எட்டாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
புவியியல்
அலகு – 3
நீரியல்சுழற்சி
அறிமுகம்
1. புவியில் காணப்படும் முக்கிய கூறுகளில் ஒன்று எது?
விடை : நீர்
2. நீர் அத்தியாவசியமானது ஏன்?
விடை: எல்லா தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும்.
3. நீரின் பயன்பாடுகள் எவை?
விடை: நீர் குடிநீராக மட்டுமின்றி வீட்டுத் தேவைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும் மற்றும் பிற தேவைகளுக்கும் இன்றியமையாததாகும்.
4. அனைத்து பொருளாதார செயல்பாடுகளுக்கும் மிகவும் அத்தியாவசியமானது எது?
விடை: நீர்
5. புவியின் தவிர்க்க முடியாத கூறாக அமைவது எது?
விடை: நீர்
புவியில் நீரின் பங்கு
6. புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
விடை: 71%
7. புவியில் உள்ள நீரின் அளவு?
விடை: 326 மில்லியன் கன மைல்கள் (Cubic)
8. புவியில் உள்ள பெரும் பகுதியிலான நீரின் தன்மை?
விடை: உவர்ப்பு நீர்
9. உவர்ப்பு நீர் எங்கு காணப்படுகிறது?
விடை: கடலிலும், பேராழிகளிலும் காணப்படுகிறது.
10. புவியில் உள்ள பேராழிகள், கடல்கள் மற்றும் குடாக்கள் ஆகியவற்றில் காணப்படும் நீரின் கன அளவு?
விடை: 321,000,000 (Cubic miles)
11. புவியின் மொத்த நீரில் பேராழிகள், கடல்கள் மற்றும் குடாக்கள் ஆகியவற்றில் காணப்படும் நீரின் சதவீதம்?
விடை: 96. 54%
12. புவியில் உள்ள பனியாறுகள், நிலையான உறைபனி ஆகியவற்றில் காணப்படும் நீரின் கன அளவு?
விடை: 5,773,000 (Cubic miles)
13. புவியின் மொத்த நீரில் பனிமலைகள், பனியாறுகள், நிலையான உறைபனி ஆகியவற்றில் காணப்படும் மொத்த நீரின் சதவீதம்?
விடை: 1.74%
14. புவியில் உள்ள நிலத்தடி நீரின் கன அளவு?
விடை : 5,614,000 (Cubic miles)
15. புவியில் காணப்படும் மொத்த நீரில் நிலத்தடி நீரின் சதவீதம்?
விடை: 1.69 %
16. புவியில் உள்ள மண்ணின் ஈரப்பதத்தில் உள்ள நீரின் கன அளவு?
விடை: 3959 (Cubic miles)
17. புவியில் காணப்படும் மொத்த நீரில் மண்ணின் ஈரப்பதத்தில் உள்ள நீரின் சதவீதம்?
விடை: 0.001%
18. புவியில் உள்ள நிலப்பகுதியில் காணப்படும் நிரந்தர பனிக்கட்டியில் உள்ள நீரின் கன அளவு?
விடை: 71970 (Cubic miles)
19. புவியில் காணப்படும் மொத்த நீரில் நிலப் பகுதியில் காணப்படும் நிரந்தர பனிக்கட்டில் உள்ள நீரின் சதவீதம்?
விடை: 0.022%
20. புவியில் காணப்படும் ஏரியில் உள்ள நீரின் கன அளவு?
விடை: 42320 (Cubic miles)
21. புவியில் காணப்படும் மொத்த நீரில் ஏரிகளில் உள்ள நீரின் சதவீதம்?
விடை: 0.013%
22. புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீரின் கன அளவு?
விடை : 3095 (Cubic miles)
23. புவியில் காணப்படும் மொத்த நீரில் வளிமண்டலத்தில் உள்ள நீரின் சதவீதம்?
விடை: 0.001%
24 . புவியில் காணப்படும் சதுப்பு நிலத்தில் உள்ள நீரின் கன அளவு
விடை: 2752 (Cubic miles)
25. புவியில் காணப்படும் மொத்த நீரில் சதுப்பு நிலத்தில் உள்ள நீரின் சதவீதம்
விடை : 0.0008%
26. புவியில் காணப்படும் ஆறுகளில் உள்ள நீரின் கன அளவு?
விடை : 509 (Cubic miles)
27. புவியில் காணப்படும் மொத்த நீரில் ஆறுகளில் உள்ள நீரின் சதவீதம்?
