தாவரவியல்
601. நீலப் பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்
A) ஏகைனீட்ஸ்
B) ஹெட்டிரோசிஸ்ட்
C) ஏபிளனோஸ்போர்கள்
D) பார்த்திளோஸ்போர்கள்
விடை: B) ஹெட்டிரோசிஸ்ட்
602: கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
உறுதி (A): ஆக்ஸிஜனின் முதன்மை செயலியல் சம்பந்தப்பட்ட பணியானது தாவரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள செல்களை நீட்சியடையத் தூண்டுகிறது.
காரணம் (R): ஆக்ஸிஜனானது மொட்டுகளில் ஓய்வு. நிலையை மீளச் செய்கிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A)ம் (R)ம் சரி, (R)என்பது (A)விற்கு சரியான விளக்கம்
B) (A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R)என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை: A) (A)ம் (R) ம் சரி, (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
603. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
உறுதி (A). : வைட்டமின் K காணப்படும் முதன்மை பொருள்களில் சில பச்சை காய்கறிகள், சோயா எண்ணெய், தக்காளி மற்றும் சில உள்ளன.
காரணம் (R) : வைட்டமின் K-யானது உயர் விலங்குகளில் ஏற்படும் தோல் அரிப்பைத் தடுக்கிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A)-ம் (R) – ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B)(A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R)சரி
விடை: A) (A)-ம் (R)- ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
604. கொழுப்புப் பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது
A) கிளைக்காலைசிஸ்
B). டி.சி.ஏ.
C) குளுக்கனியோஜெனிசிஸ்
D) சப்போனிபிக்கேசன்
விடை; C) குளுக்கனியோஜெனிசிஸ்
605. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
A) 1980
B) 1984
C) 1986
D) 1990
விடை: B) 1984
606. செல்லின் இடைச்சுவரில் மிகவும் அதிகமாக காணப்படக்கூடிய பொருள்
A) சிலிகா
B) பெக்டின்
C) குயிட்டின்
D)லிக்னின்
விடை: B) பெக்டின்
607. உட்கருவின் உள்ளே காணப்படும் புரோட்டோபிளாசத்திற்கு
A) நியூக்ளியோபிளாசம்
B) அமைலோபிளாஸ்ட்
C) இலையோபிளாஸ்ட்
D) சைட்டோபிளாசம்
விடை; D) சைட்டோபிளாசம்
608. சாறுண்ணிக்கு ஒரு எடுத்துக்காட்டு
A) நெப்பந்திஸ்
B) யுட்ரிகுளேரியே
C) டையோனேயே
D) மானோட்ரோபா
விடை; C) டையோனேயே
609. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு?
A) பிரஸிக்கோ
B)கஸ்குட்டா
C) மியூகர்
D) நெப்பந்திஸ்
விடை; D) நெப்பந்திஸ்
610. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I. பட்டியல் – II
a) ஜெனிட்டிக்ஸ். – 1) பூஞ்சைகள் பற்றி படிப்பது
b) சைட்டாலஜி. – 2) பாக்டீரியா பற்றி படிப்பது
c) மைகாலஜி – 3) செல்கள் பற்றி படிப்பது
d) பாக்டீரியாலஜி – 4) மரபு பற்றி படிப்பது
குறியீடுகள் :
1 2 3 4
4 3 2 1
4 3 1 2
1 2 4 3
விடை: C) 4 3 1 2
611. குட்டை நீரின் மேல் அடுக்கு
A) எபிலிம்னியான்
B) தெர்மோக்ளைன்
C) ஹைபோலிம்னியான்
D) யூரிதெர்மல்
விடை: A) எபிலிம்னியான்
612. பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று அழைக்கப் படுவதற்கு காரணம்
