SI DAY – 07 CLASS
About Lesson

8 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் கல்வி

அலகு 2 – புவியியல்

TEST 1/10

வானிலை மற்றும் காலநிலை

அறிமுகம்

1. புவியின் இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று எது ?

2. புவியின் காலநிலையால் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை எவை ? 

வானிலை (Weather)

3. புவியின் வானிலை என்பது ?

4. குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வைக் குறிப்பது எது ? 

5. புவியின் வானிலை எப்படி மாறக்கூடியது?

6. காலையில் புவியின் வானிலை எப்படி காட்சியளிக்கும்?

7. மாலை நேரத்தில் புவியின் வானிலை எப்படி காட்சியளிக்கும்?

8. புவியின் குளிர்காலத்தில் குளிராகவும், கோடைக்காலத்தில் வெப்பமாகவும் இருப்பது எது? 

காலநிலை (Climate)

9. புவியின் ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பது எது?

10. புவியின் காலநிலை எப்படி கணக்கிடப்படுகிறது? 

REVISION 1/10

வானிலை மற்றும் காலநிலை

அறிமுகம்

1. புவியின் இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று எது ?

விடை : காலநிலை

2. புவியின் காலநிலையால் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை எவை ? 

விடை : நிலத்தோற்றம், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வானிலை (Weather)

3. புவியின் வானிலை என்பது ?

விடை: ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின்திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும். 

4. குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வைக் குறிப்பது எது ? 

விடை : வானிலை

5. புவியின் வானிலை எப்படி மாறக்கூடியது?

விடை: நேரத்திற்கு நேரம், காலத்திற்கு காலம் ஒரு வருடத்திற்குள்ளாகவே மாறக்கூடியது.

6. காலையில் புவியின் வானிலை எப்படி காட்சியளிக்கும்?

விடை: தெளிவான வானத்துடன் வெப்பமாக இருக்கும்.

7. மாலை நேரத்தில் புவியின் வானிலை எப்படி காட்சியளிக்கும்?

விடை: மேகமூட்டத்துடன் கூடிய மழையாக காட்சியளிக்கும்.

8. புவியின் குளிர்காலத்தில் குளிராகவும், கோடைக்காலத்தில் வெப்பமாகவும் இருப்பது எது? 

விடை: வானிலை

காலநிலை (Climate)

9. புவியின் ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பது எது?

விடை: காலநிலை

10. புவியின் காலநிலை எப்படி கணக்கிடப்படுகிறது? 

விடை: வளிமண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும். 

TEST 11/20

11. காலநிலையின் கூறுகளும் மற்றும் வானிலையின் கூறுகளும் எப்படி இருக்கும்? 

12. புவியின் வளிமண்டலத்தில் அடிக்கடி மாறாமல் இருப்பது எது?

வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள்

13. புவியின் வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள் எவை?

14. புவியின் வடிவம்? 

15. புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?

16. புவியின் துருவப் பகுதிகள் சூரியக் கதிர்களை எவ்வாறு பெறுகின்றன ?

17. புவியில் மிகக் கடும் குளிர் நிலவும் பகுதி எது ? 

18. புவியில் துருவப் பகுதியில் மிகக் கடும் குளிர் நிலவ காரணம்? 

19. புவியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகள் சூரியக்கதிர்களை எவ்வாறு பெறுகின்றன ?

20. புவியில் காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ள பகுதி எது? 

REVISION 11/20

11. காலநிலையின் கூறுகளும் மற்றும் வானிலையின் கூறுகளும் எப்படி இருக்கும்? 

விடை: ஒன்றாக இருக்கும்.

12. புவியின் வளிமண்டலத்தில் அடிக்கடி மாறாமல் இருப்பது எது?

விடை: காலநிலை அடிக்கடி மாறக்கூடியது அல்ல.

வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள்

13. புவியின் வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள் எவை?

விடை : சூரியக்கதிர்களின் படுகோணம், சூரிய ஒளிப்படும் நேரம், உயரம், நிலம் மற்றும் நீர் பரவல், அமைவிடம், மலைத்தொடர்களின் திசை அமைவு, காற்றழுத்தம், காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவை ஓரிடத்தின் / பகுதியின் / பிரதேசத்தின் காலநிலையையும், வானிலையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

14. புவியின் வடிவம்? 

விடை: கோள வடிவமானது. 

15. புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?

விடை : புவியின் கோள வடிவம் காரணமாகும்.

16. புவியின் துருவப் பகுதிகள் சூரியக் கதிர்களை எவ்வாறு பெறுகின்றன ?

விடை: சாய்வாக பெறுகின்றன.

17. புவியில் மிகக் கடும் குளிர் நிலவும் பகுதி எது ? 

விடை: துருவப் பகுதி

18. புவியில் துருவப் பகுதியில் மிகக் கடும் குளிர் நிலவ காரணம்? 

விடை: துருவப் பகுதியில் சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் துருவப் பகுதியில் மிகக் கடும் குளிர் நிலவுகிறது. 

19. புவியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகள் சூரியக்கதிர்களை எவ்வாறு பெறுகின்றன ?

விடை: செங்குத்தாக பெறுகின்றன.

20. புவியில் காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ள பகுதி எது? 

விடை: பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது. 

TEST 21/30

21. புவியின் நீரோட்டத்திற்கும், காற்றோட்டத்திற்கும் காரணமாக இருப்பது எது ? 

22. புவியின் வெப்பக்காற்று வளிமண்டலத்தில் மேல் நோக்கிச் செல்வதால் அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் எவ்வாறு உள்ளது ?

23. குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுவதற்கான காரணம்?

வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக்கூறுகள்

24. புவியின் வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக்கூறுகள் எவை ? 

வெப்ப நிலை (Temperature)

25. புவியின் வானிலை மற்றும் காலநிலையின் முக்கியமான கூறு எது ? 

26. புவியும் அதன் வளி மண்டலமும் எதனால் வெப்பம் அடைகின்றன ?

27. புவியின் காற்றில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பது எது?

28. சூரிய கதிர்வீசலால் மட்டுமின்றி புவியின் வளிமண்டல நிறையையும் சிறிதளவு சார்ந்துள்ள வெப்பம் எது ?

29. புவியில் வெப்பம் எப்படி மாறுபடுகிறது ?

30. புவியின் வெப்பம் இடத்திற்கே இடம் மாறுபடுவதற்கான காரணங்கள் யாவை ?

REVISION 21/30

21. புவியின் நீரோட்டத்திற்கும், காற்றோட்டத்திற்கும் காரணமாக இருப்பது எது ? 