விடை : 0.0002%
28. புவியில் காணப்படும் உயிரியல் நீரில் உள்ள கன அளவு
விடை: 269 (Cubic miles)
29. புவியில் காணப்படும் மொத்த நீரில் உயிரியல் நீரின் சதவீதம்
விடை: 0.0001%
30. புவியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் நீர் உவர்ப்பு நீராக உள்ளது?
விடை : 97.2%
31. புவியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் நீர் நன்னீராக உள்ளது?
விடை: 2.8 %
32. புவியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் நன்னீர் புவியின் மேற்பரப்பில் உள்ளது?
விடை: 2.2%
33. புவியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் நன்னீர் நிலத்தடி நீராக கிடைக்கப்பெறுகிறது?
விடை: 0.6%
34. புவியின் மேற்பரப்பில் காணப்படும் 2.2% நன்னீர் எந்த வடிவங்களில் காணப்படுகிறது?
விடை: 2.15 % பனியாறுகளாகவும் மற்றும் பனிமலைகளாகவும், 0.01% ஏரிகளாகவும், ஆறுகளாகவும், மீதமுள்ள 0.04% மற்ற நீர் வடிவங்களாகவும் காணப்படுகிறது.
35. மொத்த நிலத்தடி நீரில் இப்பொழுது எத்தனை சதவீதம் பொருளாதார ரீதியில் நவீன தொழில் நுட்பத்தின்மூலம் துளையிட்டு எடுக்கப்படுகிறது?
விடை: 0.6%
36. மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வளம் எது?
விடை: நீர்
37. இந்தியாவில் நீர்வளம் எத்தனை ஆதாரங்களிலிருந்து கிடைக்கிறது?
விடை: மூன்று அவையாவன,
மழைப்பொழிவு
புவியின் மேற்பரப்பு நீர்
நிலத்தடி நீர
38. நீரியல் என்றால் என்ன?
விடை: புவியின் மேற்பரப்பில உள்ள நீரின் தன்மை, பரவல், இயக்கம் மற்றும் பண்புகள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கையாளும் அறிவியலாகும்.
39. புவியில் கிடைக்கப்பெறும் நீரானது எவ்வாறு இருப்பதில்லை?
விடை: ஒரே சீராக இருப்பதில்லை.
40. நீர் வளமானது எப்படி உள்ளது?
விடை: நீர் வளமானது சில இடங்களில் மிக அதிகமாகவும், சில இடங்களில் மிக குறைவாகவும் உள்ளது.
41. சூரிய உந்துதல் செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு எது?
விடை: நீரியல் சுழற்சி
42. நீரியல் சுழற்சி எவ்வாறு நடைபெறுகிறது?
விடை: நீர் கடலிலிருந்து ஆவியாதல் மூலம் வளி மண்டலத்திற்குச் சென்று, பின் வளி மண்டலத்திலிருந்து மழைப்பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைகிறது.
43. புவித் தொடர்புடைய இயக்கங்களுள் மிக முக்கியமானது எது?
விடை: நீர்ச்சுழற்சி
44. நீர்ச் சுழற்சியில் மாறாமல் இருப்பது எது?
விடை : நீரின் அளவு
45. நீர்ச்சுழற்சியில் காலத்திற்கு ஏற்ப மாறுபடுபவை எவை?
விடை: நீர்பரவல் மற்றும் இடம்
46. ஆவியாதல் எதன் மூலம் நடைபெறுகிறது?
விடை: புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரின் மூலமாகவும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமும் நடைபெறுகிறது.
47. நீர் எவ்வாறு மேகங்களாக மாறுகிறது?
விடை: நீர், ஆவியாதல் மூலம் வளிமண்டலத்தின் உயரமான பகுதிகளுக்குச் செல்லும் பொழுது, திரவமாகச் சுருங்குதலின் மூலம் மேகங்களாக மாறுகிறது.
48. மேகத்தில் உள்ள நீர்திவலைகள் எவ்வாறு புவியை வந்தடைகிறது?
விடை: உருகுதல் மற்றும் மேகம் உடைதல் காரணமாக பொழிவின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகிறது.
49. நீர் வழிந்தோடல் என்றால் என்ன?
விடை: மழைப்பொழிவின் ஒரு பகுதி நீர், புவியின் மீது வழிந்தோடுவது ஆகும்.
50. நிலத்தடி நீர் எப்படி அமைகிறது?
விடை: மழைப்பொழிவின் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவல் மூலம் சென்று நிலத்தடிநீராக அமைகிறது.
51. நீரியல் சுழற்சி என்பது?
விடை : இயற்கையாக மற்றும் தொடர்ச்சியான நீர்ச்சுழற்சியாகும்
52. நீரியல் சுழற்சி எத்தனை முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது?
