101. புவியில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் வளைகுடா நீரோட்டத்தின் (வெப்பம்) விளைவுகள்?
விடை: வளைகுடா நீரோட்டம் லேப்ரடார் கடல் நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக நியூபவுண்டுலாந்து கடற்கரையோரப் பகுதிகளில் அதிக பனிமூட்டத்தினை உருவாக்குகின்றது. வளைகுடா நீரோட்டம் கடற்வழிப் பயணத்திற்குத் தடையாக உள்ளது. மிகப் பெரிய மீன்பிடித்தளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
102. புவியில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் வட அட்லாண்டிக் நீரோட்டத்தின் (வெப்பம்) விளைவுகள்?
விடை: வட அட்லாண்டிக் நீரோட்டம் (வெப்பம்) வட அட்லாண்டிக் நீரோட்டம் உயர் அட்சப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் ஆண்டு முழுவதும் பனி உறையாமல் இருக்க உதவுகிறது. (உம்) ரோர்விக் துறைமுகம் (நார்வே), மர்மான்ஸ்க் மற்றும் செவிரோட்வின்ஸ்க் (இரஷ்யா)
103. புவியில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் லாப்ரடார் நீரோட்டத்தின் (குளிர்) விளைவுகள்?
விடை: லாப்ரடார் (குளிர்) நீரோட்டம் வளைகுடா நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக பனிமூட்டத்தினை உருவாக்கி, கடல் போக்குவரத்திற்குத் தடையை ஏற்படுத்துகிறது.
104. புவியில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் கேனரி நீரோட்டத்தின் (குளிர்) விளைவுகள்?
விடை: கேனரி நீரோட்டம் (குளிர்) சஹாரா பாலைவனத்தின் விரிவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
105. புவியில் தென் பசிபிக் பெருங்கடலில் உருவாகும் நீரோட்டம்?
விடை: பெருவியன் (அ) ஹம்போல்டு நீரோட்டம் (குளிர்)
106. புவியில் தென் பசிபிக் பெருங்கடலில் உருவாகும் பெருவியன் (அ) ஹம்போல்டு நீரோட்டத்தின் (குளிர்) விளைவுகள்?
விடை: தென் பசிபிக் பெருங்கடல் பெருவியன் (அ) ஹம்போல்டு நீரோட்டம் (குளிர்) அட்டகாமா, பாலைவனமாகவே இருப்பதற்குக் காரணமாக உள்ளது. தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி எல்-நினோவினால் வானிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியாவில் பருவக்காற்று சரியான நேரத்தில் தொடங்குவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
107. புவியில் வட பசிபிக் பெருங்கடலில் உருவாகும் நீரோட்டங்கள் எவை?
விடை:
குரோஷியோ நீரோட்டம் (வெப்பம்)
ஒயோஷியோ நீரோட்டம் (குளிர்)
அலாஸ்கா நீரோட்டம் (வெப்பம்)
கலிபோர்னியா நீரோட்டம்(குளிர்)
108. புவியில் வட பசிபிக் பெருங்கடலில் உருவாகும் குரோஷியோ நீரோட்டத்தின் விளைவுகள்?
விடை: அருகில் உள்ள பகுதிகளுக்கு அதிக அளவில் வெப்பத்தினைக் கடத்துவதினால் காற்று விரிவடைந்து மேகமூட்டத்தை உருவாக்கி மழைப்பொழிவைத் தருகின்றது.
109. புவியில் வட பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ஒயோஷியோ நீரோட்டத்தின் விளைவுகள்?
விடை: ஒயோஷியோ நீரோட்டம், குரோஷியோ நீரோட்டத்துடன் இணைவதால் ஹொக்கைடோ தீவில் அதிக பனிமூட்டத்தினை உருவாக்குவதுடன் கடல் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. ஆனால், ஹொக்கைடோ உலகின் மிகச் சிறந்த மீன் பிடித்தளமாக உள்ளது.
110. புவியில் வட பசிபிக் பெருங்கடலில் உருவாகும் அலாஸ்கா நீரோட்டத்தின் விளைவுகள்?
விடை: அலாஸ்காவின் துறைமுகங்களை, ஆண்டு முழுவதும் செயல்பட உதவுகிறது.
111. புவியில் வட பசிபிக் பெருங்கடலில் உருவாகும் கலிபோர்னியா நீரோட்டத்தின் விளைவுகள்?
விடை: கலிபோர்னியாவின் கடற்கரையோரப் பகுதிகளில் மேகமூட்டத்தினை உருவாக்குகின்றது. அரிசோனா மற்றும் சொனாரன் பாலைவனங்கள் உருவாக காரணமாக உள்ளது.
112. புவியில் இந்திய பெருங்கடலில் உருவாகும் நீரோட்டம்?
விடை: மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம் (குளிர்)
113. புவியில் இந்திய பெருங்கடலில் உருவாகும் மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டத்தின் (குளிர்) விளைவுகள்?
விடை: ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் மேகமூட்டத்தினை உருவாக்குகின்றது.மேற்கு ஆஸ்திரேலியப் பாலைவனம் உருவாகக் காரணமாகவும் உள்ளது.
BOX INFORMATION
114. ‘ஆயிரம் ஏரிகளின் நிலம்’, என்று அழைக்கப்படும் நாடு எது?
விடை: பின்லாந்து
115. பின்லாந்தில் எத்தனை ஏரிகள் உள்ளன?
விடை: 1,87,888 ஏரிகள் காணப்படுகின்றன.
116. புவியில் நிலத்தடி நீர்மட்டம் (Water table) என்பது?
விடை: நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே நிலத்தடி நீர்மட்டம் (Water table)
என்கிறோம்.
117. புவியில் நீர்க்கொள்படுகை (Aquifers) என்பது?
விடை: நீர், நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி நீர்க்கொள்படுகை (Aquifers) என்கிறோம்.
118. சில்வியா ஏர்ல் என்பவர்?
விடை: அமெரிக்காவின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.
119. கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக சில்வியா ஏர்ல் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி ‘தி டைம் இதழ்’ , இவருக்கு என்ன பட்டத்தை முதன்முதலில் வழங்கிச் சிறப்பித்துள்ளது?
விடை: ‘கோளத்தின் கதாநாயகன்’
120. ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் என்பவர்?
விடை: பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளர்.
121. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் (1910-1997), எதை பற்றி மிக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்?
விடை: ஆழ்கடலினைப் பற்றி
122. ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் எங்கு பணியாற்றினார்?
விடை: பிரான்ஸ் நாட்டின் கடற்படையில் தகவல் சேவை பிரிவில் பணியாற்றினார்.
123. ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் பிரான்ஸ் நாட்டின் கடற்படையில் தகவல் சேவை பிரிவில் பணியாற்றிய காலத்தில் எந்த நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்பட்டார்?
விடை: ஷாங்காய், ஜப்பான் மற்றும் சோவியத் ரஷ்யா
124. ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் 1945 பெற்ற விருது?
விடை: ‘போரின் சிலுவை’
125. ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1985
126. புவியில் உயரவிளக்கப்படம் (Hypsometric curve) என்பது?
விடை : நிலப் பகுதியிலோ அல்லது நீர்ப் பகுதியிலோ காணப்படும் நிலத்தோற்றங்களின் உயரத்தை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும்.
127. ‘Hypso’, என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
விடை : ‘உயரம்’ என்பதாகும்.
128. இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனம்?
விடை: ஒ என் ஜி சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்
129. ‘மும்பை ஹை பகுதியில் எத்தனை மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன?
விடை: 20 மில்லியன் டன்
130. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் சமவெளிகளை விட மிகவும் பரந்து காணப்படும் கடலடி சமவெளிகள் எவை?
விடை: அட்லாண்டிக் மற்றும் இந்தியப்பெருங்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளிகள்
131. புவியில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப்பெருங்கடலின் கடலடிச் சமவெளிகள் பரந்து காணப்படுவதற்கான காரணம்?
