Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

2. முகலாயப் பேரரசு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ) ஹீமாயூன்

ஆ) பாபர்

இ) ஜஹாங்கீர்

ஈ) அக்பர்

விடை: ஆ) பாபர்

 

 

2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

அ) பானிபட்

ஆ) சௌசா

இ) ஹால்டிகட்

ஈ) கன்னோசி

விடை: இ) ஹால்டிகட்

 

 

3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

அ) பாபர்

ஆ) ஹிமாயூன்

இ) இப்ராஹிம் லோடி

ஈ) ஆலம்கான்

விடை: ஆ) ஹிமாயூன்

 

 

4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ) ஷெர்ஷா

ஆ) அக்பர்

இ) ஜஹாங்கீர்

ஈ) ஷாஜஷான்

விடை: ஆ) அக்பர்

 

 

5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

அ) பீர்பால்

ஆ) ராஜா பகவன்தாஸ்

இ) இராஜ தோடர்மால்

ஈ) இராஜா மான்சிங்

விடை: இ) இராஜ தோடர்மால்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்…………………. ஆகும்.

விடை: சேத்தக்

2. பதேபூர் சிக்ரியிலுள்ள. …………………… அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.

விடை: இபாதத் கானா

3. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி. ………………

விடை: சலீம் சிஸ்டி

4. ஜப்தி என்னும் முறை …………………. ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.

விடை: ஷாஜகான் .

5. …………….. வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

விடை: சுயயுர்கள்

 

 

III. பொருத்துக. 

1. பாபர் – அகமது நகர்

2. துர்க்காவதி – அஷ்டதிக்கஜம்

3. ராணி சந்த் பீபி – அக்பர்

4. தீன்-இலாஹி – சந்தேரி

5. இராஜா மான்சிங் – மத்திய மகாணம்

 

விடை:

1. பாபர் – சந்தேரி

2. துர்க்காவதி – மத்திய மகாணம்

3. ராணி சந்த் பீபி – அகமது நகர்

4. தீன்-இலாஹி – அக்பர்

5. இராஜா மான்சிங் – அஷ்டதிக்கஜம்

 

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

1. கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்

காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு

விடை: அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

 

 

2. கூற்று : ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல

இ) கூற்று தவறு, காரணம் தவறு

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

விடை: அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

 

 

3. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க

I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.

II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.

III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அ) I, II மற்றும் III சரி

ஆ) II, III மற்றும் IV சரி

இ) I, III மற்றும் IV சரி

ஈ) II, III, IV மற்றும் 1 சரி

விடை: ஆ) II, III மற்றும் IV சரி

 

 

4. காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.

அ. கன்வா போர்

ஆ. சௌசா போர்

இ. கன்னோசி போர்

ஈ. சந்தேரி போர்

விடை:

அ. 1527 – கன்வா போர்

ஈ. 1528 – சந்தேரி போர்

ஆ. 1539 – சௌசா போர்

இ. 1540 – கன்னோசி போர்

 

 

5. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.

i) சர்க்கார்

ii) பர்கானா

iii) சுபா 

விடை:

iii) சுபா

i) சர்க்கார்

ii) பர்கானா

V. பொருத்துக

         தந்தை மகன்

1. அக்பர் – தில்வார் கான்

2. தௌலத்கான் லோடி – ராணாபிரதாப்

3. ஹசன் சூரி – ஹிமாயூன்

4. பாபர் – ஷெர்ஷா

5. உதயசிங் – ஜஹாங்கீர்

 

 

விடை:

தந்தை மகன்

1. அக்பர் – ஜஹாங்கீர்

2. தௌலத்கான் லோடி – தில்வார் கான்

3. ஹசன் சூரி – ஷெர்ஷா

4. பாபர் – ஹிமாயூன்

5. உதயசிங் – ராணாபிரதாப்

Join the conversation