SI DAY – 10 CLASS
About Lesson

TEST 1/10

1.ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

2.கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.

(A) தினங்களை கொண்டாடுவதை –   கவிக்கோ விடுங்கள்

(B) மண்புழுவல்ல மானிடனே      –    பாரதி

(C) கன்று குரல் கேட்ட பசு               –     தாராபாரதி

(D) தண்ணீர் போல் பணத்தை    –     ஆலந்தூரார் செலவு செய்தல்

3.புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

4.தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது

5.பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

6.நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக

(a) இசை நாவல்கள்                   1. நான்கு

(b) புதினங்கள்                             2. பத்து

(c) கவிதைத் தொகுப்புகள்   3. மூன்று

(d) மொழி பெயர்ப்புகள்        4. ஐந்து

7.எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

8.மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

9.“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்

10.“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

REVISION 1/10

1.ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

விடை: (B) கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை

2.கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.

(A) தினங்களை கொண்டாடுவதை –   கவிக்கோ விடுங்கள்

(B) மண்புழுவல்ல மானிடனே      –    பாரதி

(C) கன்று குரல் கேட்ட பசு               –     தாராபாரதி

(D) தண்ணீர் போல் பணத்தை    –     ஆலந்தூரார் செலவு செய்தல்

விடை: (A) தினங்களை கொண்டாடுவதை –   கவிக்கோ விடுங்கள்

3.புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

விடை: (D) பிரான்சிஸ் சென்கின்சு

4.தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது

விடை: (B) தந்தை பெரியார்

5.பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

விடை: (B) வால்ட்விட்மன்

6.நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக

(a) இசை நாவல்கள்                   1. நான்கு

(b) புதினங்கள்                             2. பத்து

(c) கவிதைத் தொகுப்புகள்   3. மூன்று

(d) மொழி பெயர்ப்புகள்        4. ஐந்து

விடை: (B)  3    4    2    1

7.எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

விடை: (C) உருசியா

8.மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

விடை: (C) சாகுந்தலம்

9.“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்

விடை: (D) கம்பர்

10.“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

விடை: (C) உ.வே.சா.

TEST 11/20

11.“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

12.குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

13.தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

14.தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?

15.’நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க

16.“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

17.’அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஓரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?

18.பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

19.“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

20.மன்னிப்பு – எம்மொழிச் சொல்

REVISION 11/20

11.“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

விடை: (B) பெரியார்

12.குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

விடை: (C) ஐம்பத்தொன்று

13.தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

விடை: (A) பிள்ளையார்பட்டி

14.தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?

விடை: (C) இரசூல் கம்ச தோவ்

15.’நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க

விடை: (B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

16.“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

விடை: (A) பெரியபுராணம்

17.’அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஓரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?

விடை: (A) கிரேக்கம்

18.பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

விடை: (A) கலிங்கத்துப்பரணி

19.“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

விடை: (C) டாக்டர். கிரௌல்

20.மன்னிப்பு – எம்மொழிச் சொல்

விடை: (D) உருது

TEST 21/30

21.திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

22. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

23.“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

24.‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

25.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

26.“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

27.இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

28.குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

29.எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்’ அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) குறுந்தொகை

(B) அகநானூறு

(C) கலித்தொகை

(D) ஐங்குறுநூறு

30.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?

REVISION 21/30

21.திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

விடை: (c) குமரகுருபரர்

22. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

விடை: (A) சுவாமிநாத தேசிகர்

23.“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

விடை: (C) மூன்றாம் தந்திரம்

24.‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

விடை: (B) பொருட்பால்

25.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

விடை: (C) பாதுகாப்பு

26.“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

விடை: (A) முதுமொழிக்காஞ்சி

27.இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

விடை: (B) திருக்குறள்

28.குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

விடை: (C) சிலப்பதிகாரம்

29.எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்’ அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) குறுந்தொகை

(B) அகநானூறு

(C) கலித்தொகை

(D) ஐங்குறுநூறு

விடை: (C) கலித்தொகை

30.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?

விடை: (D) கணிமேதாவியார்

TEST 31/40

31.“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி’ என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

32.“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

33.தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

34.‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய’- இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

35.“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

36.உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

37.‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

38.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

39.‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா?

40.பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

REVISION 31/40

31.“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி’ என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

விடை: (C) மாணிக்கம்

32.“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

விடை: (A) திருவாசகம்

33.தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

விடை: (B) இந்துத்தானி

34.‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய’- இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

விடை: (C) இரத்தினம்

35.“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

விடை: (C) பதிற்றுப்பத்து

36.உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

விடை: (B) சேக்கிழார்

37.‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

விடை: (C) புறா

38.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

விடை: (D) ஏகதேச உருவக அணி

39.‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா?

