301. புவியில் வெப்பநிலை சரிவு அடுக்குக்குக் கீழ் பெருங்கடலின் வெப்பநிலையானது எப்படி இருக்கும்?
விடை: 4° செல்சியஸ் என்ற அளவில் நிலையாக இருக்கும்.
5.10 கடல்நீரின் உவர்ப்பியம்
302. புவியில் உவர்ப்பியம் என்பது?
விடை: 1,000 கிராம் கடல் நீருக்கும் அதில் கரைந்துள்ள உப்பின் எடைக்கும் (கிராம்களில்) இடையே உள்ள விகிதமேயாகும்.
303. புவியில் உவர்ப்பியம் எப்படி கூறப்படுகிறது?
விடை: ‰ என்று ஆயிரத்தின் பகுதியாக எந்த அலகும் இல்லாமல் கூறப்படுகிறது.
304. 30‰ என்றால் கொடுக்கப்பட்டுள்ள 1000 கிராம் கடல்நீரில் எத்தனை கிராம் உப்பு உள்ளது என்று பொருள்?
விடை: 30 கிராம் உப்பு உள்ளது என்று பொருள்.
305. புவியில் பெருங்கடலின் சராசரி உவர்ப்பியம்?
விடை: 35‰ ஆகும்.
பெருங்கடல் உப்பிற்கான காரணம்
306. கடல் நீர் என்பது?
விடை: தாது உப்புக்கள் மற்றும் மட்கிய கடல்சார் உயிரினங்கள் போன்ற பலப் பொருட்களாலான ஒரு வலிமை குறைந்த சிக்கலான கரைசலாகும்.
307. புவியில் பெருங்கடல்கள் எப்படி உப்பை பெறுகின்றன?
விடை: புவி மேற்பரப்பில் ஏற்படுகின்ற வானிலைச் சிதைவு மற்றும் ஆற்றின் அரித்தலால் பெரும்பாலான பெருங்கடல்கள் உப்பைப் பெறுகின்றன.
308. புவியின் பெருங்கடலில் உப்புகள் எப்படி உருவாகின்றன?
விடை: பெருங்கடலின் சில வகை உப்புகள் கடலடி தரைப்பரப்பில் காணப்படும் பாறைகளும், படிவுகளும் நீரில் கரைந்து உருவாகுபவையாகும். வேறு சில வகை உப்புகள் எரிமலை வெடித்து சிதறும் போது புவியோட்டிலிருந்து வெளிப்பட்டு திடப் பொருட்களாகவும், வாயுக்களாகவும் அருகில் உள்ள கடல்நீரில் கரைந்து ஏற்படுபவையாகும்.
309. புவியில் கடல்நீரின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகள் எவை?
விடை: பெருங்கடல்களின் உவர்ப்பியம் கீழ்க்கண்டவற்றை சார்ந்துள்ளது.
அ. கடல்நீர் ஆவியாகும் வீதம்,
ஆ. மழைப் பொழிவுகள்,
இ. ஆறுகளிலிருந்து கடலில் சேரும் நன்னீரின் அளவு
ஈ. துருவப்பகுதியில் உள்ள பனி உருகி கடல்நீரில் கலப்பது,
உ. கோள்காற்றுகளால் மேலெழும் ஆழ்கடல்நீர்
ஊ. கடல் நீரோட்டங்களால் கலக்கும் நீர்
உவர்ப்பியத்தின் பரவல்
310. புவியில் பெருங்கடல்களின் சராசரி உவர்ப்பியம் எதிலிருந்து எதை நோக்கி செல்ல செல்ல குறைகிறது?
விடை: புவியிடைக் கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லச் செல்ல குறைகிறது.
311. உலகின் அதிக உவர்ப்பியம் எந்த கடல் பகுதியில் காணப்படுகிறது?
விடை: 200 வடக்கு மற்றும் 400 வடக்கு அட்சங்களுக்கு இடையில் உள்ள கடல்களில் காணப்படுகிறது.
