புதிய சமச்சீர் கல்வி
புவியியல்
பத்தாம் வகுப்பு
அலகு – 3
இந்தியா – வேளாண்மை
TEST 1/10
அறிமுகம்
1. இந்திய நாட்டின் பரப்பளவு கொண்ட மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மண் வகைகளுக்கு காரணம் என்ன?
2. வளமான மண் வகைகள், வேளாண்மையை ஊக்கப்படுத்துவதன் மூலம் எதற்கு ஆதரவாக உள்ளது?
3.1 மண்
3. கனிமங்களின் கூட்டுப்பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது எது?
4. மண் என்பது?
5. மண்துகள்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
6. மண் எவ்வாறு உருவாகிறது?
7. மண்ணானது எப்படி வேறுபடும்?
8. 1953 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது?
9. இந்தியாவில் வண்டல் மண் எத்தனை சதவீதம் உள்ளது?
10. இந்தியாவில் கரிசல் மண் எத்தனை சதவீதம் உள்ளது?
TEST 11/20
11. இந்தியாவில் செம்மண் எத்தனை சதவீதம் உள்ளது?
12. இந்தியாவில் சரளை மண் எத்தனை சதவீதம் உள்ளது?
13. இந்தியாவில் காடு மற்றும் மலை மண் எத்தனை சதவீதம் உள்ளது?
14. இந்தியாவில் வறண்ட பாலை மண் எத்தனை சதவீதம் உள்ளது?
15. இந்தியாவில் உப்பு மற்றும் கார மண் எத்தனை சதவீதம் உள்ளது?
16. இந்தியாவில் களிமண் மற்றும் சதுப்பு நில மண் எத்தனை சதவீதம் உள்ளது?
17. வெளிர் நிறமுடைய மணற்பாங்கான மண் வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
18. சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் படிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
19. சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைத்ததினால் உருவாகும் மண் வகை எது?
20. வண்டல் மண்ணில் அதிகமாக காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
TEST 21/30
21. வண்டல் மண்ணில் குறைவாக காணப்படும் வேதியியல் பொருள் எது?
22. வண்டல் மண்ணில் எந்தெந்த கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது?
23. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப்பள்ளத்தாக்குகள், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் , பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப்பகுதிகள், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி ஆகிய பகுதிகளில் பரவிக் காணப்படும் மண் வகை எது?
24. வண்டல் மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
25. தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவான மண் வகை எது?
26. கரிசல் மண் கருப்பு நிறமாக இருப்பதற்கு காரணம் என்ன?
27. கரிசல் மண்ணில் அதிகமாகக் காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
28. கரிசல் மண்ணில் குறைவாகக் காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
29. ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடைய மண் எது?
30. மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதி ஆகியவை எந்த மண்ணின் பரவல்?
TEST 31/40
31. கரிசல் மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
32. பழமையான படிக பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள், சிதைவடைவதால் உருவாகும் மண் எது?
33. செம்மண்ணில் அதிகமாக காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
34. செம்மண்ணில் குறைவாக காணப்படும் வேதியியல் பொருள்கள் யாவை?
35. செம்மண்ணின் தன்மைகள் எப்படி இருக்கும்?
36. தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்கண்ட் ஆகியவை எந்த மண்ணின் பரவல்?
37. செம்மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
38. வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching) நிகழ்வின் காரணமாக உருவாகும் மண் வகை எது?
39. சரளை மண்ணில் காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
40. உயரமான மலைப் பகுதிகளில் அதிகமான அமிலத்தன்மையுடனும் தாழ்வான பகுதிகளில் குறைந்த அளவு அமிலத் தன்மையும் கொண்ட மண் வகை எது?
TEST 41/50
41. பொதுவாக ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்வதில்லை. ஆனால் களிமண் கலந்த வண்டல் படிவுகளைக் கொண்ட சமவெளிப் பகுதிகளில் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும் மண் வகை எது?
42. அசாம் குன்றுகள்,கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் பரவி காணப்படும் மண் வகை எது?
43. சரளை மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
44. பனிமழை மற்றும் வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகும் மண் வகை எது?
45. காடு மற்றும் மலை மண் எப்படி மாறுபடுகிறது?
46. காடு மற்றும் மலை மண்ணில் குறைவாக காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
47. மென்மையான மணல் மற்றும் பாறை துகள்கள் கலந்து காணப்படும் மண்வகை எது?
48. தாய் பாறைக்கேற்ப மாறுபடும் மண் வகை எது?
