இயற்கணிதம், இலாப நட்ட கணக்கு, விடுப்பட்ட எண்ணை காண்க, வடிவியல், சராசரி
NATIONAL CARE ACADEMY
மாதிரி தேர்வு – 10
இயற்கணிதம்
TIME : 30mins MARKS : 25
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
211. தாயின் வயதிற்கும் அவரின் இரு மகள்களின் வயதின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் 6 ஆண்டுகள். இரு மகள்களின் சராசரி வயது 22. எனில் தாயின் வயதை காண்க…….
a) 40 b) 44 c) 46 d) 50
212. ஒரு மாணவன் ஒரு எண்ணை 12 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 21 ஆல் பெருக்கி விட்டான். அதனால் அது சரியான மதிப்பை விட 63 அதிகம் கிடைக்கிறது எனில் அந்த எண்ணை காண்க….
a) 7 b) 8 c) 9 d) 12
213. 15 ஆப்பிள்களின் விலை ரூபாய் 75 எனில் 4 டஜன் ஆப்பிள்களின் விலையை காண்க…..
a) 300 b) 310 c) 220 d) 240
214. 12 பந்துகளில் விலை ரூபாய் 15 எனில் 20 ரூபாய்க்கு எத்தனை பந்துகள் வாங்கலாம்…..
a) 25 b) 16 c) 17 d) 18
215. இரு முழுக்களின் கூடுதல் 45. அவற்றில் ஒரு எண் -23 எனில் மற்றொரு எண்ணை காண்க…..
a) 22 b) -22 c) 68 d) 44
இலாப நட்டக் கணக்கு
216. ராபின் ஒரு பழைய வீட்டினை ரூ.2,75,000க்கு வாங்கி 25,000 செலவு செய்து புதுப்பித்து 3,50,000க்கு விற்றால் அவர் அடையும் லாப சதவீதத்தை காண்க….
a) 19.66% b) 18.66%
c) 17.66% d) 16.66%
217. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூபாய் 80 க்கு வாங்கி ரூபாய் 100 க்கு விற்றால் அவர் அடையக்கூடிய லாப சதவீதம் என்ன……
a) 40% b) 20% c) 50% d) 25%
218. ஒரு கடைக்காரர் 100 பென்சில்களை விற்கும் பொழுது அவர் அடையும் லாபமானது 20 பென்சில்களின் அடக்க விலைக்கு சமம் அவருடைய சதவீதத்தை காண்க….
a) 25% b) 20% c) 15% d) 12%
219. ஒரு கடைக்காரர் 100 பென்சில்களை விற்கும் பொழுது அவர் அடையும் நட்டமானது 20 பென்சில்களை அடக்க விலைக்கு சமம். எனில் அவர் அடையும் நட்ட சதவீதத்தை காண்க…..
a) 25% b) 20% c) 15% d) 12%
220. 100 மாம்பழங்கள் ரூபாய் 125 என்ற வீதத்தில் 400 பழங்களை வாங்கி ஒரு டஜன் பழங்களை என்ன விலைக்கு விற்றால் லாபம் 100 கிடைக்கும்….
a)50 b) 18 c) 15 d) 25
விடுபட்ட எண்ணை காண்க
221. 8, 7, 11, 12, 14, 17, 17, 22, ……. விடுபட்ட எண்ணை காண்க…..
a) 27 b) 20 c) 22 d) 24
222. 9, 12, 11, 14, 13, ……. விடுபட்ட எண்ணை காண்க….
a) 12 b) 16 c) 10 d) 17
223. 71, 76, 69, 74, 67, 72, ……. விடுபட்ட எண்ணை காண்க…..
a) 77 b) 65 c) 80 d) 76
224. 2, 6, 12, 20, 30, 42, 56, …… விடுபட்ட எண்ணை காண்க……
a) 60 b) 64 c) 72 d) 70
225. 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, ……. விடுபட்ட எண்ணை காண்க…..
a) 43 b) 47 c) 53 d) 51
வடிவியல்
226. ஒரு கோட்டின் மீதான 2 அடுத்துள்ள கோணங்கள் 4x மற்றும் 3x + 5 எனில் x இன் மதிப்பை காண்க……
a) 25° b) 15° c) 30° d) 5°
227. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் 40° மற்றும் 60° எனில் மூன்றாவது கோணம்?
a) 20° b) 40° c) 60° d) 80°
228. இணைகரம் ABCD – ல் ∠A = 108° எனில், ∠B, ∠C மற்றும் ∠D ஐக் காண்க……
a) 72°, 108°, 70° b) 72°, 108°, 108°
c) 72°, 108°, 60° d) 72°, 108°, 72°
229. ஒரு கோணமும் அதன் மிகை நிரப்பியும் சமம் எனில் அக்கோணங்களை காண்க……
a) 30° b) 45° c) 60° d) 90°
230. பின்வரும் படத்தின் x-ன் மதிப்பை காண்க…..
a) 50° b) 60° c) 70° d) 80°
சராசரி
231. 10 முதல் 30 வரையிலான எண்களில் மூன்றால் வகுபடும் எண்களின் சராசரி…..
a) 12 b) 21 c) 15 d) 20
232. 4-ன் மடங்குகளாக உள்ள முதல் 5 எண்களின் சராசரி என்ன…..
a) 12 b) 16 c) 20 d) 15
233. 30 பேனாக்கள் மற்றும் 75 பென்சில்கள் சேர்த்து ₹ 510 க்கு வாங்கப்பட்டது. 75 பென்சில்களின் சராசரி விலை ₹ 2 எனில் பேனாக்களின் சராசரி விலை என்ன?
a) ₹ 10 b) ₹ 11 c) ₹12 d) ₹ 13
234. ஒரு படகில் பயணிக்க கூடிய ஐந்து பயணிகளில் சராசரி எடை 38kg. படகுடன் சேர்த்து அவர்களது சராசரி எடை 52 கிலோகிராம் எனில் படகின் எடை என்ன?
a) 112 b) 122 c) 126 d) 129
235. 5 எண்களின் சராசரி 140. ஒரு எண்ணை நீக்கும் போது சராசரி 130 என மாறுகிறது. எனில் நீக்கப்பட்ட எண் என்ன?
a) 130 b) 140 c)180 d) 190