TAMIL TEST QUESTIONS – 8
1.‘சின்னூல்’ என்ற பெயருடைய இலக்கண நூல்
(A) வீர சோழியம்
(B) நேமிநாதம்
(C) வச்சணந்திமாலை
(D) தண்டியலங்காரம்
(E) விடை தெரியவில்லை
2.‘புதுநெறிகண்ட புலவர்’ என்று யாரை யார் போற்றினார்?
(A) வள்ளலார் பாரதியார்
(B) வள்ளலார் – பாரதிதாசன்
(C) பாரதியார் – வள்ளலார்
(D) பாரதிதாசன் – வள்ளலார்
(E) விடை தெரியவில்லை
3.‘காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை பின்வருவனவற்றுள் தேர்ந்தெடு.
(A) வினையெச்சம்
(B) பண்புத்தொகை
(C) வினைத்தொகை
(D) எதிர்மறை பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
4.‘வெரீஇ’ என்பது _____ அளபெடை
(A) இன்னிசை
(B) செய்யுளிசை
(C)சொல்லிசை
(D) ஒற்று
(E) விடை தெரியவில்லை
5.சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமை
(A) விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமையா?
(B) தனித்து உண்ணாமை விருந்தோம்பல் பண்பின் அடிப்படையா?
(C) விருந்தோம்பல் என்றால் என்ன?
(D) தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை யாது?
(E) விடை தெரியவில்லை
6.மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தோர் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி. சேதுப்பிள்ளை, கலைஞர் மு. கருணாநிதி முதலியோர் ஆவர்.
விடைக்கேற்ற வினா அமைக்க
(A) மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்த நால்வர் யாவர்?
(B) பேச்சின் முக்கூறுகள் யாவை?
(C) பேச்சின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
(D) மேடைப்பேச்சின் கூறு யாது ?
(E) விடை தெரியவில்லை
7.எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி?
‘ஐயோ! முள் குத்தி விட்டதே!’
(A) செய்தித் தொடர்
(B) வினாத் தொடர்
(C) உணர்ச்சித் தொடர்
(D) கட்டளைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
8.கீழ்வருவனவற்றுள் ‘செய்வினை வாக்கியம்’ எது?
(A) உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது
(B) பாரதிதாசன் ‘பாண்டியன் பரிசைப்’ பாடினார்
(C) சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்
(D) பாண்டியன் பரிசு பாரதிதாசனால் பாடப்பட்டது
(E) விடை தெரியவில்லை
9.இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக.
(A) இன்மையின், இன்னாதது
(B) இன்னாதது, இன்மையின்
(C) இன்மையின், இன்மையே
(D) இன்னாதது, யாதெனின்
(E) விடை தெரியவில்லை
10.சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் …………. இயைபு அமைந்த சொற்கள் யாது?
(A) சகமக்கள், இனிதினிதாய்
(B) உணர்வதற்கும், எண்ணமெல்லாம்
(C) ஒன்றென்ப, எழுந்த
(D) சகமக்கள், எண்ணமெல்லாம்
(E) விடை தெரியவில்லை
11.தீயொழுக்கம் கானல்நீர் போன்றது
பொருத்தமான பொருள் யாது?
(A) மகிழ்ச்சியைத் தருவது
(B) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது
(C) துன்பத்தைக் கொடுப்பது
(D) இன்பம், துன்பம் உடையது
(E) விடை தெரியவில்லை
12.உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக.
‘அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது’
(A) தெளிவற்ற பேச்சு
(B) குழப்பமான பேச்சு
(C) தெளிவான, சீரான பேச்சு
(D) கலக்கம் நிறைந்த பேச்சு
(E) விடை தெரியவில்லை
13.பொருந்தாச் சொல்லைத் தேர்க.
