1. வளங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்துதெடுக்க:
1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ______________
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பெட்ரோல்
ஈ) சூரிய ஆற்றல்
விடை: ஈ) சூரிய ஆற்றல்
2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
அ) கமுதி
ஆ) ஆரல்வாய்மொழி
இ) முப்பந்தல்
ஈ) நெய்வேலி தென்
விடை: அ) கமுதி
3. மனிதனால் முதலில் அறி உலோகங்களில் ஒன்று ____________
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை: ஆ) தாமிரம்
4. ____________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று. ஒன்று .
அ) சுண்ணாம்புக்கல்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) வெள்ளி
விடை: ஆ) மைக்கா
5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ___________
அ) வெப்பசக்தி
ஆ) அணுசக்தி
இ) சூரிய சக்தி
ஈ) நீர் ஆற்றல்
விடை: ஆ) அணுசக்தி
II. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் __________.
விடை: சீனா
2. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் __________.
விடை: கஞ்சமலை
3. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் __________.
விடை: அலுமினியம்
4. மின்சார பேட்டரிகள் தயாரிக்க __________ பயன்படுகிறது.
விடை: மாங்கனீசு
5. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை __________ என அழைக்கப்படுகிறது.
விடை: கருப்புத் தங்கம்
III. பொருத்துக:
1. புதுப்பிக்கக்கூடிய வளம் – இரும்பு
2. உலோக வளம் – மைக்கா
3. அலோக வளம் – காற்றாற்றல்
4. புதை படிம எரிபொருள் – படிவுப்பாறை
5. சுண்ணாம்புக்கல் – பெட்ரோலியம்
விடை:
1. புதுப்பிக்கக்கூடிய வளம் – காற்றாற்றல்
2. உலோக வளம் – இரும்பு
3. அலோக வளம் – மைக்கா
4. புதை படிம எரிபொருள் – பெட்ரோலியம்
5. சுண்ணாம்புக்கல் – படிவுப்பாறை
IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்
1. கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
2. கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை