WA – 10TH STD – INDIA LOCATION – 01
About Lesson

பத்தாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
புவியியல் – அலகு 1
இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

 

அறிமுகம்
1. இந்தியா பரப்பளவில் உலகின் எத்தனையாவது பெரிய நாடு?

விடை : ஏழாவது பெரிய நாடு

 

2. இந்தியா பரப்பளவில் ஆசிய கண்டத்தின் எத்தனையாவது பெரிய நாடு?

விடை: இரண்டாவது பெரிய நாடு

 

3. இந்தியாவை ஏனைய ஆசிய பகுதியில் இருந்து பிரிப்பது?

விடை: இமயமலை

 

4. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு?

விடை : 32,87,263 ச. கி. மீ

 

5. இந்தியா புவியில் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீத பரப்பை பெற்றுள்ளது?

விடை: 2.4%

 

 

இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகள்

6. இந்தியா எத்தனை கிலோ மீட்டர் நில எல்லைகளைக் கொண்டுள்ளது?

விடை : 15,200 கி.மீ

 

 

7. இந்தியா வடமேற்கில் எந்த நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது?

விடை : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன்

 

 

8. இந்தியா வடக்கில் எந்த நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது?

விடை : சீனா, நேபாளம் மற்றும் பூடானுடன்

 

 

9. இந்தியா கிழக்கில் எந்த நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது?
விடை: வங்காளதேசம் மற்றும் மியான்மர்

 

 

10. இந்தியா அதிகபட்ச நில எல்லையினை எந்த நாட்டுடன் பகிர்ந்துகொள்கிறது?
விடை: வங்காள தேசத்துடன்

 

 

11. இந்தியா வங்காள தேசத்துடன் எத்தனை கி.மீ நீளமுள்ள நில எல்லையினை பகிர்ந்துகொள்கிறது?
விடை: 4,156 கி.மீ நீளமுள்ள நில எல்லை

 

 

12. இந்தியா குறுகிய நில எல்லையினை எந்த நாட்டுடன் பகிர்ந்துகொள்கிறது?

விடை: குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன்

 

 

13. இந்தியா ஆப்கானிஸ்தானுடன் எத்தனை கி.மீ நீளமுள்ள நில எல்லையினை பகிர்ந்துகொள்கிறது?

விடை: 106கி.மீ நில எல்லை

 

 

14. இந்தியா, தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், மேற்கே அரபிக் கடலாலும் சூழப்பட்டு சுமார் எத்தனை கி.மீ நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது?

விடை: 6100 கி.மீ நீளமுள்ள

 

 

15. தீவுக் கூட்டங்களையும் சேர்த்து இந்திய கடற்கரையின் மொத்த நீளம் எத்தனை கிமீ.?

விடை: 7516.6 கிமீ.

 

 

16. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி எது?

விடை: பாக்நீர்சந்தி

 

 

இந்தியாவும் உலகமும்

17. இந்தியாவின் அமைவிடம்?

விடை: கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு மத்தியிலும், ஆசியாவின் தென்பகுதியிலும் அமைந்துள்ளது.

 

 

18. எந்த வழிப்பாதை மேற்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இந்தியாவுடன் இணைத்து இந்தியாவிற்கு அமைவிட முக்கியத்துவத்தை அளிக்கிறது?

விடை: இந்தியப் பெருங்கடல் வழிப்பாதை

 

 

19. இந்தியாவுடன் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் பாலமாக இருப்பது?

விடை: இந்தியாவின் மேற்கு கடற்கரை

 

 

20. தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் இந்தியா நெருங்கிய வணிகத் தொடர்பு கொள்ள உதவி புரிவது?

விடை: கிழக்குக் கடற்கரை

 

 

இந்தியா – துணைக்கண்டம்

21. எந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?

விடை: பாகிஸ்தான்,மியான்மர், வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை

 

 

22. இந்திய ஒரு துணைக்கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?

விடை: ஏழு நாடுகள்

 

 

23. இந்தியா ஒரு துணைக்கண்டம் என ஏன் அழைக்கப்படுகிறது?

விடை: இயற்கை நில அமைப்பு காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

 

 

1.1 அமைவிடமும் பரப்பளவும்

24. இந்தியாவின் அட்சப் பரவல்?

விடை: இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரையிலும்

 

25. இந்தியாவின் தீர்க்க பரவல்?

விடை: 68° 7′ கிழக்கு தீர்க்கம் முதல் 97°25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.

 

 

26. அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும் பூமியின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?

விடை: வடகிழக்கு அரைக்கோளப் பகுதியில்

 

 

27. இந்தியாவின் தென்கோடி பகுதி எது?

விடை: இந்திரா முனை

 

 

28. இந்தியாவின் தென்கோடி பகுதியான இந்திரா முனை முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடை: பிக்மெலியன்

 

 

29. இந்திரா முனை எந்த தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது.?

விடை: அந்தமான் நிக்கோபர்

 

 

30. இந்திரா முனை அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது இட அமைவு?

விடை: 6° 45′ வடஅட்சத்தில் அமைந்துள்ளது.

 

31. இந்திய நிலப்பகுதியின் தென்கோடி முனை எது?

விடை: குமரி முனை

 

 

32. இந்திய நிலப்பகுதியின் வடமுனை எது?

விடை: இந்திரா கோல்

 

 

33. இந்தியா, வடக்கே லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை எத்தனை கி.மீ நீளத்தை கொண்டுள்ளது?

விடை: 3214 கி.மீ நீளத்தையும்,

 

 

34. இந்தியா மேற்கே குஜராத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை எத்தனை கி.மீ நீளத்தை கொண்டுள்ளது?

விடை: 2933 கி.மீ நீளத்தை

 

 

35. 23° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: கடகரேகை

 

 

36. 23° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: மகரரேகை

 

 

37. 66° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: அன்டார்டிக் வட்டம்

 

38. 66° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ஆர்க்டிக் வட்டம்

 

 

39. 39. 90° வட அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: வடதுருவம்

 

 

40. 90° தென் அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: தென் துருவம்

 

 

41. 0° அட்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: பூமத்திய ரேகை/ நிலநடுக்கோடு

 

 

42. எந்த அட்ச பரவல் இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்ப மண்டலமாகவும், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது?

விடை: 23° 30′ வட அட்சமான கடகரேகை

 

 

43. இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் உள்ளன?

விடை: 28 மாநிலங்கள்

 

 

44. இந்தியாவில் தற்போது எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன?

விடை: 8 யூனியன் பிரதேசங்கள்

 

 

இந்திய திட்ட நேரம்

45. மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை இந்தியா ஏறத்தாழ எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது?

விடை: 30 தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது.

 

 

46. இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் எத்தனை மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது?

விடை: இரண்டு மணி நேரம்

 

 

47. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை எது?

விடை: 82° 30′ கிழக்கு தீர்க்கரேகை

 

48. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது?

விடை: இந்திய திட்டநேரமாக

 

 

49. 82° 30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக ஏன் எடுத்துக்கொள்ளப்படுகிறது?

விடை: இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது இந்த நேர வேறுபாட்டை,தவிர்ப்பதற்காக.

 

 

50. 82° 30′ கிழக்கு தீர்க்கரேகை இந்தியாவின் எந்த பகுதியின் வழியாக செல்கிறது?

விடை: மிர்சாபூர் (அலகாபாத், உத்திர பிரதேஷ் மாவட்டம்)

 

51. இந்திய திட்ட நேரமானது கீரின்வீச் திட்ட நேரத்தை விட எத்தனை மணி நேரம் முன்னதாக உள்ளது?

விடை: 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

 

 

1.2 இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்

52. இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்?

விடை: இந்தியா வடக்கில் உள்ள கம்பீரமான இமயமலை முகடுகளையும்,தெற்கில் அழகான கடற்கரைகளையும் மேற்கில் இந்திய பாலைவனத்தையும் கிழக்கில் புகழ்பெற்ற இயற்கைப் பாரம்பரியத்தையும் கொண்ட சிறந்த புவியியல் தோற்றங்களைக் கொண்ட ஒரு வல்லமை பெற்ற நாடாக அமைந்துள்ளது.

 

 

53. இந்திய நிலப்பகுதி பல மாறுபட்ட இயற்கை நிலத் தோற்றங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் அவை?

விடை:
1. வடக்கு மலைகள்
2. வட பெரும் சமவெளிகள்
3. தீபகற்பபீடபூமிகள்
4. கடற்கரைச் சமவெளிகள்
5. தீவுகள்

 

 

வடக்கு மலைகள்

54. இமயமலைகள் (வடக்கு மலைகள்) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும். ஏனெனில்?

விடை: வடக்கு மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாகின.

 

 

55. இமயமலைகள் (வடக்கு மலைகள்) மடிப்பு மலைகள் என ஏன் அழைக்கப்படுகின்றன?

விடை: புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு, மடிப்பு மலைகளாக உருவாகின எனவே மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன

 

 

56. இமய மலைகளின் பரவல்?

விடை: மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2500 கி.மீ நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது.
இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கிமீ அகலத்துடனும் வேறுபடுகிறது.

 

 

57. பிரபலமான பாமீர் முடிச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: “உலகின் கூரை” என அழைக்கப்படுகிறது.

 

 

58. மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது எது?

விடை: பாமீர் முடிச்சு

 

 

59. இமயமலை பாமீர் முடிச்சியிலிருந்து கீழ்நோக்கி எந்த வடிவத்தில் அமைந்துள்ளது?

விடை: வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது.

 

 

60. இமாலயா (Himalaya) என்ற சொல் சமஸ்கிருத மொழியில் “எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது?

விடை: பனிஉறைவிடம்” (Abode of Snow)

 

 

61. இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம். அவை?

விடை:
1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)

2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)

3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)

 

 

1.ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)

62. மேற்கு இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ட்ரான்ஸ் இமயமலை

 

 

63. ட்ரான்ஸ் இமயமலை எங்கு அமைந்துள்ளது?

விடை: ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.

 

 

64. ட்ரான்ஸ் இமயமலையின் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: “திபெத்தியன் இமயமலை” என அழைக்கப்படுகிறது

 

 

65. ட்ரான்ஸ் இமயமலை அகல பரவல்?