விடை: (D) வினாவழு

40.பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

விடை: (D) கிளிஞ்சல்

TEST 41/50

41.சொல்லைப் பொருளோடு பொருத்துக :

சொல்                       பொருள்  

(a) வனப்பு          1. காடு   

(b) அடவி             2. பக்கம்   

(c) மருங்கு          3. இனிமை 

(d) மதுரம்           4. அழகு

42 பிழையற்ற வாக்கியம் எது?

(A) ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

(B) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகளோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

(C) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

(D) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

43.‘எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்’ எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு

44.பொருத்துக :

(a) என்றல்                1. முற்றும்மை   

(b) நுந்தை               2. குறிப்பு வினைமுற்று  

(c). யாவையும்      3. மரூஉ     

(d) நன்று                  4. தொழிற்பெயர்

45.உம்மைத்தொகையில் ‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு

46.ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

47.பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

(A) மொழியமுது

(B) அடிமலர்

(C) கயற்கண்

(D) தமிழ்த்தேன்

48.தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்’ இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு 

49.“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

(A) கற்றா

(B) கன்றா

(C) சுறா

(D) கன்று

50.“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

REVISION 41/50

41.சொல்லைப் பொருளோடு பொருத்துக :

சொல்                       பொருள்  

(a) வனப்பு          1. காடு   

(b) அடவி             2. பக்கம்   

(c) மருங்கு          3. இனிமை 

(d) மதுரம்           4. அழகு

விடை: (C)  4    1      2    3

42 பிழையற்ற வாக்கியம் எது?

(A) ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

(B) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகளோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

(C) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

(D) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

விடை: (C) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

43.‘எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்’ எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு,

விடை: (D) செய்வினைத் தொடர்

44.பொருத்துக :

(a) என்றல்                1. முற்றும்மை   

(b) நுந்தை               2. குறிப்பு வினைமுற்று  

(c). யாவையும்      3. மரூஉ     

(d) நன்று                  4. தொழிற்பெயர்

விடை: (A)  4    3    1    2

45.உம்மைத்தொகையில் ‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு,

விடை: (C) இடையிலும் இறுதியிலும் வரும்

46.ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

விடை: (D) இரண்டாம் வேற்றுமை

47.பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

(A) மொழியமுது

(B) அடிமலர்

(C) கயற்கண்

(D) தமிழ்த்தேன்

விடை: (C) கயற்கண்

48.தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்’ இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு 

விடை: (B) கூழை மோனை

49.“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

(A) கற்றா

(B) கன்றா

(C) சுறா

(D) கன்று

விடை: (B) கன்றா

50.“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

விடை: (A) மேற்கதுவாய் மோனை

TEST 51/60

51.கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

(A) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

(B) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(C) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது

(D) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது

52.தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

(A) பண்புத்தொகை

(B) அன்மொழித்தொகை

(C) வினைத்தொகை

(D) உவமைத்தொகை

53.பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்

54.‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்

55.‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ – என அழைக்கப்படும் நகரம்

56.“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?

57.நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?

58.கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு

(A) கரைவெட்டி

(B) கோவன்புத்தூர்

(C) வெள்ளோடு

(D) சித்திரங்குடி

59.ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க

60.கண்ணதாசன் படைத்த நாடகம்

REVISION 51/60

விடை: (B) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

52.தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

(A) பண்புத்தொகை

(B) அன்மொழித்தொகை

(C) வினைத்தொகை

(D) உவமைத்தொகை

விடை: (B) அன்மொழித்தொகை

53.பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்

விடை: (B) சி.வை. தாமோதரனார்

54.‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்

விடை: (C) மதுரைக் காஞ்சி

55.‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ – என அழைக்கப்படும் நகரம்

விடை: (D) மதுரை

56.“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?

விடை: (B) கால்டுவெல்

57.நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?

விடை: (B) பரிதிமாற் கலைஞர்

58.கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு

(A) கரைவெட்டி

(B) கோவன்புத்தூர்

(C) வெள்ளோடு

(D) சித்திரங்குடி

விடை: (B) கோவன்புத்தூர்

59.ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க

விடை: (C) உத்தராஞ்சல்

60.கண்ணதாசன் படைத்த நாடகம்

விடை: (D) இராசதண்டனை

TEST 61/70

61.கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

அயற்கூற்றில் வருவன

(A) மேற்கோள்குறிகள் வராது

(B) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

(C) அது, அவை – அங்கே என மாறும்

(D) காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்

62.“புத்தகம் வாசிப்பதனை கடமையாக் ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது, ‘அப்படி செய்தால்,புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு

63.கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு

(A) செந்தமிழ் ஞாயிறு

(B) செந்தமிழ்ச் செல்வர்

(C) இலக்கியச் செம்மல்

(D) தமிழ்ப்பெருங்காவலர்

64.‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர் யார்?