விடை: வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

22. புவியின் வெப்பக்காற்று வளிமண்டலத்தில் மேல் நோக்கிச் செல்வதால் அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் எவ்வாறு உள்ளது ?

விடை: குறைவாக உள்ளது.

23. குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுவதற்கான காரணம்?

 விடை: காற்றின் அழுத்தம் குறைவாக உள்ளதால் குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுகின்றது.

வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக்கூறுகள்

24. புவியின் வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக்கூறுகள் எவை ? 

விடை : வெப்பநிலை, மழை வீழ்ச்சி, காற்றழுத்தம், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக் கூறுகளாகும்.

வெப்ப நிலை (Temperature)

25. புவியின் வானிலை மற்றும் காலநிலையின் முக்கியமான கூறு எது ? 

விடை: வெப்ப நிலை (Temperature)

26. புவியும் அதன் வளி மண்டலமும் எதனால் வெப்பம் அடைகின்றன ?

விடை: சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்பம் அடைகின்றன. 

27. புவியின் காற்றில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பது எது?

விடை: வெப்பநிலை ஆகும்.

28. சூரிய கதிர்வீசலால் மட்டுமின்றி புவியின் வளிமண்டல நிறையையும் சிறிதளவு சார்ந்துள்ள வெப்பம் எது ?

விடை: காற்றில் உள்ள வெப்பம் ஆகும்.

29. புவியில் வெப்பம் எப்படி மாறுபடுகிறது ?

விடை : புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தைப் பொறுத்தும் புவி வெப்பகதிர்வீச்சலின் அளவை பொறுத்தும் வெப்பம் இடத்திற்கு இடம் மாறுப்படுகிறது. 

30. புவியின் வெப்பம் இடத்திற்கே இடம் மாறுபடுவதற்கான காரணங்கள் யாவை ?

விடை: புவியின் இயக்கங்கள், தன்சுழற்சி, சூரியனை வலம் வருதல் மற்றும் புவி அச்சின் சாய்வுத் தன்மை ஆகியனவாகும்.

TEST 31/40

31. புவியின் வெப்பநிலை எவைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? 

32. சூரிய கதிர்வீச்சுகளிலிருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் புவியை வந்தடையும் வழிமுறைகள் எத்தனை ?

33. புவியின் வளிமண்டலம் எந்த கதிர்வீசலால் அதிக வெப்பம் அடைகிறது ? 

வெப்பப்பரவலை தீர்மானிக்கும் காரணிகள்

34. புவியின் வெப்பப்பரவலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் யாவை ?

வெப்பநிலையை அளவிடுதல்

35. புவியின் வெப்பநிலை என்பது எவ்வாறு அளவிடப்படுகிறது ? 

36. புவியின் வெப்பநிலையை அளவிடும் அளவுகள் எவை ?

37. வானிலை ஆய்வாளர்கள் புவியின் வெப்பநிலையை கணக்கிட பயன்படுத்தும் கருவிகள் யாவை ?

38. சூரியக் கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது எதனால் இழக்கப்படுகிறது ?

39. வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் புவி அதிக வெப்பமடையும் நேரம் என்ன? 

40. புவியில் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை எப்போது பதிவாகிறது? 

REVISION 31/40

31. புவியின் வெப்பநிலை எவைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? 

விடை: ஈரப்பதத்தின் அளவு, ஆவியாதல், திரவமாதல், மழைப்பொழிவு ஆகியவற்றின் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

32. சூரிய கதிர்வீச்சுகளிலிருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் புவியை வந்தடையும் வழிமுறைகள் எத்தனை ?

விடை: மூன்று . (வெப்ப கதிர் வீச்சு, வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம்).

33. புவியின் வளிமண்டலம் எந்த கதிர்வீசலால் அதிக வெப்பம் அடைகிறது ? 

விடை: சூரிய கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் தான் அதிக வெப்பம் அடைகிறது.

வெப்பப்பரவலை தீர்மானிக்கும் காரணிகள்

34. புவியின் வெப்பப்பரவலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் யாவை ?

விடை: அட்சரேகை, உயரம், நிலத்தின் தன்மை, கடல் நீரோட்டம், வீசும் காற்று, சரிவு, இருப்பிடம், கடலிலிருந்து தூரம், இயற்கைத் தாவரங்கள், மண் ஆகியவை வெப்பப்பரவலை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

வெப்பநிலையை அளவிடுதல்

35. புவியின் வெப்பநிலை என்பது எவ்வாறு அளவிடப்படுகிறது ? 

விடை : ஒரு குறிப்பிட்ட கனஅளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது. 

36. புவியின் வெப்பநிலையை அளவிடும் அளவுகள் எவை ?

விடை : செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும். 

37. வானிலை ஆய்வாளர்கள் புவியின் வெப்பநிலையை கணக்கிட பயன்படுத்தும் கருவிகள் யாவை ?

விடை : வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மற்றும் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.  

38. சூரியக் கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது எதனால் இழக்கப்படுகிறது ?

விடை: வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.

39. வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் புவி அதிக வெப்பமடையும் நேரம் என்ன? 

விடை: பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.

40. புவியில் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை எப்போது பதிவாகிறது? 

விடை: பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது. 

TEST 41/50

41. புவியில் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகும் நேரம் என்ன ? 

வெப்பநிலை வீச்சு (Mean Temperature)

42. புவியின் ஓர் இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகப்பட்ச மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

43. புவியின் தின வெப்பவியாப்தி என்றால் என்ன?

44. புவியில் தின வெப்ப வியாப்தியின் வேறு பெயர்? 

45. புவியின் ஆண்டு வெப்பவியாப்தி என்றால் என்ன ?  

46. புவியின் வெப்பநிலை பரவலை எந்தக் கோட்டின் மூலம் காணலாம்?

47. புவியின் சம அளவு வெப்பநிலைக் கொண்ட இடங்களை இணைத்து வரையப்படும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

புவியின் வெப்ப மண்டலங்கள்

48. புவியின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலையைப் பெறுவதற்கு காரணமாக அமைவது?

49. புவியின் கோள வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு புவி எத்தனை வெப்பமண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

1. வெப்ப மண்டலம் (Torrid zone)

50. புவியில் வெப்பமண்டல பகுதி எங்கு அமைந்துள்ளது?

REVISION 41/50

41. புவியில் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகும் நேரம் என்ன ? 

விடை: அதிகாலை 4.00 மணிமுதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

வெப்பநிலை வீச்சு (Mean Temperature)

42. புவியின் ஓர் இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகப்பட்ச மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

விடை: வெப்பநிலை வீச்சு [(87°F+73°F) /2= 80°F]

43. புவியின் தின வெப்பவியாப்தி என்றால் என்ன?

விடை: புவியின் ஒரு நாளில் அமையும் உச்ச வெப்பநிலைக்கும் மற்றும் நீசவெப்பநிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு தின வெப்பவியாப்தி எனப்படும்.

44. புவியில் தின வெப்ப வியாப்தியின் வேறு பெயர்? 

விடை: தினசரி வெப்பநிலை வீச்சு 

45. புவியின் ஆண்டு வெப்பவியாப்தி என்றால் என்ன ? 

விடை: ஒரு ஆண்டின் அதிக வெப்பமான சராசரி மாதத்திற்கும் குறைந்த வெப்பமான சராசரி மாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு ஆண்டு வெப்பவியாப்தி என்று பெயர். 

46. புவியின் வெப்பநிலை பரவலை எந்தக் கோட்டின் மூலம் காணலாம்?

விடை: சமவெப்ப கோடுகள் மூலம் காணலாம்.

47. புவியின் சம அளவு வெப்பநிலைக் கொண்ட இடங்களை இணைத்து வரையப்படும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

விடை : சமவெப்ப கோடுகள் என்று அழைக்கப்படுகிறது.

புவியின் வெப்ப மண்டலங்கள்

48. புவியின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலையைப் பெறுவதற்கு காரணமாக அமைவது?

 விடை: புவியின் கோள வடிவமே காரணமாக அமைகிறது.

49. புவியின் கோள வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு புவி எத்தனை வெப்பமண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

விடை: மூன்று. அவை, 

1. வெப்ப மண்டலம் (Torrid zone)

2. மித வெப்ப மண்டலம் (Temperate zone) 

3. குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) (Frigid zone)

1. வெப்ப மண்டலம் (Torrid zone)

50. புவியில் வெப்பமண்டல பகுதி எங்கு அமைந்துள்ளது?

 விடை: கடக ரேகைக்கும், மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். 

TEST 51/60

51. புவியில் வெப்பமண்டலம் அதிகபட்சமான வெப்பத்தைப் பெறுவதற்கான காரணம்? 

52. புவியில் வெப்பமண்டலத்தின் வேறு பெயர்? 

2. மித வெப்ப மண்டலம் (Temperate zone) 

53. புவியில் மிதவெப்ப மண்டலம் வடஅரை கோளத்தில் எங்கு அமைந்துள்ளது?

54. புவியில் மிதவெப்ப மண்டலம் தென் அரை கோளத்தில் எங்கு அமைந்துள்ளது? 

55. மித வெப்ப மண்டலத்தில் எப்படி புவியின் வெப்பநிலை குறைகிறது?

3. குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) (Frigid zone)

56. புவியில் குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) எங்கு அமைந்துள்ளது?

57. புவியில் குளிர் மண்டலம் ஏன் பனியால் சூழப்பட்டுள்ளது?

58. புவியில் குளிர் மண்டலத்தின் வேறு பெயர்கள்? 

மழைப்பொழிவு (Rain fall)

59. புவியில் மழை பொழிவு எப்படி ஏற்படுகிறது?

60. புவியின் நீர்சுழற்சியின் முக்கிய கூறு எது ?

REVISION 51/60

51. புவியில் வெப்பமண்டலம் அதிகபட்சமான வெப்பத்தைப் பெறுவதற்கான காரணம்? 

விடை: வெப்பமண்டலம் சூரியனிடமிருந்து செங்குத்தான கதிர்களைப் பெறுவதால் அதிகபட்சமான வெப்பத்தைப் பெறுகிறது. 

52. புவியில் வெப்பமண்டலத்தின் வேறு பெயர்? 

விடை: அயனமண்டலம் 

2. மித வெப்ப மண்டலம் (Temperate zone) 

53. புவியில் மிதவெப்ப மண்டலம் வடஅரை கோளத்தில் எங்கு அமைந்துள்ளது? 

விடை: கடகரேகைக்கும், ஆர்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது.

54. புவியில் மிதவெப்ப மண்டலம் தென் அரை கோளத்தில் எங்கு அமைந்துள்ளது? 

விடை: மகரரேகைக்கும் அண்டார்டிக்கா வட்டத்திற்கும் இடைப்பட்டப் பகுதியாக அமைந்துள்ளது. 

55. மித வெப்ப மண்டலத்தில் எப்படி புவியின் வெப்பநிலை குறைகிறது?

விடை: சூரியனின் சாய்வானக் கதிர்களைப் பெறுவதாலும் சூரிய கதிர்களின் படுகோணம் துருவத்தை நோக்கிச் செல்லச்செல்ல வெப்பநிலை குறைகிறது.

3. குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) (Frigid zone)

56. புவியில் குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) எங்கு அமைந்துள்ளது?

விடை: ஆர்ட்டிக் வட்டத்திற்கும், வடதுருவப்பகுதிக்கு இடையேயும், அண்டார்ட்டிக் வட்டத்திற்கும் தென்துருவப்பகுதிக்கு இடையேயும் அமைந்துள்ளது. 

57. புவியில் குளிர் மண்டலம் ஏன் பனியால் சூழப்பட்டுள்ளது?

விடை: ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பத்தைப் பெறுவதால் குளிர் பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது.

58. புவியில் குளிர் மண்டலத்தின் வேறு பெயர்கள்? 

விடை: உறைப்பனி மண்டலம் மற்றும் துருவ மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

மழைப்பொழிவு (Rain fall)

59. புவியில் மழை பொழிவு எப்படி ஏற்படுகிறது?

விடை: வளிமண்டல நீராவி நீர் சுருங்குதல் மூலம் பூரித நிலையை அடைந்து புவிஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி விழும் திரவ நீரே மழை பொழிவு எனப்படும்.

60. புவியின் நீர்சுழற்சியின் முக்கிய கூறு எது ?

விடை : மழை

TEST 61/70

61. மழைப்பொழிவு புவியில் எதை உருவாக்குகின்றது?

62. புவியில் எல்லாவகையான நீருக்கும் முக்கியமான ஆதாரமாக விளங்குவது எது ?

63. புவியில் மழை பரவலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எது?

64. புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதி எவ்வளவு மழைப்பொழிவை பெறுகின்றன? 

65. புவியின் துருவப் பகுதி எவ்வளவு மழைப்பொழிவை பெறுகின்றன ?

66. புவியில் மழைப்பொழிவு எந்த கருவியால் அளவிடப்படுகிறது?

காற்றின் அழுத்தம் (Air Pressure)

67. புவியின் வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன? 

68. புவியின் வளிமண்டல அழுத்தத்தின் வேறு பெயர் ? 

69. புவியில் காற்றின் அழுத்தம் எதனால் அளவிடப்படுகிறது? 

70. புவியின் கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு?

REVISION 61/70

61. மழைப்பொழிவு புவியில் எதை உருவாக்குகின்றது?

 விடை: நன்னீரை உருவாக்குகின்றது.

62. புவியில் எல்லாவகையான நீருக்கும் முக்கியமான ஆதாரமாக விளங்குவது எது ?

விடை: மழைநீர் 

63. புவியில் மழை பரவலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எது?

 விடை: வெப்பநிலை

64. புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதி எவ்வளவு மழைப்பொழிவை பெறுகின்றன? 

விடை : அதிகமாக மழைப்பொழிவை பெறுகின்றன.

65. புவியின் துருவப் பகுதி எவ்வளவு மழைப்பொழிவை பெறுகின்றன ?

விடை : குறைவாக மழைப்பொழிவை பெறுகின்றன.

66. புவியில் மழைப்பொழிவு எந்த கருவியால் அளவிடப்படுகிறது?

விடை: மழை மானியால் அளவிடப்படுகிறது.

காற்றின் அழுத்தம் (Air Pressure)

67. புவியின் வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன? 

விடை: புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் எனப்படும்.

68. புவியின் வளிமண்டல அழுத்தத்தின் வேறு பெயர் ? 

விடை: காற்றழுத்தம்

69. புவியில் காற்றின் அழுத்தம் எதனால் அளவிடப்படுகிறது? 

விடை: காற்றழுத்த மானியால் அளவிடப்படுகிறது.

70. புவியின் கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு?

 விடை : 1013.25 மில்லி பார் ஆகும். 

TEST 71/80

71. பூமியில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு ?

72. புவியில் நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் எப்படி காணப்படுகிறது?

73. புவியில் நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் கிடையாகவும் செங்குத்தாகவும் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு காற்றின் அழுத்தத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம் ? 

74. புவியில் குறைந்த காற்றழுத்தப் பகுதி என்பது?

75. புவியில் எந்த பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து காற்று வீசும் ?

76. புவியில் அதிக காற்றழுத்தம் என்பது?

77. புவியில் காற்று அதிக காற்றழுத்த பகுதியில் இருந்து எதை நோக்கி வீசுகிறது?

78. புவியின் வானிலை வரைப்படத்தில் குறைவான காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்து எதனால் குறிக்கப்படுகிறது?

79. புவியின் வானிலை வரைப்படத்தில் அதிக காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்து எதனால் குறிக்கப்படுகிறது?

80. புவியின் குறைந்த அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

REVISION 71/80

71. பூமியில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு ?

 விடை : 1.03 கிலோ/ச.செ.மீ ஆகும்.

72. புவியில் நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் எப்படி காணப்படுகிறது?

விடை: கிடையாகவும் செங்குத்தாகவும் காணப்படுகிறது.

73. புவியில் நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் கிடையாகவும் செங்குத்தாகவும் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு காற்றின் அழுத்தத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம் ? 

விடை: இரண்டு. அவை

குறைந்த காற்றழுத்த மண்டலம் 

அதிக காற்றழுத்த மண்டலம் 

74. புவியில் குறைந்த காற்றழுத்தப் பகுதி என்பது?

 விடை : வளி மண்டலப் பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் குறைவாக இருக்கும்.

75. புவியில் எந்த பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து காற்று வீசும் ?

விடை: குறைந்த காற்றழுத்தப் பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து காற்று வீசும். 

76. புவியில் அதிக காற்றழுத்தம் என்பது?

விடை : வளிமண்டலப் பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளைவிட அழுத்தம் அதிகமாக இருக்கும். 

77. புவியில் காற்று அதிக காற்றழுத்த பகுதியில் இருந்து எதை நோக்கி வீசுகிறது?

விடை: குறைந்த காற்றழுத்தம் பகுதியை நோக்கி வீசும்.

78. புவியின் வானிலை வரைப்படத்தில் குறைவான காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்து எதனால் குறிக்கப்படுகிறது?

விடை: ” L ” 

79. புவியின் வானிலை வரைப்படத்தில் அதிக காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்து எதனால் குறிக்கப்படுகிறது?

விடை: “H” 

80. புவியின் குறைந்த அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் , சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது. 

TEST 81/90

81. புவியின் அதிக அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

82. புவியில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக்குவது? 

83. புவியில் அதிக அழுத்த மண்டலம் தருவது? 

84. புவியில் சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலை காணப் பயன்படுவது எது?

85. புவியில் மனிதர்கள் எந்த காற்றழுத்த வேறுபாட்டால் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை? 

86. புவியில் சிறிய காற்றழுத்த வேறுபாடு மிகப்பெரிய அளவில் உள்ள போது எதனை தீர்மானிக்கிறது ?

87. புவியின் வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் எவை ?

காற்றழுத்தத்தை அளவிடுதல்

88. புவியில் வானிலை ஆய்வாளர்கள் காற்றழுத்தத்தை எந்த கருவி மூலம் அளக்கின்றனர்?

89. புவியில் வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாகப் பதிவு செய்ய பயன்படுத்தப்படுவது ? 

90. புவியில் ஈரப்பதம் என்றால் என்ன? 

REVISION 81/90

81. புவியின் அதிக அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: எதிர் சூறாவளி காற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.  

82. புவியில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக்குவது? 

விடை: மேக மூட்டத்தையும், காற்றையும், மழைப் பொழிவையும் உருவாக்குகிறது. 

83. புவியில் அதிக அழுத்த மண்டலம் தருவது? 

விடை: அமைதியான வானிலையைத் தருகிறது.

84. புவியில் சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலை காணப் பயன்படுவது எது?

விடை: சமஅழுத்தக்கோடு (ஐசோபார்)

85. புவியில் மனிதர்கள் எந்த காற்றழுத்த வேறுபாட்டால் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை? 

விடை: சிறிய அளவு காற்றழுத்த வேறுபாட்டால் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை. 

86. புவியில் சிறிய காற்றழுத்த வேறுபாடு மிகப்பெரிய அளவில் உள்ள போது எதனை தீர்மானிக்கிறது ?

விடை: புவியின் காற்றமைப்பையும், புயல் காற்றையும் தீர்மானிக்கிறது.

87. புவியின் வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் எவை ?

விடை: உயரம், வளிமண்டல வெப்பநிலை, காற்று சுழற்சி, பூமியின் தன்சுழற்சி, நீராவி மற்றும் வளிமண்டலப் புயல்கள் போன்றவையாகும்.

காற்றழுத்தத்தை அளவிடுதல்

88. புவியில் வானிலை ஆய்வாளர்கள் காற்றழுத்தத்தை எந்த கருவி மூலம் அளக்கின்றனர்?