விடை: மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கிமீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.

 

 

66. ட்ரான்ஸ் இமயமலை பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள்?

விடை: கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.

 

 

67. எந்த பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய பாறைப் படிமங்களாக, இமயமலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது?

விடை: டெர்சியரி கிரானைட்

 

 

68. ட்ரான்ஸ் இமயமலையில் முக்கியமான மலைத்தொடர்கள்?

விடை: சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம்

 

 

2. இமயமலை

69. வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ள மலை எது?

விடை: இமயமலை

 

 

70. இமயமலை எவ்வகை மலை?

விடை: ஒரு இளம் மடிப்பு மலை

 

 

71. இமயமலை எவ்வாறு உருவானது?

விடை: வடக்கே இருந்த யுரேசியா (Eurasia) நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் (Gondwana Land Mass) ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.

 

 

72. இமயமலை பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
இமயமலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது அவை?

விடை: (i) உள் இமயமலைகள் / இமாத்ரி
(ii) மத்திய இமயமலை / இமாச்சல்
(iii) வெளி இமயமலை / சிவாலிக்

 

 

73. உள் இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: இமாத்ரி

 

 

74. மத்திய இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: இமாச்சல்

 

 

75. வெளி இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: சிவாலிக்

 

(i) உள் இமயமலைகள் / இமாத்ரி

76. மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ள மலை எது?

விடை: உள் இமயமலை

 

 

77. உள் இமயமலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம்?

விடை: அகலம் 25 கி.மீ சராசரி உயரம் 6000 மீ

 

 

78. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது உள் இமயமலை எவ்வாறு மழையைப் பெறுகின்றது?

விடை: குறைவான மழையைப் பெறுகின்றது

 

 

79. மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது உள் இமயமலையில் எவ்வாறு உள்ளது?

விடை: பௌதீக சிதைவாக

 

 

80. இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை எங்கு அமைந்துள்ளன?

விடை: உள்மலை தொடரில்

 

 

81. உள்மலை தொடரில் அமைந்துள்ள முக்கியமான மிக உயர்ந்த சிகரங்கள் எவை?

விடை: எவரெஸ்ட் மற்றும் கஞ்சன் ஜங்கா

 

 

82. எவரெஸ்ட் உயரம்?

விடை: 8848 மீ

 

 

83. கஞ்சன் ஜங்கா உயரம்?

விடை: 8586 மீ

 

 

84. எவரெஸ்ட் சிகரம் எங்கு அமைந்துள்ளது?

விடை: நேபாளத்தில்

 

 

85. கஞ்சன் ஜங்கா சிகரம் எங்கு அமைந்துள்ளது?

விடை: நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையே அமைந்துள்ளது.

 

 

86. உள் இமயமலை மற்ற மலைத்தொடர்களை விட எவ்வாறு அமைந்துள்ளது?

விடை: தொடர்ச்சியான மலைத்தொடராக

 

 

87. கங்கோத்திரி, சியாச்சின் போன்றவை?

விடை: பனியாறுகள்

 

 

88. கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் உள் இமயமலையில் காணப்படுவதற்கு காரணம்?

விடை: உள் இமயமலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால்

 

 

(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)

89. இமய மலையின் மத்திய மலைத் தொடர் எது?

விடை: இமாச்சல்

 

 

90. மத்திய இமயமலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம் அகலம்?

விடை: 80கி.மீ சராசரி உயரம் 3500 மீ முதல் 4500 மீ வரை

 

 

91. மத்திய இமயமலை தொடரில் காணப்படும் பாறைகள் எவை?

விடை: வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் மணற்பாறைகள்

 

 

92. மண்ணரிப்பு ஏற்பட காரணம்?

விடை: நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு மற்றும் மிக அதிக மழைப்பொழிவின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது.

 

 

93. மத்திய இமயமலைத் தொடரில் காணப்படும் மலைகள் எவை?

விடை: பீர்பாஞ்சல், தவ்லதார் மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் காணப்படுகின்றன.

 

 

94. மத்திய இமயமலைத் தொடரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோடை வாழிடங்கள் எவை?

விடை: சிம்லா, முசௌரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங்

 

 

(iii) வெளி இமயமலை / சிவாலிக்

95. வெளி இமயமலைத் தொடரானது எங்கிருந்து எதுவரை பரவிக் காணப்படுகிறது?

விடை: ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை பரவிக் காணப்படுகிறது.

 

 

96. வெளி இமயமலைத் தொடரின் ஒரு பகுதி எதனால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது?

விடை: ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.

 

 

97. வெளி இமயமலைத் தொடரின் உயரம்?

விடை: 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது.

 

 

98. வெளி இமயமலையின் சராசரி உயரம்?

விடை: 1000 மீ

 

 

99. வெளி இமயமலையின் சராசரி அகலம்?

விடை: மேற்கில் 50 கிமீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது.

 

 

100. வெளி இமயமலை எப்படிப்பட்ட மலைத் தொடர்களாகும்?

விடை: மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.

Join the conversation