பதினொன்றாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
புவியியல் – அலகு – 5
நீர்க்கோளம்
5.1 அறிமுகம்
1.உலகில் எத்தனை சதவீதம் நீர் அண்டார்டிக்காவில் நன்னீர் பெட்டகமாக உள்ளது?
விடை : 90% நீர்
2. உலகின் எத்தனை சதவீதம் மக்கள் புவியின் பாதிக்கு மேற்பட்ட மிக வறட்சியான பகுதியில் வசிக்கின்றனர்?
விடை: 85% மக்கள்
3.புவியில் நீர் என்பது?
விடை: புவியில் காணப்படும் பொதுவான பொருளாகும்.
4. புவியில் நீர் எதற்கு முக்கிய அங்கமாகும்?
விடை: புவியில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் நீர் ஒரு முக்கிய அங்கமாகும்.
5. புவியின் நீர்க்கோளம் என்பது?
விடை: புவியின் நான்கு கோளங்களில் ஒன்றாகும். நீர்க்கோளம் என்பது புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர், நிலத்தடி நீர், வளிமண்டலத்தில் காணப்படும் நீர் ஆகியவைகளைக் கொண்டதாகும்.
6. புவியில் நிலத்தடி நீராக காணப்படுவது?
விடை : ஒரு கணிசமான அளவு நீர் காணப்படுகிறது.
7. புவியின் வளிமண்டலத்தில் நீர் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
விடை: மூன்று நிலைகளில் (திட, திரவ மற்றும் வாயு) காணப்படுகிறது.
8. புவியின் நீர்க்கோளத்தில் நீரின் அளவு எப்படி இருக்கும்?
விடை: புவியின் நீர்க்கோளம் தொடர்ந்து இயக்கத்தில் உள்ளதால் நீரின் மொத்த அளவு காலப்போக்கில் மாறாது. புவிக்கோளத்திலேயே அதன் நிலைமாற்றப்பட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
9. புவியின் நீர்க்கோளம் எந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது?
விடை: தன்னிறைவு அமைப்பாக (closed System) செயல்பட்டு வருகிறது.
5.2 நிலம் மற்றும் நீரின் பரவல்
10. புவியானது எதனால் சூழப்பட்டுள்ளது?
விடை: நிலம் மற்றும் நீரால் சூழப்பட்டுள்ளது.
11. புவியின் மொத்தப் பரப்பில் நீரின் சதவீதம்?
விடை: 70.8%
12. புவியின் மொத்தப் பரப்பில் நீரின் பரப்பு?
விடை: 361 மில்லியன் சதுர கிலோமீட்டர்
13. புவியின் மொத்தப் பரப்பில் நிலத்தின் சதவீதம்?
விடை: 29.2%
14. புவியின் மொத்தப் பரப்பில் நிலத்தின் பரப்பு?
விடை: 148 மில்லியன் சதுர கிலோமீட்டர்
15. புவியில் எத்தனை சதவீதம் நீர் உவர்நீராக கடல்களிலும், பெருங்கடல்களிலும் காணப்படுகிறது?
விடை: 96.5% நீர்
16. புவியில் எத்தனை சதவீதம் நீர் நன்னீராக காணப்படுகிறது?
விடை: 2.5% மட்டுமே.
17. புவியில் உவர்ப்பான நிலத்தடி நீரும், உவர் ஏரி நீரும் இணைந்து எத்தனை சதவீதம் நீர் காணப்படுகிறது?
விடை: 1% நீர் காணப்படுகிறது.
5.3 நன்னீர்
18. புவியில் நன்னீர் என்பது?
விடை: கடல் நீரோடு ஒப்பிடும்பொழுது நீரில் உள்ள உப்பின் அளவு 1%க்கு குறைவாக இருந்தால் அதை நன்னீர் என்கிறோம்.
19. புவியில் ஓர நீர் (Marginal Water) என்பது?