விடை: மூன்று . அவை,
ஆவியீர்ப்பு
பொழிவு
நீர் வழிந்தோடல்.
நீரியல் சுழற்சியின் கூறுகள்
53. நீரியல் சுழற்சியில் எத்தனை முக்கிய கூறுகள் காணப்படுகின்றன?
விடை : 6 அவையாவன,
Evapotranspiration – ஆவியீர்ப்பு
Condensation – திரவமாய் சுருங்குதல்
Precipitation – பொழிவு
Infiltration – நீர் ஊடுருவல்
Percolation – உட் கசிதல்
Run Off – நீர் வழிந்தோடல்
54. ஆவியீர்ப்பு என்றால் என்ன?
விடை : புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும் புவியின் மொத்த நீர் இழப்பாகும். விளைநிலப் பகுதிகளில் ஆவியாதல் மற்றும் நீர் உட்கசிந்து வெளியிடுதலை தனித்தனியாகக் கணிப்பது கடினம். எனவே இங்கு அனைத்து நிகழ்வுகளும் ஆவியீர்ப்பு என அழைக்கப்படுகிறது.
நீர் ஆவியாதல் (Evaporation)
55. நீர், திரவநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறுவதற்கு பெயர் என்ன?
விடை : ஆவியாதல் என்று பெயர்.
56. நீரின் கொதிநிலை என்ன?
விடை: 100°C (212°F)
57. நீர் ஆவியாக தொடங்கும் வெப்பநிலை?
விடை: 0°C (32°F)
58. நீர் ஆவியாதல் நிகழ்வு எந்த வேகத்தில் நடைபெறுகிறது?
விடை: மெதுவாக நடைபெறுகிறது.
59. ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் முக்கிய காரணி எது?
விடை: வெப்பநிலை
60. வெப்பம் மற்றும் ஆவியாதலுக்கு இடையே உள்ள தொடர்பு?
விடை: நேர்மறை தொடர்பு
61. ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் காரணிகள் எவை?
விடை: புவியில் மேற்பரப்பில் உள்ள பரந்த நீர்ப்பரப்பு, காற்று மற்றும் வளிமண்டல ஈரப்பதம் போன்ற காரணிகள் ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கின்றன.
62. பேராழிகள், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றிலிருந்து எத்தனை சதவீதம் ஈரப்பதம் ஆவியாதல் மூலமாக வளிமண்டலத்திற்குச் செல்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன?
விடை: 90%
63. தாவரங்களில், நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாக எத்தனை சதவீதம் ஈரப்பதம் வளிமண்டலத்திற்கு செல்கிறது?
விடை: 10%
64. எந்த அளவில் நீர் எவ்வளவு ஆவியாகிறதோ, அதே அளவு பொழிவாக புவிக்கு மீண்டும் கிடைக்கிறது?
விடை: உலகளாவிய அளவில்
65. புவியியல் ரீதியாக ஆவியாதல் செயல்முறைகள் எவ்வாறு அமைகிறது?
விடை: ஆவியாதல் செயல்முறைகள் மாறுபடுகிறது.
66. புவியில் ஆவியாதல் அதிகமாகவும், மழைப்பொழிவு குறைவாகவும் உள்ள பகுதி எது?
விடை: பேராழிகள்
67. புவியில் ஆவியாதல் குறைவாகவும், மழைப் பொழிவு அதிகமாகவும் உள்ள பகுதி எது?
விடை: நிலப்பரப்பு
68. ஆவியாதல் விகிதம் எப்போது குறைவாக இருக்கும்?
விடை: காற்று அதிகமாக உள்ள காலங்களை விட காற்று குறைவாக உள்ள காலங்களில் குறைவாக இருக்கும்.
69. காற்று குறைவாக உள்ள காலங்களில் நீராவி எங்கு தங்கிவிடுகிறது?
விடை: நீர் நிலைகளுக்கு அருகிலேயே தங்கிவிடுகிறது.
70. எந்த காலங்களில் வறண்ட காற்று நீராவியை வெளியேற்றி கூடுதல் ஆவியாதலுக்கு வழிவகுக்கிறது?
விடை: காற்று அதிக உள்ள காலங்களில்
நீர் உட்கசிந்து வெளியிடுதல் (Transpiration)
71. நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்றால் என்ன?
விடை : தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்லும் செயலாக்கமே நீர் உட்கசிந்து வெளியிடுதல் ஆகும்.
72. தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரானது எந்த செயலால் வெளியேறுகிறது?
விடை: நீர் உட்கசிந்து வெளியிடுதலால் வெளியேறுகிறது.
73. நீர் உட்கசிந்து வெளியாகும் விதத்தை நிர்ணயிக்கின்றவை எவை?
