SCIENCE TEST QUESTIONS
1. சரியான விடையை தேர்ந்தெடு.
மனிதற்கு இரத்த அழுத்தமானது மூளையை விட காலில் அதிகம் ஏனெனில்,
A) மூளைக்கும் இருதயத்திற்கும் உள்ள தொலைவை விட காலிற்கும் இருதயத்திற்கும் உள்ள தொலைவு அதிகம்.
B) மூளையை நோக்க காலிற்கும் இருதயத்திற்கும் இடையே உள்ள தொலைவு குறைவு.
C)காலை விட மூளைக்கும் இருதயத்திற்கும் இடையே உள்ள தொலைவு அதிகம்.
D) தொலைவை சார்ந்ததல்ல/உயரத்தை சார்ந்ததல்ல.
2. எந்த வகை மரபணு பெற்றோர் 3-உயரமான மற்றும் 3- குட்டையான வாரிசுகளை உருவாக்க முடியும்?
A) Tt மற்றும் tt
B) TT மற்றும் Tt
C) Tt மற்றும் Tt
D) tt மற்றும் tt
3. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
I. உயிரினங்கள் வளரும் போது செல் பெருகும் முறை மைட்டாசிஸ்.
II. பாலினப் பெருக்க முறையில் மைட்டாசிஸ் மற்றும் மயோசிஸ் பகுப்புகள் உண்டு.
III. பாலிலா பெருக்க முறையில் மையோசிஸ் பகுப்பு உண்டு.
IV. விலங்குகளில் பாலிலா இனப்பெருக்கம் காணப்படுகிறது.
A) I மற்றும் II
B) III மற்றும் IV
C) II மற்றும் III
D) I மற்றும் IV
4. மரபியலில் சோதனைக்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆய்வக உயிரிகள்
A) கொசு, வீட்டு ஈ மற்றும் வீட்டு எலி
B) பழப்பூச்சி, எ, கோலிபாக்டீரியம் மற்றும் வெள்ளை எலி
C) முயல், டாலி ஆடு மற்றும் வைரஸ்கள்
D) வைரஸ்கள், ஈஸ்ட்டுகள் மற்றும் வீட்டு ஈ
5. மண்புழுவைக் கொண்டு தயாரிக்கப்படும் மண்புழு உரம்
A) தாவரக் கழிவுகள் மட்குவதைத் தடை செய்கிறது
B) தாவரக் கழிவுகள் மட்குவதை வேகப்படுத்துகிறது
C) நிலத்தில் நீரைத் தேக்கி வைக்க உதவுகிறது
D) நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
6. பின்வரும் ஜோடிகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல?
A) மஞ்சள் மற்றும் வேம்பு
B) மாலத்தியான் மற்றும் DDT
C) வேம்பு மற்றும் விளக்கெண்ணெய்
D) விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள்
7. உன் வீட்டு நீர் தேக்கங்களில் கொசுக்கனை அழிக்க தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி எது?
A) BHC
B) DEET
C) TNT
D) TNP
8. சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
A) மனிதன்
B) பறவைகள்
C) மண்புழு
D) கரப்பான் பூச்சி
9. பட்டியல் lஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் – I பட்டியல் – II
a) காலரா – 1. பூஞ்சை
b) ஆப்பிரிக்க தூக்க வியாதி – 2. வைரஸ்
c) மார்புச் சளி – 3. பாக்டீரியா
d) பொடுகு – 4. புரோட்டோசோவா
குறியீடுகள்:
A) 3 4 2 1
B) 4 2 1 3
C) 2 1 3 4
D) 1 3 4 2
10. மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
A) பிட்யூட்டரி சுரப்பி
B) தைராய்டு சுரப்பி
C) கணைய சுரப்பி
D) அட்ரீனல் சுரப்பி
11. கண் லென்ஸின் ஒளிபுகாத் தன்மை ………. என்று அழைக்கப்படுகிறது.