விடை: 0.35% முதல் 1% வரை உவர்ப்பியம் கொண்டுள்ள நீரை ஓர நீர் (Marginal Water) என்கிறோம்.
20. புவியில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல இடங்களில் பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ள நீர் எது?
விடை: ஓர நீர்
21. புவியில் நன்னீர் பரவலில் எத்தனை சதவீதம் நீர் பனியாறுகளாகவும், பனி குமிழ்களாவும் (Glaciers and lce caps) முடக்கப்பட்டுள்ளது?
விடை: 68.6%
22. புவியில் நன்னீரானது எத்தனை சதவீதம் நிலத்தடி நீராக காணப்படுகிறது?
விடை: 30.1%
23. புவியில் நன்னீரானது எத்தனை சதவீதம் புவி மேற்பரப்பு நீராக காணப்படுகிறது?
விடை: 1.3%
24. புவி மேற்பரப்பு நீர் என்பது?
விடை: நிலம் மற்றும் கடல் பகுதியில் காணப்படும் பனிக்கட்டி, ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் உவர் சேற்று நிலங்களில் காணப்படும் நீர், மண், வளிமண்டலம் மற்றும் உயிர்க்கோளத்தில் காணப்படும் ஈரப்பதம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
25. புவியின் நன்னீரின் ஆதாரங்களாக இருப்பவை?
விடை: உலகெங்கிலும் காணப்படும் ஆறுகளும், ஏரிகளும், நன்னீரின் ஆதாரங்களாக இருக்கின்றன.
26. சமுதாயத்திற்கு மிகவும் இன்றியமையாதது எது?
விடை: நன்னீர்
ஆறுகள்
27. புவியில் ஆறுகள் எங்கு உற்பத்தியாகின்றன?
விடை: ஆறுகள் பெரும்பாலும் மலைகளில் காணப்படும் பனியாறுகளிலோ, ஊற்றுகளிலோ அல்லது ஏரிகளிலோ உற்பத்தியாகின்றன.
28. கங்கை ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
விடை: இமயமலையில் உள்ள ‘கங்கோத்திரி’ என்ற பனியாற்றில் உற்பத்தியாகின்றன.
29. காவிரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
விடை: கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் ‘தலைக்காவிரி’ என்ற ஊற்றில் உற்பத்தியாகின்றன.
30. நைல் நதி எங்கு உற்பத்தியாகிறது?
விடை: உகாண்டா நாட்டிலுள்ள ‘விக்டோரியா எரியில்’ உற்பத்தியாகிறது.
31. புவியில் உள்ள ஆறுகள் இறுதியில் எங்கு விழுகிறது?
விடை: ஆறுகள் வரையறைக்குட்பட்ட இரு கரைகளுக்கிடையேயான வழியில் ஓடி இறுதியில் கடலின் முகத்துவாரத்தில் அல்லது ஒரு ஏரியில் விழுகிறது.
32. புவியில் ‘உள்நாட்டு வடிகால்’ (Inland drainage) என்பது?
விடை: ஒரு ஆறு ஏரியிலோ அல்லது நிலத்தால் சூழப்பட்ட உள்நாட்டு கடலிலோ கலந்தால் அதனை ‘உள்நாட்டு வடிகால்’ (Inland drainage) என்கிறோம்.
33. உலகிலேயே மிக நீளமான நதி எது?
விடை: நைல் நதி
34. நைல் நதி எந்த நாட்டில் உள்ளது?
விடை: ஆப்பிரிக்காவில் உள்ளது.
35. நைல் நதி எந்த நாடுகள் வழியே ஓடுகிறது?
விடை: நைல் நதி எகிப்து, உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா, காங்கோ, ருவாண்டா, புருண்டி, சூடான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் வழியே ஓடுகிறது.
36. நைல் நதி இறுதியாக எந்த கடலில் கலக்கிறது?
விடை: கெய்ரோ நகரத்திற்கு வடக்கில் டெல்டாவை உருவாக்கி மத்திய தரைக்கடலில் கலக்கிறது.
