201. இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களின் மலிவான உணவாக விளங்கும் பயிர்வகை எது?
202. இந்தியாவில் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படும் பயிர் வகை எது?
203. தீபகற்ப இந்தியாவில் முக்கிய உணவு பயிராக விளங்கும் பயிர்வகை எது?
204. இந்தியாவில் சோளம் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்கள் யாவை?
கம்பு :
205. ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பயிர் வகை எது?
206. இந்தியாவில் ஏழை மக்களின் ஒரு முக்கிய உணவுப் பயிர் எது?
207. இந்தியாவில் எந்த பயிர் வகையின் தண்டு பகுதி கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுற்கு கூரை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது?
208. இந்தியாவில் கம்பு எந்த பகுதிகளில் நன்கு வளரக்கூடியது?
209. இந்தியாவில் கம்பு உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மாநிலம் எது?
210. இந்தியாவில் கம்பு உற்பத்தியில் அதிக உற்பத்தியை தரும் மாநிலங்கள் யாவை?
வாற்கோதுமை (பார்லி) :
211. பார்லி என்பது?
212. ஏழைகளின் முக்கிய உணவாக மட்டும் இல்லாமல், மதுபானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுவது எது?
213. “பார்லி” பயிர் விளைச்சளில் முதன்மை உற்பத்தி மாநிலங்கள் யாவை?
பருப்பு வகைகள் :
214. அவரை இனத்தைச் சார்ந்த பல பயிர்களை உள்ளடக்கியதும் தாவர புரதச்சத்து செறிந்ததுமான பயிர் வகைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
215. பருப்பு வகைகள் எதற்கு பயன்படுகிறது?
216. வளிமண்டல நைட்ரஜனைக் கிரகித்து மண்வளத்தை அதிகரிக்கும் பயிர் வகை எது?
217. பயிர் சுழற்சி பயிறுதல் முறையில் வழக்கமாக பயிரிடப்படும் பயிர் வகை எது?
218. உலகில் அதிகமாக பருப்பு உற்பத்தியை செய்யும் நாடு எது?
2. வாணிபப்பயிர்கள்
219. வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
220. கரும்பு, புகையிலை, இழை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவை எந்த பயிர் வகைகளுக்கின் கீழ் அமையும்?
கரும்பு :
221. உலகில் கரும்பு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது பெரிய உற்பத்தியாளர் நாடாக கருதப்படுகிறது?
222. கரும்பு எந்த தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது?
223. இந்திய நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவு எது?
224. கரும்பின் பயன்கள் யாவை?
225. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு எது?
226. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?
227. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு எது?
228. இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலங்கள் எவை?
229. கரும்பு உற்பத்தி செய்யும் பிற மாநிலங்கள் யாவை?
பருத்தி :
230. இந்தியாவின் முக்கியமான வாணிபப் பயிர் எது?
231. இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப்பொருட்களை அளிப்பது எது?
232. உலக அளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
233. உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?
234. குஜராத்,மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் எத்தனை சதவீதம் பங்களிப்பை வழங்குகின்றன?
சணல்:
235. வெப்பமண்டல இழைப் பயிர் என்று அழைக்கப்படுவது எது?
236. எந்த வகை மண்ணில் சணல் நன்கு வளரும்?
237. சணல் தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிப்பது எது?
238. கோணிப்பைகள், கம்பளங்கள், கயிறு, நூலிழைகள், போர்வைகள், துணிகள், தார்பாலின், திரைச்சீலைகள் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுவது எது?
239. சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
240. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் சணல் பயிரிப்படுகிறது?
எண்ணெய் வித்துக்கள் :
241. இந்தியர்களின் உணவில் கொழுப்புச்சத்தை அதிகம் அளிப்பது எது?
242. இந்தியாவில் விளைவிக்கப்படும் முக்கியமான எண்ணெய் வித்துக்கள் யாவை?
243. எண்ணெய் வித்துக்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
244. இந்தியாவில் எந்த மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது?
245. உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு எது?
246. உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாவது உள்ள நாடு எது?