A) எல்லா பூச்சிகளும் இந்த வகைத் தாவரங்களை உண்ணக்கூடியது
B) இந்தத் தாவரங்கள் உணவுக்கு பூச்சிகளை உண்ணக்கூடியது
C) அவைகள் தாவர உண்ணிகள்
D) உருவத்தில் பூச்சிகளை ஒத்து இருப்பதால்
விடை; B) இந்தத் தாவரங்கள் உணவுக்கு பூச்சிகளை உண்ணக்கூடியது
613. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I. பட்டியல் II
a) டீலோ சென்ட்ரிக். . -1) குச்சிவடிவ இரு கரங்களைக் கொண்டது
b) அக்ரோ சென்ட்ரிக். – 2) ‘L வடிவம்
c) மெட்டாசென்ட்ரிக். – 3) குச்சி வடிவம் ஒரு கரம் கொண்டது
d) சப்மெட்டா சென்ட்ரிக் – 4) ‘V’ வடிவம்
குறியீடுகள் :
A) 3 1 2 4
B) 3 1 4 2
C) 2 1 3 2
D) 1 4 3 2
விடை: B) 3 1 4 2
614. ஒரு கிராம் தோட்ட மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை
A) 1 மில்லியன்
B) 100 மில்லியன்
C) 500 மில்லியன்
D) 1 பில்லியன் மற்றும் அதிகமாக
விடை: D) 1 பில்லியன் மற்றும் அதிகமாக
615. வாஸ்குலார் கற்றையில் புரோட்டோசைலம் மையத்தை நோக்கி காணப்பட்டால் அது பின்வருமாறு அழைக்கப்படும்.
A) வெளிநோக்கியது
B) உள்நோக்கியது
C) நான்கு முனை சைலம்
D) பல்முனைச் சைலம்
விடை: B) உள்நோக்கியது
616. பின்வரும் கூற்றுகளை கவனி.
1) சைலக் குழாய்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் காணப்படுகின்றன.
II) சைலக் குழாய்கள் ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படவில்லை.
III)சைலக் குழாய்கள் நீரை கடத்துகின்றன.
IV) சைலக் குழாய்கள் தாவரத்திற்கு வலிமையைக் கொடுக்கிறது.
இவற்றுள்
A) (I) மட்டும் சரியானது
B) (I), (II) மற்றும் (III) சரியானவை
C) (I), (III) மற்றும் (IV) சரியானவை
D) அனைத்தும் சரியானவை
விடை; D) அனைத்தும் சரியானவை
617. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி.
துணிபு (A) : பூஞ்சைகள் தரையில் (வாழிடம்) இருந்து உணவைப் பெறுகின்றன.
காரணம் (R) : பூஞ்சைகள் ஜீரண நொதிகளை வாழிடத்தில் சுரக்கின்றன.
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல
D) (A) தவறு, ஆனால் (R)’சரி
C) (A) சரி, ஆனால் (R) தவறு
விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.
618. கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) தனி சைம். – மியூஸா
B) சையாத்தியம் – யூபோர்பியா
C) தனி ரசீம். – ஹைபிஸ்கஸ்
D) ஸ்பேடிக்ஸ். – குரோட்டலேரியா
விடை: B) சையாத்தியம் – யூபோர்பியா
619. கிரிகர்மெண்டல் கலப்புயிரி சோதனைகளை எதில் செய்தார்?
A) பைசம் சடைவம்
B) பழப்பூச்சி
C) முயல்கள்
D) அந்துப்பூச்சிகள்
விடை: A) பைசம் சடைவம்
620. சயனைடுகள் எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன?
A) ஜிப்ரெல்லா பியூசாரியம்
B) ஜெரோபைட்ஸ்
C) சூடோமோனாஸ்
D) ஈஸ்ட்
விடை: A) ஜிப்ரெல்லா பியூசாரியம்
621. செல்லின் ஆற்றல் சாலை என அழைக்கப்படுவது
A) மைட்டோகாண்டிரியா
B) பிளாஸ்டிட்
C) ரைபோசோம்
D) கோல்கை உறுப்புகள்
விடை: A) மைட்டோகாண்டிரியா
622. தாவரத் தொகுதிகளில் அடியில் கண்ட எந்தத் தொகுதி ‘நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது?
