WA – HYDROSPHERE – 04
About Lesson

201. பசிபிக் பெருங்கடலில் எத்தனை அகழிகள் உள்ளன?

விடை: 22

 

 

202. உலகிலேயே ஆழமான கடல் பகுதி எது?

விடை: மரியானா அகழியில் காணப்படும் சேலஞ்சர் பள்ளம்

 

 

203. மரியானா அகழியில் காணப்படும் சேலஞ்சர் பள்ளம் எந்தக் கடலில் உள்ளது?

விடை: வட பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

 

 

204. மரியானா அகழியில் காணப்படும் சேலஞ்சர் பள்ளத்தின் ஆழம்?

விடை: 10,994 மீட்டர்

 

 

205. புவியில் அகழி எப்படி உருவாகிறது?

விடை: குவியும் எல்லை (Convergent boundary) பகுதியில் ஒரு புவித் தட்டின் கீழ் மற்றொரு புவித் தட்டு அமிழ்வதால் அகழி உருவாகிறது.

 

 

உலகின் முக்கிய ஆழ்கடல் பகுதிகள்
206. ஆல்ரிக் அகழியின் வேறு பெயர்?

விடை: டோங்கா அகழி

 

 

207. ஆல்ரிக் அகழி எந்த கடலில் அமைந்துள்ளது?

விடை: தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது

 

 

208. ஆல்ரிக் அகழியின் ஆழம்?

விடை: 10,882 மீ

 

 

209. குரில் அகழி எந்த கடலில் அமைந்துள்ளது?

விடை: வட பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது

 

 

210. குரில் அகழியின் ஆழம்?

விடை: 10,554 மீ

 

 

211. டிசார் ரோமான்ச் அகழி எந்த கடலில் அமைந்துள்ளது?

விடை: தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

 

 

212. டிசார் ரோமான்ச் அகழியின் ஆழம்?

விடை: 7,761 மீ

 

213. சுண்டா அகழி எந்த கடலில் அமைந்துள்ளது?

விடை: கிழக்கு இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது.

 

 

214. சுண்டா அகழியின் ஆழம்?

விடை: 7,450 மீ

 

 

தீவுகள் (Islands)
215. புவியில் தீவுகள் என்பது?

விடை: அனைத்துப் பக்கங்களிலும் நீரினால் சூழப்பட்டு கடலில் காணப்படும் நிலப்பகுதிகளை தீவுகள் என்கிறோம்.

 

 

216. புவியில் தீவுகள் எப்படி தோன்றியதாக இருக்கலாம்?

விடை: தீவுகள் கண்டத்திட்டு பகுதிகளிலோ, கடலடியிலிருந்தோ தோன்றியதாக இருக்கலாம்.

 

 

217. புவியில் பெரும்பாலான தீவுகள் எதனால் உருவானவை?

விடை: எரிமலைச் செயலினால் உருவானவை.

 

 

218. புவியில் தீவுக் கூட்டங்கள் (Archipelago) எப்படி உருவானவை?

விடை: பெருங்கடல் தட்டு அழுத்தியதால் உருவானவை.

 

 

219. புவியில் பெருங்கடல் தட்டு அழுத்தியதால் உருவான தீவுக் கூட்டத்திற்கு உதாரணம்?

விடை: ஜப்பான் தீவுக் கூட்டம்

 

 

220. புவியில் “பவளத் தீவுகள்” அல்லது “முருகைத் தீவுகள்” என்பது?

 

விடை: கடல்வாழ் நுண்ணுயிரிகள் மற்றும் பவளப்பாறைகள் அயன மண்டல வெப்ப நீரில் தோன்றி உருவாக்கும் தீவுகள் “பவளத் தீவுகள்” அல்லது “முருகைத் தீவுகள்” ஆகும்.

 

 

221. இந்தியாவின் லட்சத்தீவுகள் (யூனியன் பிரதேசம்) எதனால் உருவானது?

விடை: பவளப்பாறைகளால் உருவானது.

 

 

222. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகள் எதனால் உருவானது?

விடை: எரிமலைகளால் உருவானது.

 

 

ஆழ்கடல் மட்டக் குன்றுகள் (Guyot)
223. புவியில் ஆழ்கடல் மட்டக் குன்றுகள் என்பது?