A) ரெடினோபதி
B) கண்புரை
C) அஸ்டிக் மாட்டிசம்
D) பிரஸ்பியோபியா
12. தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை?
A) சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்ததூள், வைட்டமின்
B) சர்க்கரை, புரதம், மகரந்ததூள், வைட்டமின்
C) சர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
D) சர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, அமினோ அமிலம்
13. மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
A) உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
B) கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
C) குளோனிங் முறை
D) கேரியோடைப்பிங் முறை
14.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் (நீர் மற்றும் நில வாழிட) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள்:
A) I சரி ஆனால் II தவறு
B) I தவறு ஆனால் சரி
C) இரண்டுமே சரி
D) இரண்டுமே தவறு
15. சுவாசத் தளப்பொருட்கள் என்பன
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III.புரதம்
IV.வைட்டமின்கள்
இவற்றுள்
A) I, II, மற்றும் IV
B) I, II மற்றும் III
C) I, III மற்றும் IV
D) I, II, III மற்றும் IV
16.மனித உடலில் எதை பெர்சனாலிட்டி (ஆளுகை நன்மை) ஹார்மோன் என்று அழைக்கிறோம்?
A) வளர்ச்சி ஹார்மோன்
B) ஆக்ஸிடாசின்
C) வாஸோபிரிசின்
D) தைராக்சின்
17. மனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோஸின் அளவு
A) 80-120 mg/100 ml
B) 70-110 mg/100 ml
C) 60-110 mg/100 ml
D) 50-110 mg/100 ml
18. கிளைகோஜன் துகள்களை சிதைவுறச் செய்து கரை தன்மை கொண்ட குளுக்கோசினை இரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவினை அதிப்படுத்துவதற்கு காரணமாக அமைவது
A) இன்சுலின்
B) குளுகாகான்
C) தைராக்சின்
D) ஆல்டோஸ்டீரோன்
19. பெண் பாலின உறுப்பு வளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை பாலினப் பண்புகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைவது
A) ஆல்டோஸ்டீரோன்
B) எஸ்ட்ராடையோல்
C) புரோஜெஸ்ட்டீரோன்
D) ரிலாக்ஸின்
20. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் – I பட்டியல் – II
a) அயோடின் – 1. ட்வார்ஃபிசம்
b) இரும்பு – 2. எலும்பு தேய்வு
c) துத்தநாகம் (ஜிங்க்) – 3. ரத்தச்சோகை
d) கால்சியம் – 4. காய்டர்
குறியீடுகள்:
A) 4 3 1 2
B) 1 2 3 4
C) 2 3 4 1
D) 4 2 1 3
21. செல்வழி நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான செல்கள்
A) லிம்போசைட்
B) B லிம்போசைட்
C) T லிம்போசைட்
D) இரத்தச் சிவப்பணுக்கள்
22. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. அட்ரினலின் ஒரு அவசர ஊக்கு நீர்
II. வேசோபிரிசின் ஒரு எதிர் கழிவு நீர் நீக்க ஊக்கு நீர்
இவற்றுள்
A) I மற்றும் II இரண்டுமே தவறானவை
B) I மற்றும் II இரண்டுமே சரியானவை
C) I சரியானது மற்றும் II தவறானது
D) I தவறானது மற்றும் II சரியானது
23.பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்ப்பொருள் மனிதருக்கு நோய்த் தடுப்பூசியாகப் போடப்படும். இது எவ்வகை தடுப்பு முறை?
A) செயற்கையான, செயல்மிகு நோய் தடுப்பு முறை
B) செயற்கையான, மந்தமான நோய் தடுப்பு முறை
C) இயற்கையான செயல்மிகு நோய் தடுப்பு முறை
D) இயற்கையான மந்தமான நோய் தடுப்பு முறை
24. விலங்குகளை வகைப்படுத்தும் முறையில் சரியான படிநிலை அமைப்பை எழுதுக :
A) வகுப்பு – இனம் – சிறப்பினம் – வரிசை
B) வரிசை – சிறப்பினம் – வகுப்பு – இனம்
C) வகுப்பு – வரிசை – இனம் – சிறப்பினம்
D) சிறப்பினம் – வகுப்பு – இனம் – வரிசை
25. மனித இதயத்தின் வலது ஏட்ரிய அறை ………… இரத்த நாளம் மூலம் இரத்தத்தை பெறுகின்றது.