A) ஜிம்னோஸ்பெர்ம்
B) பிரையோஃபைட்டுகள்
C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
D) டெரிடோஃபைட்டுகள்
விடை: B) பிரையோஃபைட்டுகள்
623. லைசோசோம்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவற்றில் உள்ள நொதிகள்
(A) கார்பாஸைலேட்டிங்
B) சுவாசித்தல்
C) ஆக்ஸிஜனேற்றம்
D) செரித்தல்
விடை: D) செரித்தல்
624. பூவாத தாவரங்களில் விதைகளைப் பெற்றுள்ள ஒரே தொகுதி
A) டெரிடோஃபைட்டுகள்
B) பிரையோஃபைட்டுகள்
C) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
D) ஜிம்னோஸ்பெர்ம்கள்
விடை:D) ஜிம்னோஸ்பெர்ம்கள்
625. தாவர செல்லில் DNA காணப்படும் பகுதி
A) பசுங்கணிகம்
B) மைட்டோ காண்ட்ரியா
C) உட்கரு
D) இவை அனைத்தும்
விடை: C) உட்கரு
626. ஒரு தாவரசெல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
A) குரோமோசோம்
B) செல்சுவர்
C) செல்சவ்வு
D) உட்கரு
விடை: B) செல்சுவர்
627. கீழ் உள்ள ஒளி அலைகளில் எது ஒளிச் சேர்க்கையில் அதிக திறன் கொண்டது?
A) நீலம்
B) பச்சை
C) ஆரஞ்சு
D) மஞ்சள்
விடை: A) நீலம்
628. ஒரு மரத்தின் வயதினை கணக்கிடுவது எவ்வாறு?
A) அதன் உயரத்தினை அளத்தல்
B) அதன் விட்டத்தை அளத்தல்
C) அதன் செல் சாறினை ஆய்வு செய்தல்
D) அதன் வளர்ச்சி வளையங்களை எண்ணுதல்
விடை: D) அதன் வளர்ச்சி வளையங்களை எண்ணுதல்
629. இலையின் வெளிப்புறத்தில் உள்ள புறத்தோலில் காணப்படும் சிறு துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் செய்கிறது.அத்துளைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
A) ஹைடதோடுகள்
B) ஸ்டிக்மேடா
C) இலைத் துளைகள்
D) ஸ்ட்ரோமா
விடை; C) இலைத் துளைகள்
630. அதிகமாக உபயோகிக்கப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது
A) ஆல்கா
B) பாக்டீரியம்
C) பூஞ்சை
D) தாவரம்
விடை; C) பூஞ்சை
631. கீழ்க்காண்பவைகளில் எது கூட்டுத்திசு?
A) புளோயம்
B) பாரன்கைமா
C) கோலன்கைமா
D) குளோரன்கைமா
விடை: A) புளோயம்
632. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு ___ எனப்படும்.
A) மைக்காலஜி
B) சைட்டாலஜி
C) நுண்ணுயிரியல்
D) ஆல்காலஜி
விடை: A) மைக்காலஜி
633. விலங்குகளால் நடைபெறும் மகரந்த சேர்க்கை ___ எனப்படும்.
A) அனிமோபில்லி
B) ஆர்னிதோபில்லி
C) என்டமோபில்லி
D) சூபில்லி
விடை: D) சூபில்லி
634. கருவுறுதலுக்குப் பின் உறைகள் வளர்ந்து ___ மாறுகிறது.
A) விதையுறை
B) எண்டோஸ்பெர்ம்
C) மைக்ரோபைல்
D) ராஃபே
விடை: A) விதையுறை
635. தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்
A) தற்சார்பு பாக்டீரியங்கள்
B) பிறசார்பு பாக்டீரியங்கள்
C) ஒட்டுண்ணி பாக்டீரியங்கள்
D) சாறுண்ணிகள்
விடை:A) தற்சார்பு பாக்டீரியங்கள்
636. செல்லின் ஆற்றல் நிலையம் எனக் கருதப்படுவது
A) மைட்டோகாண்ட்ரியா
B) கோல்கை உறுப்புகள்
C) எண்டோபிளாஸ்மிக் வலை
D) பசுங்கணிகம்
விடை:A) மைட்டோகாண்ட்ரியா
637. கீழ் உள்ளவற்றில் எவை தாவரங்களின் சுவாச உறுப்பு?