விடை : காற்றழுத்தமானி அல்லது அனிராய்டு காற்றழுத்தமானி மூலம் அளக்கின்றனர். 

89. புவியில் வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாகப் பதிவு செய்ய பயன்படுத்தப்படுவது ? 

விடை: காற்றழுத்தப் பதிவுத்தாள் (Barograms) பயன்படுகிறது.

90. புவியில் ஈரப்பதம் என்றால் என்ன? 

விடை: ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் என அழைக்கப்படுகிறது. 

TEST 91/100

91. ஈரப்பதம் புவியில் வளிமண்டலத்தின் தொகுதியில் எத்தனை சதவீதம் இருக்கும் ?

92. புவியில் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது எது ? 

93. புவியின் வளிமண்டலத்தில் ஈரப்பத்தின் அளவு எந்த அளவை பொறுத்து அமைகிறது ?

94. புவியில் ஈரப்பதத்தின் அளவு எப்போது குறைகிறது ? 

95. புவியின் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடும் முறைகள் எவை ? 

96. புவியில் சுய ஈரப்பதம் (Specific Humidity) என்றால் என்ன ? 

97. புவியில் சுய ஈரப்பதம் எப்படி குறித்து காட்டப்படுகிறது ?

98. புவியில் உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity) என்றால் என்ன? 

99. புவியில் உண்மையான ஈரப்பதம் எதை குறித்து காட்டப்படுகிறது ? 

100. புவியில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) என்றால் என்ன ? 

REVISION 91/100

91. ஈரப்பதம் புவியில் வளிமண்டலத்தின் தொகுதியில் எத்தனை சதவீதம் இருக்கும் ?

விடை: 0 – 5% வரை இருக்கும். 

92. புவியில் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது எது ? 

விடை: ஈரப்பதம்

93. புவியின் வளிமண்டலத்தில் ஈரப்பத்தின் அளவு எந்த அளவை பொறுத்து அமைகிறது ?

விடை: வெப்பநிலையின் அளவை பொறுத்து அமைகிறது.

94. புவியில் ஈரப்பதத்தின் அளவு எப்போது குறைகிறது ? 

விடை : நிலநடுக்கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லும்போது குறைகிறது.

95. புவியின் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடும் முறைகள் எவை ? 

விடை: 

சுய ஈரப்பதம் (Specific Humidity)

உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity)

ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity)

96. புவியில் சுய ஈரப்பதம் (Specific Humidity) என்றால் என்ன ? 

விடை: ஒரு குறிப்பிட்ட எடைக்கொண்ட காற்றிழுள்ள நீராவியின் எடை சுய ஈரப்பதம் எனப்படும். 

97. புவியில் சுய ஈரப்பதம் எப்படி குறித்து காட்டப்படுகிறது ?

 விடை: கிராம் நீராவி / கிலோகிராம் காற்று 

98. புவியில் உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity) என்றால் என்ன? 

விடை: ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் உள்ள நீராவியின் எடைக்கு உண்மையான ஈரப்பதம் என்று பெயர்.

99. புவியில் உண்மையான ஈரப்பதம் எதை குறித்து காட்டப்படுகிறது ? 

விடை: உண்மையான ஈரப்பதம் ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கிராம் நீராவி உள்ளது எனக் குறித்துக் காட்டப்படுகிறது.

100. புவியில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) என்றால் என்ன ? 

விடை: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கும், அதேசமயம் அக்காற்றில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கும் உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும். 

TEST 101/110

101. புவியில் ஒப்பு ஈரப்பதம் சராசரி எந்த முறையில் காணப்படுகிறது ?

ஈரப்பதத்தை அளத்தல் (Measurement of Humidity)

102. புவியில் காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

103. ஸ்வன்சன் திரையில் அடுக்கப்பட்டவை ? 

104. புவியில் அதிக நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும் காற்று எது ? 

105. புவியில் காற்று எப்போது பூரித நிலையை அடையும் ?

106. புவியில் காற்று பூரித நிலையில் வெப்பநிலை எந்த நிலைக்குச் சென்று விடும் ?

107. புவியில் நீராவி மேலும் குளிர்வடைந்து நீர் சுருங்கி எதற்கு வித்திடுகிறது ?

108. புவியில் மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் ஈரப்பதம் ? 

109. புவியில் மனிதனின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை ?

110. புவியில் ஈரப்பதம் எவைகளை பாதிக்கும்? 

REVISION 101/110

101. புவியில் ஒப்பு ஈரப்பதம் சராசரி எந்த முறையில் காணப்படுகிறது ?

விடை: சதவிகித முறையில் காணப்படுகிறது.

ஈரப்பதத்தை அளத்தல் (Measurement of Humidity)

102. புவியில் காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

விடை: ஈரநிலைமானி (ஹைக்ரோ மீட்டர்)

103. ஸ்வன்சன் திரையில் அடுக்கப்பட்டவை ? 

விடை: வறண்ட மற்றும் ஈரகுமிழ் கட்டுகள் ஒவ்வொன்றாக அடுக்கப்பட்டதாகும்.

104. புவியில் அதிக நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும் காற்று எது ? 

விடை: வெப்பகாற்று குளிர்காற்றைவிட அதிக நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும்.

105. புவியில் காற்று எப்போது பூரித நிலையை அடையும் ?

விடை: காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும் பொழுது காற்று பூரித நிலையை அடையும்.

106. புவியில் காற்று பூரித நிலையில் வெப்பநிலை எந்த நிலைக்குச் சென்று விடும் ?

விடை: பனிப்புள்ளி நிலைக்கு சென்று விடும்.

107. புவியில் நீராவி மேலும் குளிர்வடைந்து நீர் சுருங்கி எதற்கு வித்திடுகிறது ?

விடை : மேகங்கள் மற்றும் மழைக்கு வித்திடுகிறது. 

108. புவியில் மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் ஈரப்பதம் ? 

விடை: ஒப்பு ஈரப்பதம்

109. புவியில் மனிதனின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை ?

விடை: அதிக மற்றும் குறைந்த ஈரப்பதம் மனிதனின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

110. புவியில் ஈரப்பதம் எவைகளை பாதிக்கும்? 

விடை: பல்வேறு பொருட்கள், கட்டடங்கள், மின்சாதன பொருட்களின் நிலைத் தன்மையைப் பாதிக்கும்.

TEST 111/120

காற்று

111. புவியில் கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர் ?

112. புவியில் செங்குத்தாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர் ?

113. புவியில் காற்று எப்பொழுதும் எந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும் ?