37. உலகின் இரண்டாவது நீளமான நதி?
விடை: அமேசான்
38. அமேசான் ஆறு எந்த நாட்டில் உள்ளது?
விடை: தென் அமெரிக்காவில் உள்ளது.
39. உலகின் மற்ற ஆறுகளைக் காட்டிலும் மிகப் பெரிய ஆற்றுக்கொப்பரையைக் கொண்டுள்ள ஆறு எது?
விடை: அமேசான் ஆறு
40. அமேசான் ஆறு எந்த நாடுகள் வழியாக ஓடுகிறது?
விடை: பெரு, கொலம்பியா மற்றும் பிரேசில் வழியாக ஓடுகிறது.
41. அமேசான் ஆறு இறுதியாக எந்த கடலில் கலக்கிறது?
விடை: தென் அட்லாண்டிக் பெருங்கடலில் கலப்பதற்கு முன்பாக கழிமுக டெல்டாவை உருவாக்குகிறது.
42. ஆசியாவின் மிக நீளமான ஆறு?
விடை: யாங்ட்ஸிகியாங் ஆறு
43. யாங்ட்ஸிகியாங் ஆறு எந்த நாட்டில் உள்ளது?
விடை: சீனாவில் உள்ளது.
44. உலகின் மூன்றாவது நீளமான ஆறு?
விடை: யாங்ட்ஸிகியாங் ஆறு
45. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிக நீளமான ஆறு எது?
விடை: மிஸிஸிப்பி – மிசௌரி
46. உலகின் நான்காவது பெரிய ஆறு எது?
விடை: மிஸிஸிப்பி – மிசௌரி
47. உலகில் உள்ள ஆறுகளில் காணப்படும் நீரின் அளவு?
விடை: 2120 கன கிலோ மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
48. மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர ஆசியாவில் ஓடும் ஆறுகளின் நீரின் அளவு?
விடை: வருடத்திற்கு 13,300 கன கிலோ மீட்டர் ஆகும்.
49. வட அமெரிக்காவில் ஓடும் ஆறுகளின் நீரின் அளவு?
விடை: வருடத்திற்கு 12,000 கன கிலோ மீட்டராக உள்ளது.
ஏரி
50. புவியில் ஏரி என்பது?
விடை: ஒரு பெரிய அளவிலான நீர் நிலையாகும்.
51. புவியில் ஏரிகள் எப்படி உருவாகின்றன?
விடை: ஏரிகள் பெரும்பாலும் புவித் தட்டு நகர்வு, எரிமலை, ஆறுகள், பனியாறுகள் போன்றவற்றால் உருவாகியிருக்கலாம். சில சமயங்களில் விண்கற்கள் விழுந்து ஏற்படுத்திய பள்ளங்களாக இருக்கலாம்.
52. புவி அசைவினால் ஏற்பட்ட ஏரிகள் எவை?
விடை: காஸ்பியன் கடல், பைக்கால் ஏரி, உலார் ஏரி ஆகியவை புவி அசைவினால் ஏற்பட்டவையாகும்.
53. உலகின் மிக ஆழமான நன்னீர் ஏரி?
விடை: பைக்கால் ஏரி
54. உலகின் மிக பெரிய உப்பு ஏரி?
விடை: காஸ்பியன் கடல் ஆகும்.
55. புவியில் உப்பங்கழி ஏரிகள் எப்படி உருவாகின்றன?
விடை: கடல் அலை படிவுகளால் உருவாகின்றன.
56. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உப்பங்கழி ஏரி எது?
விடை: சிலிகா ஏரி
57. இந்தியாவில் லோனார் ஏரி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
விடை: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது.
58. லோனார் ஏரி எப்படி உருவானது?
விடை: பிளைஸ்டோசின் (Pleistocene Epoch) காலக்கட்டத்தில் விண்கற்கள் புவி மீது ஏற்படுத்திய பள்ளம் என நம்பப்படுகிறது.