A) பூக்கள்
B) இலை
C) வேர்
D) எதுவுமில்லை
விடை: B) இலை
638. காளானின் குடை போன்ற விரிந்த பகுதி
A) நுண்தட்டு
B) ஆனுலஸ்
C) ஸ்டைப்
D)பைலியஸ்
விடை: D)பைலியஸ்
639. செல்லின் ஆற்றல் சாலை என அழைக்கப்படுவது
A) மைட்டோகாண்டிரியா
B) பிளாஸ்டிட்
C) ரைபோசோம்
D) கோல்கை உறுப்புகள்
விடை: A) மைட்டோகாண்டிரியா
640. செல்லின் சொரசொர்ப்பான எண்டோபிளாச வலை அடியிற் கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாகச் செய்கிறது?
A) நியூக்ளியோடைடு உருவாக்குதல்
B) புரோட்டீன் உருவாக்குதல்
C) கொழுப்பு உருவாக்குதல்
D) ஸ்டார்ச் உருவாக்குதல்
விடை:B) புரோட்டீன் உருவாக்குதல்
641. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்
A) குளோரோபிளாஸ்ட்
B) பெராக்ஸிசோம்ஸ்
C) மைட்டோகாண்டிரியா
D) சைட்டோபிளாசம்
விடை: C) மைட்டோகாண்டிரியா
642. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை
A) மைட்டோஸிஸ்
B) மியோஸிஸ்
C) ஏமைட்டோஸிஸ்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை; B) மியோஸிஸ்
643. குறுக்கு ஏறும் முறை அடியிற்கண்ட எந்த நிலையில் ஏற்படுகிறது?
A) லெட்டோடீன்
B) சைகோட்டீன்
C) பாக்கிட்டீன்
D) டையாகைனஸிஸ்
விடை: C) பாக்கிட்டீன்
644. லைசோசோமின் வேறுப்பெயர்
A) தற்கொலைப் பைகள்
B) செல்லின் ஆற்றல் நிலையம்
C) காண்டிரியோசோம்
D) டிக்டியோசோம்
விடை; A) தற்கொலைப் பைகள்
645. சுவாசித்தல் என்பது ஒரு
A) வளர் மாற்றச்செயல்
B) சிதை மாற்றச் செயல்
C) வேதிச்செயல்
D) இவை அனைத்தும்
விடை; B) சிதை மாற்றச் செயல்
646. இவற்றில் காற்றில்லா சுவாசம் நடைபெறுவது
A) ரைபோசோம்களில்
B) நியூக்ளியஸில்
C) சைட்டோபிளாசத்தில்
D) வாக்யோலில்
விடை;C) சைட்டோபிளாசத்தில்
647. இந்த செயலில் ஆக்ஸிஜன் நேரிடையாகப் பயன்படுத்தப்படுகிறது.
A) கிளைகாலைசிஸ்
B) நொதித்தல்
C) கிரப் சுழற்சி
D) எலக்ட்ரான் மாற்றத்தொடர்
விடை; C) கிரப் சுழற்சி
648. ஒரு செல்லின் உயிருள்ள பகுதி என்று அழைக்கப்படுவது
A) செல்சுவர்
B) புரோட்டோபிளாசம்
C) ஹையலோ பிளாசம்
D) செல்சாறு
விடை;B) புரோட்டோபிளாசம்
649. ஒவ்வொரு உயிருள்ள செல்லும் ____ பெற்றுள்ளன
A) செல்சவ்வு
B) உணவுக் குமிழ்
C) பசுங்கணிகம்
D) செல்சுவர்
விடை: A) செல்சவ்வு
650. யூகேரியாட்டிக் உட்கருக்களில் காணப்படும் ஹிஸ்டோன் புரதத்தின் பண்புகள் கீழ்க்கண்ட தன்மையை உடையன.