A) நுரையீரல் சிரை
B) பெருஞ்சிரைகள்
C) பெருந்தமனி
D) நுரையீரல் முக்கிய தமனி
26. மனித இரத்த பிளேட்லெட்டுகளின் வாழ்நாள் காலம் ……………. நாட்கள்/வாரங்கள்.
A) 5-9 நாட்கள்
B) 2-3 வாரங்கள்
C) 5-9 வாரங்கள்
D) 2-3 நாட்கள்
27. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
a) சுவாசித்தலின் போது ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ளப்பட்டு, கார்பன்டைஆக்ஸைடு வெளியிடப்படுகிறது.
b) அனைத்து உயிரிகளும் காற்று சுவாசிகள்.
இவற்றுள்,
A) (a) மட்டும் சரி
B) (b) மட்டும் சரி
C) இரண்டுமே சரி
D) இரண்டுமே தவறு
28. கொசுக்களின் லார்வாக்களைக் கட்டுபடுத்த பயன்படுத்தப்படும் உயிரிகள் …………
A) கம்பூசியா மற்றும் லெபிஸ்டர் மீன்கள்
B) மண்புழு
C) நத்தைகள்
D) டிலேபியா மீன்
29. மரபுப் பொறியியல் செயல்நுட்பம் பின்வருவனவற்றை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
I. ஹார்மோன்கள்
II. நொதிகள்
III. இன்ட்டர்ஃபெரான்
IV. மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்
A) I மட்டும் II சரி
B) II மற்றும் III சரி
C) I, II மற்றும் IV சரி
D) I, II, III எல்லாம் IV சரி
30. உயிரி-வேதியியல் முறையில் எந்த என்சைம் பிரித்தெடுக்கப்பட்டது?
A) மேக்ரோபைஸ்
B) மைக்ரோபைஸ்
C) இன்சுலின்
D) புரதம்
31. கீழ்க்கண்டவற்றுள் எது/ எவை சரியாக பொருந்தி யுள்ளது?
i) ஆர்டிரைட்டிஸ் – தமனியின் வீக்கம்
ii) ஆக்லுஷன் – இரத்தக் குழல்கள் அடைபடுதல்
iii) த்ராம்பெக்டமி – இரத்தக் குழாய் அடைப்பை நீக்குதல்
A) மூன்று பொருத்தங்களும் சரியானவை
B) (i) மட்டும் சரியானது
C) (ii) மட்டும் சரியானது
D) (iii) மட்டும் சரியானது
32. கீழ்க்காணும் கூற்றுகளின் எந்த விலங்குகள் உயிர் தகவலியலில் சேராதவை?
A) இவைகள் வேதியியல் மூலக்கூறின் அடையாளங்கள்
B) பறவைகளின் குரல் தொனியால் போட்டி போடுபவை
C) ஒரே இனங்களின் கூட்டு குடும்பமாக வாழும் இயல்புகளை கூறுதல்
D) பூச்சியினங்களின் பல்வேறு சிற்றினங்களின் உருவாக்கப்படும் பெராமோன்கள்
33. ஏடிஸ் இனக்கொசு பரப்பும் உயிருக்கு ஆபத்தில்லாத வைரஸ் நோய் எது?
A) சிக்கன்குனியா
B) டெங்கு காய்ச்சல்
C) பைலேரியாசிஸ்
D) மலேரியா
34. எ.எஸ்.ஹெச்.எ (ஆஷா) எனப்படுபவர் யார்-?