ஈர நிலங்கள்
59. புவியில் ஈரநிலங்கள் என்பவை?
விடை:
1. சேறு சகதி, தாவர கழிவுகள் கொண்ட நிலங்களையும்,
2. நீர் ஒடிக் கொண்டிருக்கும் அல்லது தேங்கி நிற்கும் நிலங்களையும்
3. நன்னீர் அல்லது உவர் நீர் பாயும் இடங்களையும் மற்றும்
4. தாழ் ஓத நாட்களில் கடல் நீர் ஆறு மீட்டருக்கும் குறைவாக உள்ள இடங்களையும் குறிக்கும்.
சேற்று நிலங்கள் (Marsh)
60. புவியில் சேற்று நிலங்கள் என்பவை?
விடை: ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களை சுற்றியுள்ள ஈர நிலங்களை குறிக்கும்.
61. புவியில் சேற்று நிலங்கள் எப்படி காணப்படும்?
விடை: சேற்று நிலங்களில் செழிப்பான மரங்கள் இல்லாமல் பெரும்பாலும் புற்களும், நாணல்களும் மட்டும் காணப்படும்.
62. இந்தியாவிலுள்ள உள்ள உவர் சேற்று நிலப்பகுதி எது?
விடை: கட்ச் வளைகுடா பகுதி
சதுப்பு நிலங்கள் (Swamp)
63. புவியில் சதுப்பு நிலம் என்பது?
விடை: மெதுவாக நகரும் ஆறுகளின் ஓரங்களில் காணப்படும் ஈரநிலமாகும்.
64. புவியில் சதுப்பு நிலம் எப்படி காணப்படும்?
விடை: அடர்த்தியான மரங்களும், கொடிகளும் வளர்ந்து காணப்படும்.
65. இந்தியாவிலுள்ள நன்னீர் சதுப்பு நிலம் எது?
விடை: பள்ளிக்கரணை
66. இந்தியாவில் பள்ளிக்கரணை எங்கு அமைந்துள்ளது?
விடை: தென் சென்னை பகுதியில் வங்காள விரிகுடாவிற்கு அருகில் பள்ளிக்கரணை அமைந்துள்ளது.
நிலத்தடி நீர்
67. உலகின் அனைத்து நாடுகளுக்கும் மதிப்பு வாய்ந்த ஒரு வளம் எது?
விடை: நிலத்தடி நீர்
68. புவியில் நிலத்தடி நீர் எப்படி நிரப்பப்படுகிறது?
விடை: நில மேற்பரப்பில் பெய்யும் மழைநீரானது புவிக்குள் ஊடுருவி நிலத்தடி நீராக நிரப்பப்படுகிறது.
69. புவியில் நீர்க்கொள் படுகை (Aquifer) என்பது?
விடை: நீர் ஊடுருவும் பாறைகள் வழியாக நீரானது உள்ளிறங்கி நீர் உட்புகா பாறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் பகுதியை நீர்க்கொள் படுகை (Aquifer) என்கிறோம்.
70. புவியில் நிலத்தடி நீர் மட்டம் என்பது?
விடை: ஒரு நீர்க்கொள் படுகையின் பூரித நிலையை அடைந்த மேல் மட்ட அடுக்கை நிலத்தடி நீர் மட்டம் என்கிறோம்.
71. புவியில் நிலத்தடி நீர்மட்டத்தின் தன்மை எப்படி இருக்கும்?
விடை: நிலத்தடி நீர்மட்டம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது.
5.4 பனிக்கோளம்
72. புவியில் பனிக்கோளம் என்பது?
விடை: பனியாறுகள், பனிப்படலம் (ice sheets) பனியுறை, பனி ஏரி , நிரந்தர பனிப் பகுதிகள், பருவ காலங்களில் பொழியும் பனி, வளி மண்டலத்தில் உள்ள பனிப்படிகம் போன்ற வடிவில் உறைந்து காணப்படும் நீராகும்.