A) அமிலம்
B) காரம்
C) நியூட்ரல்
D) அம்போடேரிக்
விடை: B) காரம்
651. பச்சையத்தைக் கரைக்கக் கூடியது
A) அங்கக கரைப்பான்கள்
B) அனங்கக கரைப்பான்கள்
C) அங்கக கரைப்பான்கள் மற்றும் அனங்கக கரைப்பான்கள்
D) இவை எதுவுமில்லை
விடை: A) அங்கக கரைப்பான்கள்
652. தாவரங்களில் சுவாசித்தலின்போது வெளிவரும் வாயு
A) ஆக்ஸிஜன்
B) கார்பன்-டை-ஆக்ஸைடு
C) சல்பர்-டை-ஆக்ஸைடு
D) அம்மோனியா
விடை: B) கார்பன்-டை-ஆக்ஸைடு
653. ஒரு பாக்டீரியா செல்லில், சுவாசித்தல் நடைபெறும் இடம்
A) புரோட்டோ பிளாஸ்மிக் சவ்வு
B) சென்ட்ரோசோம்
C) காண்டிரியோசோம்
D) மைட்டோகாண்டிரியா
விடை: A) புரோட்டோ பிளாஸ்மிக் சவ்வு
654. செல்சவ்வில் காணப்படும் உணர் உறுப்புகள்
A) கார்போஹைட்ரேட்டுகள்
B) புரோட்டீன்கள்
C) நியூக்ளிக் அமிலங்கள்
D) லிப்பிடுகள்
விடை: B) புரோட்டீன்கள்
655. கிளைகாலிசிஸ் எதில் நடைபெறுகிறது?
A) சைட்டோபிளாசம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) குமிழ்கள்
D) பசுங்கணிகம்
விடை; A) சைட்டோபிளாசம்
656. சிட்ரஸ் கேன்கர் என்ற நோயை ஏற்படுத்தும் காரணி
A) ஸான்தோமோனாஸ் சிட்ரி
B) டொபக்கோ மொசைக் வைரஸ்
C) அல்புனோ கான்டிடா
D) லெப்டோஸ்பைரா
விடை;A) ஸான்தோமோனாஸ் சிட்ரி
657. பொருந்தா ஒன்றினைக் கண்டறிக.
A) பெர்ரி
B) சூலக வெடிகனி
C) ட்ரூப்
D) பெப்போ
விடை:B) சூலக வெடிகனி
658. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I. பட்டியல் II
பூவிதழ். – 1) துணைப்பாகம்
புல்லிவட்டம். – 2) ஒருவித்திலைத் தாவரம்
சூலகம். – 3) சீத்தாப்பூ
தொடுயிதழமைவு. – 4) சூலிலை
குறியீடுகள் :
A) 2 1 4 3
B) 4 3 1 2
C) 2 3 1 4
D) 2 3 4 1
விடை; A) 2 1 4 3
659. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை எழுதுக.
A) சூலிலை
B) மகரந்தத்தாள்
C) சூல்
D) புல்லி
விடை; D) புல்லி
660.ஒரு மைக்ரானின் அளவு
A) 1/1000 மிமீ
B) 1/1000A
C) 1/1000 மி.மைக்ரான்
D) 1/1000 cm
விடை: A) 1/1000 மிமீ
661. உலகம் வெப்பமாதலை ஏற்படுத்தும் பொருள்
A) ஈயம்
B) கார்பன் மோனாக்ஸைடு
C) துகள் போன்ற பொருட்கள்
D) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
விடை: D) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
662. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?
A) புற்கள்
B) எலுமிச்சை
C) லெகுமினஸ் தாவரம்
D) வேப்பமரம்
விடை; C) லெகுமினஸ் தாவரம்
663. ஃபுளோயம் திசு சார்ந்தவற்றில் பொருந்தாதவற்றை கண்டறிக.