விடை: வெப்பநிலை, காற்று மற்றும் ஈரப்பதம் ஆகியவை நிர்ணயிக்கின்றன.
74. தாவரங்களின் வேர்களுக்கு நீர் எதன் மூலம் செலுத்தப்படுகிறது?
விடை: மண்ணின் ஈரப்பதம், மண்வளத்தின் மூலம் செலுத்தப்படுகிறது.
75. தாவரங்களில் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தீர்மானிப்பவை எவை?
விடை: தாவரங்களின் இயற்கைத் தன்மை மற்றும் இலைகள் தீர்மானிக்கின்றன.
76. விவசாயத்தில் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தீர்மானிப்பவை எவை?
விடை : பயிர்களின் தன்மை, பயிர்களின் பண்புகள், அதன் சூழல் மற்றும் பயிர் சாகுபடி முறைகள்
நீர் சுருங்குதல் (Condensation)
77. நீர் சுருங்குதல் என்பது?
விடை: நீராவி, நீராக மாறும் செயல் முறைக்கு நீர் சுருங்குதல் என்று பெயர்.
78. நீர் சுருங்குதல் நிகழ்வு எப்போது நடைபெறுகிறது?
விடை: வளிமண்டலத்தில் வெப்பக் காற்று மேலே எழுந்து, குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்து கொள்ளும் திறனை இழக்கும் பொழுது, நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.
79. மிகுதியான நீராவி எந்த நிகழ்வால் மேகத்துளிகளாக மாறுகிறது?
விடை: நீர் சுருங்குதலால் மேகத்துளிகளாக மாறுகிறது.
80. மேகங்கள் உருவாகக் காரணமாக இருப்பது எது?
விடை: நீர் சுருங்குதல்
81. மழைப்பொழிவை உருவாக்குவது எது?
விடை: மேகங்கள்
82. நீர்ச் சுழற்சியின் மூலம் நீராக புவிப்பரப்பிற்கு மீண்டும் வந்தடைவது எது?
விடை: மழைப் பொழிவு
83. ஆவியாதலின் எதிர்வினைச் செயல் எது?
விடை: நீர் சுருங்குதல்
நீர் சுருங்குதலின் வகைகள்
84. நீர் சுருங்குதலின் உருவங்கள் எவை?
விடை: பனி , உறைபனி, அடர்மூடுபனி, மூடுபனி மற்றும் மேகங்கள்
அ) பனி (Dev)
85. பனி எப்படி உருவாகிறது?
விடை: நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது. பொருட்களின் வெப்ப நிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது பனி உருவாகிறது.
86. உறைபனி என்றால் என்ன?
விடை: குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்புகளின் மீது நீராவி படிந்து பனிப்படிகங்களாக மாறுவதையே உறைபனி என்கிறோம்.
87. உறைபனி எவ்வாறு உருவாகிறது?
விடை: குளிர்ந்த பொருட்களின் வெப்ப நிலை உறைநிலைக்குக் கீழே செல்லும் பொழுது உறைபனி உருவாகிறது.
88. அடர் மூடுபனி என்றால் என்ன?
விடை: காற்றிலிருக்கும் நீர் சுருங்குதலால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த்துளிகளே அடர் மூடுபனி எனப்படும்.
89. புவியின் மேற்பரப்பிலிருந்து 1000 மீட்டர் அல்லது அதற்கும் குறைவான உயரமுள்ள காற்றடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: அடர் மூடுபனி
90. விமான போக்குவரத்திற்கு உகந்த உயரம்?
விடை: அடர் மூடுபனியின் உயரம் 10 கி.மீட்டர் அல்லது அதற்கு குறைவான உயரம் விமான போக்குவரத்திற்கு உகந்தது.
91. மூடுபனி என்றால் என்ன?
விடை: காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர்த்துளிகளே மூடுபனி எனப்படும்.
92. மூடுபனி எவ்வாறு உருவாகிறது?
விடை: காற்றில் உள்ள நீராவி விரைவாகக் குளிர்வதால் பார்வைக்குத் தெரியாத வாயு நிலையிலிருந்து பார்வைக்குப் புலனாகும் நீர்த்துளிகளாக மாற்றமடைவது மூடுபனி என்று அழைக்கப்படுகிறது.
93. மூடுபனியானது அடர் மூடுபனியை விட அடர்த்தி எவ்வாறு உள்ளது?
விடை : குறைவானதாக உள்ளது.
உ) மேகங்கள் (Clouds)
94. மேகங்கள் என்றால் என்ன?