49. அதிக இலை மக்குச் சத்துகள் உடையதாகவும் மெதுவாக மக்குகளால் சிதைவுறுவதால் காரத்தன்மை கொண்டதாகவும் உள்ள மண்வகை எது?
50. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள ஊசியிலைக் காடுகளின் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் பரவிக் காணப்படும் மண் வகை எது?
TEST 51/60
51. காடு மற்றும் மலை மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
52. வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் உருவாகும் மண்வகை எது?
53. வறண்ட பாலை மண்ணில் இலை மட்குச்சத்து குறைவாக காணப்படுகிறது. ஏன்?
54. வறண்ட பாலை மண்ணில் அதிகமாக காணப்படும் வேதியியல் பொருட்கள் யாவை?
55. வறண்ட பாலை மண்ணில் குறைவாக காணப்படும் வேதியியல் பொருள் என்ன?
56. வெளிர்நிறம் குறைந்த இலை மக்கு சத்து புரைத்தன்மையுடைய மற்றும் குறைந்த ஈரப்பதம் உடைய மண் வகை எது?
57. இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதி ஆகிய பகுதிகளில் பரவிக் காணப்படும் மண் வகை எது?
58. வறண்ட பாலை மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
59. வடிகால் அமைப்பு இல்லாமையால் நீர் பிடிப்பு காரணமாக தீங்கு விளைவிக்கக்கூடிய உப்புக்கள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கில் இருந்து மேல் அடுக்கிற்கு கடத்தப்படுவதால் உருவாகும் மண் வகை எது?
60. உப்பு மற்றும் கார மண்ணில் உள்ள வேதியியல் பொருட்கள் யாவை?
TEST 61/70
61. சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடைய மண் வகை எது?
62. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம்,பீகார் ,உத்தரப்பிரதேசம் ,ஹரியானா, பஞ்சாப் ,ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகள் ஆகிய பகுதிகளில் பரவிக் காணப்படும் மண் வகை எது?
63. உப்பு மற்றும் கார மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
64. உயிரினப் பொருட்களில் இருந்து ஈர காலநிலை உள்ள பகுதிகளில் காணப்படும் மண் வகை எது?
65. கருமை நிறம் மற்றும் அதிக காரத்தன்மை உடைய மண் வகை எது?
66. களிமண் மற்றும் சதுப்பு நில மண்ணில் அதிக மழை அளவு எந்தப் பகுதிகளில் காணப்படுகிறது?
67. களிமண் மற்றும் சதுப்புநிலம் மண்ணில் உள்ள குறைவான வேதியியல் பொருட்கள் யாவை?
68. ஈரத்தன்மையுடன் இலை மட்கைக் கொண்டும் கருமை நிறத்திலும் உள்ள மண் வகை எது?
69. கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள், ஒடிசா ,தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகள், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம் ஆகிய பகுதிகளில் பரவிக் காணப்படும் மண் வகை எது?
70. களிமண் மற்றும் சதுப்பு நில மண்ணில் வளரும் பயிர்கள் யாவை?
TEST 71/80
3.2 நீர்ப்பாசனம்
71. வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
72. இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால் , வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள அத்தியாவசியமாக உள்ளது எது?
நீர்ப்பாசன ஆதாரங்கள் (அ) மூலங்கள்
73. இந்தியாவில் எவைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான நீர்ப்பாசன வகைகள் பயன்பாட்டில் உள்ளன?
74. இந்தியாவில் உள்ள நீர்ப்பாசன மூலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை யாவை?
75. இந்தியாவில் எத்தனை சதவீத வேளாண் நிலப்பரப்பு கால்வாய் பாசன முறையில் நீர்ப்பாசனத்தை பெறுகின்றன?
76. இந்தியாவில் எத்தனை சதவீத வேளாண் நிலப்பரப்பு குழாய்க் கிணறு பாசன முறையில் நீர்ப்பாசனத்தை பெறுகின்றன?
77. இந்தியாவில் எத்தனை சதவீத வேளாண் நிலப்பரப்பு கிணற்றுப் பாசன முறையில் நீர்ப்பாசனத்தை பெறுகின்றன?
78. இந்தியாவில் எத்தனை சதவீத வேளாண் நிலப்பரப்பு பிறநீர் ஆதாரங்கள் முறையில் நீர்ப்பாசனத்தை பெறுகின்றன?
அ. கால்வாய் பாசனம்
79. இந்தியாவின் இரண்டாவது முக்கியமான நீர்ப்பாசன ஆதாரம் எது?
80. தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி பருமன் மிகுந்த வளமான மண், வற்றாத நீர் மூலங்கள் மற்றும் அதிக நீர் பிடிப்புக் கொண்ட பகுதிகளில் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படும் பாசனம் எது?
TEST 81/90
81. இந்தியாவில் கால்வாய் பாசனம் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
1. வெள்ளப் பெருக்கு கால்வாய்
82. ஆற்றில் இருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் எந்த வகை கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது?
83. வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்ப, மழைக்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் கால்வாய் வகை எது?
2. வற்றாத கால்வாய்
84. வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கால்வாய் வகை எது?
85. கால்வாய் நீர்ப்பாசனம் வட பெரும் சமவெளியில் எத்தனை சதவீதம் பயன்படுத்தப்படுகிறது?
ஆ) கிணற்றுப் பாசனம்
86. புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியில் மேற்பரப்பிற்கு கொண்டு வரும் அமைப்பின் பெயர் என்ன?
87. இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பாசன ஆதாரம் எது?
88. மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் கால்வாய் மற்றும் ஏரி பாசனம் இல்லாத பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசன முறை எது?
89. கிணறுகள் எத்தனை வகைப்படும்?
1. திறந்த வெளிக் கிணறுகள்
90. நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக்கூடிய பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசன முறை எது?
TEST 91/100
91. இந்தியாவில் திறந்த வெளிக் கிணற்று பாசனம் அதிகமாக காணப்படும் பகுதிகள் எவை?
2. ஆழ்த்துளைக் கிணறு
92. ஆழ்த்துளைக் கிணறு பாசனம், எந்தப் பகுதிகளில் அமைக்கப்படுகிறது?
93. ஆழ்த்துளைக் கிணற்றுப் பாசனம் இந்தியாவில் எந்த மாநிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன?
இ) ஏரிப்பாசனம்
94. புவியின் மேற்பரப்பில் இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்வான நீர் தேங்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
95. ஆற்றின் குறுக்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதைச் சுற்றிலும் கரைகள் கட்டப்படும் பாசன முறை எது?
96. ஏரி எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
97. இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறை எது?
98. ஏரிப் பாசனமுறை எவைகளை உள்ளடக்கியது?
99. தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் சிறந்து விளங்குவதற்கான முக்கியமான காரணிகள் எவை?
நவீன நீர்ப்பாசன முறைகள் :
100. இந்தியாவில் பல நவீன நீர்ப்பாசன முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முதன்மையானவை எவை?
TEST 101/110
சொட்டு நீர்ப்பாசனம்
101. சொட்டுநீர்ப் பாசனம் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
102. நீரானது குழாய்களில் உள்ள துவாரங்கள் வழியாக நீர் துளிகளாக பயிர்களின் வேர்ப்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் பாசன முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
103. சொட்டு நீர் பாசன முறையின் மூலம் சுமார் எத்தனை சதவீத நீர் சேமிக்கப்படுகிறது?
தெளிப்பு நீர்ப்பாசனம்
104. நவீன பாசன முறையில் எளிமையான மற்றும் சுலபமான நீர்ப்பாசன முறை எது?
105. தெளிப்பு நீர்ப்பாசன முறையில் பயிர்களுக்கு நீர் எப்படி பாய்ச்சப்படுகிறது?
106. தெளிப்பு நீர்ப் பாசனம் எந்த நிலப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது?
வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம்
107. நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படும் பாசன முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
108. வேகத் தெளிப்பு நீர் பாசன முறை எத்தனை மீட்டர் உயரம் வரை உள்ள பயிர் வகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?
109. வேகத் தெளிப்பு நீர் பாசனம் எந்த வகையான பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது?
மையத் தெளிப்பு நீர்ப்பாசனம்
110. மையத் தெளிப்பு நீர்ப் பாசன முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
TEST 111/120
111.மையத் தெளிப்பு நீர்ப்பாசனம் பயிர்களுக்கு நீர்ப் பாசனத்தை எப்படி அளிக்கிறது?
பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்
112. அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டம் எது?
113. ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணைகளைக் கட்டும் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
114. ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் நோக்கங்கள் எவை?
115. தாமோதர் ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
116. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலங்கள் எவை?
117. உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை என்று அழைக்கப்படுவது எது?
118. பக்ரா நங்கல் திட்டத்தினால் பயனடையும் ஆறு எது?
119. பக்ரா நங்கல் திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலங்கள் எவை?