விடை: தட்டையான உச்சிப் பகுதிகளை கொண்டு கடலுக்கடியில் காணப்படும் எரிமலைக் குன்றுகள் “ஆழ்கடல் மட்டக் குன்றுகள்” என்று அழைக்கப்படுகின்றன.

 

 

224. புவியில் ஆழ்கடல் மட்டக்குன்றுகள் எப்படி உருவாகிறது?

விடை: புவித்தட்டுகள் மெதுவாக நகர்வதால் உண்டாகும் எரிமலை சங்கிலித் தொடரின் ஒரு பகுதியாகும்.

 

 

கடற்குன்றுகள் (Seamounts)
225. புவியில் கடற்குன்றுகள் என்பது?

விடை: கடல் நீருக்கடியில் காணப்படும் கூம்பு வடிவ எரிமலைகளை ‘கடற்குன்றுகள்’ என்கிறோம்.

 

 

226. புவியில் கடற்குன்றுகள் எப்படி காணப்படும்?

விடை: தனது சுற்றுபுற நிலப்பரப்பிலிருந்து ஆயிரம் மீட்டர் அல்லது அதற்கு மேல் தனியாக உயர்ந்து நிற்கும் மலையாகும்.

 

 

227. புவியில் கடற்குன்றுகள் எப்பொழுதும் எதற்கு மேல் தெரிவது கிடையாது?

விடை: நீருக்கு மேல் தெரிவது கிடையாது.

 

 

228. புவியில் கடற்குன்றுகள் மொத்த கடலடி பரப்பில் எத்தனை சதவீதம்?

விடை: 4.39 சதவீதமாகும்.

 

 

229. புவியில் கடற்குன்றுகளும், கடல் மட்டக்குன்றுகளும் அதிக அளவில் எங்கு காணப்படுகின்றன?

விடை: வடபசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன.

 

 

பசிபிக் பெருங்கடலடி நிலத்தோற்றங்கள்
230. பசிபிக் பெருங்கடலில் கிழக்கு கடற்கரையில் அகழிகள் அமைந்துள்ளதால் இங்குள்ள கண்டத்திட்டுகள் எப்படி காணப்படுகின்றன?

விடை: மிகவும் குறுகியதாகக் காணப்படுகின்றன.

 

 

231. பசிபிக்பெருங்கடலின் மேற்கு பகுதியில் எப்படி கண்டத் திட்டுகள் காணப்படுகின்றன?

விடை: அகலமான கண்டத் திட்டுகள் காணப்படுகின்றன.

 

 

232. ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் கண்டத்திட்டுகளின் அகலம்?

விடை: 160 கி.மீ. முதல் 1600 கி.மீ அகலம் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றன.

 

 

233. பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சமவெளிகள் எப்படி காணப்படுகின்றன?

விடை: ஆழ்கடல் மலைத்தொடர்கள் அதிகமாக இல்லாததால் ஆழ்கடல் சமவெளிகள் மிகவும் அகலமாக காணப்படுகின்றன.

 

 

234. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் சில முக்கியமான ஆழ்கடல் மலைத்தொடர்கள் எவை?

விடை: ஆல்பட்ராஸ் பீடபூமி, கோகோஸ் மலைத்தொடர், அலுசியன் மலைத்தொடர் ஆகியன ஆகும்.

 

 

235. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் முக்கியமான கொப்பரைகள் எவை?

விடை: நியூசிலாந்திற்கு அருகிலுள்ள டாஸ்மேனியா கொப்பரை மற்றும் கிழக்கு பசிபிக் கொப்பரை ஆகியன பசிபிக் பெருங்கடலில் காணப்படும் முக்கியமான கொப்பரைகளாகும்.

 

 

236. பசிபிக் பெருங்கடல் எவ்வளவு தீவுகளைக் கொண்டுள்ளது?

விடை: 25,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.

 

 

237. புவியில் அதிக எண்ணிக்கையிலான தீவுக்கூட்டங்கள் எங்கு காணப்படுகின்றன?

விடை: வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன.

 

 

238. ஹவாய் தீவுகள் எப்படி உருவானவை?