விடை: மேகங்கள் என்பது வளிமண்டலத்தில் காணப்படும் குறைந்த எடைக்கொண்ட மிக நுண்ணிய நீர்த்துளிகள் மற்றும் பனிப்படிகங்களைக் கொண்டிருக்கும்.
95. மேகங்களின் நீர்த்துளிகளின் அளவு ?
விடை : 2 மைக்ரான் முதல் 100 மைக்ரான் கொண்டதாகும்.
96. மேகங்கள் நீர்த்துளிகளாக எப்போது மாறுகின்றன?
விடை: 100 மைக்ரான் அளவுக்கு மேல் செல்லும்பொழுது மேகங்கள் நீர்த்துளிகளாக மாறுகின்றன.
மழைப் பொழிவு (Precipitation)
97. மழைப்பொழிவு என்றால் என்ன?
விடை : மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு ஆகும்.
98. மழை எவ்வாறு உருவாகிறது?
விடை: பனிப்படிகங்கள் மற்றும் மேகத்துளிகள் ஒன்று கூடிப் பெரியதாகும் பொழுது அவை கனமாவதால் வளிமண்டலத்தின் வழியாக மழையாக வீழ்கிறது.
99. பனிப்படிகங்கள் மற்றும் மேகத்துளிகள் ஒன்று கூடி கீழ்நோக்கி விழும்பொழுது சிறிய துளிகள் ஒன்றுசேர்ந்து எதை உருவாக்குகின்றன?
விடை: மழைத் துளிகளை உருவாக்குகின்றன.
மழைப்பொழிவின் வடிவங்கள்
100. பொழிவின் வடிவம் எதை சார்ந்து அமைகிறது?
விடை: ஓரிடத்தில் நிலவும் வானிலை அல்லது காலநிலையை சார்ந்தே அமைகிறது.
101. உலகில் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில், பொழிவானது எப்படி இருக்கும்?
விடை: மழையாகவோ அல்லது தூறலாகவோ இருக்கும்.
102. குளிர் பிரதேசங்களில் பொழிவானது எப்படி இருக்கும்?
விடை: பனியாகவும் அல்லது பனிக்கட்டியாகவும் இருக்கும்.
103. பொழிவின் வடிவங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை: மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம்.
மழை (Rain fall)
104. பொழிவின் பொதுவான வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மழைப்பொழிவு
105. மழைப்பொழிவு, மழை என அழைக்கப்பட காரணம்?
விடை: நீர்த்துளிகளின் வடிவத்தில் உள்ளதால் மழை எனப்படுகிறது.
106. நீர்த் துளிகள் 0. 5 மி.மீ விட்டத்திற்கு அதிகமாக இருந்தால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மழைப் பொழிவு
107. நீர்த் துளிகள் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: தூறல்
108. பொதுவாக மழைத் தூறல் எங்கிருந்து உருவாகிறது?
விடை: படை மேகங்களிலிருந்து உருவாகிறது.
கல்மழை (Sleet)
109. கல்மழை என்றால் என்ன?
விடை: நீர்த்துளிகளும், 5 மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு கல்மழை என்று பெயர்.
110. சில நேரங்களில் வளிமண்டல வெப்பநிலை 0°C க்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும் பொழுது நீர் எந்த நிலைக்கு சென்று விடுகிறது?
விடை: நீர் உறைநிலைக்கு சென்றுவிடுகிறது.
111. உறை நிலைக்கு சென்ற நீர் புவியை நோக்கி வரும் பொழுது எப்படி மாறுகிறது?
விடை: பனிக்கட்டிகளாக மாறுகிறது.
112. புவியின் மீது கல்மழை எப்படி பொழிகிறது?
விடை: பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் சேர்ந்து புவியின் மீது கல்மழையாக பொழிகிறது.
உறைபனி மழை (Freezing Rain)
113. மழைத்துளிகள் சில நேரங்களில் புவிப்பரப்பிற்கு அருகாமையில் உறைவதில்லை ஏன்?
விடை: மழைத்துளிகள் குளிர்ந்த காற்று வழியாக விழுவதால் விழும் பொழுது உறைவதில்லை.
114. உறைபனி என்றால் என்ன?
விடை: மழைத்துளிகள் குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்பொழுது உறைந்து விடுகின்றன. இவையே உறைபனி எனப்படுகிறது.
115. உறைபனி மழையில் உள்ள துளியின் விட்டத்தின் அளவு?
விடை: 0.5 மி.மீ விட அதிகமாக இருக்கும்.
ஆலங்கட்டி மழை (Hail)
116. ஆலங்கட்டி மழை என்றால் என்ன?
விடை: மழை பொழிவானது 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளைக் கொண்டிருந்தால் ஆலங்கட்டி மழை என்று பெயர்.
