Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

3. மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: 

1. காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.

அ) ஐரோப்பியர்கள்

ஆ) நீக்ரோய்டுகள்

இ) மங்கோலியர்கள்

ஈ) ஆஸ்திரேலியர்கள்

விடை: அ) ஐரோப்பியர்கள்

 

 

2. _____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.

அ) காக்கச இனம்

ஆ) நீக்ரோக்கள்

இ) மங்கோலியர்கள்

ஈ) ஆஸ்திரேலியர்கள்

விடை: இ) மங்கோலியர்கள்

 

3. உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.

அ) தொகை 1

ஆ) ஜூன் 1

இ) ஜூலை 11

ஈ) டிசம்பர் 2

விடை: இ) ஜூலை 11

 

 

4. கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.

அ) நீர்நிலைகள்

ஆ) மலைப் பகுதிகள்

இ) கடலோரப் பகுதிகள்

ஈ) பாலைவனப் பகுதிகள்

விடை: அ) நீர்நிலைகள்

 

 

5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.

1) நகரம்

2) மீப்பெருநகரம்

3) தலைநகரம்

4) இணைந்த நகரம்

அ) 4, 1, 3, 2

ஆ) 1, 3, 4, 2

இ) 2, 1, 3, 4

ஈ) 3, 1, 2, 4

விடை: ஆ) 1, 3, 4, 2

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.

விடை: கலஹாரி

2. மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.

விடை: மொழிக்

3. ____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

விடை: நகர

4. _____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.

விடை: செயற்கைகோள்

5. ______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.

விடை: யாத்திரைக்

III. அ. பொருத்துக.

1. காக்கச இனம் – ஆசிய அமெரிக்கர்கள்

2. நீக்ரோ இனம் – ஆஸ்திரேலியர்கள்

3. மங்கோலிய இனம் – ஐரோப்பியர்கள்

4. ஆஸ்ட்ரலாய்டு இனம் – ஆப்பிரிக்கர்கள்

 

விடை:

1. காக்கச இனம் – ஐரோப்பியர்கள்

2. நீக்ரோ இனம் – ஆப்பிரிக்கர்கள்

3. மங்கோலிய இனம் – ஆசிய அமெரிக்கர்கள்

4. ஆஸ்ட்ரலாய்டு இனம் – ஆஸ்திரேலியர்கள்

 

 

ஆ) பொருத்துக : 

1. சட்லஜ் கங்கைச் சமவெளி – சிதறிய குடியிருப்பு

2. நீலகிரி – நட்சத்திர வடிவக் குடியிருப்பு

3. தென் இந்தியா – செவ்வக வடிவ அமைப்பு

4. கடற்கரை – குழுமிய குடியிருப்பு

5. ஹரியானா – வட்டக் குடியிருப்பு

 

 

விடை:

1. சட்லஜ் கங்கைச் சமவெளி – செவ்வக வடிவ அமைப்பு

2. நீலகிரி – சிதறிய குடியிருப்பு

3. தென் இந்தியா – குழுமிய குடியிருப்பு

4. கடற்கரை – வட்டக் குடியிருப்பு

5. ஹரியானா – நட்சத்திர வடிவக் குடியிருப்பு

 

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

1. கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.

காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

விடை: அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

 

 

2. கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

 

V. பொருந்தாதை வட்டமிடுக.

1. மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்

விடை: வங்கி அலுவல்

2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை

விடை: கங்கை

3. சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்

விடை: காஞ்சிபுரம்

 

Join the conversation