114. புவியில் காற்றால் உருவாக்கப்படும் எந்த காற்றுகள் உணரத்தான் முடியும் ஆனால் பார்க்க முடியாது ?

115. புவியில் காற்றின் பெயர் எதை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகிறது? 

116. புவியில் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

117. புவியில் காற்றின் அமைப்புகள் எத்தனை பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

கோள் காற்றுகள்

118. புவியில் கோள் காற்றுகள் என்றால் என்ன? 

119. புவியில் கோள் காற்றின் வேறு பெயர்? 

120. புவியில் கோள் காற்றுகளுக்கு எடுத்துக்காட்டு எவை? 

REVISION 111/120

காற்று

111. புவியில் கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர் ?

விடை: காற்று என்று பெயர்.

112. புவியில் செங்குத்தாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர் ?

விடை: காற்றோட்டம் என்று பெயர். 

113. புவியில் காற்று எப்பொழுதும் எந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும் ?

விடை : உயர் அழுத்த பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும். 

114. புவியில் காற்றால் உருவாக்கப்படும் எந்த காற்றுகள் உணரத்தான் முடியும் ஆனால் பார்க்க முடியாது ?

விடை: சுழல் காற்று மற்றும் கடும் காற்றை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது. 

115. புவியில் காற்றின் பெயர் எதை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகிறது? 

விடை: காற்று வீசும் திசையை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகிறது.

116. புவியில் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: தென்மேற்குப் பருவக்காற்று

117. புவியில் காற்றின் அமைப்புகள் எத்தனை பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

 விடை: மூன்று. அவை 

கோள் காற்றுகள் அல்லது நிரந்தர காற்றுகள் (Planetary Winds)

பருவக் காற்றுகள் (Seasonal Winds)

தலக் காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் (Local winds)

கோள் காற்றுகள்

118. புவியில் கோள் காற்றுகள் என்றால் என்ன? 

விடை: ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள்.

119. புவியில் கோள் காற்றின் வேறு பெயர்? 

விடை: நிலையான காற்று 

120. புவியில் கோள் காற்றுகளுக்கு எடுத்துக்காட்டு எவை? 

விடை: வியாபாரக் காற்று, மேலைக்காற்று மற்றும் துருவக்காற்று. 

TEST 121/130

121. புவியில் பருவக்காலக் காற்று என்பது?

122. புவியில் பருவக் காற்றுகள் கோடைக் காலத்தில் எங்கிருந்து எதை நோக்கி வீசும்? 

123. புவியில் பருவக்காற்றுகள் குளிர் காலத்தில் எங்கிருந்து எதை நோக்கி வீசும்? 

124. புவியில் தலக்காற்றுகள் என்பது?

125. புவியில் தலக் காற்றுகளின் வேறு பெயர்?

126. புவியில் தலக்காற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எவை? 

127. புவியில் காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது? 

128. காற்றின் வேகத்தை அளவிட உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கருவி எது? 

129. புவியில் பியோபோர்டு கருவி யாரால் உருவாக்கப்பட்டது? 

130. பியோபோர்டு கருவி உருவாக்கப்பட்ட ஆண்டு? 

REVISION 121/130

121. புவியில் பருவக்காலக் காற்று என்பது?

விடை: பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும்.

122. புவியில் பருவக் காற்றுகள் கோடைக் காலத்தில் எங்கிருந்து எதை நோக்கி வீசும்? 

விடை: கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும்.

123. புவியில் பருவக்காற்றுகள் குளிர் காலத்தில் எங்கிருந்து எதை நோக்கி வீசும்? 

விடை: நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும். 

124. புவியில் தலக்காற்றுகள் என்பது?

விடை : ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும். 

125. புவியில் தலக் காற்றுகளின் வேறு பெயர்?

விடை: பிரதேசக் காற்றுகள்

126. புவியில் தலக்காற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எவை? 

விடை: நிலக்காற்று மற்றும் கடல் காற்று.

127. புவியில் காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது? 

விடை: பியோபோர்டு அளவை

128. காற்றின் வேகத்தை அளவிட உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கருவி எது? 

விடை: பியோபோர்டு அளவை 

129. புவியில் பியோபோர்டு கருவி யாரால் உருவாக்கப்பட்டது? 

விடை: இராயல் கப்பற்படை அதிகாரியான பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் உருவாக்கப்பட்டது.

130. பியோபோர்டு கருவி உருவாக்கப்பட்ட ஆண்டு? 

விடை: 1805 ஆம் ஆண்டு 

TEST 131/140

131. புவியில் பியோபோர்டு அளவை என்ற கருவியை முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியவர் யார்?

 காற்றின் திசை மற்றும் வேகத்தை அளவிடும்

132. புவியில் வானிலை வல்லுநர்களால் காற்றின் திசையை அளவிட பயன்படுத்தப்படும் கருவி எது ?

133. புவியில் காற்றுமானியின் வேறு பெயர்? 

134. புவியில் காற்றின் வேகத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி எது ? 

135. புவியில் விண்ட்ரோஸ் என்பது?

136. புவியில் மீட்டிரோகிராப் என்ற கருவி எதை பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது? 

137. புவியில் மீட்டிரோகிராப் – ன் வேறு பெயர்? 

BOX INFORMATION 

138. புவியின் வளிமண்டலமானது வாயுக்களால் ஆன எத்தனை அடுக்குகளைக் கொண்டதாகும்?

139. வளிமண்டலம் எதனை சூழ்ந்துள்ளது?

140. புவியின் வளிமண்டலம் எந்த விசையினால் வாயுக்களை புவியில் தக்க வைத்துக் கொள்கிறது ?

REVISION 131/140

131. புவியில் பியோபோர்டு அளவை என்ற கருவியை முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியவர் யார்?

விடை: எச்.எம்.எஸ் பீகால் 

 காற்றின் திசை மற்றும் வேகத்தை அளவிடும்

132. புவியில் வானிலை வல்லுநர்களால் காற்றின் திசையை அளவிட பயன்படுத்தப்படும் கருவி எது ?

விடை: காற்றுமானி 

133. புவியில் காற்றுமானியின் வேறு பெயர்? 

விடை: காற்று திசைக்காட்டி

134. புவியில் காற்றின் வேகத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி எது ? 

விடை: அனிமாமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.

135. புவியில் விண்ட்ரோஸ் என்பது?

விடை : காற்றின் திசையையும், வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் ஒரு வரைபடம். 

136. புவியில் மீட்டிரோகிராப் என்ற கருவி எதை பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது? 

விடை: காற்றின் திசை, வேகம் சூரிய வெளிச்சம், மழை ஆகிய வானிலைக் கூறுகளைப் வரைகோட்டுப்படத்தின் மூலம் பதிவு செய்யும் கருவியாகும்.