3. தோட்டப்பயிர்கள் :
247. ஏற்றுமதி செய்யும் நோக்கத்தோடு பயிரிடப்படும் பயிர் வகை எது?
248. மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ள பயிர் வகை எது?
249. இந்தியாவில் விளைவிக்கக் கூடிய முக்கியமான தோட்டப் பயிர்கள் யாவை?
தேயிலை :
250. அயன மண்டல மற்றும் உபஅயன மண்டல காலநிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரம் எது?
251. தேயிலை பயிரிட தேவையானவை எவை?
252. இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கியமான தேயிலை வகைகள் எவை?
253. பூகி மற்றும் அசாமிகா கலப்பின் மூலம் உருவாக்கப்படுவது?
254. உலக தேயிலை உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு எது?
255. உலக தேயிலை உற்பத்தியில் இரண்டாவது இடம் உள்ள நாடு எது?
256. இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் எது?
257. இந்தியாவில் தேயிலை பயிரிடும் மாநிலங்கள் எவை?
காபி :
258. நிழல்களில் நன்றாக வளரக்கூடிய பயிர் வகை எது?
259. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட மலைச் சரிவுகளில் நன்றாக வளர்வது எது?
260. காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ?
261. தரம் மிக்கதும், இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமான காபி வகை எது?
262. தரம் குறைந்த காப்பி வகை எது?
263. உலக அளவில் காப்பி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் வகிக்கிறது?
264. இந்தியாவில் காபி உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கும் மாநிலம் எது?
265. இந்திய உற்பத்தியில் 71 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 2.5 சதவீதத்தையும் அளிக்கும் மாநிலம் எது?
இரப்பர் :
266. கேரளாவில் முதன்முதலில் ரப்பர் தோட்டம் எப்போது உருவாக்கப்பட்டது?
267. இரப்பர் பயிரிட ஏற்ற கால நிலை எது?
268. பெரும்பாலான இரப்பர் தோட்டங்கள் யாரிடம் உள்ளன?
269. இந்தியாவில் இரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகள் எவை?
நறுமணப் பயிர்கள்:
270. நறுமணப் பொருட்களுக்கு இந்தியா எப்போது இருந்து உலக புகழ் பெற்றதாகும்?
271. உணவிற்கு சுவையூட்டியாகவும், மருந்துப்பொருட்கள் மற்றும் சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் பயிர் வகை எது?
272. இந்தியாவில் பயிரிடப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?
273. இந்தியாவில் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதன்மையான மாநிலம் எது?
4. தோட்டக்கலை பயிர்கள்
274. பழங்கள் மலர்கள் மற்றும் காய் வகை பயிர்களை குறிக்கும் பயிர் வகை எது?
275. தோட்டக் கலைப் பயிர்கள் மனிதர்களின் அன்றாட உணவில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஏன்?
276. உலக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
3.5 கால்நடைகள்
277. இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் எது?
278. சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது எது?
279. சமூக கலாச்சாரத்தை பாதுகாக்க தன் பங்களிப்பை தருவது எது?
280. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவது எது?
281. வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலைவாய்ப்பையும், வருவாயையும் அளிப்பது எது?
282. நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் விளங்குவது எது?
மாடுகள்
283. இந்தியாவில் மொத்த கால்நடைகளில் மாடுகள் எத்தனை சதவீதம்?
284. உலக அளவில் மாடுகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
285. உலக அளவில் மாடுகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?
286. இந்தியாவில் உள்ள மாடுகள் பல்வேறு இனங்களைச் சார்ந்ததாகும். அவை?
வெள்ளாடுகள்
287. “ஏழை மக்களின் பசு” என்று அழைக்கப்படும் உயிரினம் எது?
288. வெள்ளாடுகள் அளிக்கக் கூடிய பயன்கள் யாவை?
289. நாட்டின் இறைச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது எது?
எருமைகள்
290. இந்தியாவில் பால் உற்பத்தியில் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ள உயிரினம் எது?
291. எருமைகள் அதிகமாக உள்ள மாநிலங்கள் யாவை?