A) சல்லடைக் குழாய்
B) துணை செல்கள்
C) ஃபுளோயம் நார்கள்
D) மர நார்கள்
விடை: D) மர நார்கள்
664. ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது
A) துண்டாதல்
B) ஸ்போர் உருவாதல்
C) இணைவு
D) பிளத்தல்
விடை; C) இணைவு
665. தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை,
A) ஒருவித்திலை மற்றும் இருவித்திலைத் தாவரங்கள்
B) பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்
C) கிரிப்டோகாம் மற்றும் ஃபெனரோகாம்
D) நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை
விடை: C) கிரிப்டோகாம் மற்றும் ஃபெனரோகாம்
666. எந்தக் குறைபாட்டின் காரணமாக இலை மஞ்சளாகிறது?
A) இரும்பு
B) கார்பன்
C) கார்பன் மோனாக்ஸைடு
D) துத்தநாகம்
விடை; D) துத்தநாகம்
667. ஒரு சிறந்த பூச்சிக்கொல்லியாகப் பயன்படுவது
A) கார்பன்
B) கார்பன் டெப்ரா குளோரைடு
C) சல்பர்
D) காப்பர்
விடை: C) சல்பர்
668. பூமியில் உள்ள ஓசோன் படலம் எவ்வாறு உயிரினங்களுக்கு உதவுகிறது?
A) ஆக்ஸிஜனை வழங்குகிறது
B) நைட்ரஜன் சுழற்சியை கட்டுப்படுத்துகிறது
C) வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது
D) புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது
விடை: D) புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது
669. இருட்செயல் பற்றிய ஆய்விற்காக நோபல் பரிசுப் பெற்றவர்
A) மெல்வின் கால்வின்
B) கார்னர்
C) அல்லார்ட்
D) கிரப்
விடை; A) மெல்வின் கால்வின்
670. சிட்ரஸ் கேன்கர் என்னும் நோய் இதன் மூலம் உருவாகிறது?
A) பாக்டீரியம்
B) பூஞ்சை
C) வைரஸ்
D) கொக்கிப்புழு
விடை: A) பாக்டீரியம்
671. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை எடுத்து எழுது.
A) பெர்ரி
B) காப்சூல்
C) ட்ரூப்
D)பெப்போ
விடை; B) காப்சூல்
672. மிக அதிக அளவில் காணப்படும் கண்ணாடி வீடு வாயு
A) CH4
B)NO2
C) SO2
D) CO2
விடை; D) CO2
673. கோலைன் நிறைந்த ஆதாரத் தாவரம்
A) ஈஸ்ட்
B) காளான்கள்
C) பச்சை இலைகள்
D) தானியங்கள்
விடை: C) பச்சை இலைகள்
674. ‘ஆர்னித்தோபில்லி’ என்பது
A) காற்றின் உதவியுடன் நடைபெறும் மகரந்த சேர்க்கை
B) பறவைகள் உதவியுடன் நடைபெறும் மகரந்த சேர்க்கை
C) பூச்சிகள் வழி நடைபெறும் மகரந்த சேர்க்கை
D) காற்று வழி விதை பரவுதல்
விடை: B) பறவைகள் உதவியுடன் நடைபெறும் மகரந்த சேர்க்கை
675. கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் வேதிய சேர்ம பாக்டீரியாவை கண்டறியவும்
A) ரைசோபியம்
B) கிளாஸ்டிரீடியம்
C) நைட்ரோபேக்டர்
D) பெகியோடா
விடை; D) பெகியோடா
676. தாவரங்களிலிருந்து திரவ துளிகளாக நீர் வெளியேறும் முறை
A) நீர்க்கசிவு
B) நீராவிப்போதல்
C) டிரான்ஸ்டக்ஷன்
D) டிரான்ஸ்பார்மேஷன்
விடை; A) நீர்க்கசிவு
677. ‘சைரனின்’ என்ற பாலியல் ஹார்மோன் உற்பத்தி செய்யும் உயிரி
A) ஆல்கா
B) பூஞ்சை
C) லைகன்
D) பாக்டீரியா
விடை: B) பூஞ்சை
678. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஒரு முழுமையான தண்டு ஒட்டுண்ணி?