312. புவியில் 200 வடக்கு மற்றும் 400 வடக்கு அட்சங்களுக்கு இடையில் உள்ள கடல்கள் அதிக உவர்ப்பியம் கொண்டிருப்பதற்கான காரணம்?
விடை: அதிக வெப்பம், அதிக நீராவியாதல் அதே நேரத்தில் புவிடைக் கோட்டுப்பகுதியை விட குறைவான மழைப்பொழிவு போன்ற தன்மையைக் காரணமாகக் கொண்டுள்ளது.
313. புவியில் கண்டங்களின் கடலோர எல்லைப்பகுதியில் உவர்ப்பியமானது பெருங்கடலின் உட்பகுதியை விடக் குறைவாக இருப்பதற்கான காரணம்?
விடை: ஆற்றின் நன்னீர் சேர்வதால் உவர்ப்பியமானது பெருங்கடலின் உட்பகுதியை விடக் குறைவாக இருக்கிறது.
314. புவியில் முதல் அதிகபட்ச உவர்ப்பியம் எங்கு பதிவாகியுள்ளது?
விடை: துருக்கியில் உள்ள வான் ஏரியில் பதிவாகியுள்ளது.
315. துருக்கியில் உள்ள வான் ஏரியில் பதிவாகியுள்ள உவர்ப்பியத்தின் அளவு?
விடை: 330 ‰
316. புவியில் இரண்டாவதாக அதிகபட்ச உவர்ப்பியம் எங்கு பதிவாகியுள்ளது?
விடை: சாக்கடல்.
317. சாக்கடலில் பதிவாகியுள்ள உவர்ப்பியத்தின் அளவு?
விடை: 238‰
318. புவியில் மூன்றாவதாக அதிகபட்ச உவர்ப்பியம் எங்கு பதிவாகியுள்ளது?
விடை: அமெரிக்க ஐக்கிய நாட்டின் உட்டாவில் உள்ள பெரிய உப்பு (Great Salt Lake) ஏரியில் பதிவாகியுள்ளது.
319. அமெரிக்க ஐக்கிய நாட்டின் உட்டாவில் உள்ள பெரிய உப்பு (Great Salt Lake) ஏரியில் பதிவாகியுள்ள உவர்ப்பியத்தின் அளவு?
விடை: 220 ‰
5.11 பெருங்கடல் இயக்கங்கள்
320. புவியில் கடல் நீரின் நிலை எப்படி இருக்கும்?
விடை: கடல் நீர் ஒரு போதும் ஓய்வு நிலையில் இருப்பது இல்லை. கடல் நீர் எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
321. புவியில் கடல் நீர் எப்படி நகருகிறது?
விடை: கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் நகருகிறது.
322. புவியில் கடல் நீர் நகர்தல் எத்தனை வழிகளில் நடைபெறுகிறது?
விடை: கடல் நீர் நகர்தல் மூன்று வெவ்வேறு வழிகளில் நடைபெறுகிறது.
அவை
1. அலைகள்
2. ஓதங்கள்
3. கடல் நீரோட்டங்கள்
அலைகள்
323. புவியில் அலை என்பது?
விடை: கடல் நீரானது தனது ஆற்றலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் போக்கினை அலை என்கிறோம்.
324. புவியில் அலைகள் எப்படி ஏற்படுகின்றன?
விடை: அலைகள் காற்றின் உராய்வினாலும், கடலுக்கு அடியில் தோன்றும் இதர இடையூறுகளினாலும் ஏற்படுகின்றன.
அலைகளின் பகுதிகள்
325. புவியில் அலை முகடு என்பது?
விடை: ஒரு அலையின் மேல்பகுதி அல்லது உயர்ந்த பகுதி அலை முகடு என்று அழைக்கப்படுகிறது.
326. புவியில் அலை அகடு/பள்ளம் என்பது?
விடை: அலையின் கீழ் அல்லது தாழ்வான பகுதி அலை அகடு என்று அழைக்கப்படுகிறது.
327. புவியில் அலை உயரம் என்பது?
விடை: அலை முகடு மற்றும் அலை அகடுகளுக்கு இடையேயுள்ள செங்குத்து தூரம் அலை உயரம் என அறியப்படுகிறது.
328. புவியில் அலை நீளம் என்பது?
விடை: இரண்டு முகடு அல்லது அலை அகடுக்கிடையேயான கிடைமட்ட தூரம் அலை நீளம் எனப்படும்.
329. புவியில் அலை வீச்சு என்பது?
விடை: அலை வீச்சு அலை உயரத்தில் ஒரு பாதி ஆகும்.
330. புவியில் அலைக்களம் என்பது?
விடை: வீசும் காற்றிற்கும் அது கடக்கும் நீரின் மேற்பரப்பிற்கும் இடைப்பட்ட தூரம் ஆகும்.
331. புவியில் அலை அதிர்வெண் என்பது?
விடை: ஒரு குறிப்பிட்ட நேரம் (அ) அலகு இடைவெளியில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து கடந்து செல்லும் அலை நீளங்களின் எண்ணிக்கை அலை அதிர்வெண் ஆகும். (எ.கா) 100 அலைகள் 1 செகண்ட், 1 செ.மீ
332. புவியில் அலையின் காலம் என்பது?
விடை: ஒரு அலை நீளம் நிலையான புள்ளியை கடந்து செல்லும் நேரம் காலம் எனப்படும்.
333. புவியில் அலை திசைவேகம் என்பது?
விடை: அலை நீளத்தை பிரிப்பதற்கு ஆகும் வேகம் அலை திசைவேகம் என்கிறோம்.
334. புவியில் அலையின் செஞ்சரிவு நிலை என்பது?
விடை: அலையின் செஞ்சரிவு நிலை என்பது அலையின் நீளம், உயரங்களுக்கு இடையேயுள்ள விகிதங்களுக்குச் சமம். (H/L).
ஓதங்கள்
335. புவியில் ஓதங்கள் என்பது?
விடை: சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையினால் பெருங்கடலின் நீர்மட்டமானது குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்ந்து தாழ்வதை ஓதங்கள் என்கிறோம்.
336. முதன் முதலாக ஓதங்களை அறிவியல் பூர்வமாக விளக்கியவர் யார்?
விடை: சர்ஐசக் நியூட்டன்
337. சர்ஐசக் நியூட்டனின் காலம்?
விடை: 1642-1727
338. புவியில் அதி ஓதம் அல்லது உயர் ஓதம் (Flow Tide) என்பது?
விடை: நிலத்தை நோக்கி மேலெழும் கடல்நீர் மட்டத்தை அதி ஓதம் அல்லது உயர் ஓதம் (Flow Tide) என்கிறோம்.
339. புவியில் தாழ் ஓதம் அல்லது கீழ் ஓதம் (Ebb Tide) என்பது?
விடை: கடலை நோக்கி சரியும் கடல்நீர் மட்டத்தை தாழ் ஓதம் அல்லது கீழ் ஓதம் (Ebb Tide) என்கிறோம்.
340. புவியில் ஒவ்வொரு நாளும் கடல் நீர்மட்டமானது எத்தனை முறை உயர்ந்தும் தாழ்த்தும் காணப்படுகிறது?
விடை: இரண்டு முறை உயர்ந்தும் இரண்டு முறை தாழ்ந்தும் காணப்படுகிறது.
341. புவியில் மிக உயரமான ஓதங்கள் எந்த நாளன்று ஏற்படுகிறது?
விடை: முழு நிலவு நாளன்றும் (பௌர்ணமி) அமாவாசை அன்றும் ஏற்படுகிறது.
342. உயரமான ஓதங்களின் வேறு பெயர்?
விடை: மிதவை ஓதம் எனப்படும்.