(A) ஓஒதல்
(B) படாஅ
(C) விலக்க்கு
(D) கொடுப்பதூஉம்
(E) விடை தெரியவில்லை
14.மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் இப்பழமொழியின் பொருள்
(A) தண்ணீர் கொண்டு கல்லைக் கரைக்கலாம்
(B) தண்ணீர் மெதுவாகப் பாயும்
(C) கல் எப்போதும் கரையும் தன்மை கொண்டது
(D) தொடர்ந்து முயன்றால் தடைகளைத் தாண்டலாம்
(E) விடை தெரியவில்லை
15.விழுந்தானைத் தூக்கிவிட்டேன் இத்தொடரில் ‘விழுந்தானை’ என்பது
(A) தொழிற்பெயர்
(B) பண்புப்பெயர்
(C) வினையாலணையும் பெயர்
(D) ஆகுபெயர்
(E) விடை தெரியவில்லை
16.‘வளர்’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்க.
(A) வளர்த்தல்
(B) வளர்ந்து
(C)வளர்த்தார்
(D) வளர
(E) விடை தெரியவில்லை
17.‘வந்தனன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை தேர்ந்தெடு.
(A) வந்த
(B) வந்தான்
(C) வா
(D) வருவான்
(E) விடை தெரியவில்லை
18.‘பரப்புமின்’ இச்சொல்லின் வினையடியைத் தேர்ந்தெடு.
(A) பரப்பினான்
(B) பரப்பு
(C) பர
(D) பரப்பினர்
(E) விடை தெரியவில்லை
19.‘தென்னன்’ – என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
(A) பொருட் பெயர்ச்சொல்
(B) இடப் பெயர்ச்சொல்
(C) காலப் பெயர்ச்சொல்
(D) சினைப் பெயர்ச்சொல்
(E) விடை தெரியவில்லை
20.விடியலில் துயில் எழுந்தேன் – இதில் விடியல் என்பது
(A) இடுகுறிப்பெயர்
(B) காரண சிறப்புப்பெயர்
(C) காலப்பெயர்
(D) சினைப்பெயர்
(E) விடை தெரியவில்லை
21.இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் ஆன இடம்
(A) திருவில்லிபுத்தூர்
(B) திருமழிசை
(C) திருமலை
(D) திருவரங்கம்
(E) விடை தெரியவில்லை
22.‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என்று பாடியவர்
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
23.தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடியவர்
(A) நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) பொய்கையாழ்வார்
(D) குலசேகர ஆழ்வார்
(E) விடை தெரியவில்லை
24.நாட்டுப்புற இலக்கியக் கூறுகளை வாய்மொழி, பண்ணத்தி, பிசி, முதுசொல், அங்கதம் என்று சுட்டிக்காட்டிய இலக்கண நூல்
(A) தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) தொன்னூல் விளக்கம்
(D) இலக்கண விளக்கம்
(E) விடை தெரியவில்லை
25.சிவனுக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடையாகப் பாடிய புலவர்
(A) அழகிய சொக்கநாதப்பிள்ளை
(B) காளமேகப் புலவர்
(C) படிக்காசுப் புலவர்
(D) ஒட்டக்கூத்தர்
(E) விடை தெரியவில்லை
26.தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்
(A) இரகசிய வழி
(B) நூல்தொகை விளக்கம்
(C) மனோன்மணீயம்
(D) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
(E) விடை தெரியவில்லை
27.‘இது பொறுப்பதில்லை – தம்பி எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்’ என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் கூறுபவன் யார்?
(A) அர்ச்சுனன்
(B)வீமன்
(C) நகுலன்
(D) துச்சாதனன்
(E) விடை தெரியவில்லை
28.சரியான இணையைத் தேர்க.
(A) நவ்வி – மான்
(B) புனல் – மேகம்
(C) முகில் – சொரிதல்
(D) உகுதல் – நீர்
(E) விடை தெரியவில்லை
29.‘வாயில் இலக்கியம்’ என்றழைக்கப்படும் நூல் வகை
(A) உலா
(B) தூது
(C) பள்ளு
(D) குறவஞ்சி
(E) விடை தெரியவில்லை
30.நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்று குறிப்பிடப்படும் நாடு
(A) சேர நாடு
(B) சோழ நாடு
(C) பாண்டிய நாடு
(D) பல்லவ நாடு
(E) விடை தெரியவில்லை
31.குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் எத்தொகுப்பில் உள்ளது?
