்டு மேகங்கள்’ (Sheep Clouds) அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள்’ (Wool Pack Clouds) என்று அழைக்கப்படுவதற்கான காரணம்?

கார்படைமேகங்கள் (Nimbo Stratus): 

195. கார்படை மேகங்கள் எங்கு தோன்றுகின்றன? 

196. கார்படை மேகங்கள் எவைகளோடு தொடர்புடையது?

கீழ்மட்டமேகங்கள் (Low Clouds) படைத்திரள் மேகங்கள் (Strato Cumulus): 

197. படைத்திரள் மேகங்களின் உயரம்?

198. படைத்திரள் மேகங்கள் எப்படி காணப்படும்?

199. படைத்திரள் மேகங்களின் வேறு பெயர்? 

200. பொதுவாக படைத்திரள் மேகங்கள் தோன்றும்போது அப்பகுதி எவ்வாறு காணப்படும்?

REVISION 191/200

191. இடைமட்ட மேகங்கள் கொண்டிருப்பது? 

விடை: உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும்.

இடைப்பட்ட திரள்மேகங்கள் (Alto Cumulus):

192. இடைமட்ட மேகங்கள் எந்த வடிவங்களில் காணப்படும்? 

விடை: தனித்தனியாக உள்ள மேகத்திரள்கள் ஒன்றுடனொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். 

193. ‘செம்மறியாட்டு மேகங்கள்’ (Sheep Clouds) அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள்’ (Wool Pack Clouds) என்று அழைக்கப்படும் மேகங்கள்? 

விடை: இடைப்பட்ட திரள்மேகங்கள்

194. இடைப்பட்ட திரள்மேகங்கள் ‘செம்மறியாட்டு மேகங்கள்’ (Sheep Clouds) அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள்’ (Wool Pack Clouds) என்று அழைக்கப்படுவதற்கான காரணம்?

விடை: அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் ஆகையினால் இதனை ‘செம்மறியாட்டு மேகங்கள்’ (Sheep Clouds) அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள்’ (Wool Pack Clouds) என்று அழைக்கப்படுகிறது.

கார்படைமேகங்கள் (Nimbo Stratus): 

195. கார்படை மேகங்கள் எங்கு தோன்றுகின்றன? 

விடை: புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார்படை மேகங்கள் ஆகும்.

196. கார்படை மேகங்கள் எவைகளோடு தொடர்புடையது?

விடை: மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையது.

கீழ்மட்டமேகங்கள் (Low Clouds) படைத்திரள் மேகங்கள் (Strato Cumulus): 

197. படைத்திரள் மேகங்களின் உயரம்?

விடை: 2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் காணப்படும்.

198. படைத்திரள் மேகங்கள் எப்படி காணப்படும்?

விடை: சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்டத்திட்டுகளாக காணப்படும்

199. படைத்திரள் மேகங்களின் வேறு பெயர்? 

விடை: தாழ்மேகங்கள் 

200. பொதுவாக படைத்திரள் மேகங்கள் தோன்றும்போது அப்பகுதி எவ்வாறு காணப்படும்?

விடை: தெளிவான வானிலை காணப்படும்.

Join the conversation