343. புவியில் மிதவை ஓதங்கள் எப்போது உருவாகிறது?
விடை: சூரியன், புவி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது உருவாகிறது.
344. புவியில் மிக தாழ்வான ஓதங்கள் என்பது?
விடை: தாழ்மட்ட ஓதங்கள் எனப்படும்.
345. புவியில் தாழ்வான ஓதங்கள் எப்போது உருவாகிறது?
விடை: சூரியன், புவி, சந்திரன் ஆகிய மூன்றும் செங்குத்து கோணத்தில் அமையும் போது உண்டாகிறது.
346. புவியில் ஓத நீரோட்டங்கள் என்பது?
விடை: ஓதவிசை காரணமாக ஏற்படும் கடல்நீரின் நகர்வை ஓத நீரோட்டங்கள் என்கிறோம்.
347. புவியில் ஓத நீரோட்டங்கள் எப்படி ஓடுகின்றன?
விடை: ஓத நீரோட்டங்கள் அதிக உயரம் மற்றும் விசையுடன் ஒரு குறுகிய கடலோர திறப்பின் வழியாக ஓடுகின்றன.
348. பண்டி வளைகுடா (Bay of Fundy) எங்கு காணப்படுகிறது?
விடை: கனடாவின் நோவாஸ்காட்டியாவிற்கும், நியுப்ரனஸ்விக்குக்கும் இடையே பண்டி (Bay of Fundy) வளைகுடா காணப்படும்.
349. பண்டி (Bay of Fundy) வளைகுடாவில் காணப்படும் உயர் ஓதத்திற்கும், தாழ் ஓதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு?
விடை: 14 மீட்டர் ஆகும்.
350. புவியில் ஓத துறைமுகங்கள் என்பது?
விடை: கப்பல்கள் வந்து செல்ல ஓத நீரோட்டத்தைப் பயன்படுத்தும் துறைமுகங்களை ஓத துறைமுகங்கள் என்கிறோம்.
351. இந்தியாவில் உள்ள ஓத துறைமுகங்கள் எவை?
விடை: கல்கத்தா மற்றும் காண்ட்லா துறைமுகங்கள்
352. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குஜராத்தில் காணப்படும் காம்பே வளைகுடாவின் சராசரி ஓத வீதம்?
விடை: 6.77 மீட்டர்
353. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குஜராத்தில் காணப்படும் கட்ச் வளைகுடாவின் சராசரி ஓத வீதம்?
விடை: 5.23 மீட்டர்
354. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குஜராத்தில் காணப்படும் காம்பே வளைகுடாவின் அதிகபட்ச ஓத வீதம்?
விடை: 11 மீட்டர்
355. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குஜராத்தில் காணப்படும் கட்ச் வளைகுடாவின் அதிகபட்ச ஓத வீதம்?
விடை: 8 மீட்டர்
356. புவியில் ஓதங்கள் எதற்கு உதவுகிறது?
விடை: ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகளை நீக்கி துறைமுகத்தைப் பாதுகாக்க ஓதங்கள் உதவுகிறது.
357. புவியில் ஓத ஆற்றல் எதற்கு பயன்படுகிறது?
விடை: மின் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
358. ஓத ஆற்றல் நிலையங்கள் எந்தெந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன?
விடை: ஐக்கிய அரசு (UK), கனடா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஓத ஆற்றல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
359. இந்தியாவில் ஓத ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ள பகுதிகள் எவை?
விடை: இந்தியாவில், காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவனப்பகுதி போன்றவை ஓத ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.
கடல் நீரோட்டங்கள்
360. புவியில் பெருங்கடல் நீரோட்டங்கள் என்பது?
விடை: பெருங்கடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பிட்ட திசையில் நகரும் நீர்த் தொகுதியினை பெருங்கடல் நீரோட்டங்கள் என்கிறோம்.
361. புவியில் கடல் நீரோட்டங்கள் உருவாக காரணங்கள் எவை?