120. உலகின் மிக நீளமான அணை என்று அழைக்கப்படுவது எது?
TEST 121/130
121. மகாநதி எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
122. ஹிராகுட் திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலம் எது?
123. கோசி ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
124. கோசி திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலங்கள் எவை?
125. துங்கபத்ரா ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
126. துங்கபத்ரா திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள இந்திய மாநிலங்கள் எவை?
127. பாகிரதி ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
128. தெகிரி அணை திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலம் எது?
129. சம்பல் ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
130. சம்பல் பள்ளத்தாக்குத் திட்டத்தின் மூலம் பயனடையும் மாநிலங்கள் யாவை?
TEST 131/140
131. கிருஷ்ணா ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
132. நாகார்ஜுன சாகர் திட்டத்தினால் பயனடைந்துள்ள இந்திய மாநிலம் எது?
133. நர்மதை ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
134. சர்தார் சரோவர் திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலங்கள் எவை?
135. சட்லஜ் ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
136. இந்திரா காந்தி கால்வாய்த் திட்டத்தினால் பயனடையும் இந்திய மாநிலங்கள் எவை?
137. காவேரி ஆறு எந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது?
138. மேட்டூர் அணை திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள இந்திய மாநிலம் எது?
3.3 வேளாண்மை
139. குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்து மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருட்களை விளைவிக்க செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
140. இந்திய வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?
TEST 141/150
வேளாண்மையின் வகைகள்
அ) தன்னிறைவு வேளாண்மை
141. இந்தியாவில் கணிசமான அளவு விவசாயிகள் எந்த வேளாண்மை முறையை பின்பற்றுகிறார்கள்?
142. பெரும்பாலும்குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்பட்டு நிலத்தின் மொத்த விளைச்சலின் பெரும் பகுதியை குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதம் உள்ளவை அருகில் உள்ளசந்தையில் விற்பனை செய்யப்படம் வேளாண்மை முறை எது?
143. தன்னிறைவு வேளாண்மையில் சிறிய அளவில் பயிரிடப்படுபவை எவை?
144. பாரம்பரிய விவசாய முறை மற்றும் குறைவான உற்பத்தியை அளிக்கும் வேளாண்மை முறை எது?
ஆ) இடப்பெயர்வு வேளாண்மை
145. பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படும் வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
146. இடப்பெயர்வு வேளாண்மை முறையில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பழங்குடியினர் இடப் பெயர்வு செய்கின்றார்கள்?
147. இடப்பெயர்வு வேளாண்மையின் வேறு பபெயர்கள் எவை?
148. இந்தியாவில் இடப்பெயர்வு வேளாண்மை அசாம் மாநிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
149. இந்தியாவில் இடப்பெயர்வு வேளாண்மை கேரள மாநிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
150. இந்தியாவில் இடப்பெயர்வு வேளாண்மை ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஸா மாநிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
TEST 151/160
151. இந்தியாவில் இடப்பெயர்வு வேளாண்மை மத்தியப் பிரதேச மாநிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இ) தீவிர வேளாண்மை
152. இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகளின் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வேளாண்மை முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
153. சிறிய நிலத்தில் பூச்சிக்கொல்லிகள் களைக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சளை பெற்றுத் தருவது எந்த வகை வேளாண்மையின் நோக்கம் ஆகும்?
ஈ) வறண்ட நில வேளாண்மை
154. நீர்ப்பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் பின்பற்றப்படும் வேளாண்மை முறை எது?
155. வறண்டப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் எப்படி இருக்கும்?
156. பாசன வசதி உதவியுடன் பயிரிடப்பட்டு குறைவான விளைச்சலைத் தரக்கூடிய வேளாண்மை முறை எது?
157. எந்த வேளாண்மையில் ஓராண்டிற்கு ஒரு பயிர் மட்டுமே பயிரிடப்படுகிறது?
உ) கலப்பு வேளாண்மை
158. பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கிய வேளாண்மை முறை எது?
159. விவசாயிகளின் பல தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண்மை எது?
ஊ) படிக்கட்டு முறை வேளாண்மை
160. இந்தியாவில் படிக்கட்டு முறை வேளாண்மை எங்கு பின்பற்றப்படுகிறது?
TEST 161/170
161. மலைச்சரிவு நிலங்கள் இயற்கையாகவே எப்படி இருக்கும்?
162. மலைச்சரிவு பகுதிகள் சமப்படுத்தப்பட்டு நிலத்தை நிலையான வேளாண் பகுதியில் போலவே பயன்படுத்தப்படும் வேளாண்மை முறை எது?