73. புவியின் காலநிலையானது பெரிய அளவில் எதன் தாக்கத்திற்குள்ளாகிறது?
விடை: பனிக்கோளம் புவியின் ஆற்றல் சமன்பாட்டைக் கட்டுப்படுத்துவதால், புவியின் காலநிலையானது பெரிய அளவில் பனிக்கோளத்தின் தாக்கத்திற்குள்ளாகிறது.
74. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவில் காணப்படும் நிரந்தர பனிப் பகுதியானது எப்படி காணப்படுகிறது?
விடை: பனிப்படலம், மலைப்பனியாறு மற்றும் உயர் அட்சப்பகுதிகளில் நிரந்தர பனிப்படிவாகவும் காணப்படுகிறது.
75. புவியில் நிரந்தர பனிப்படிவு (Permafrost) என்பது?
விடை: தொடர்ச்சியாக இரண்டாண்டிற்கு மேல், நிலத்திற்கு (பாறை மற்றும் மண்) மேலும் கீழும் நீர் உறைந்து காணப்படுவதை நிரந்தர பனிப்படிவு (Permafrost) என்கிறோம்.
76. புவியில் நிரந்தர பனிப்படிவு எங்கு காணப்படுகிறது?
விடை: பெரும்பாலான நிரந்தர பனிப்படிவு உயர் அட்ச பகுதிகளில் காணப்படுகிறது.
77. ஆஃல்பைன் நிரந்தர பனிப்படிவு எங்கு காணப்படுகிறது?
விடை : தாழ் அட்சப் பகுதிகளில் உள்ள உயரமான மலைகளில் காணப்படுகிறது.
78. புவியில் மத்திய அட்ச பகுதிகளிலும் தாழ் அட்சங்களின் உயரமான மலைப்பகுதிகளிலும் மட்டும் காணப்படுவது?
விடை: பருவ காலப் பனி மற்றும் பனிப் படிகப் பொழிவு காணப்படுகிறது.
79. புவியில் கடல்பனி (Sea ice) என்பது?
விடை: உறைந்த நிலையில் உள்ள கடல் நீரை குறிக்கும்.
80. புவியில் கடல் பனியின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் உருகுதல் ஆகிய அனைத்தும் எதன் வரையறைக்குட்பட்டது?
விடை: கடலின் வரையறைக்குட்பட்டது.
81. புவியில் பனிப் படிவ அடுக்கு (iceshelf) என்பது?
விடை: அடர்த்தியான மிதந்து கொண்டிருக்கும் பனிப்பலகையை குறிக்கும்.
82. புவியில் பனிப் படிவ அடுக்கு எப்படி உருவாகிறது?
விடை: பனியாறு அல்லது பனிக்கட்டிகள் கடற்கரையை நோக்கி வந்து கடலில் கலக்கும் போது உருவாகிறது.
83. உலகின் மிகப்பெரிய பனிப் படிவ அடுக்குகளான ராஸ் மற்றும் ஃபில்னர் – ரான் பனிப்படிவ அடுக்குகள் அண்டார்டிக்காவில் காணப்படுகின்றன.
83. உலகின் மிகப்பெரிய பனிப் படிவ அடுக்குகளான ராஸ் மற்றும் ஃபில்னர் – ரான் பனிப்படிவ அடுக்குகள் எங்கு காணப்படுகின்றன?
விடை: அண்டார்டிக்காவில் காணப்படுகின்றன.
84. புவியில் பனிப்பாறைகள் என்பது?
விடை: பனியாறுகளிலிருந்தோ, பனிக்கட்டியிலிருந்தோ உடைந்து, பிரிந்து வந்து கடலில் மிதந்து கொண்டிருப்பது பனிப்பாறைகள் ஆகும்.
5.5 பெருங்கடல்களும், கடல்களும்
85. புவியில் கடல் நீர் என்பது?
விடை: பெருங்கடல்களிலும், கடல்களிலும் காணப்படும் நீரை கடல் நீர் என்கிறோம்.