விடை: புவிச் சுழற்சி, கடல் நீரின் வெப்ப வேறுபாடு, உவர்ப்பியம், அடர்த்தி ஆகியவையும் மற்றும் ஒரு எல்லை வரை காற்றின் அழுத்தமும், காற்றும் கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணமாகும்.
362. புவியில் பெருங்கடல் நீரோட்டங்கள் எவைகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை: பெருங்கடல் நீரோட்டங்கள் அவை தோன்றும் விதம், கொள்ளளவு, திசைவேகம் மற்றும் அதன் எல்லைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
363. திசைவேகத்தின் அடிப்படையில் புவியில் பெருங்கடல் நீரோட்டங்கள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன?
விடை: காற்றியியக்கும் நீரோட்டங்கள், நீரோட்டம் மற்றும் ஓடைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
364. புவியில் காற்றியக்கும் நீரோட்டங்கள் என்பது?
விடை: கோள் காற்றுகளால் கடலின் மேற்பரப்பு நீர் மெதுவாக நகருவதாகும்.
365. புவியில் பெருங்கடல் நீரோட்டம் என்பது?
விடை: ஒரு குறிப்பிட்ட திசையில் அதிக திசைவேகத்துடன் நகருவது பெருங்கடல் நீரோட்டமாகும்.
366. புவியில் ஓடைகள் என்பது?
விடை: ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் அதிக அளவிலான பெருங்கடல் நீர் நகர்வதை ஓடைகள் என்கிறோம்.
367. புவியில் ஓடைகளின் திசைவேகம் எப்படி இருக்கும்?
விடை: ஓடைகள் காற்றியக்கும் நீரோட்டங்கள் மற்றும் நீரோட்டங்களை விட மிக அதிக திசைவேகத்தில் ஓடக்கூடியவை.
368. புவியில் பெருங்கடல் நீரோட்டங்கள் எதனால் வேறுபடுகின்றன?
விடை: வெப்ப நிலையால் வேறுபடுகின்றன.
369. புவியில் வெப்ப நீரோட்டங்கள் என்பது?
விடை: புவியிடைக் கோட்டிற்கு அருகில் உருவாகும் நீரோட்டங்களை வெப்ப நீரோட்டங்கள் என்கிறோம்.
370. புவியில் குளிர் நீரோட்டங்கள் என்பது?
விடை: துருவப் பகுதியிலிருந்து உருவாகும் நீரோட்டங்களை குளிர் நீரோட்டங்கள் என்று அழைக்கிறோம்.
371. புவியில் பெருங்கடல் நீரின் செங்குத்து சுழற்சியானது எப்படி உருவாகிறது?
விடை: நீர்பரப்பின் மேல் பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையே காணப்படும் உவர்ப்பியம் மற்றும் வெப்ப வேறுபாட்டின் காரணமாக பெருங்கடல் நீரின் செங்குத்து சுழற்சியானது உருவாகிறது.
372. புவியில் பெருங்கடல் நீர் மேலெழுதல் (Upwelling) என்பது?
விடை: அடர்த்தியான குளிர்ந்த மற்றும் வளமிக்க பெருங்கடல் நீர் கீழ்பகுதியிலிருந்து மேல் நோக்கி நகர்ந்து வளமற்ற வெப்பமான கடல் மேற்பரப்பை இடமாற்றம் செய்வதாகும்.
உலகின் முக்கிய பெருங்கடல் நீரோட்டங்கள்
373. புவியில் ஒவ்வொரு பெருங்கடலிலும் பெருங்கடல் நீரானது எப்படி சுழன்று கொண்டேயிருக்கிறது?
விடை: புவியிடைக் கோட்டிலிருந்து துருவப்பகுதிக்கும், துருவப்பகுதியிலிருந்து புவியிடைக் கோட்டுப் பகுதிக்கும் சுழன்றும் கொண்டேயிருக்கிறது.