விடை: மிகப்பெரிய ஆறுகளுள் பல அட்லாண்டிக் மற்றும் இந்தியப்பெருங்கடலில் கலப்பதனால்
132. அட்லாண்டிக் மற்றும் இந்தியப்பெருங்கடலில் கலக்கும் ஆறுகள் எவை?
விடை: அமேசான், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா.
133. உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளையின் பெயர்?
விடை :டிராகன் துளை என்று பெயர்.
134. டிராகன் துளை பகுதியில் வாழும் மீனவர்கள் இதனை எவ்வாறு அழைக்கின்றனர்?
விடை: ‘தென் சீனக்கடலின் கண்’ என அழைக்கின்றனர்.
135. ‘பாத்தோம்கள்'(Fathoms) என்பது?
விடை : கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு.
136. சம ஆழக்கோடு (Isobath) என்பது?
விடை: ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு.
137. சம உவர்ப்புக்கோடு (Isohaline) என்பது?
விடை: ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு.
138. புவியில் அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை எதை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது?
விடை: விசைப்பொறி உருளை (hydroturbines) கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.
139. இந்தியாவில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் எங்கு நிறுவப்பட்டுள்ளன?
விடை: கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
140. இந்தியாவில் ஓதசக்தி உற்பத்தி செய்ய சாத்தியக் கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ள பகுதிகள் எவை?
விடை: காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்பு நிலப் பகுதிகள்
கடல் எல்லைகள்
141. பெரும்பாலான நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையில் இருந்து எத்தனை கடல் மைல்கள் (Nautical miles) என கணக்கிடப்படுகிறது?
விடை: 12 கடல் மைல்கள் (Nautical miles)
142. கடல் சட்டத்தின் மீதான மாநாடு எப்போது நடைபெற்றது?
விடை: 2013
143. 2013-ல் கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்றபோது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மைல்களை எந்த சபை நிர்ணயம் செய்தது?
விடை: ஐ.நா சபை நிர்ணயம் செய்தது.
144. ஐநா சபை ஜோர்டான் மற்றும் பாலவ் நாடுகளுக்கு எத்தனை கடல் மைல்கள் நிர்ணயம் செய்தது?
விடை : 3 கடல் மைல்கள்
145. ஐநா சபை பெனின், காங்கோ குடியரசு எல்சால்வடார் பெரு மற்றும் சோமாலியா நாடுகளுக்கு எத்தனை கடல் மைல்கள் நிர்ணயம் செய்தது?
விடை : 200 கடல் மைல்கள்
146. தேசிய கடல் சார் நிறுவனம் (National Institute of Oceanography – NIO) எப்போது நிறுவப்பட்டது?
விடை : 01.01.1996-ல் நிறுவப்பட்டது.
147. தேசிய கடல் சார் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : கோவாவில் உள்ள ‘டோனா பெளலா’
148. தேசிய கடல் சார் நிறுவனம் மேற்கொள்வது?
விடை : கடல்சார் அம்சங்கள், பெருங்கடல் பொறியியல், கடல் அகழாய்வு போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ள ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை தேசிய கடல் சார் நிறுவனம் மேற்கொள்கிறது.
149. உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு?
விடை : ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef)
150. ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef) எப்படி காணப்படுகிறது?
விடை: 2,900 தனித்த பவளத்திட்டுகளையும் 900 தீவுகளையும் உள்ளடக்கி 2,000 கி.மீ. நீண்டு காணப்படுகிறது.
151. ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef) எத்தனை சதுர கிமீ பரந்து காணப்படுகிறது?
விடை: 3,50,000 சதுர கிமீ
152. ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef) – ன் அமைவிடம் எங்கு உள்ளது?
விடை: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அருகேயுள்ள பவளக்கடலில் உள்ளது.
153. ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef) ஐ எங்கிருந்து காணலாம்?