A) கஸ்கூட்டா
B) டிராசெரா
C) விஸ்கம்
D) வாண்டா
விடை: A) கஸ்கூட்டா
679. உண்ணத்தகுந்த தடுப்பு மருந்தானது வெற்றிகரமாக எந்த தாவரத்தில் உருவாக்கப் பட்டது ?
A) பட்டாணி
B) மாம்பழம்
C) உருளை
D) முட்டைகோஸ்
விடை; D) முட்டைகோஸ்
680. ஒரு புரோகாரியோட் வகை செல்லின் பண்பை கண்டறியவும்
A) செல்சுவர் காணப்படுவது
B) 80S வகை ரைபோசோம் காணப்படுதல்
C) மரபணு பொருள் காணப்படுவதில்லை
D) 70S வகை ரைபோசோம் காணப்படுதல்
விடை: D) 70S வகை ரைபோசோம் காணப்படுதல்
681. சுவாசத்தின் போது ஆக்ஸிகரண பாஸ்பரி கரணம் நடைபெறும் பகுதி
A) பசுங்கனிகத்தின் மாட்ரிக்ஸ்
B) மைட்டோகாண்டிரியாவின் மாட்ரிக்ஸ்
C) மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வு
D) பசுங்கணிகத்தின் கிரானாபகுதி
விடை: C) மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வு
682. ஒன்றைத் தவிர மற்ற அனைத்துச் செல்களிலும் மைட்டோ காண்ட்ரியா காணப்படுகிறது?
A) ஈஸ்ட்
B) பாக்டீரியா
C) பூஞ்சை
D) ஆல்கா
விடை: A) ஈஸ்ட்
683. ‘டாக்ஸால்’ என்பது எந்த தாவர குழுமத்திலிருந்து பெறப்படுகிறது?
A) பிரையோபைட்
B) ஜிம்னோஸ்பெர்ம்
C) டெரிடோபைட்
D) லைகன்
விடை; B) ஜிம்னோஸ்பெர்ம்
684. ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆல்கா
A) கிராஸில்லேரியா
B) குளோரெல்லா
C) போட்ரியோகாக்கஸ்
D) சார்காஸம்
விடை: C) போட்ரியோகாக்கஸ்
685. இரு பண்பு கலப்பின் அடிப்படையில் அமைந்த விதி
A) ஒங்கு விதி
B) தனித்துப் பிரிதல் விதி
C) சார்பின்றி ஒதுங்குதல் விதி
D) கேமிட்டுகளின் தூய தன்மை
விடை; C) சார்பின்றி ஒதுங்குதல் விதி
686. இருபண்பு கலப்பின விகிதம்
A) 1:2:1
B) 3:1
C) 1:1
D) 9:3:3:1
விடை; D) 9:3:3:1
687. ஒளிசேர்க்கை ஆய்வில் முதலில் பயன்படுத்தப்பட்ட ஒரு செல்பாசி எது ?
A) க்ளோரெல்லா வல்காரிஸ்
B) க்ளாமிடோமோனாஸ் வல்காரிஸ்
C) ஸ்பைருலினா வல்காரிஸ்
D) வால்வாக்ஸ் வல்காரிஸ்
விடை: B) க்ளாமிடோமோனாஸ் வல்காரிஸ்
688. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
பூச்சி உண்ணும் தாவரம்/தாவரங்களை கண்டு பிடிக்கவும்
I) நெபன்தஸ் II) டிராசிரா III) வாண்டா. IV) கஸ்கூட்டா
இவற்றில்:
A) 1 மட்டும் சரியானது
B) 1 மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் சரியானவை
விடை; B) 1 மற்றும் II சரியானவை
689. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது/எவை உவர் சதுப்பு நிலத்தாவரங்களுக்கு. பொருந்துபவை?