பால் பொருள்கள், இறைச்சி மற்றும் ரோம உற்பத்தி
292. மாநில மற்றும் யூனியன் பிரதேச கால்நடை வளர்ப்புத் துறை 2016-17 ஆம் கணக்கெடுப்பின்படி, நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள் எவை?
293. இந்தியாவில் இறைச்சி உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள் எவை?
294. இந்தியாவில் ரோம உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள் எவை?
3.6 மீன் வளர்ப்பு
295. இந்தியாவில் முக்கிய பொருளாதார நடவடிக்கை எது?
296. இந்தியாவில் வளர்ந்து வரும் துறையாகவும் பல்வேறு வளங்களைக் கொண்டதாகவும் உள்ள துறை எது?
297. மீன் பிடி தொழிலானது இந்தியாவின் கடலோர மாநிலங்களில் ஒரு முக்கிய தொழிலாக எவ்வளவு மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது?
298. உலக மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
299. உலக மீன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?
300. உலக மீன் உற்பத்தியில் இந்தியாவின் சதவீதம்?
301. இந்தியாவில் மீன் பிடி தொழிலின் பயன்கள் எவை?
302. இந்தியாவில் மீன் பிடி தொழில் இருவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை?
1. கடல் மீன் பிடிப்பு
303. இந்தியாவில் மீன் பிடித்தல் எந்த பகுதிகளில் நடைபெறுகிறது?
304. இந்தியாவில் கடல் மீன் உற்பத்தியில் முதன்மையாக உள்ள மாநிலம் எது?
2. உள்நாட்டு மீன் பிடிப்பு
305. உள்நாட்டு மீன் பிடிப்பு எங்கு நடைபெறுகிறது?
306. நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் எத்தனை சதவிகிதம் உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது?
307. இந்தியாவில் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்வது எது?
308. இந்தியாவில் மீனவர்களால் பிடிக்கப்படும் முக்கியமான மீன் வகைகள் யாவை?
இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள்
சிறு மற்றும் குறு நில உடமை
309. இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் அதிகம் உள்ளவர்கள் யார்?
அதிக செலவின உள்ளீடுகள்
310. நல்லதரமான விதைகள் சிறு-குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக இருப்பதற்கு காரணம் என்ன?
வளமற்ற மண்
311. இந்திய மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தி திறன் குறைவதற்கு காரணம் என்ன?
நீர்ப்பாசன பற்றாக்குறை
312. இந்தியாவில் எவ்வளவு வேளாண் நிலப்பகுதி பாசன வசதியை பெற்றுள்ளது?
313. வேளாண்மையின் நம்பகத்தன்மைக்கு உருவாக்கப்பட வேண்டியது எது?
இயந்திரமயமாக்க பற்றாக்குறை
314. நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மைபெரிய அளவில் இயந்திரமயமாக்கப் பட்டிருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் எவ்வகை வேளாண்மை செய்யப்படுகிறது?
மண் அரிப்பு
315. எதன் மூலமாக பெரும் நிலப் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது?
வேளாண் சந்தை
316. விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப்பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான காரணம் என்ன?
317. விவசாயப் பொருட்களின் விலையில் அதிகமாக காணப்படுவது எது?
சேமிப்பு கிடங்கு வசதியில்லாமை
318. விவசாய சேமிப்பு கிடங்கு வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ காணப்படுவது எது?
319. விவசாயகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவதற்கு காரணம் என்ன?
போக்குவரத்து வசதியின்மை
320. இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று எது?
மூலதனப் பற்றாக்குறை
321. அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்று எது?
322. மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க முக்கிய பங்கு வகிப்பது எது?
323. இந்தியாவில் மஞ்சள் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
324. இந்தியாவில் நீலப்புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
325. இந்தியாவில் பழுப்புப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
326. இந்தியாவில் தங்க நூலிழை புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
327. இந்தியாவில் பொன் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
328. இந்தியாவில் சாம்பல் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
329. இந்தியாவில் இளஞ்சிவப்பு புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
330. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
331. இந்தியாவில் வெள்ளிப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
332. இந்தியாவில் வெள்ளி இழைப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
333. இந்தியாவில் சிவப்புப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
334. இந்தியாவில் வட்டப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
335. இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் யாவை?