(A) திருவியற்பா
(B) பெரிய திருமொழி
(C) முதலாயிரம்
(D) நான்காயிரம்
(E) விடை தெரியவில்லை
32.அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயருடையவர்
(A) சுந்தரர்
(B) சேக்கிழார்
(C) மாணிக்கவாசகர்
(D) திருநாவுக்கரசர்
(E) விடை தெரியவில்லை
33.‘ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்’ – இதில் ‘தீன்’ என்பதின் பொருள் என்ன?
(A) நகரம்
(B) சேனாவீரர்கள்
(C) மார்க்கம்
(D) கதிரவன்
(E) விடை தெரியவில்லை
34.மதுரைக் காண்டம். கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் இடம் பெற்றுள்ள நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) கம்பராமாயணம்
(C) திருவிளையாடற்புராணம்
(D) வேதாரண்யப்புராணம்
(E) விடை தெரியவில்லை
35.கோவலன் ‘தன் தீது இலள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறான்?
(A)மாதவி
(B) மாதரி
(C) கண்ணகி
(D) மணிமேகலை
(E) விடை தெரியவில்லை
36.‘உரைப்பாட்டு மடை’ எனும் தமிழ் உரைநடைப் பகுதி இடம்பெற்றுள்ள நூலை இயற்றியவர்
(A) திருத்தக்கதேவர்
(B) சீத்தலைச்சாத்தனார்
(C) சேக்கிழார்
(D) இளங்கோவடிகள்
(E) விடை தெரியவில்லை
37.உலக உயிர்களுக்கு உண்டியும் உடையும் உரையுளும் கொடுப்பது எதுவென மணிமேகலை சுட்டுகிறது?
(A) தானம்
(B) உதவி
(C) அறம்
(D) இன்பம்
(E) விடை தெரியவில்லை
38.சரியான இணையைத் தெரிவு செய்க.
(A) துகிர் – துணி
(B) நொடை விலை
(C) கிழி – குற்றம்
(D) மறு – பவளம்
(E) விடை தெரியவில்லை
39.பேரண்டத் தோற்றம் குறித்த அறிவியல் செய்தியினைக் குறிப்பிடும் சங்க இலக்கியம்
(A) பட்டிணப்பாலை
(B) கலித்தொகை
(C) அகநானூறு
(D) பரிபாடல்
(E) விடை தெரியவில்லை
40.சங்க இலக்கிய நூல்களுள் பன்னோடு பாடப்பட்ட நூல்
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) பரிபாடல்
(D) நற்றிணை
(E) விடை தெரியவில்லை
41.பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) முல்லைப்பாட்டு
(C) மதுரைக்காஞ்சி
(D) நெடுநல்வாடை
(E) விடை தெரியவில்லை
42.கம்பராமாயணத்தின் ‘குகப்படலம்’ இப்படியும் அழைக்கப்படும்
(A) யமுனைப்படலம்
(B) கோதாவரிப்படலம்
(C) கங்கைப்படலம்
(D) துங்கபத்திரைப்படலம்
(E) விடை தெரியவில்லை
43.‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர்
(A) பாரதியார்
(B) வ.வே.சு. ஐயர்
(C) பாரதிதாசன்
(D) தி.க. சிவசங்கரன்
(E) விடை தெரியவில்லை
44.கம்பராமாயணத்தில் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறுபெற்று விளங்கும் காண்டம்
(A) யுத்த காண்டம்
(B) ஆரணிய காண்டம்
(C) சுந்தர காண்டம்
(D) கிட்கிந்தா காண்டம்
(E) விடை தெரியவில்லை
45.ஏலாதி – எந்த நூல் வகையைச் சார்ந்தது?
(A) பதினெண்கீழ்க்கணக்கு
(B) ஐஞ்சிறுங்காப்பியம்
(C) ஐம்பெருங்காப்பியம்
(D) பதினெண்மேற்கணக்கு
(E) விடை தெரியவில்லை
46.மருந்துப் பெயரில் அமைந்த இரு நூல்கள்?