I. சுவாசவேர் காணப்படுகிறது
II. விவிபேரி விதை முளைத்தல்
III.உப்பு சுரக்கும் சுரப்பிகள் உள்ளன
IV. இலைகளில் ஏரன்கைமா திசு காணப்படுதல்
இவற்றில்:
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் சரியானவை
விடை; D) அனைத்தும் சரியானவை
690. பசுங்கணிகங்களின் ‘க்ரானா’ பகுதிகளின் உள்புறம் உள்ள ஒளிச்சேர்க்கை அலகுகள் யாவை?
A ) க்ரிஸ்டே
B) தைலகாய்டுகள்
C) க்ரானா
D) குவாண்டோசோம்ஸ்
விடை; B) தைலகாய்டுகள்
691. DNA-வின் ஒரு இழையில் உள்ள காரங்களின் வரிசைக்கிரமம் ATGACTGTC எனில் அதன் மாற்று இழையில் உள்ள காரங்களின் வரிசைக் கிராமம்
A) TACTGACAG
B) TUCTGUCTA
C) GUAGTAGAC
D) TGACGATGA
விடை; A) TACTGACAG
692. ‘இரு பெயரிட்டழைத்தல் முறை என்னும் வாசகத்தை புனைந்தவர்
A) அரிஸ்டாடில்
B) குவியர்
C) லின்னேயஸ்
D) லாமார்க்
விடை: C) லின்னேயஸ்
693. அசிடாபுலேரியா என்பது
A) ஒரு செல் பூஞ்சை
B) பல செல் பூஞ்சை
C) ஒரு செல் பாசி
D) பல செல் பாசி
விடை; C) ஒரு செல் பாசி
694.உலகத்தின் மிக உயரமான மரத்தின் தாவரவியல் பெயரென்ன?
A) டிரோகார்பஸ் ஆல்பஸ்
B) டர்மினாலியா கடாபா
C) செகோயா செம்பர்வைரன்ஸ்
D) சன்டாலம் செம்பர்வைரன்ஸ்
விடை; C) செகோயா செம்பர்வைரன்ஸ்
695. அக்ரோஸ்டாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
A) புற்கள்
B) பழங்கள்
C) மலர்கள்
D) உலர் பழங்கள்
விடை; A) புற்கள்
696. தாவரங்களின் டிக்டியோ சோம்களின் மறுபெயர் என்ன?
A) ரைபோசோம்ஸ்
B) லைசோசோம்ஸ்
C) கோல்கி பாடீஸ்
D) பாலிசோம்ஸ்
விடை; C) கோல்கி பாடீஸ்
697. எவ்வகை தாவர தொகுப்பு ‘வாஸ்குலார் திசு இல்லா பூக்காத் தாவரங்கள்’ என கூறப்படுகிறது?
A) டெரிடோஃபைட்கள்
B) பிரையோஃபைட்கள்
C) ஜிம்னோஸ்பெர்ம்கள்
D) ஆஞ்சியோஸ்பெர்ம்
விடை: B) பிரையோஃபைட்கள்
698. இவற்றுள் எது ‘தற்கொலைப் பைகள்’ அழைக்கப்படுகிறது?
A) உட்கருமணிகள்
B) மைட்டோகான்ட்ரியா
C) சென்டரோசோம்கள்
D) லைசோசோம்கள்
விடை: D) லைசோசோம்கள்
699. தாவரங்களில் நீர் கடத்தும் திசு
A) சைலம்
B) ஸ்கிளீரைடுகள்
C) ஃபுளோயம்
D) கோலன்கைமா
விடை: A) சைலம்
700. கிளைக்காலைஸிஸ் என்பது ___ன் மாற்றமாகும்
A) குளுக்கோஸில் இருந்து கிளைக்கோஜன்
B) கிளைக்கோஜனில் இருந்து குளுக்கோஸ்
C) குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
D) குளுக்கோஸில் இருந்து சிட்ரிக் அமிலம்
விடை; C) குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்