1. வரியும் அதன் முக்கியத்துவம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வரிகள் என்பவை ……………… செலுத்தப்பட வேண்டும்.
அ) விருப்பத்துடன்
ஆ) கட்டாயமாக
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஆ) கட்டாயமாக
2. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது …………………..
அ) சமத்துவ விதி
ஆ) உறுதிப்பாட்டு விதி
இ) சிக்கன விதி
ஈ) வசதி விதி
விடை: இ) சிக்கன விதி
3. வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ……………….
அ) விகிதச்சாரா வரி
ஆ) தேய்வுவீத வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஆ) தேய்வுவீத வரி
4. வருமான வரி என்பது ……………………
அ) நேர்முக வரி
ஆ) மறைமுக வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: அ) நேர்முக வரி
5. சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ……………..
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) விற்பனை வரி
ஈ) சேவை வரி
விடை: ஈ) சேவை வரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ……………….. என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
விடை: வரிவிதிப்பு
2. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ………………..
விடை: விகிதாச்சார வரி
3. ……………………. வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
விடை: அன்பளிப்பு
4. …………………… வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.
விடை: நேர்முக
5. மறைமுக வரி என்பது ……………….. நெகிழ்ச்சி உடையது.
விடை: அதிக
III. பின்வருவனவற்றைப் பொருத்துக:
1. வரி விதிப்புக் கொள்கை – நேர்முக வரி
2. சொத்து வரி – சரக்கு மற்றும் சேவை வரி
3. சுங்கவரி – ஆடம்ஸ்மித்
4. 01.07.2017 – குறைந்த நெகிழ்ச்சி உடையது
5. நேர்முக வரி – மறைமுக வரி
விடை:
1. வரி விதிப்புக் கொள்கை – ஆடம்ஸ்மித்
2. சொத்து வரி – நேர்முக வரி
3. சுங்கவரி – மறைமுக வரி
4. 01.07.2017 – சரக்கு மற்றும் சேவை வரி
5. நேர்முக வரி – குறைந்த நெகிழ்ச்சி உடையது
IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
அ) சேவை வரி
ஆ) மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
இ) சொத்துவரி
ஈ) சுங்கவரி
விடை: இ) சொத்துவரி
V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பின்வரும் வரியில் எது நேர்முக வரி?
அ) சேவை வரி
ஆ) செல்வ வரி
இ) விற்பனை வரி
ஈ) வளர் விகித வரி
விடை: ஆ) செல்வ வரி