374. புவியில் பெருங்கடல் நீரானது ஒரு சுழற்சியை எப்படி நிறைவு செய்கிறது?
விடை: புவியிடைக்கோட்டுப் பகுதியிலிருந்து வெப்ப நீரோட்டமானது துருவப்பகுதியை நோக்கி நகர்ந்து அதிக அடர்த்தியின் காரணமாக உயர் அட்சப்பகுதியில் மூழ்கி மீண்டும் புவியிடைக்கோட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்து ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது.
375. புவியில் சுழல் என்பது?
விடை: பெரிய அளவிலான நீரோட்டங்களின் சுழற்சியை சுழல் என்கிறோம்.
376. சுழல் புவியின் வட கோளார்த்தத்தில் எப்படி சுழல்கிறது?
விடை: கடிகாரச் சுழற்சியில் சுழல்கிறது.
377. சுழல் புவியின் தென் கோளார்த்தத்தில் எப்படி சுழல்கிறது?
விடை: எதிர் கடிகாரச் சுழற்சியில் சுழல்கிறது.
பசிபிக் பெருங்கடல் நீரோட்டங்கள்
1. வட புவியிடைக் கோட்டு நீரோட்டம்
378. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் எப்படி நகர்கிறது?
விடை: வட புவியிடைக்கோட்டு நீரோட்டமானது மெக்ஸிகோவிற்கு மேற்கிலுள்ள ரிவில்லாகிகிடோ தீவுகளுக்கு அருகில் உருவாகி அது சுமார் 12,000 கி.மீட்டர் தூரத்திற்கு பிலிபைன்ஸ் தீவுகளை நோக்கி கிழக்கு மேற்கு திசையில் நகர்கிறது.
379. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் என்பது?
விடை: ஒரு வெப்ப நீரோட்டமாகும்.
380. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் எப்படி நீரைப் பெறுகிறது?
விடை: கலிபோர்னியா நீரோட்டத்திலிருந்தும் மெக்ஸிகோ கடற்கரையை ஒட்டி வடக்கு நோக்கி ஓடும் தென்கிழக்கு பருவகாற்று காற்றியக்க நீரோட்டத்திலிருந்தும் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் நீரைப் பெறுகிறது.
381. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டத்தின் எந்தப் பகுதியில் நீரின் அளவு அதிகரிக்கிறது?
விடை: வட புவியிடைக் கோட்டு நீரோட்டத்தின் வலது புறத்தில் அதிகமான சிறு நீரோட்டங்கள் இதனுடன் இணைவதால் நீரின் அளவானது கிழக்கிலிருந்து மேற்காக அதிகரிக்கிறது.
382. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் எத்தனை கிளையாக பிரிகிறது?
விடை: இரு கிளைகளாகப் பிரிகிறது.அவை
1. வடக்குக் கிளை
2. தென்கிளை
383. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டத்தின் வடக்கு கிளை எந்த நீரோட்டத்தோடு இணைகிறது?
விடை: குரோஷியோ நீரோட்டத்துடன் இணைகிறது.
384. பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டத்தின் தென்கிளை எந்த நீரோட்டத்தோடு நகர்கிறது?
விடை: தென்கிளை திடீரெனத் திரும்பி கிழக்கு ஆஸ்திரேலியன் நீரோட்டமாக நகர்கிறது.
2. தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம்
385. பசிபிக் பெருங்கடலின் தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் எப்படி நகருகிறது?
விடை: வியாபாரக் காற்றுகளால் உந்தப்பட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகருகிறது.
386. பசிபிக் பெருங்கடலின் தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் என்பது?
விடை: ஒரு வெப்ப நீரோட்டமாகும்.
387. பசிபிக் பெருங்கடலின் தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கி காணப்படுகிறது?
விடை: கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 13,600 கி.மீ தூரத்திற்கு நீண்டு காணப்படுகிறது.