A) தடுப்பு மருந்து தருதல், பாதுகாப்பான குழந்தைப் பேறு, குழந்தை பாதுகாப்பு இவற்றிற்குப் பயிற்றுவிக்கப்பட்ட பெண் உடல் நலப் பணியாளர்கள்
B) தடுப்பு மருந்து தருதல், பாதுகாப்பான குழந்தைப் பேறு, குழந்தை பாதுகாப்பு இவற்றிற்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஆண் உடல் நலப் பணியாளர்கள்
C) தடுப்பு மருந்து தருதல் பாதுகாப்பான குழந்தைப் பேறு, குழந்தை பாதுகாப்பு இவற்றிற்குப் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்கள்
D) தடுப்பு மருந்து தருதல், பாதுகாப்பான குழந்தைப் பேறு, குழந்தை பாதுகாப்பு இவற்றிற்குப் பயிற்றுவிக்கப்பட்ட பெண் தாதிகள்
35. DNA நகலாக்கம் கீழ்க்கண்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது
I. மீள்சேர்க்கை மரபெடுப்பி DNA வை பாக்டீரியா ஊட்டுயிருடன் புகுத்துதல்.
II. வழங்கி DNA வும் நீள் மரபெடுப்பி DNAவும் கலக்கப்படுகின்றன.
III.நகலாக்கம் நடைபெறுகிறது.
IV. டிரான்ஸ் பெக்ஷன் நடைபெறுகிறது.
சரியான வரிசை
A) I, II, III மற்றும் IV
B) II, I, III மற்றும் IV
C) II, I, IV மற்றும் III
D) IV, I, II மற்றும் III
36. ‘யுவுலா’ என்பது மனித உடலின் எந்த பகுதியில் உள்ளது?
A) மூக்கு
B) காது
C) வாய்
D) கழுத்து
37. டெரடாஜென் என்பதை மியூட்டாஜெனிலிருந்து வேறுபடுத்திக் காட்டு.
A) டெரடாஜென் என்பது கருவிலிருக்கும் உயிருக்கு குறைபாட்டைத் தோற்றுவிக்கும் இரசாயனப் பொருள் மியூட்டாஜென் மரபுப் பொருளில் மாற்றத்தைத் தோற்றுவிக்கும்.
B) டெரடாஜென் புற்றுநோயைத் தூண்டும் மியூட்டா ஜென் திடீர்மாற்றத்தைத் தோற்றுவிக்கும்.
C) டெரடாஜென் இதயச் செயலிழப்பைத் தூண்டும் மியூட்டாஜென் புற்றுநோயைத் தோற்றுவிக்கும்.
D) டெரடாஜென் வாலிபர்களில் குறைபாட்டைத் தோற்றுவிக்கும் மியூட்டாஜென் குழந்தைகளில் குறைபாட்டைத் தோற்றுவிக்கும்.
38. பாலூட்டியின் சிறுநீரகத்தில் உள்ள பெர்டினியின் தூண்களின் நீளமாக்குதல்
A) மெடுல்லாவிலிருந்து கார்டெஸ்
B) கார்டெஸ்ஸிலிருந்து மெடுல்லா
C) மெடுல்லாவிலிருந்து பெல்லிஸ்
D) பெல்விஸிலிருந்து யூரிட்டர்
39. கீழ்க்காண்பவற்றில் சரியானவற்றை தெரிவு செய்க.
I. இரத்த நாளங்களின் இரத்த ஓட்டத்தின் பக்கவாட்டு சுற்றின் தடைகள் இரத்தத்தின் பிசுபிசுப்பினை நிர்ணயிக்கின்றன.
II.இரத்த அழுத்தத்தினை ஓட்டும் நிலை நிர்ணயிக்கவில்லை
A) I மற்றும் II கூற்று சரி
B) I மற்றும் II கூற்று தவறு
C) I கூற்று சரி II தவறு
D) I கூற்று தவறு II சரி
40. ஹீமோகுளோபின் சுவாச நிறமி என்றழைக்கப்படுவதற்கான காரணம் கூற்று :