117. ஆலங்கட்டி மழை எவ்வாறு உருவாகிறது?
விடை: கார்திரள் மேகங்களிலிருந்து (Cumulonimbus Clouds) இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது.
118. மேகத்தின் குளிர்ந்த பகுதியிலிருந்து ஒரு சிறிய பனிக்கட்டியாக உருவாகுவது எது?
விடை: ஆலங்கட்டி
119. ஆலங்கட்டியைக் குளிர்ந்த பகுதியினூடே மேலும் கீழுமாக பலமுறை எடுத்துச் செல்வது எது?
விடை: மேகத்தில் ஏற்படும் கடும் செங்குத்து சலனமானது ஆலங்கட்டியைக் குளிர்ந்த பகுதியினூடே மேலும் கீழுமாக பலமுறை எடுத்துச் செல்கிறது.
பனிப்பொழிவு (Snow)
120. மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக எப்படி மாற்றப்படுகிறது?
விடை: பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது.
121. துகள் போன்று பனியின் நுண்துகள்களைத் திரளாகக்கொண்டு காணப்படுவது எது?
விடை: பனிக்கட்டிகள் காணப்படுகிறது.
122. பனித்திரள் துகள்கள் பொழிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பனிப்பொழிவு என அழைக்கப்படுகிறது.
123. பனிப்பொழிவு எங்கு காணப்படுகிறது?
விடை: துருவப்பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.
நீர் ஊடுருவல் (Infiltration)
124. புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர்ப் புகுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நீர் ஊடுருவல் என்று அழைக்கப்படுகிறது.
125. எதன் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது?
விடை: நீர் ஊடுருவல் மூலம்
126. மழைநீர் எங்கிருந்து எங்கு சென்றடைகிறது?
விடை: நிலத்திலிருந்து புவிக்கு அடியில் உள்ள பாறைகளின் அடுக்குகளைச் சென்றடைகிறது.
127. புவியின் மேற்பரப்பை நீர் எவ்வாறு வந்தடைகிறது?
விடை: நீரானது நீரூற்று மற்றும் மலைகளின் தாழ்வான பகுதிகளின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிறது.
128. நிலத்தடி நீர் என்றால் என்ன?
விடை: குறிப்பிட்ட அளவு நீர் நிலத்தினடியில் தங்குவதால் அதனை நிலத்தடி நீர் என்கிறோம்.
129. ஊடுருவலின் விகிதத்தை தீர்மானிக்கும் காரணிகள் எவை?
விடை : மண்ணின் இயற்பியல் தன்மை, மேற்பரப்பில் காணப்படும் தாவரங்கள், மண்ணின் ஈரத்தன்மை, வெப்ப நிலை மற்றும் மழைப்பொழிவின் அளவு ஆகியவைத் தீர்மானிக்கின்றன.
130. நீர் உட்கசிதலோடு தொடர்புடையது எது?
விடை: நீர் ஊடுருவல்
நீர் உட்கசிதல் (Percolation)
131. நீர் உட்கசிவு என்றால் என்ன ?
விடை : மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும்.
132. நீரின் ஊடுருவல் எங்கு நடைபெறுகிறது?
விடை: மண்ணின் மேற்பரப்பின் அருகில் நடைபெறுகிறது.
133. நீரின் ஊடுருவல் மூலம் மண்ணின் மேற்பரப்பில் உள்ள நீர் எங்கு ஊடுருவிச் செல்கிறது?
விடை: தாவரங்களின் வேர் பகுதிக்கு ஊடுருவிச் செல்கிறது.
134. நீர் உட்கசிவு மூலம் நிலத்தடி நீர் எப்படி உருவாகிறது?
விடை: ஊடுருவிய நீர் மண்ணின் அடுக்கு வழியாக பாறை இடுக்குகளுக்குச் சென்று நிலத்தடி நீராகிறது.
135. செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாத பகுதிக்குச் செல்லும் நீரோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நீர் உட்கசிதல்
நீர் வழிந்தோடல் (Run Off)
136. நீர் வழிந்தோடல் என்றால் என்ன?
விடை : ஓடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும்.
137. நீர் வழிந்தோடலால் எவை புதுப்பிக்கப்படுகின்றன?
விடை: மேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன.
138. நீர் நிலத்தடியில் ஊடுருவி நீர்கொள் பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ள உதவுவது எது?
விடை: நீர் ஊடுருவல்
139. புவி மேற்பரப்பு நீர் எங்கு செல்கிறது?
விடை: ஆறுகள், ஓடைகள், மற்றும் நீர் பிடிப்புகளுக்குச் செல்கிறது.