விடை: எரிமலை வெடிப்பினால் உருவானவை.

 

 

239. பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதி எது?

விடை: சேலஞ்சர் பள்ளம் மரியானா அகழியில் பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியாகும் (10994 மீட்டர்)

 

 

அட்லாண்டிக் கடலடி நிலத்தோற்றங்கள்
240. வட அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டத்திட்டுகள் எங்கு காணப்படுகின்றன?

விடை: நியுபவுண்ட்லாந்து (கிராண்ட் திட்டு) மற்றும் பிரிட்டிஷ் தீவுகளை (டாகர் திட்டு) சுற்றிலும் விரிவான கண்டத்திட்டுகள் காணப்படுகின்றன.

 

 

241. வட அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டத்திட்டுகள் எங்கு காணப்படுகின்றன?

விடை: தென் அட்லாண்டிக் பகுதியில் பாகியா பிளாங்காவுக்கும் அண்டார்டிக்காவுக்கும் இடையில் மிக விரிவான கண்டத்திட்டு காணப்படுகிறது.

 

 

242. புவியில் மிகவும் ஆச்சரியமான கடலடி நிலத்தோற்றமாக இருப்பது?

விடை: ‘S’ வடிவில் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அமைந்துள்ளது.

 

 

243. S வடிவில் உள்ள மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் நீளம்?

விடை: 16,000 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது.

 

 

244. மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் பரவல்?

விடை: வடக்கில் ஐஸ்லாந்திலிருந்து தெற்கில் பவெளட் தீவு வரை (Bouvet Island) செல்கிறது.

 

 

245. மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் வட அட்லாண்டிக் பகுதியில் பிரிக்கும் புவித் தட்டுகள் எவை?

விடை: யுரேஷியன் புவித்தட்டையும் வட அமெரிக்க புவித்தட்டையும் வட அட்லாண்டிக் பகுதியில் பிரிக்கின்றது.

 

 

246. மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் தென் அட்லாண்டிக் பகுதியில் பிரிக்கும் புவித் தட்டுகள் எவை?

விடை: ஆப்பிரிக்கப் புவித்தட்டையும் தென் அமெரிக்கப் புவித்தட்டையும் தென் அட்லாண்டிக் பகுதியில் பிரிக்கின்றது.

 

 

247. மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரில் காணப்படும் சிகரங்கள் எவை?

விடை: ஐஸ்லாந்து மற்றும் பாரோ போன்ற சில சிகரங்கள் காணப்படுகின்றன.

 

 

248. அட்லாண்டிக் பெருங்கடலை கிழக்கு, மேற்கு என இரு பெரும் கொப்பரைகளாகப் பிரிக்கும் மலைத்தொடர்?

விடை: மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர்

 

 

249. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கொப்பரைகள் எவை?

விடை: கிழக்கு மற்றும் மேற்கு கொப்பரை, ஸ்பெயின் கொப்பரை, வடக்கு மற்றும் தெற்கு கானரி கொப்பரை, கினியா கொப்பரை, பிரேசில் கொப்பரை மற்றும் லாபரடார் கொப்பரை

 

 

250. அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் பள்ளங்களில் மிகவும் ஆழமானது?
விடை: பியூர்ட்டோரிக்கோ பள்ளமாகும் ஆகும்.

251. பியூர்ட்டோரிக்கோ பள்ளத்தின் ஆழம்?

விடை: 8,380 மீட்டர்

 

 

252. அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் ஆழ்கடல் பள்ளங்கள் எவை?

விடை: ரோமான்ச் பள்ளம் மற்றும் தெற்கு சாண்ட்விச் அகழி ஆகியன அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் ஆழ்கடல் பள்ளங்களாகும்.

 

 

253. புவியில் மேற்கிந்திய தீவுக்கூட்டம் எங்கு காணப்படுகிறது?

விடை: வட அமெரிக்காவிற்கு அருகில் மேற்கிந்திய தீவுக்கூட்டம் காணப்படுகிறது.

 

 

254. வட அட்லாண்டிக் கண்டத்திட்டுப் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் எவை?

விடை: பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் நியுபவுண்ட்லாந்து ஆகியன புகழ்பெற்ற தீவுகள் ஆகும்.