(A) திருக்குறள் – நாலடியார்
(B) திரிகடுகம் -ஏலாதி
(C) அகநானூறு – புறநானூறு
(D) நற்றிணை -குறுந்தொகை
(E) விடை தெரியவில்லை
47.‘மன்னற்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ – என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
(A) மூதுரை
(B) பழமொழி நானூறு
(C) திருக்குறள்
(D) நாலடியார்
(E) விடை தெரியவில்லை
48.திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர்
(A) வீரமாமுனிவர்
(B) ஜி.யு. போப்
(C) தாயுமானவர்
(D) கால்டுவெல்
(E) விடை தெரியவில்லை
49.“பெரியாரைப் பேணித் தமரா கொளல்” – இதில் “தமர்” என்பதன் பொருள்
(A) நூல்
(B) துணை
(C) பேறு
(D) அரிய
(E) விடை தெரியவில்லை
50.கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு என்று வள்ளுவர் கூறுவது
(A) செல்வம் பெறுதல்
(B) பெரியாரைத் துணைக்கொளல்
(C) நட்பு கொள்ளுதல்
(D) நீடுவாழ்தல்
(E) விடை தெரியவில்லை
51.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது ?
(A) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
(B) தேசிய நூலகம் – கொல்கத்தா
(C) கன்னிமரா நூலகம்
(D) சரசுவதிமகால் நூலகம்
(E) விடை தெரியவில்லை
52.“வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!” என்று வலியுறுத்தியவர்
(A) சீர்காழி இரா. அரங்கநாதன்
(B) அறிஞர் அண்ணா
(C) மு. வரதராசன்
(D) மறைமலை அடிகள்
(E) விடை தெரியவில்லை
53.சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர் யார்?
(A) இராமலிங்க அடிகள்
(B) விவேகானந்தர்
(C) இராமகிருஷ்ண பரமஅம்சர்
(D) குமரகுருபரர்
(E) விடை தெரியவில்லை
54.மூலிகை நோய் அறிந்து பொருத்துக.
(a) ஆவாரம் 1. நினைவாற்றல்
(b) வாழைப்பூ 2. சர்க்கரை நோய்
(c) வல்லாரை 3. மூட்டு வலி
(d) முடக்கத்தான் இலை 4. வயிற்றுப்புண்
(A) 1 4 3 2
(B) 3 2 4 1
(C) 2 4 1 3
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
55.“பலப்பம் பிடிக்க வேண்டிய சின்னஞ்சிறு விரல்களில் தீக்குச்சிகள்” என்று குழந்தைத் தொழிலாளர் நிலையினைத் தனது புதுக்கவிதையில் படம் பிடித்துக் காட்டியவர்
(A) மு.மேத்தா
(B) கலாப்ரியா
(C) அப்துல் ரகுமான்
(D) இரா. மீனாட்சி
(E) விடை தெரியவில்லை
56.முசிறித் துறைமுகப்பட்டினத்தில் ‘பந்தர்’ என்று பெயரிடப்பட்ட இடம்
(A) அரேபியர் வணிகம் செய்த இடம்
(B) கிரேக்கர் வணிகம் செய்த இடம்
(C) உரோமர் வணிகம் செய்த இடம்
(D) தமிழர் வணிகம் செய்த இடம்
(E) விடை தெரியவில்லை
57.பொருத்துக.
(a) தோவாளை 1. ஆட்டுச்சந்தை
(b) அய்யலூர் 2. பூச்சந்தை
(c) ஈரோடு 3. மீன்சந்தை
(d) நாகப்பட்டினம் 4. ஜவுளிச்சந்தை
(A) 3 2 4 1
(B) 4 3 1 2
(C) 2 1 4 3
(D) 3 4 2 1
(E) விடை தெரியவில்லை
58.மூவலூர் இராமாமிர்தம்மாள் வாழ்ந்த காலம்
(A) 1886 – 1968
(B) 1883 – 1962
(C) 1870 – 1960
(D) 1858 – 1922
(E) விடை தெரியவில்லை
59.‘சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிவோம்’ எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வண்ணதாசன்
(D) காளிதாசன்
(E) விடை தெரியவில்லை
60.தமிழில் எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
(A) பெரியார்
(B) வீரமாமுனிவர்
(C) கால்டுவெல்
(D) ஜி.யு. போப்
(E) விடை தெரியவில்லை
61.“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி” எனக் கூறும் நூல்
(A) புறநானூறு
(B) புறப்பொருள் வெண்பாமாலை
(C) மதுரைக்கலம்பகம்
(D) திருவாரூர் மும்மணிக்கோவை
(E) விடை தெரியவில்லை
62.கி.பி.2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்படும் பகுதி எது?