140. நீர்ச்சுழற்சிக்கு முக்கியக் கூறாகவும் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு முக்கிய ஆதாரமாகவும் விளங்குபவை எவை?
விடை: மழைப் பொழிவு, பனி உருகுதல், நீர் பாசனம் மற்றும் பிற மூலங்களிலிருந்து உறிஞ்சப்படாத நீர், நீர்ச்சுழற்சிக்கு முக்கியக் கூறாகவும் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.
141. நீர் வழிந்தோடல் மண்ணரிப்பு மூலம் எந்த நிலத் தோற்றங்களை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது?
விடை: பெரிய பள்ளத்தாக்குகள், மலை இடுக்குகள் மற்றும் அதனோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
142. நீர் வழிந்தோடலின் அளவானது எவைகளை சார்ந்துள்ளது?
விடை : மழைவீழ்ச்சியின் அளவு, மண்ணின் நீர் புகும் தன்மை, தாவரமூட்டம் மற்றும் நிலச் சரிவை சார்ந்துள்ளது.
143. மழை நீரில் எத்தனை சதவீதம் கடல் மற்றும் பேராழிகளில் கலக்கிறது?
விடை: 35 %
144. மழைநீரில் எத்தனை சதவீதம் மண்ணில் உறிஞ்சப்படுகிறது?
விடை: 65 %
நீர் வழிந்தோடலின் வகைகள்
145. நீர் வழிந்தோடல் எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
விடை: மழைப் பொழிவின் கால இடைவெளி மற்றும் நீர் வழிந்தோடல் உருவாக்கத்தின் அடிப்படையில், நீர் வழிந்தோடல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேல்மட்ட மழை நீர் வழிந்தோடல் (Surface runoff)
146. மழைப் பொழிந்ததவுடன் மழை நீரின் ஒரு பகுதி எதனோடு கலந்து விடுகிறது?
விடை: நீரோடையோடு கலந்து விடுகிறது.
147. மழைப்பொழிவின் ஒரு பகுதி நீரோடையோடு எப்போது கலக்கிறது?
விடை : மழைப்பொழிவு அதிகமாவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும்பொழுது நீரோடையோடு கலந்து விடுகிறது.
148. நிலநீர் ஓட்டம் எவ்வாறு அறியப்படுகிறது?
விடை: அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைவதால் அது நிலச்சரிவின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது.
149. நிலநீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.
அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் (Sub Surface runoff)
150. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் என்றால் என்ன?
விடை : நீரானது அடிமண் அடுக்கினுள் நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் பக்கவாட்டு திசையில் நகர்ந்து ஓடைகள், ஆறுகள் மற்றும் கடலுடன் கலப்பது
151. அடிப்பரப்பு நீர் வழிந்தோடலின் வேறு பெயர்?
விடை: இடைநீர் ஓட்டம்
அடி மட்ட நீர் ஓட்டம் (Base flow)
152. அடிமட்ட நீர் ஓட்டம் என்றால் என்ன?
விடை: செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவது அடிமட்ட நீர் ஓட்டமாகும்.
153. அடி மட்ட நீர் ஓட்டம் எங்கு காணப்படும்?
விடை : நிலத்தடி நீர் மட்டத்த விட நீர் பாதையின் உயரம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே அடி மட்ட நீர் ஓட்டம் காணப்படும்.
154. வறண்ட மழையற்ற காலங்களில் நிலத்தடி நீரால் நீரூட்டப்படுவது எது?
விடை: அடி மட்ட நீர் ஓட்டம்
BOX INFORMATION
155. ஆவியாதல் விகிதம் எப்பொழுது அதிகரிக்கும்?
விடை:
காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது
வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது
ஈரப்பதம் குறையும் பொழுது
பூமியில் நீர் நிலைகள் அதிகரிக்கும் பொழுது.
156. நீர் சுருங்குதல் என்றால் என்ன?
விடை : நீராவி காற்றில் செறிந்து பூரித நிலையை அடைவது ஆகும்.
157. குளிர்ந்த காற்றை விட அதிக நீராவியைத் தக்க வைத்துக் கொள்ளும் காற்று எது?
விடை: வெப்பக்காற்று
158. வெப்ப நிலை குறையும் பொழுது காற்று எந்த நிலையை அடைகிறது?
விடை: பூரித நிலையை அடைகிறது.
159. ஆவியாதலை அளக்க உதவும் அலகு ?
விடை: அங்குலம் அல்லது செ.மீ
160. மழைநீர் ஊடுருவலை அளக்க உதவும் அலகு?
