1. விஜயநகர், பாமினி அரசுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
விடை: ஆ) தேவராயா – II
2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
விடை: ஆ) குதிரை
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
விடை: ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
விடை: இ) குமார கம்பண்ணா
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
விடை: இ) சுல்தான் பெரோஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம். ………………………..
விடை: பெனுகொண்டா
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ………………. என்று பெயர்
விடை: வராகன்
3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் …………………… வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை: பாரசீக
4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ……………. கவனித்தார்.
விடை: கௌடா என்ற கிராமத்தலைவர்
III. பொருத்துக.
1. விஜயநகரா – ஒடிசாவின் ஆட்சியாளர்
2. பிரதாபருத்ரா – அஷ்டதிக்கஜம்
3. கிருஷ்ண தேவராயா – பாண்டுரங்க மகாமத்தியம்
4. அப்துர் ரசாக் – வெற்றியின் நகரம்
5. தெனாலிராமகிருஷ்ணா – பாரசீக சிற்ப கலைஞர்
விடை:
1. விஜயநகரா – வெற்றியின் நகரம்
2. பிரதாபருத்ரா – ஒடிசாவின் ஆட்சியாளர்
3. கிருஷ்ண தேவராயா – அஷ்டதிக்கஜம்
4. அப்துர் ரசாக் – பாரசீக சிற்ப கலைஞர்
5. தெனாலிராமகிருஷ்ணா – பாண்டுரங்க மகாமத்தியம்
IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும் .
1. கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் : விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை: ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை: ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
3. பொருந்தாததைக் கண்டுபிடி :
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
விடை: ஆ) மகமுது – 1
4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.
அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
விடை: அ) I, II மற்றும் IV சரி