(A) மாம்பாக்கம்
(B) மயிலாப்பூர்
(C) மாமல்லபுரம்
(D) மாதவரம்
(E) விடை தெரியவில்லை
63.‘இந்தியாவின் தேசியப் பங்கு வீதம் என்னும் ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்
(A) அறிஞர் அண்ணா
(B) சட்டமேதை அம்பேத்கர்
(C) காயிதே மில்லத்
(D) ராம்ஜி சக்பால்
(E) விடை தெரியவில்லை
64.“மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்’ என மணக்கொடை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்
(A) காயிதே மில்லத்
(B) தந்தை பெரியார்
(C) முத்துராமலிங்கர்
(D) காமராசர்
(E) விடை தெரியவில்லை
65.பொருத்துக.
(a) வீரமாமுனிவர் 1. அயர்லாந்து
(b) ஜி.யு.போப் 2. ஜெர்மன்
(c) கால்டுவெல் 3. இங்கிலாந்து
(d) சீகன்பால்கு 4. இத்தாலி
(A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 4 3 1 2
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
66.‘கொய்யாக்கனி’ – என்ற நூலை எழுதியவர் யார் எனக் கண்டறிக.
(A) மு. வரதராசனார்
(B) அறிஞர் அண்ணா
(C) வ.சுப. மாணிக்கம்
(D) பெருஞ்சித்திரனார்
(E) விடை தெரியவில்லை
67.முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தனர் உ.வே.சா. மேற்கண்ட வரியில் ‘வித்தியாப்பியாசம்’ என்பது
(A) கல்வித் தொடக்கம்
(B) எழுத்துப்பயிற்சி
(C) கல்விப்பயிற்சி
(D) மனனப்பயிற்சி
(E) விடை தெரியவில்லை
68.கூற்று (உ) : தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் ‘கானல் வரி’ புதுவகையான ஆராய்ச்சி நூல்.
காரணம் (கா): சிலப்பதிகார காப்பியத்தைக் கானல் வரி என்னும் பகுதியை மையமாக இயக்கிச் செல்வது என்னும் கொள்கையை இதன் மூலம் நிலைநாட்டினார்.
(A) இரண்டும் சரி
(B) இரண்டும் தவறு
(C) உறுதிக் கூற்று சரி; காரணம் தவறு
(D) உறுதிக் கூற்று தவறு; காரணம் சரி
(E) விடை தெரியவில்லை
69.திராவிட சாஸ்த்திரி என்று போற்றப்பட்டவர்
(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
(B) தாமோதரனார்
(C) பரிதிமாற்கலைஞர்
(D) பண்டிதமணி
(E) விடை தெரியவில்லை
70.சரியான விடையை மொழியுடன் பொருத்துக.