விடை : அங்குலம் அல்லது செ.மீ/மணி
161. மழை பொழிவை அளக்க உதவும் அலகு ?
விடை: அங்குலம்/ மி.மி / செ.மீ
162.புவி மேற்பரப்பில் நீர் ஓடலின் கன அளவை அளக்க உதவும் அலகு ?
விடை: கன அடி / விநாடி
163.மழைவழிவின் கனஅளவை அளக்க உதவும் அலகு ?
விடை: கன அடி
164. மழைநீரின் கொள்ளளவு அளக்க உதவும் அலகு ?
விடை: கன அடி/ ஏக்கர் அடி
சரியான விடையைத் தேர்வு செய்க
1. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு என்று பெயர்.
அ) ஆற்றின் சுழற்சி
ஆ) நீரின் சுழற்சி
இ) பாறைச் சுழற்சி
ஈ) வாழ்க்கைச் சுழற்சி
விடை: ஆ) நீரின் சுழற்சி
2. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம்
அ) 71%
ஆ) 97%
இ) 2.8%
ஈ) 0.6%
விடை: இ) 2.8%
3. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு ______ என்று பெயர்.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) பதங்கமாதல்
ஈ) மழை
விடை: அ) ஆவி சுருங்குதல்
4. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு _______
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஈ) நீர் வழிந்தோடல்
விடை: ஈ) நீர் வழிந்தோடல்
Book Page Number: 130
5. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு ____ என்று அழைக்கின்றனர்.
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீராவி சுருங்குதல்
ஈ) பொழிவு
விடை: அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
6. குடிப்பதற்கு உகந்த நீரை _____ என்று அமைப்பர்.
அ) நிலத்தடி நீர்
ஆ) மேற்பரப்பு நீர்
இ) நன்னீர்
ஈ) ஆர்ட்டீசியன் நீர்
விடை: இ) நன்னீர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு ________ என்று அழைக்கப்படுகிறது.
அ) காற்று
ஆ) மேகம்
இ) ஈரப்பதம்
ஈ) நீர்
விடை: இ) ஈரப்பதம்
2. நீர்ச் சுழற்சியில் _______ நிலைகள் உள்ளன.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) இரண்டு
விடை: ஆ) மூன்று
3. வளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும்_______ என்று பெயர்.
அ) மழைப் பொழிவு
ஆ) பனிப்பொழிவு
இ) ஆலங்கட்டி மழை
ஈ) மழை
விடை: அ) மழைப் பொழிவு
4. மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர்______.
அ) பனிப்பொழிவு
ஆ) ஆலங்கட்டி மழை
இ) மழை
ஈ) தூறல்
விடை: ஈ) தூறல்
5. மூடுபனி _________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
அ) மேகங்கள்
ஆ) அடர் மூடுபனி
இ) பனித்துளி
ஈ) உறைபனி
விடை: ஆ) அடர் மூடுபனி
III. பொருத்துக
1. தாவரங்கள். – a. மேகங்கள்
2. நீர் சுருங்குதல் – b. கல்மழை
3. பனித்துளி மற்றும் மழைத்துளி – c. புவியின் மேற்பரப்பு
4. நீர் ஊடுருவுதல் – d. நீர் உட்கசிந்து வெளியிடுதல்.
1 2 3 4
அ) a c b d
ஆ) d a b c
இ) d b c a
ஈ) a b c d
விடை: ஆ) d a b c
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:
1. நீராவியாதல் என்பது
(i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்
(ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்
(iii) நீர் 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால்
0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
(iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.
அ) i, iv சரி
ஆ) ii சரி
இ) ii, iii சரி
ஈ) அனைத்தும் சரி
V. சரியா, தவறா?
212 °F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32 °F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
மூடிபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.
அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
VI. குறுகிய விடையளி
நீர் கொள் பரப்பு பற்றி குறிப்பு வரைக.
நீர் சுழற்சி – வரையறு.
பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
“மேல் மட்ட நீர் வழிந்தோடல்” குறிப்பு வரைக.
VII. காரணம் கூறுக.
நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாக உள்ளது.
புவியில் நன்னீர் குறைவாக உள்ளது.
துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.
VIII. பத்தியளவில் விடையளிக்கவும்:
நீர்ச் சுழற்சி யின்பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி.
தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும் ஆவியாதலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறு.
மழைபொழிவின் பல வகைகளை விவரி.
நீர் வழிந்தோடல் மற்றும் அதன் வகைகளை விவரி.
IX. செயல்பாடு:
படத்தில் உள்ள விடுபட்ட நீரின் சுழற்சிகளைக் கண்டுபிடித்து அதற்குரிய இடத்தில் எழுதவும்.