I. இது O2 மற்றும் CO2 பரிமாற்றம் செய்கிறது.
II. RBC-க்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
கீழுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
A) I மட்டும்
B) II மட்டும்
C) I மற்றும் II
D) I மற்றும் II எதுவும் இல்லை
41. பெருமூளையின் இரு அரைவட்ட கோளங்களையும் கீழ்புறத்தில் இணைப்பது
A) கார்பஸ் கல்லோசம்
B) மண்டையோட்டு நரம்புகள்
C) கார்போரா குவாட்ரி ஜெமினா
D) பான்ஸ்
42. காற்றில்லா சுவாசித்தலின் போது குளுக்கோசின் சுவாச ஈவு முடிவிலியாக உள்ளது. காரணம் கூறுக.
A) CO2 வெளியிடப்படுகிறது. ஆனால் O₂ பயன்படுத்தப் படுவதில்லை
B) CO2 மற்றும் O₂ பயன்படுத்தப்படுகிறது
C) CO2 மற்றும் O₂ வெளியேற்றப்படுகிறது.
D) CO₂ மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
43. எந்த ஹார்மோன் போதுமான அளவு சுரக்காவிடில் டையாபெடீஸ் இன்சிபிடஸ் எனும் நீரிழிவு நோய் தோன்றும்?
A) ADH
B) இன்சுலின்
C) FSH
D) ACTH
44. யூகேரியோட்ஸ் செல்லில் காணப்படும் ரிபோசோம் எவை?
A) 70 S
B) 80 S
C) 60 S
D) (A) மற்றும் (B) இரண்டும்
45. பெரிபெரி, ரிக்கெட்ஸ் மற்றும் ஸ்கர்வி ……….. வைட்டமின் குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள்
A) ADC
B) BDC
C) BCD
D) DBA
46.கூற்று (A): ப்ரமோன்கள் பூச்சிகளால் சுரக்கப்படும் இரசாயன தகவல் பறிமாறிகள்.
காரணம் (R): இவை சில இனங்களில் நடத்தை வினைகள் அல்லது ஒத்த இன உயிரினங்களிடையே வளர்ச்சி நிகழ்வுகளைத் தூண்டும்.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை, (R), (A) வின் சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை (R), (A) வின் சரியான விளக்கம் அல்ல.
C) (A) சரியானது (R) தவறானது.
D) (A) தவறானது (R) சரியானது.
47. மாவுப்பொருள் வளர்சிதை மாற்றத்தில் இன்சுலினின் தாக்கம் பின்வருமாறு :
I.மாவுப்பொருள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
II. இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும்.
III. திசுக்களில் கிளைகோஜென் சேமிப்பை அதிகரிக்கும்.
A) எல்லா கருத்துகளும் சரியானவை
B) எல்லா கருத்துகளும் தவறானவை
C) I மற்றும் II ஆம் கருத்து சரியானவை
D) II மற்றும் III ஆம் கருத்து சரியானவை
48. கூற்று (A) : மானோகுளோனல் எதிர்ப்புப் பொருட்கள் என்பவை குளோன் செல்களால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு பொருட்கள் ஆகும்.
காரணம் (R) : இவை வைரஸ் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
A) (A) தவறு (R) சரி
B) (A) மற்றும் (R) தவறு
C) (A) மற்றும் (R) சரி
D) (A) சரி (R) தவறு
49. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்றின் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு:
1. காச நோய்
2. தொழு நோய்
3. காலரா
4. போலியோ
A) 4
B) 2
C) 1
D) 3
50. பின்வருவனவற்றுள் எது சரியான வாக்கியம்?
ATP மூலக்கூறில் அடங்கியுள்ளவை
A) அடினைன், ரிபோஸ் சர்க்கரை மற்றும் இரண்டு பாஸ்பேட் தொகுப்பு
B) அடினைன், டிஆக்ஸிரிபோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் தொகுப்பு
C) தையமின், ரிபோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் தொகுப்பு
D) அடினைன், ரிபோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் தொகுப்பு