1. மாநில அரசு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை: இ) 25 வயது
2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
அ) 26
ஆ) 27
இ) 28
ஈ) 29
விடை: ஈ) 29
3. மாநில அரசு என்பது
அ) மாநில அரசின் துறைகள்
ஆ) சட்ட மன்றம்
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ) (அ) மற்றும் (ஆ)
4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை: இ) ஆளுநர்
5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் பர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) ஆளுநர்
ஈ) தேர்தல் ஆணையர்
விடை: இ) ஆளுநர்
6. முதலமைச்சர் என்பவர்
அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்
ஆ) எதிர்க்கட்சி தலைவர்
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்
7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
அ) மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
ஆ) ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
இ) கிராமம், நகரம், மாநிலம்
ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
விடை: ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ………. ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
விடை: குடியரசுத் தலைவர்
2. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ………………………. ஆக நியமிக்கப்படுகிறார்.
விடை: முதலமைச்சர்
3. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ………………..
விடை: உயர்நீதிமன்றம்
4. ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ……………………….
விடை: சட்ட மன்ற உறுப்பினர்
5. ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ……………….. ஆவார்
விடை: சட்டமன்ற உறுப்பினர்
6. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ………………… என்று அழைக்கப்படுவர்
விடை: எதிர்கட்சியினர்
III. பொருத்துக:
1. சட்டமன்ற உறுப்பினர்கள் – தலைமைச் செயலகம்
2. ஆளுநர் – 7
3. முதலமைச்சர் – மாநிலத்தின் தலைவர்
4. யூனியன் பிரதேசங்கள் – சட்டமன்றம்
5. புனித ஜார்ஜ் கோட்டை – பெரும்பான்மை கட்சித் தலைவர்
விடை:
1. சட்டமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்றம்
2. ஆளுநர் – மாநிலத்தின் தலைவர்
3. முதலமைச்சர் – பெரும்பான்மை கட்சித் தலைவர்
4. யூனியன் பிரதேசங்கள் – 7
5. புனித ஜார்ஜ் கோட்டை – தலைமைச் செயலகம்
IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்:
1. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை
அ) ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது.
விடை: ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
2. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
ஆ) கூற்று சரி. கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
இ) கூற்று சரி, விளக்கம் தவறு
ஈ) கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை: அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு
அ) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
ஆ) ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
ஈ) கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை
விடை: இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்