 

 

255. தென் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் காணப்படும் தீவுகள் எவை?

விடை: சாண்ட்விச் தீவுகள், ஜார்ஜியா தீவுகள், பாக்லாந்து, ஷெட்லாந்து தீவுகள் ஆகியவை காணப்படுகின்றன.

 

 

இந்திய பெருங்கடலடி நிலத்தோற்றங்கள்
256. இந்திய பெருங்கடலில் கண்டத்திட்டானது எந்த அகலத்தில் காணப்படுகிறது?

விடை: வேறுபட்ட அகலத்தில் காணப்படுகிறது.

 

 

257. அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கண்டத்திட்டின் அகலம்?

விடை: 192 கி.மீ. முதல் 280 கி.மீ. வரையிலான வேறுபட்ட அகலத்தில் காணப்படுகிறது.

 

 

258. அயன மண்டலத்தில் அமைந்துள்ள இந்திய பெருங்கடலில் காணப்படுபவை?

விடை: பலவகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன.

 

 

259. “அராபிக் இந்திய மலைத்தொடர்” என்பது?

விடை: ஒரு தொடர்ச்சியான மத்திய மலைத்தொடர் ஆகும்.

 

 

260. ஒரு தொடர்ச்சியான மத்திய மலைத்தொடரைக் கொண்டுள்ள பெருங்கடல் எது?

விடை: இந்திய பெருங்கடல்

 

 

261. இந்தியப் பெருங்கடலில் காணப்படும் மலைத்தொடர்கள் எவை?

விடை: அராபிக் இந்திய மலைத்தொடர், கிழக்கிந்திய மலைத்தொடர்கள், மேற்கு ஆஸ்திரேலிய மலைத்தொடர், தெற்கு மடகாஸ்கர் மலைத்தொடர் ஆகியவைகளும் காணப்படுகின்றன.

 

 

262. இந்திய பெருங்கடலில் காணப்படும் கொப்பரைகள் எவை?

விடை: கொமரோ கொப்பரை, வட ஆஸ்திரேலியக் கொப்பரை, தென் இந்தியக் கொப்பரை, அரேபியக் கொப்பரை ஆகியவை இந்திய பெருங்கடலில் காணப்படும் கொப்பரைகளாகும்.

 

263. இந்தியப் பெருங்கடலின் சராசரி ஆழம்?

விடை: 3,890 மீட்டர் ஆகும்.

 

 

264. இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி எது?

விடை: ஜாவா தீவுக்கருகில் காணப்படும் சுண்டா ஆழ்கடல் பள்ளம் தான் இந்தியப் பெருங்கடலின் ஆழமான (7,450 மீட்டர்) பகுதியாகும்.

 

 

265. இந்தியப் பெருங்கடலில் காணப்படும் முக்கியத் தீவுகள் எவை?

விடை: மடகாஸ்கரும் இலங்கையும் இந்தியப் பெருங்கடலில் காணப்படும் முக்கியத் தீவுகள் ஆகும்.

 

 

266. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகள் எதனோடு தொடர்ச்சியான பகுதியாகும்?

விடை: இமயமலையின் பகுதியான அரக்கன் யோமா மலைத்தொடரின் தொடச்சியாக கடல் மேலெழுந்த பகுதியாகும்.

 

 

267. எரிமலையினால் உண்டாகும் ஹாட் ஸ்பாட் எங்கு அமைந்துள்ளது?

விடை: ரியூனியன் தீவில் அமைந்துள்ளது.

 

 

5.9 பெருங்கடலின் வெப்பநிலை
268. புவியில் பெருங்கடல் வெப்பநிலை என்பது?

விடை: கடல் நீரின் குளிர்ந்த நிலை அல்லது வெப்பமான நிலையை அளந்து கூறுவதே பெருங்கடல் வெப்பநிலை எனப்படும்.

 

 

269. பொதுவாக வெப்ப நிலையானது வெப்பமானியைப் பயன்படுத்தி எந்த அலகில் கூறப்படுகிறது?

விடை: ‘டிகிரி செல்சியஸ்’

 

 

270. புவியில் பெருங்கடல் நீரானது அதிகபட்ச வெப்பத்தை எங்கிருந்து பெறுகிறது?