(a) வட்டார மொழி 1. நாளேடுகள்
(b) கிளை மொழி 2. உணர்ச்சி மொழி
(c) எழுத்து மொழி 3. கன்னடம், தெலுங்கு
(d) பேச்சு மொழி 4. இருக்குது
(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 2 1 4 3
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
71.தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யும் வகையில் எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஜி.யு. போப்
(D) எர்னஸ்ட் காசிரர்
(E) விடை தெரியவில்லை
72.மேடைக் காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் கூறும் நூல்
(A) யசோதர காவியம்
(B) குண்டலகேசி
(C) சிலப்பதிகாரம்
(D) நாககுமார காவியம்
(E) விடை தெரியவில்லை
73.‘மீசைக்கார பூனை’ என்ற நூலின் ஆசிரியர்
(A) தேனரசன்
(B) நெல்லை சு. முத்து
(C) சே. பிருந்தா
(D) பாவண்ணன்
(E) விடை தெரியவில்லை
74.‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில், ‘தமிழின் முதல் சிறுகதை’ எனப் போற்றப்படும் சிறுகதை
(A) நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(B) குளத்தங்கரை அரசமரம்
(C) கோயில் காளையும் உழவு மாடும்
(D) நட்சத்திரக் குழந்தை
(E) விடை தெரியவில்லை
75.பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் தொடர்பான இலக்கணம் கூறும் நூல்
(A) தண்டியலங்காரம்
(B) தொல்காப்பியம்
(C) நன்னூல்
(D) யாப்பருங்கலம்
(E) விடை தெரியவில்லை
76.சரியான விடையைத் தெரிவு செய். கீழ்க்கண்ட செய்திகளில் கூத்துப்பட்டறை நா. முத்துசாமி பற்றிய சரியான செய்தியை தேர்ந்தெடு
1.தாமரைத்திருவிருது பெற்ற ந. முத்துசாமி புலி ஆட்டம் தோன்ற காரணமாக இருந்தவர்
2. கலைஞாயிறு ந. முத்துசாமி நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோளாகக் கொண்டவர்
3.ந. முத்துசாமி தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்.
(A)1 மட்டும் சரி
(B) 1 மற்றும் 2 சரி
(C) 1 மற்றும் 3 சரி
(D) 2 மற்றும் 3 சரி
(E) விடை தெரியவில்லை
77.இந்திரா காந்தி படித்த விசுவபாரதி கல்லூரி அமைந்துள்ள மாநிலம்
(A) டெல்லி
(B) மேற்கு வங்காளம்
(C) தமிழ்நாடு
(D) உத்திரபிரதேசம்
(E) விடை தெரியவில்லை
78.நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை – என்று பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த கவிஞர்
(A) மாலதி மைத்ரி
(B) சுகிர்தராணி
(C) கந்தர்வன்
(D) இன்குலாப்
(E) விடை தெரியவில்லை
79.தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்
(A) வீர காவியம்
(B) காவியப்பாவை
(C) பூங்கொடி
(D) கொடிமுல்லை
(E) விடை தெரியவில்லை
80.“நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை” என்ற திரை இசைப்பாடலை இயற்றியவர்
(A) மருதகாசி
(B) உடுமலை நாராயணகவி
(C) கண்ணதாசன்
(D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(E) விடை தெரியவில்லை
81.எது உம்மைத்தொகை
(A) அண்ணன் தம்பி
(B) மதுரை சென்றார்
(C) தேரும் பாகனும்
(D) மலர்க்கை
(E) விடை தெரியவில்லை
82.‘செல்வி செய்தாள்’ என்பதன் பிறவினை
(A) செல்வி செய்வாள்
(B) செல்வி செய்வித்தாள்
(C) செல்வி செய்கிறாள்
(D) செல்வி செய்தாள்
(E) விடை தெரியவில்லை
83.பெயருக்கு ஏற்ற வினை மரபினை தேர்ந்தெடு. செய்யுள்____
(A) எழுதினான்
(B) செய்தான்
(C) புனைந்தான்
(D) இயற்றினான்
(E) விடை தெரியவில்லை
84.சரியான ஒன்றை இனம் காண்க.
(A) அவன் சிகப்பு மேலாடையை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டான்
(B) அவன் சிவப்பு மேலாடையை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டான்
(C) அவன் சிகப்பு சர்ட் அணிந்துக் கொண்டு ஆபிஸ் புறப்பட்டான்
(D) அவன் சிகப்பு மேல் அங்கியை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்
(E) விடை தெரியவில்லை
85.‘பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே’ என்று அம்பேத்கரை புகழ்ந்துரைத்தவர்
(A) திரு.வி.க
(B) பேரறிஞர் அண்ணா
(C) நேரு
(D) இராஜாஜி
(E) விடை தெரியவில்லை
86.எவருடன் உறவுகலவாமை வேண்டும் என்கிறார் வள்ளலார்?
