சதவீதம், அளவியல், கால அளவைகள், எண்கணிததர்க்க அறிவு, எண்ணியல்
NATIONAL CARE ACADEMY
மாதிரி தேர்வு – 9
சதவீதம்
TIME : 30mins MARKS : 25
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
186. ஒரு வகுப்பிலுள்ள 36 மாணவர்களில் 75% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள் எனில் கணித பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர் எனக் காண்க…..
a) 25 b) 27 c) 9 d) 18
187. பாலின் விலை 1% உயர்த்தப்பட்டால் ஒருவர் வைத்துள்ள பணத்தில் எத்தனை சதவீத அளவு பாலை குறைத்து வாங்குவார் என காண்க……
a) 90.1% b) 80% c) 0.8% d) 0.99%
188. சர்க்கரையின் விலை 40% குறைக்கப்படுகிறது ஒருவர் கொண்டுசெல்லும் பணத்தில் எத்தனை சதவீத அளவு அதிகமாக சர்க்கரையை வாங்க முடியும் என காண்க…..
a) 48% b) 60%
c) 66(2/3)% d) 76(2/3)%
189. ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகி விட்டன. எனில் அழகிய மாம்பழங்களின் சதவீதத்தை காண்க….
a) 3(8/9)% b) 20%
c) 30% d) 40%
190. 50 பேர் கொண்ட ஒரு வகுப்பில் 23 பேர் மாணவிகள் மற்றவர்கள் மாணவர்கள் எனில் மாணவ-மாணவிகளின் சதவீதம் காண்க….
a) 46%, 54% b) 54%, 46%
c) 50%, 23% d) 56%, 34%
அளவியல்
191. புல்வெளியில் உள்ள ஒரு கட்டையில் ஆடு ஒன்று 7 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப் படுகிறது. அது மேயும் அதிகபட்ச பகுதியில் பரப்பளவை காண்க……
a) 137 b) 147 c) 154 d) 162
192. வட்டவடிவ மைதானத்தின் ஆரம் 70 மீட்டர் மைதானத்தை சுற்றி ஒரு குழந்தை நடந்து வந்தால். அக்குழந்தை நடந்த தூரம் எவ்வளவு?
a) 260 b) 370 c) 440 d) 660
193. ஒரு திண்ம நேர்வட்ட உருளையில் ஆரம் 14 சென்டிமீட்டர் மற்றும் உயரம் 8 சென்டி மீட்டர் எனில் அதன் வளைபரப்பு காண்க…..
a) 704 b) 721 c) 607 d) 823
194. ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் மொத்த புறப்பரப்பு 660 ச. செ. மீ. அதன் விட்டம் 14 சென்டி மீட்டர் எனில் அவ்உருளையின் உயரம்?
a) 6 b) 8 c) 10 d) 12
195. வட்ட வடிவ பூங்காவின் விட்டம் 98 மீட்டர். பூங்காவை சுற்றி வேலி அமைக்க மீட்டருக்கு ₹ 4 வீதம் ஆகும் செலவை காண்க….
a) 1232 b) 1322 c)1223 d) 2123
கால அளவைகள்
196. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு ஜூலை 20ஆம் தேதி என்ன கிழமை?
a) வெள்ளி b) வியாழன்
c) சனி d) ஞாயிறு
197. 2014 ஏப்ரல் 10 வியாழக்கிழமை 2019 ஏப்ரல் 10ஆம் தேதி என்ன கிழமை என காண்க….
a) திங்கள் b) செவ்வாய்
c) புதன் d) சனி
198. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி என்ன கிழமை?
a) வெள்ளி b) வியாழன்
c) சனி d) ஞாயிறு
199. இன்று செவ்வாய்க்கிழமை எனில் 61 வது நாள் என்ன கிழமை என்ன காண்க…..
a) வியாழன் b) வெள்ளி
c) சனி d) ஞாயிறு
200. 2014 ஆகஸ்ட் 6-ம் தேதி புதன்கிழமை எனில் அதே ஆண்டு ஜூன் 10ஆம் தேதி என்ன கிழமை எனக் காண்க?
a) திங்கள் b) செவ்வாய்
c) புதன் d) வியாழன்
எண் கணித தர்க்க அறிவு
201. விடுபட்ட எண்ணை காண்க….
4 : 8 : : 9 : ……..
a) 25 b) 26 c) 27 d) 28
202. விடுபட்ட எண்ணை காண்க….
144 : 13 : : 36 : ……..
a) 6 b) 7 c) 8 d) 9
203. விடுபட்ட எண்ணை காண்க……
75 : 149 : : 45 : ……..
a)90 b) 89 c) 85 d) 100
204. விடுபட்ட எண்ணை காண்க…..
7 : 56 : : 9 : …….
a) 81 b) 85 c) 89 d) 90
205. விடுபட்ட எண்ணை காண்க…..
6, 13, 28, 59, ……..
a)122 b) 123 c) 124 d) 125
எண்ணியல்
206. இரு எண்களின் வித்தியாசம் 15 மற்றும் கூடுதல் 23 எனில் அவ்வெண்களின் வர்க்கங்களின் வித்தியாசத்தை காண்க….
a) 49 b) 354 c) 345 d) 322
207. 1 முதல் 50 வரையுள்ள முழு எண்களின் கூடுதல் காண்க…..
a) 1275 b) 1250 c) 1225 d) 1200
208. 3/8, 3/5, 2/3 மற்றும் ½ இவற்றில் பெரிய பின்னம் எது?
a) 3/8 b) 3/5 c) 2/3 d) ½
209. எத்தனை எண்கள் 1-க்கு 300 க்கும் இடையே 7 ஆல் வகுபடும்…….
a) 42 b) 45 c) 26 d) 43
210. ஒருவன் தனது பயண தூரத்தில் 2/15 பங்கு வானூர்தியிலும், 2/5 பங்கு ரயிலிலும் மீதி பாதியை காரிலும் பயணித்தார். எனில் காரில் பயணித்த தொலைவின் பங்கை காண்க…..
a) 8/15 b) 7/15 c) 6/15 d) 7/8