விடை: விண்வெளியிலிருந்தும் காணலாம்.
154. புவியின் உயிரினப்பன்மை நிறைந்த இடங்களில் ஒன்றாக இருப்பது?
விடை: பரந்த பவளப்பாறை திட்டுகள்
155. பவளப்பாறைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன?
விடை: பல பில்லியன் நுண்ணிய உயிரியான பவளமொட்டுக்களால் பவளப்பாறைகள் உருவாக்கப்படுகின்றன.
156. உலகின் 7 இயற்கை அதிசயங்களில் ஒன்றாக ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef) ஐ அடையாளங்கண்டுள்ளது எது?
விடை: CNN
157. இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினம் எது?
விடை: கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்),
158. கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினமாக எப்போது அறிவிக்கப்பட்டது?
விடை: 2010-ல் அறிவிக்கப்பட்டது.
159. ஓர் அழிந்து வரும் உயிரினம் எது?
விடை: கங்கை வாழ் ஓங்கில்
பயிற்சி
I.சரியான விடையைத் தேர்வு செய்க.
1. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _____
அ) அதிகரிக்கும்
ஆ)குறையும்
இ) ஒரே அளவாக இருக்கும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: ஆ)குறையும்
2. கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்
அ) புவியின் சுழற்சி
ஆ) வெப்பநிலை வேறுபாடு
இ) உவர்ப்பிய வேறுபாடு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்
3. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகிறன்றன.
2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 2,3 மற்றும் 4 சரி
ஈ) 1,2 மற்றும் 3 சரி
விடை: ஆ) 1 மற்றும் 3 சரி
4. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்
அ) புவித்தட்டுகள் இணைதல்
ஆ)புவித்தட்டுகள் விலகுதல்
இ) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: ஆ)புவித்தட்டுகள் விலகுதல்
Book Page Number: 215
5. கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?
அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
இ) கடலடிசமவெளி,கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடல் அகழி
ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத்திட்டு, கடல் அகழி
விடை: அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
6. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது ?
அ) வளைகுடா நீரோட்டம் – பிசிபிக் பெருங்கடல்
ஆ) லாப்ரடார் கடல்நீரோட்டம் – வடஅட்லாண்டிக் பெருங்கடல்
இ) கேனரி கடல் நீரோட்டம் – மத்தியதரைக்கடல்
ஈ) மொசாம்பிக் கடல்நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்
விடை: அ) வளைகுடா நீரோட்டம் – பிசிபிக் பெருங்கடல்
II. கூற்று (A) காரணம் (R) கண்டறிக.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
1.கூற்று (A) – வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தில் கொடுக்கப்படும்.
காரணம் (R) : – இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது.
விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
2.கூற்று (A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் (R) : – அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
3.கூற்று (A) – கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
காரணம் (R) : – இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
4.கூற்று (A) :- வட்டப் பவளத்திட்டு (Atolls), அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன.
காரணம் (R) : – ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன.
விடை: இ) A சரி ஆனால் R தவறு
III. பொருத்துக
1. மரியானா அகழி – கடலில் உவர்ப்பியம் குறைவு
2. கிரேட் பேரியர் ரீப் – ஜப்பான் கடற்கரையோரம்
3. உயர்ஓதம் -பசிபிக் பெருங்கடலின் ஆழமானப்பகுதி
4. அதிக மழை – ஆஸ்திரேலியா
5. குரோசியோ நீரோட்டம் – இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
6. கண்டச்சரிவு – அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
விடை: 4 5 1 2 6 3
IV. சுருக்கமான விடையளி
1. ‘நீர்க்கோளம்’ பொருள் கூறுக.
2. நீரியல் சுழற்சி என்றால் என்ன?
3. கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?
4. கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
5. கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி.
V. காரணம் அறிக.
1. வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென்அரைக்கோளம் நீர்அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
2. கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
VI. வேறுபடுத்துக
1. உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
2. கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.
VII. விரிவான விடையளி
1. கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.
2. கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
3. கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?