86. புவியின் பெருங்கடல்கள் என்பது?
விடை: புவியின் உள் இயக்கச் சக்திகளால் உண்டான கண்டங்களை சூழ்ந்து காணப்படும் தொடர்ச்சியான நீர் பரப்பை பெருங்கடல்கள் (Ocean) என்கிறோம்.
87. பெருங்கடல்கள் (ocean) என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
விடை: ஓசியனஸ் (oceaonus) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்துப் பெறப்பட்டது.
88. ஓசியனஸ் என்ற சொல்லிற்கு பொருள்?
விடை: புவியைச் சுற்றிக் காணப்படும் மிகப்பெரிய ஆறு என்பது பொருள்.
89. புவியின் மொத்த பெருங்கடல் பரப்பு?
விடை : 361 மில்லியன் சதுர கிலோ மீட்டராகும்.
90. புவி தற்போது எத்தனை பெருங்கடல்களைக் கொண்டுள்ளது?
விடை: ஐந்து. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப்பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்.
91. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப்பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்வாறு காணப்படுகிறது?
விடை: ஓர் உலகப் பெருங்கடலாக அல்லது புவிப் பெருங்கடலாகக் காணப்படுகிறது.
92. புவி நிலத்தோற்றத்தின் உயரமும், கடலடி நிலத்தோற்றத்தின் ஆழமும் எதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது?
விடை: நீர் விரைவாக தனது சமமேற்பரப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் இயல்பு காரணமாக கடல் நீர் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புவி நிலத்தோற்றத்தின் உயரமும், கடலடி நிலத்தோற்றத்தின் ஆழமும் கணக்கிடப்படுகிறது.
கடல்
93. புவியில் கடல் (sea) என்பது?
விடை: உவர் நீர் கொண்ட ஒரு பகுதியாகும் (பொதுவாக பெருங்கடலின் ஒரு பகுதி) முழுவதுமாகவோ ஒரு பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்டுள்ள நீர்பகுதியை குறிக்கும்.
94. புவியில் தீவருகு கடல் (marginal sea) என்பது?
விடை: தீவருகு கடலின் ஒரு பகுதி தீவுகளினால் அல்லது தீவுக் கூட்டங்களால் அல்லது தீபகற்பத்தால் சூழ்ந்து அல்லது நிலப்பகுதியை நோக்கி காணப்படும் பெருங்கடலின் விரிவாக்கத்தால் சூழப்பட்டு காணப்படும் கடலாகும்.
95. பொதுவாக புவியில் தீவருகு கடல் (marginal sea) எப்படி இருக்கும்?
விடை: ஆழமற்றதாக இருக்கும்.
96. இந்திய பெருங்கடலில் உள்ள தீவருகு கடல்கள் எவை?
விடை: அந்தமான் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, ஜாவா கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல்.
விரிகுடா (Bay)
97. புவியில் விரிகுடா என்பது?
விடை: மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்டு ஒரு பக்கம் ஒரு பெருங்கடலை நோக்கி பெரிய திறப்பைக் கொண்டிருக்கும் நீர்ப் பகுதியை குறிக்கும்.
வளைகுடா (Gulf)
98. புவியில் வளைகுடா என்பது?
விடை: குறுகிய திறப்பைக் கொண்டு அனைத்துப் பக்கத்திலும் நிலத்தால் சூழப்பட்ட பெரிய அளவிலான நீர்ப்பகுதியாகும்.
99. உலகின் மிகப் பெரிய வளைகுடா?
விடை: மெக்ஸிகோ வளைகுடாவாகும்.
100. புவியில் வளைகுடாவின் வகைகள் எவை?
விடை: பத்திரமான வளைகுடா (sound), கடற்கழி (creek), கடற்சுருக்கு (bight), சிறுவளைகுடா (cove) ஆகியவை வளைகுடாவின் வகைகள் ஆகும்.