1. மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
I. சரியான விடையை தேர்ந்தெடு:
1. பரிணாமத்தின் வழிமுறை _____
அ) நேரடியானது
ஆ) மறைமுகமானது
இ) படிப்படியானது
ஈ) விரைவானது
விடை: இ) படிப்படியானது
2. தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை: ஆ) ஆப்பிரிக்கா
II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ) கூற்று சரி.
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை: ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது
III. சரியான இணையைக் கண்டுபிடி.
அ) ஆஸ்டரலோ பிதிகஸ்
இரு கால்களால் நடப்பது
ஆ) ஹோமோ ஹபிலிஸ்
நிமிர்ந்து நின்ற மனிதன்
இ) ஹோமோ ஏரக்டஸ்
சிந்திக்கும் மனிதன்
ஈ) ஹோமோ சேப்பியன்ஸ்
முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது
விடை: இ) ஹோமோ எரக்டஸ் – சிந்திக்கும் மனிதன்
IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _____ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள். விடை: மானுடவியல் ஆய்வாளர்கள்
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _____ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை: நாடோடி
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _____ மற்றும் _____ ஆகும்.
விடை: வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்
4. _______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை: கலப்பை
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை: கரிக்கையூர்