விடை: சூரியனின் வெப்ப கதிர்வீசல் மூலமாக பெறுகிறது.

 

 

271. புவியில் நீரின் வெப்பம் மற்றும் குளிர்ச்சி அடையும் திறன் நிலத்தின் தன்மையிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

விடை: குறிப்பிட்ட அளவு வேறுபடுகிறது.

 

 

272. பெருங்கடலின் வெப்ப நிலை கிடைப்பரவலை பாதிக்கும் காரணிகள் எவை?

விடை: அட்சக் கோடுகள், வீசும் காற்று பெருங்கடல் நீரோட்டங்கள் மற்றும் தலவானிலை ஆகியவை பெருங்கடலின் வெப்பபரவலைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

 

 

273. கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை புவியிடைக் கோட்டிலிருந்து துருவத்தை நோக்கி செல்லச்செல்ல குறைவதற்கான காரணம்?

விடை: புவியின் மீது சூரிய கதிர்கள் சாய்வாக விழுவதால்

 

 

2. வீசும் காற்றுகள்
274. புவியில் பெருங்கடலின் வெப்ப பரவலை வெகுவாக பாதிப்பது எது?

விடை: காற்று வீசும் திசை

 

 

275. புவியில் பெருங்கடல் நீரின் வெப்பத்தை உயர்த்தும் காற்று?

விடை: நிலப் பகுதியிலிருந்து பெருங்கடல் அல்லது கடலை நோக்கி வீசும் காற்று ஆகும்.

 

 

276. புவியில் கடல் நீரின் வெப்பத்தை குறைக்கும் காற்று எது?

விடை: குளிர்காலத்தில் பனிமூடிய பகுதிகளிலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று.

 

 

277. வியாபாரக்காற்று வீசும் பகுதிகளில் கடற் கரையிலிருந்து வீசும் காற்றால் கடல்நீரின் வெப்ப அளவு எப்படி மாறுகிறது?

விடை: கடலின் கிளர்ந்தெழும் (upwelling) குளிர்ந்த நீரை மேலும் உயர்த்துவதால் கடல்நீரின் வெப்ப அளவு குறைகிறது.

 

 

278. வியாபாரக்காற்று வீசும் பகுதிகளில் கடலிலிருந்து வீசும் காற்றால் கடல்நீரின் வெப்ப அளவு எப்படி மாறுகிறது?

விடை: வெப்ப நீரை ஒரே பகுதியில் குவிப்பதால் கடல் நீரின் வெப்பநிலையை குறிப்பிட்ட அளவு உயர்த்துகிறது.

 

 

3. பெருங்கடல் நீரோட்டங்கள்
279. புவியில் வெப்ப நீரோட்டங்கள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு பெருங்கடல் நீரின் வெப்பத்தை எப்படி மாற்றும்?

விடை: வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

 

 

280. புவியில் குளிர் நீரோட்டங்கள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு பெருங்கடல் நீரின் வெப்பத்தை எப்படி மாற்றும்?

விடை: வெப்பத்தைக் குறைக்கச் செய்யும்.

 

 

281. புவியில் கல்ப் நீரோட்டம் (வெப்ப நீரோட்டம்) எந்தப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரிக்கின்றது?

விடை: வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஐரோப்பாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரிக்கின்றது.

 

 

282. லாபரடார் நீரோட்டம் என்பது?

விடை: குளிர் நீரோட்டம் ஆகும்.

 

 

283. புவியில் லாபரடார் குளிர் நீரோட்டம் எந்த கடற்கரையின் வெப்பத்தைக் குறைக்கிறது?

விடை: வட அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையின் வெப்பத்தைக் குறைக்கிறது.

 

 

284. புவியில் கடல்நீரின் மேற்பரப்பு வெப்பத்தை பாதிக்கும் சிறிய காரணிகள் எவை?

விடை: கடலடி மலைத்தொடர்கள், உள்ளூர் வானிலை மாற்றங்களான புயல், சூறாவளி, ஹரிகேன், மூடுபனி, மேகமூட்டம், ஆவியாதல், திரவமாதல் போன்றவையும் கடல்நீரின் மேற்பரப்பு வெப்பத்தை பாதிக்கின்றன.