65.பொருத்துக :

(a) பெருஞ்சித்திரனார்     1. காவியப்பாவை 

(b) சுரதா                                  2. குறிஞ்சித்திட்டு 

(c) முடியரசன்                       3. கனிச்சாறு  

(d) பாரதிதாசன்                 4. தேன்மழை

66.பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

(A) கொய்யாக்கனி

(B) கனிச்சாறு

(C) கல்லக்குடி மாகாவியம்

(D) நூறாசிரியம்

67.பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :

(a) புனெஸ்கோ விருது                   1. 21,400

(b) அஞ்சல் தலை                               2. 10,700

(c) பங்கேற்ற கூட்டங்கள்               3. 1970

(d) உரையாற்றிய மணிநேரம்   4. 1978

68.திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

(A) மதுரைக் காண்டம்

(B) கூடற் காண்டம்

(C) வஞ்சிக் காண்டம்

(D) திருவாலவாய்க் காண்டம்

69.“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

70.‘மணிமேகலை’ – அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

REVISION 61/70

விடை: (B) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

62.“புத்தகம் வாசிப்பதனை கடமையாக் ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது, ‘அப்படி செய்தால்,புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு

விடை: (C) நேரு

63.கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு

(A) செந்தமிழ் ஞாயிறு

(B) செந்தமிழ்ச் செல்வர்

(C) இலக்கியச் செம்மல்

(D) தமிழ்ப்பெருங்காவலர்

விடை: (C) இலக்கியச் செம்மல்

64.‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை: (C) தால் சுதாய்

65.பொருத்துக :

(a) பெருஞ்சித்திரனார்     1. காவியப்பாவை 

(b) சுரதா                                  2. குறிஞ்சித்திட்டு 

(c) முடியரசன்                       3. கனிச்சாறு  

(d) பாரதிதாசன்                 4. தேன்மழை

விடை: (B)  3    4    1    2

66.பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

(A) கொய்யாக்கனி

(B) கனிச்சாறு

(C) கல்லக்குடி மாகாவியம்

(D) நூறாசிரியம்

விடை: (C) கல்லக்குடி மாகாவியம்

67.பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :

(a) புனெஸ்கோ விருது                   1. 21,400

(b) அஞ்சல் தலை                               2. 10,700

(c) பங்கேற்ற கூட்டங்கள்               3. 1970

(d) உரையாற்றிய மணிநேரம்   4. 1978

விடை: (B)  3    4    2    1

68.திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

(A) மதுரைக் காண்டம்

(B) கூடற் காண்டம்

(C) வஞ்சிக் காண்டம்

(D) திருவாலவாய்க் காண்டம்

விடை: (C) வஞ்சிக் காண்டம்

69.“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

விடை: (C) கரிகாலன்

70.‘மணிமேகலை’ – அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

விடை: (C) தீவதிலகை

TEST 71/80

71.“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”- இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

72.தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

73.‘அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

(A) எட்டு சிற்றிலக்கியங்கள்

(B) எட்டு பெருங்காப்பியங்கள்

(C) ஆறு நூல்கள்

(D) ஒன்பது உரைகள்

74.காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

75.”நல்லது செய்த லாற்றீ ராயினும்

அல்லது செய்த லோம்பு மின்து தான்”

– என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

76.மறைமலையடிகளாரின் மகள்

77.‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

78.‘போரை ஒழிமின்’ – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

79.பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

80.‘தேம்பாவணி’ என்பது

REVISION 71/80

71.“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”- இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

விடை : (C) மிளைகிழான் நல்வேட்டனார்

72.தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

விடை: (C) திருவாலவாய்க் காண்டம்

73.‘அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

(A) எட்டு சிற்றிலக்கியங்கள்

(B) எட்டு பெருங்காப்பியங்கள்

(C) ஆறு நூல்கள்

(D) ஒன்பது உரைகள்

விடை: (A) எட்டு சிற்றிலக்கியங்கள்

74.காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

விடை: (B) ஈராயிரத்து முப்பத்து நான்கு

75.”நல்லது செய்த லாற்றீ ராயினும்

அல்லது செய்த லோம்பு மின்து தான்”

– என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

விடை: (C) புறநானூறு

76.மறைமலையடிகளாரின் மகள்

விடை: (B) நீலாம்பிகை அம்மையார்

77.‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

விடை: (C) புறநானூறு

78.‘போரை ஒழிமின்’ – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

விடை: (A) நெடுங்கிள்ளி

79.பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

விடை: (B) திருவாசகம்

80.‘தேம்பாவணி’ என்பது

விடை: (A) கிறித்தவக் காப்பியம்

TEST 81/90

81.“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.