137. புவியில் மீட்டிரோகிராப் – ன் வேறு பெயர்? 

விடை: டிரிபில் ரிஜிஸ்டர்

BOX INFORMATION 

138. புவியின் வளிமண்டலமானது வாயுக்களால் ஆன எத்தனை அடுக்குகளைக் கொண்டதாகும்?

விடை: பல

139. வளிமண்டலம் எதனை சூழ்ந்துள்ளது?

விடை: புவியைச் சூழ்ந்துள்ளது.

140. புவியின் வளிமண்டலம் எந்த விசையினால் வாயுக்களை புவியில் தக்க வைத்துக் கொள்கிறது ?

விடை: புவியின் ஈர்ப்பு விசையினால் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது.

TEST 141/150

141. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது ? 

142. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆக்சிஜன் உள்ளது?

143. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆர்கான் உள்ளது?

144. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளது? 

145. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் மற்ற வாயுக்கள் மற்றும் நீராவி உள்ளது?

146. கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்ட சொல் எது ?

147. கிளைமோ (Klimo) என்றால் தமிழில் பொருள் என்ன ? 

148. புவியில் வானிலையின் அறிவியல் பிரிவு எது ? 

149. புவியில் காலநிலையின் அறிவியல் பிரிவு எது ?

150. புவியின் வெப்பநிலை எப்படி வேறுபடுகிறது ?

REVISION 141/150

141. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது ? 

விடை: 78%

142. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆக்சிஜன் உள்ளது?

விடை: 21%

143. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆர்கான் உள்ளது?

விடை: 0.97%

144. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளது? 

விடை: 0.03%

145. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் மற்ற வாயுக்கள் மற்றும் நீராவி உள்ளது?

விடை: 0.04%

146. கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்ட சொல் எது ?

விடை: “Cimate”

147. கிளைமோ (Klimo) என்றால் தமிழில் பொருள் என்ன ? 

விடை: சாய்வுகோணம் (Inclination) என்று பொருள்.

148. புவியில் வானிலையின் அறிவியல் பிரிவு எது ? 

விடை: வளியியல்

149. புவியில் காலநிலையின் அறிவியல் பிரிவு எது ?

விடை: காலநிலையியல்

150. புவியின் வெப்பநிலை எப்படி வேறுபடுகிறது ?

விடை: செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது.

TEST 151/160

151. புவியில் வெப்ப குறைவு வீதம் என்றால் என்ன ?

152. புவியின் நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலை எந்த வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது?

153. புவியில் சம அளவுக் கோடு என்பது?

154. புவியில் சம அளவுள்ள கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவை?

155. புவியில் ஐசோதெர்ம் (Isotherm) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

156. புவியில் ஐசோக்ரைம் (Isocryme) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

157. புவியில் ஐசோகெல் (Isohel) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

158. புவியில் ஐசெல்லோபார் (Isollobar) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

159. புவியில் ஐசோபார் (Isobar) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

160. புவியில் ஐசோஹைட்ஸ் (Isohytes) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

REVISION 151/160

151. புவியில் வெப்ப குறைவு வீதம் என்றால் என்ன ?

விடை: வெப்பம் மாறும் மண்டலத்தில், வெப்ப நிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்ப குறைவு வீதம் என்று அழைப்பர்.

152. புவியின் நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலை எந்த வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது?

விடை: சம அளவுக் கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது.

153. புவியில் சம அளவுக் கோடு என்பது?

விடை: சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும். 

154. புவியில் சம அளவுள்ள கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவை?

விடை: ஐசோதெர்ம் (Isotherm)

ஐசோக்ரைம் (Isocryme)

ஐசோகெல் (Isohel)

ஐசெல்லோபார் (Isollobar)

ஐசோபார் (Isobar)

ஐசோஹைட்ஸ் (Isohytes)

155. புவியில் ஐசோதெர்ம் (Isotherm) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

விடை: சமவெப்பக் கோடு

156. புவியில் ஐசோக்ரைம் (Isocryme) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

விடை: சராசரி சம வெப்ப நிலைக்கோடு

157. புவியில் ஐசோகெல் (Isohel) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

விடை: சம சூரிய வெளிச்சக் கோடு

158. புவியில் ஐசெல்லோபார் (Isollobar) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

விடை : சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு

159. புவியில் ஐசோபார் (Isobar) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

விடை: சம காற்றழுத்தக் கோடு

160. புவியில் ஐசோஹைட்ஸ் (Isohytes) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: சம மழையளவுக் கோடு

TEST 161/170

அதிகபட்ச வெப்ப நிலை / குறைவான வெப்ப நிலை

161. புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை என்ன?

162. புவியின் இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடம் எது?

163. புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை என்ன?

164. புவியின் இதுவரை குறைவான வெப்பநிலை பதிவான இடம் எது ?

165. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் என்ன ?

166. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் எங்கு பதிவானது ?

167. உலகில் இதுவரை பதிவான மிக குறைந்த அழுத்தம் என்ன ?

168. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எங்கு பதிவானது ?

169. நமது காதுகள் ஏன் உயரே செல்லும்போது அடைத்துக் கொள்கின்றன ? 

170. புவியில் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனின் அளவும் குறைவதற்கான காரணம் என்ன ?

REVISION 161/170

அதிகபட்ச வெப்ப நிலை / குறைவான வெப்ப நிலை

161. புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை என்ன?

விடை: 56.7°C (134°F).  

162. புவியின் இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடம் எது?

விடை : 1913 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) 

163. புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை என்ன?

விடை : (-89.2°C) (-128.6°F 184.0K)

164. புவியின் இதுவரை குறைவான வெப்பநிலை பதிவான இடம் எது ?

விடை: 1983 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் நாள் அண்டார்டிக்காவில் உள்ள சோவியத் வோஸ்டக் நிலையம்.

165. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் என்ன ?

விடை: 1083 mb

166. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் எங்கு பதிவானது ?

விடை: 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள “அகாட்” என்ற இடத்தில் கடல் மட்டத்தில் பதிவானது.

167. உலகில் இதுவரை பதிவான மிக குறைந்த அழுத்தம் என்ன ?

விடை: 870 mb 1929 

168. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எங்கு பதிவானது ?

விடை: டிசம்பர் 12 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள “குவாம்” என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானது.

169. நமது காதுகள் ஏன் உயரே செல்லும்போது அடைத்துக் கொள்கின்றன ? 

