1. புவியின் உள்ளமைப்பு
I. சரியான விடையை தேர்வு செய்க:
1. நைஃப் (Nife) __________ ஆல் உருவானது.
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம்
இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம்
விடை: அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
2. நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ___________ விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது.
அ) மலை
ஆ) சமவெளிகள்
இ) தட்டுகள்
ஈ) பீடபூமிகள்
விடை: இ) தட்டுகள்
3. நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை ___________ மூலம் அளக்கலாம்.
அ) சீஸ்மோகிராஃப்
ஆ) ரிக்டர் அளவு கோல்
இ) அம்மீட்டர் தான்
ஈ) ரோட்டோ மீட்டர்
விடை: ஆ) ரிக்டர் அளவு கோல்
4. பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழைக்கப்படுகிறது.
அ) எரிமலைத்துளை
ஆ) ளிமலைப் பள்ளம்
இ) நிலநடுக்க மையம்
ஈ) எரிமலை வாய்
விடை: அ) எரிமலைத் துளை
5. மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை ___________
அ) ஸ்ட்ராம்போலி
ஆ) கரக்கபோவா
இ) பியூஜியாமா
ஈ) கிளிமாஞ்சாரோ
விடை: அ) ஸ்ட்ராம்போலி
6. ___________ பகுதி ” பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது.
அ) பசிபிக் வளையம்
ஆ) மத்திய அட்லாண்டிக்
இ) மத்திய கண்டம்
ஈ) அண்டார்ட்டிக்
விடை: அ) பசிபிக் வளையம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _____________ என்று அழைக்கப்படுகிறது.
விடை: வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி
2. நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.
விடை: நில அதிர்வுமானி (Seismograph)
3. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை: எரிமலை வெளியேற்றம்
4. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ____________ ஆகும்.
விடை: செயின்ட் ஹெலன்
5. எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை __________ என அழைக்கின்றனர்.
விடை: எரிமலை ஆய்வியல்
III. பொருந்தாததை வட்டமிடுக.
1. மேலோடு, மாக்மா, புவிக்கருவம், கவசம்
விடை: மாக்மா
2. நிலநடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள்
விடை: எரிமலைவாய்
3. உத்தரகாசி, சாமோலி, கொய்னா, கரக்கடோவே
விடை: கரக்கடோவே
4. லாவா , எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்.
விடை: சிலிக்கா
5. ஸ்ட்ராம் போலி, ஹெலென் , ஹவாய், பூயூஜியாமா
விடை: ஹவாய்
IV. பொருத்துக:
1. நிலநடுக்கம் – ஜப்பானிய சொல்
2. சிமா – ஆப்பிரிக்கா
3. பசிபிக் நெருப்பு வளையம் – திடீர் அதிர்வு
4. சுனாமி – சிலிகா மற்றும் மக்னீசியம்
5. கென்யா மலை – உலக எரிமலைகள்
விடை:
1. நிலநடுக்கம் – திடீர் அதிர்வு
2. சிமா – சிலிகா மற்றும் மக்னீசியம்
3. பசிபிக் நெருப்பு வளையம் – உலக எரிமலைகள்
4. சுனாமி – ஜப்பானிய சொல்
5. கென்யா மலை – ஆப்பிரிக்கா
V. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்
1. கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.
காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
2. கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.
காரணம் : பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.