82.திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

83.__________ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

84.பொருத்துக :

நூல்                                           நூலாசிரியர் 

(a) களவழி நாற்பது       1. முன்றுறையரையனார் 

(b) கைந்நிலை                 2. பொய்கையார் 

(c) கார் நாற்பது              3. புல்லங்காடனார் 

(d) பழமொழி                   4. கண்ணங்கூத்தனார்

85.‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? – இது பயின்று வந்த நூல் எது?

86.தமிழெண்களைக் கூட்டுக : ருஅ + சுஅ = ?

87.ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்?

88.தமிழ் _________ ஓசை மொழி.

89.“சான்றாண்மை”- அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு

90.புறத்திணைகள் ____________ வகைப்படும்

REVISION 81/90

81.“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.

விடை: (D) சீத்தலைச்சாத்தனார்

82.திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

விடை: (A) ஐம்பத்து மூவர்

83.__________ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

விடை: (B) ஒன்றுகொலாம்

84.பொருத்துக :

நூல்                                           நூலாசிரியர் 

(a) களவழி நாற்பது       1. முன்றுறையரையனார் 

(b) கைந்நிலை                 2. பொய்கையார் 

(c) கார் நாற்பது              3. புல்லங்காடனார் 

(d) பழமொழி                   4. கண்ணங்கூத்தனார்

விடை: (A)  2    3    4    1

85.‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? – இது பயின்று வந்த நூல் எது?

விடை: (A) பழமொழி

86.தமிழெண்களைக் கூட்டுக : ருஅ + சுஅ = ?

விடை: (D) கஉசு

87.ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்?

விடை: (D) ஆற்று + ஆ + ஈர்

88.தமிழ் _________ ஓசை மொழி.

விடை: (C) மெல்

89.“சான்றாண்மை”- அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு,

விடை: (B) சான் + றான் + மை

90.புறத்திணைகள் ____________ வகைப்படும்

விடை: (A) பன்னிரெண்டு

TEST 91/100

91.நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

(A) கொண்டு, உடன்

(B) பொருட்டு, நிமித்தம்

(C) இருந்து, நின்று

(D) உடைய

92.பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:

93.“நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

94.நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘ஐவர்’ என்பதன் இலக்கணம் யாது?

95.“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”- இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?

96.“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.

(A) நிலம் – வாழ்க்கை

(B) ஊன்றுகோல் – பெரியோர் சொல்

(C) ஊன்றுகோல் – நிலம்

(D) ஒழுக்கம் – வாய்ச்சொல்

97.“பட்டியுள காளை பால் கறக்குமே நல்ல ப்சு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.

98.“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?

99.னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?

(A) னல முன் டணவும் ணள முன் றனவும்

(B) னல முன் றடவும் ணௗ முன் னணவும்

(C) னல முன் றனவும் ணளமுன் டணவும்

(D) னல முன் றணவும் ணளமுன் டனவும்

100.“லித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

REVISION 91/100

91.நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

(A) கொண்டு, உடன்

(B) பொருட்டு, நிமித்தம்

(C) இருந்து, நின்று

(D) உடைய

விடை: (B) பொருட்டு, நிமித்தம்

92.பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:

விடை: (D) காடு

93.“நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

விடை: (B) நன்னூல்

94.நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘ஐவர்’ என்பதன் இலக்கணம் யாது?

விடை: (A) ஒன்றொழி பொதுச் சொல்

95.“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”- இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?

விடை: (A) வேற்றுமையணி

96.“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.

(A) நிலம் – வாழ்க்கை

(B) ஊன்றுகோல் – பெரியோர் சொல்

(C) ஊன்றுகோல் – நிலம்

(D) ஒழுக்கம் – வாய்ச்சொல்

விடை: (B) ஊன்றுகோல் – பெரியோர் சொல்

97.“பட்டியுள காளை பால் கறக்குமே நல்ல ப்சு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.

விடை: (B) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

98.“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?

விடை: (A) ரழ வரும்

99.னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?

(A) னல முன் டணவும் ணள முன் றனவும்

(B) னல முன் றடவும் ணௗ முன் னணவும்

(C) னல முன் றனவும் ணளமுன் டணவும்

(D) னல முன் றணவும் ணளமுன் டனவும்

விடை: (C) னல முன் றனவும் ணளமுன் டணவும்

100.“லித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

விடை: (A) பனையோலைப் பெட்டி

Join the conversation