விடை: நாம் விமானத்தில் மேலே செல்லும்பொழுது வளிமண்டல அழுத்தமானது நம்முடைய காதுகளில் உள்ள காற்றின் அழுத்தத்தை விட குறைவாக உள்ளது. ஆதலால் காதுகள் இவ்விரண்டையும் சமப்படுத்தும் பொழுது அடைத்துக் கொள்கின்றன. இந்நிகழ்வு விமானத்தில் இருந்து கீழே இறங்கும்பொழுதும் நிகழ்கின்றன.

170. புவியில் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனின் அளவும் குறைவதற்கான காரணம் என்ன ?

விடை: காற்றின் அழுத்தம் குறைவதனால் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனின் அளவும் குறைகிறது. 

TEST 171/178

171. புவியில் எந்த இடங்களில் காற்றில் ஆக்ஸிஜனின் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது ?

172. புவியில் மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது எந்த வாயுவை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர் ?

173. புவியில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது என்ன பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படும் ? 

174. புவியில் விமானங்களில் பயணிகள் எதனால் வசதியாக சுவாசிக்கின்றனர் ?

175. உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் யார்? 

176. அல் -பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் யாரிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட்டார்?

177. பிரேசிலின் பெரும்பகுதியில் காற்றின் வேகம் எப்படி உள்ளது?

178. பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதிகள் எவை?

REVISION 171/178

171. புவியில் எந்த இடங்களில் காற்றில் ஆக்ஸிஜனின் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது ?

விடை: மிக உயரமான இடங்களில் (அதனால் மனிதர்கள் அங்கு இறக்கக் கூடும்)

172. புவியில் மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது எந்த வாயுவை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர் ?

விடை: ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். 

173. புவியில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது என்ன பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படும் ? 

விடை : மூச்சுத்திணறல் ஏற்படும். 

174. புவியில் விமானங்களில் பயணிகள் எதனால் வசதியாக சுவாசிக்கின்றனர் ?

விடை: செயற்கை அழுத்தம் மூலமாக வசதியாக சுவாசிக்கின்றனர்.

175. உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் யார்? 

விடை : அல் -பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் ஆவார்.

176. அல் -பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் யாரிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட்டார்?

விடை: அரேபியா நாட்டு பயணிகளிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட்டார்.

177. பிரேசிலின் பெரும்பகுதியில் காற்றின் வேகம் எப்படி உள்ளது?

விடை: காற்றின் வேகம் குறைவாக உள்ளது. 

178. பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதிகள் எவை?

விடை: ஆப்பிரிக்காவின் காபான், காங்கோ மற்றும் DR. காங்கோ, சுமத்ரா, இந்தோனேசியா, மலேசியா ஆகியவை பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதியாகும். 

TEST 1/11

BOOK BACK QUESTIONS

Book Page Number: 220

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. புவியின் வளிமண்டலம் ____ நைட்ரஜன் மற்றும் _____ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

அ. 78% மற்றும் 21% 

ஆ. 22% மற்றும் 1%

இ. 21% மற்றும் 0.97%

ஈ. 10% மற்றும் 20%

2. ______ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

3. புவி பெறும் ஆற்றல் ______.

அ. நீரோட்டம் 

ஆ. மின்காந்த அலைகள்

இ. அலைகள் 

ஈ. வெப்பம்

4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

அ. சமவெப்பக்கோடு

ஆ. சம சூரிய வெளிச்சக் கோடு

இ. சம காற்றழுத்தக் கோடு

ஈ. சம மழையளவுக் கோடு 

5. _____ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _____ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு _____. 

3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______. 

4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _____.

5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _____ மற்றும் ______ ஆகியவை அளக்கப்படுகின்றன.

6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு _____.

REVISION 1/11

விடை: அ. 78% மற்றும் 21% 

2. ______ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

விடை: இ. காலநிலை

3. புவி பெறும் ஆற்றல் ______.

அ. நீரோட்டம் 

ஆ. மின்காந்த அலைகள்

இ. அலைகள் 

ஈ. வெப்பம்

விடை: ஈ. வெப்பம்

4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

அ. சமவெப்பக்கோடு

ஆ. சம சூரிய வெளிச்சக் கோடு

இ. சம காற்றழுத்தக் கோடு

ஈ. சம மழையளவுக் கோடு

விடை: ஈ. சம மழையளவுக் கோடு

5. _____ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

விடை: இ. ஈரநிலை மானி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _____ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு _____. 

3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______. 

4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _____.

5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _____ மற்றும் ______ ஆகியவை அளக்கப்படுகின்றன.

6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு _____.

விடைகள்:

1. வானிலை

2. வளியியல் 

3. கிரீன்லாந்து மழை தொடர்

4. ஒப்பு ஈரப்பதம்

5. காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை

6. சமவெப்பக் கோடு 

 TEST 1/5

III. பொருத்துக.     

1. கால நிலை                                                                                     – 1. புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது

2. ஐசோநிப்                                                                                       – 2. சூறாவளி

3. ஈரநிலைமானி                                                                           – 3. சம அளவுள்ள பனிபொழிவு

4. ரேடார்                                                                                             – 4. நீண்ட நாளைய மாற்றங்கள்

5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்தம் மண்டலம்) – 5.ஈரப்பதம்

IV. சரியா/ தவறா எனக் குறிப்பிடுக.

1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.

3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.

4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

REVISION 1/5

விடை: 4 5 2 1 3 

IV. சரியா/ தவறா எனக் குறிப்பிடுக.

1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

விடை: சரி

2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.

விடை: தவறு

3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.

விடை: சரி

4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

விடை: தவறு

V. குறுகிய விடையளி

காலநிலை – வரையறு

“வெயிற் காய்வு” என்றால் என்ன?

“வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?

சிறு குறிப்பு வரைக: கோள் காற்று /நிரந்தரக்காற்று

சம அளவுக் கோடுகள் – “ஐசோலைன்ஸ்” என்றால் என்ன?

VI. வேறுபடுத்துக

காலநிலை மற்றும் வானிலை

முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்

கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்

Book Page Number: 221

VII. காரணம் கூறுக

காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.

மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.

VIII.ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?

காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.

வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.

IX. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.

வெப்ப மண்டலங்கள்

காற்றழுத்த மண்டலமும், கோள் காற்றுகளும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் பிரதேசக் காற்றுளை கண்டுபிடி.

X. செயல்பாடுகள்

மழைமாணி மற்றும் காற்று திசை காட்டி கருவிகளின் மாதிரிகளை உருவாக்குக.

சிறிய அளவிலான மாதிரி வானிலை மையத்தை உன் பள்ளியில் உருவாக்கு.

தினமும் வானிலை அறிக்கையை படித்து அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கீழே உள்ள கட்டங்களில் நிரப்பு.

Join the conversation