BOX INFORMATION
336. இந்தியாவில் மண் சீரழிவு என்பது?
337. இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS), 2015ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி எவ்வளவு நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது?
338. இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை?
339. மண் வளப்பாதுகாப்பும் மண்வள மேலாண்மையும் பற்றி குறிப்பு வரைக?
340. பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா – (PMKY) என்பது?
341. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எப்போது எடுக்கப்பட்டது?
342. தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
பயிற்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. ––––––––––––– மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது
அ) வண்டல்
ஆ) கரிசல்
இ) செம்மண்
ஈ) உவர் மண்
2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய வானியல் துறை
இ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
ஈ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) பாலைமண்
ஈ) வண்டல் மண்
4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
அ) ஹிராகுட் அணை
ஆ) பக்ராநங்கல் அணை
இ) மேட்டூர் அணை
ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
5. ––––––––––––– என்பது ஒரு வாணிபப்பயிர்
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) மக்காச் சோளம்
6. கரிசல் மண் ––––––––––––– எனவும்
அழைக்கப்படுகிறது.
அ) வறண்ட மண்
ஆ) உவர் மண்
இ) பருத்தி மண்
ஈ) மலை மண்
7. உலகிலேயே மிக நீளமான அணை ––––––––
அ) மேட்டூர் அணை
ஆ) கோசி அணை
இ) ஹிராகுட் அணை
ஈ) பக்ராநங்கல் அணை
8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது –––––––––––––
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) புகையிலை
II . சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்
1. கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
2. கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
III பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
1. அ) கோதுமை
ஆ) நெல்
இ) திணை வகைகள்
ஈ) காபி
2. அ) காதர்
ஆ) பாங்கர்
இ) வண்டல் மண்
ஈ) கரிசல் மண்
3. அ) வெள்ளப் பெருக்கு கால்வாய்
ஆ) வற்றாத கால்வாய்
இ) ஏரிப்பாசனம்
ஈ) கால்வாய்
IV. பொருத்துக.
1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்
A. மகாநதி
2. காபி
B. தங்கப் புரட்சி
3. டெகிரி அணை
C. கர்நாடகா
4. ஹிராகுட்
D. உத்தரப்பிரதேசம்
மற்றும் பீகார்
5. தோட்டக் கலை
E. இந்தியாவின்
உயரமான அணை
V. சுருக்கமாக விடையளி
’மண்’ – வரையறு
இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
’வேளாண்மை’–வரையறு.
இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.
VI. காரணம் கூறுக
வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
மழைநீர் சேமிப்பு அவசியம்.
VII. வேறுபடுத்துக
ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்
வெள்ளப் பெருக்கு கால்வா ய் மற்றும் வற்றாத கால்வாய்
கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு
வண்டல் மண் மற்றும் கரிசல் மண்
VIII. பத்தியளவில் விடையளி
இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக
தீவிர வேளாண்மை மற்றும் கலப்பு வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.
IX. உயர் சிந்தனை வினாக்கள்
வேளாண்மை இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா?
தென்னிந்தியாவில் நிலவும் நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வை உங்களால் கொடுக்க முடியுமா?
X. நிலவரைபட பயிற்சி
வண்டல் மண்அதிகம் காணப்படும் பகுதிகளைக் குறிப்பிடுக.
கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.
ஹிராகுட் அணை, மேட்டூர் அணை மற்றும் தாமோதர் அணைகளின் அமைவிடங்களைக் குறிக்கவும்.
சணல் விளையும் பகுதிகளைக் குறிக்கவும்.
காபி மற்றும் தேயிலை விளையும் பகுதிகள் ஏதேனும் மூன்றை குறிக்கவும்.
பாலை மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.
தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் மசூலிப்பட்டினம் மீன் பிடித்தல் மையங்களைக் கண்டறிக.
காவிரி மற்றும் கோதாவரி டெல்டா பகுதிகளைக் குறிக்கவும்.