 

 

285. புவியில் தினசரி வெப்ப நிலை வீச்சும் வருடாந்திர வெப்பநிலை வீச்சும் பெருங்கடல்களில் எப்படி காணப்படுகிறது?

விடை: நிலப்பகுதியைக் காட்டிலும் பெருங்கடல்களில் மிகவும் குறைவு.

 

 

286. உண்மையில் புவியிடைக் கோட்டுப் பகுதியில் பெருங்கடல்களின் வெப்பம் எப்படி இருக்கும்?

விடை: வெப்பம் அதிகம் கிடையாது.

 

 

287. புவியிடைக் கோட்டுப் பகுதியில் பெருங்கடல்களின் வெப்ப நிலை?

விடை: 27° செல்சியஸ் முதல் 30° செல்சியஸ் வரை

 

 

288. புவியிடைக் கோட்டுக்கு சற்று வடக்கில் பெருங்கடல்களின் வெப்ப நிலை எப்படி காணப்படுகிறது?

விடை: வெப்பம் அதிகம் காணப்படுகிறது.

 

 

289. புவியில் மிகக் குறைவான வெப்பநிலை எங்கு காணப்படுகிறது?

விடை: – 1.9° செல்சியஸ் துருவங்களுக்கு அருகில் காணப்படுகிறது.

 

 

290. புவியின் வட கோளத்தில் பெருங்கடல்களில் அதிக பட்ச வெப்பநிலை எந்த மாதத்தில் காணப்படுகிறது?

விடை: ஆகஸ்ட் மாதத்தில்

 

 

291.புவியின் வட கோளத்தில் பெருங்கடல்களில் குறைந்த பட்ச வெப்பநிலை எந்த மாதத்தில் காணப்படுகிறது?

விடை: பிப்ரவரி மாதத்தில்

 

 

292. புவியின் தென் கோளத்தில் பெருங்கடல்களில் அதிக பட்ச வெப்பநிலை எந்த மாதத்தில் காணப்படுகிறது?

விடை: பிப்ரவரி மாதத்தில்

 

 

293. புவியின் தென் கோளத்தில் பெருங்கடல்களில் குறைந்த பட்ச வெப்பநிலை எந்த மாதத்தில் காணப்படுகிறது?

விடை: ஆகஸ்ட் மாதத்தில்

 

 

5.9.2 பெருங்கடல்களின் செங்குத்து வெப்ப பரவல்
294. புவியின் பெருங்கடலின் இரண்டறக் கலந்த மேற்பரப்பு நீர் அடுக்கு கொண்டிருக்கும் வெப்பநிலை?

விடை: 20° செல்சியஸ் முதல் 25° செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை கொண்டிருக்கும்.

 

 

295. புவியில் நீர் அடுக்கின் ஆழம் எதைப் பொறுத்து மாறுபடும்?

விடை: பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.

 

 

296. புவியில் பெருங்கடல்களின் செங்குத்து பரவல் எங்கு காணப்படுகிறது?

விடை: அயனமண்டலத்தில் 200 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

 

 

297. புவியில் சரிவு அடுக்கு (Thermocline layer) எங்கு காணப்படுகிறது?

விடை: அயனமண்டல அடுக்கின் கீழ் தான் வெப்பநிலை சரிவு அடுக்கு (Thermocline layer) காணப்படுகிறது.

 

 

298. புவியில் வெப்பநிலை சரிவு அடுக்கின் ஆழம்?

விடை: 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் ஆழம் வரை வேறுபட்டுக் காணப்படுகிறது.

 

 

299. புவியில் தனித்துவம் வாய்ந்த வெப்பநிலை சரிவு அடுக்கில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை எப்படி மாறுகிறது?

விடை: வெப்பநிலை வேகமாகக் குறைகிறது.

 

 

300. புவியில் வெப்பநிலை சரிவு அடுக்குக்குக் கீழ் எத்தனை மீட்டர் வரை வெப்பநிலைக் குறைகிறது?

விடை: 4000 மீட்டர் வரை வெப்பநிலைக் குறைகிறது.

Join the conversation