163. படிக்கட்டு நிலங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன?
164. மலைச்சரிவுகளில் ஏற்படும் மண் அரிப்பு எதனால் தடுக்கிறது?
3.4 இந்தியாவின் முக்கியப் பயிர்கள்
165. இந்தியாவில் சாகுபடியாகும் பயிர்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
166. இந்தியாவில் விளையக்கூடிய உணவுப் பயிர்கள் யாவை?
167. இந்தியாவில் விளையக்கூடிய வாணிபப் பயிர்கள் யாவை?
168. இந்தியாவில் விளையக்கூடிய தோட்டப்பயிர்கள் யாவை?
169. இந்தியாவில் விளையக்கூடிய தோட்டக்கலைப் பயிர்கள் எவை?
1. உணவுப்பயிர்கள்
170. இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஏன்?
TEST 171/180
நெல்
171. இந்தியாவில் விளையக்கூடிய பூர்வீக பயிர் எது?
172. உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை வகிக்கும் நாடு எது?
173. இந்தியாவில் விளையக்கூடிய பயிர்களில் அயன மண்டலப் பயிர் என்று குறிப்பிடப்படும் பயிர் வகை எது?
174. இந்தியாவில் நெற்பயிரானது எந்த பகுதிகளில் பயிரிடப்படுகிறது?
175. இந்தியாவில் நெல் சாகுபடிக்கு ஏற்ற மண் வகை எது?
176. இந்தியாவில் நெல் பயிரிட எவ்வளவு தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்?
177. இந்தியாவில் நெல் எத்தனை முறைகளில் பயிரிடப்படுகிறது?
178. இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முறையில் ஏர் உழுதல் முறையின் வேறு பெயர் என்ன?
179. இந்தியாவில் அதிக விளைச்சலை தரக்கூடிய விதைகள் எவை?
180. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் எத்தனை மாநிலங்கள் முன்னிலை வகித்துள்ளன?
TEST 181/190
181. இந்தியாவில் வேளாண் பருவம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
182. இந்தியாவில் காரிப் பருவம் குறிக்கும் மாதங்கள் யாவை?
183. இந்தியாவில் ராபி பருவம் குறிக்கும் மாதங்கள் யாவை?
184. இந்தியாவில் சையத் பருவம் குறிக்கும் மாதங்கள் யாவை?
185. இந்தியாவில் காரிஃப் வேளாண் பருவத்தில் வடமாநிலங்களில் வளரும் பயிர்கள் யாவை?
186. இந்தியாவில் காரிஃப் பருவத்தில் தென்மாநிலங்களில் வளரும் பயிர்கள் யாவை?
187. இந்தியாவில் ராபி பருவத்தில் வடமாநிலங்களில் வளரும் பயிர்கள் யாவை?
188. இந்தியாவில் ராபி பருவத்தில் தென்மாநிலங்களில் வளரும் பயிர்கள் யாவை?
189. இந்தியாவில் சையத் பருவத்தில் வடமாநிலங்களில் வளரும் பயிர்கள் யாவை?
190. இந்தியாவில் சையத் பருவத்தில் தென்மாநிலங்களில் வளரும் பயிர்கள் யாவை?
TEST 191/200
கோதுமை
191. இந்தியாவில் நெற்பயிருக்கு அடுத்தாற்போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்கும் பயிர் வகை எது?
192. நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 22 சதவிகிதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 34 சதவிகித பங்கையும் வகிக்கும் பயிர் எது?
193. இந்தியாவில் கோதுமை பயிருக்கு விதைக்கும் பருவத்தில் தேவைப்படும் வெப்பநிலை எவ்வளவு?
194. இந்தியாவில் கோதுமை பயிருக்கு முதிரும் பருவத்தில் தேவைப்படும் வெப்பநிலை எவ்வளவு?
195. இந்தியாவில் கோதுமை பயிர் உற்பத்தி உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் எத்தனை சதவீதம் கிடைக்கிறது?
196. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கரிசல் மண் பிரதேசம் எதன் உற்பத்திக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது?
சோளம் :
197. இந்தியாவின் மூன்றாவது முக்கிய உணவுப் பயிர் வகை எது?
198. ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட உணவுப் பயிர்வகை எது?
199. இந்தியாவில் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக்கூடிய பயிர் வகை எது?
200. இந்தியாவில் விளையும் சோளத்தில் உள்ள சத்துக்கள் யாவை?