(A) உள்ளே பலபொருள் வைத்துள்ள உத்தமர்களின் உறவு
(B) மனதில் பல பொய் பேசுபவர்களின் உறவு
(C) உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவர் உறவு
(D) நோயற்ற வாழ்க்கை வாழ்பவரின் உறவு
(E) விடை தெரியவில்லை
87.‘இன்சொல்’ – என்பதன் எதிர்ச்சொல்லை எழுது.
(A) நல்லசொல்
(B) செஞ்சொல்
(C) வன்சொல்
(D) மென்சொல்
(E) விடை தெரியவில்லை
88.“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்” இதில் ‘நயம் இல’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்.
(A) வஞ்சகம்
(B) சூழ்ச்சி
(C) நன்மை
(D) பழித்தல்
(E) விடை தெரியவில்லை
89.அம்மானை பற்றி தவறான ஒன்றை தேர்வு செய்க.
(A) அம்மானை – ஒரு வகை காய் விளையாட்டு
(B) அம்மானை சுவையான ஓர் உரையாடல் விளையாட்டு
(C) அம்மானை விளையாட்டை 10 பேர் இணைந்து விளையாடுவர்
(D) அம்மானை பெண்கள் விளையாடுவதற்கு ஏற்றது
(E) விடை தெரியவில்லை
90.கீழுள்ளவற்றில் பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
(A) செம்மை
(B) பசுமை
(C) கருமை
(D) எளிமை
(E) விடை தெரியவில்லை
91.Proposal – என்ற அலுவலகக் கலைச் சொல்லுக்குரிய தமிழாக்கம் கூறுக.
(A) கருத்துரு
(B) மெய்யுரு
(C) கூர்ந்தறி
(D) கூர்ந்துணர்
(E) விடை தெரியவில்லை
92.Underground drainage – என்பதன் பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு எது?
(A) பாதாளக் கழிவு
(B) புதை சாக்கடை
(C) பாதாளக் கழிவு நீர் வழி
(D) புதைக்கழிவு
(E) விடை தெரியவில்லை
93.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு.
கரி – கறி
(A) கருமை – கடுமை
(B) சாட்சி – காட்சி
(C) ஆடு மாடு
(D)யானை – காய்கறி
(E) விடை தெரியவில்லை
94.பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) கோலம் – அழகு
(B) கூளம் – தானியம்
(C) குழவி குழந்தை
(D) கூறை – புடவை
(E) விடை தெரியவில்லை
95.‘தே’ என்பதன் பொருள்
(A) தேவாரம்
(B) கடவுள்
(C) தேங்காய்
(D) தேன்
(E) விடை தெரியவில்லை
96.‘பூமி’ என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.
(A) மூ
(B) வை
(C) சூ
(D) கூ
(E) விடை தெரியவில்லை
97.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு. ‘களர்நிலம் இல்லாத கல்வி பெண்கள்’
(A) கல்வி இல்லாத களர்நிலம் பெண்கள்
(B) கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்
(C) பெண்கள் இல்லாத கல்வி களர்நிலம்
(D) களர்நிலம் இல்லாத கல்வி பெண்கள்
(E) விடை தெரியவில்லை
98.முறையான சொற்றொடரினைக் கண்டறிக :
(A) தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது விழிகளை இழந்துவிட்டால் கூட என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்
(B) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்
(C) இழந்துவிடக்கூடாது தாய்த்தமிழினை விழிகளை இழந்து விட்டால் கூட என்று எண்ணியவர் இளங்குமரனார். இரா.
(D) தாய்த் தமிழினை இழக்க நேரிட்டால் கூட விழிகளை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்
(E) விடை தெரியவில்லை
99.‘பங்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு’ என்ற தலைப்பில் இலங்கை யாழ்ப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியவர்
(A) ர.பி. சேது
(B) தனிநாகம்
(C) சுந்தரனார்
(D) ம.பொ.சிவஞானம்
(E) விடை தெரியவில்லை
100.சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
(A) உழவு, மண், ஏர், மாடு
(B) மண், மாடு,ஏர்,உழவு
(C) உழவு, ஏர், மண், மாடு
(D) ஏர், உழவு, மாடு, மண்
(E) விடை தெரியவில்லை