388. பசிபிக் பெருங்கடலின் புவியிடைக் கோட்டு நீரோட்டத்தில் வலுவான நீரோட்டம் எது?
விடை: தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் வடக்கு புவியிடைக்கோட்டு நீரோட்டத்தை விட வலுவானது.
389. பசிபிக் பெருங்கடலின் தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் மேலும் பல கிளைகளாக பிரிக்கப்படுவதற்கான காரணம்?
விடை: தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டப் பகுதியில் பல தீவுகள் காணப்படுவதாலும், கடலடி நிலத்தோற்றத்தின் சமனற்ற அமைப்பினாலும் தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் மேலும் பல கிளைகளாக பிரிக்கப்படுகிறது.
3. குரோஷியோ நீரோட்டம் (கரும் ஓதம்)
390. பசிபிக் பெருங்கடலின் குரோஷியோ நீரோட்டமானது எந்த திசையில் நகர்ந்து செல்கிறது?
விடை: 30° வடக்கு அட்சரேகை வரை வடக்கு கீழைக் காற்றுகளின் திசையில் நகர்ந்து செல்கிறது.
391. பசிபிக் பெருங்கடலின் குரோஷியோ நீரோட்டம் எந்த கடலோரத்திலிருந்து வெப்பநீரை சுமந்து செல்கிறது?
விடை: பார்மோசா கடலோரத்திலிருந்து வெப்பநீரை சுமந்து செல்கிறது.
392. பசிபிக் பெருங்கடலின் குரோஷியோ நீரோட்டம் வடக்கு நோக்கி நகர்ந்து எந்த நீரோட்டத்துடன் கலந்து குரில் தீவுகளுக்கு அப்பால் செல்கிறது?
விடை: ஒயாசியோ குளிர் நீரோட்டத்துடன் கலந்து குரில் தீவுகளுக்கு அப்பால் செல்கிறது.
393. பசிபிக் பெருங்கடலின் குரோஷியோ நீரோட்டத்தின் வேறு பெயர்?
விடை: கரும் ஓதம், ஜப்பான் நீரோட்டம் என்றும் அறியப்படுகிறது.
4. ஒயாஸ்ஷியோ நீரோட்டம் (parental tide)
394. பசிபிக் பெருங்கடலின் ஒயாஸ்ஷியோ நீரோட்டம் என்பது?
விடை: ஒரு குளிர் நீரோட்டமாகும்.
395. பசிபிக் பெருங்கடலின் ஒயாஸ்ஷியோ நீரோட்டம் எங்கிருந்து உருவாகி தெற்கு நோக்கி குளிர்ந்த நீரை சுமந்து செல்கிறது?
விடை: பேரிங் நீர் சந்தியிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி குளிர்ந்த நீரை சுமந்து செல்கிறது.
396. பசிபிக் பெருங்கடலின் ஒயாஸ்ஷியோ நீரோட்டம் எந்த நீரோட்டங்களுடன் கலந்து விடுகிறது?
விடை: குரோஷியோ வெப்ப நீரோட்டத்துடனும் அலுஷியன் நீரோட்டத்துடனும் கலந்து விடுகிறது.
5. கலிபோர்னியா நீரோட்டம்
397. பசிபிக் பெருங்கடலின் கலிபோர்னியா நீரோட்டம் எந்த திசையில் நகர்ந்து செல்கிறது?
விடை: 23° வடக்கு அட்சத்திற்கும் 48° வடக்கு அட்சத்திற்கும் இடையே ஐக்கிய நாட்டின் மேற்கு கடற்கரை வழியாக தெற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.
398. பசிபிக் பெருங்கடலின் கலிபோர்னியா நீரோட்டம் என்பது?
விடை: ஒரு குளிர் நீரோட்டமாகும்.
399. பசிபிக் பெருங்கடலின் கலிபோர்னியா குளிர் நீரோட்டமானது எந்த நீரை பெறுகிறது?
விடை: மேலெழும் அதிக குளிர்ந்த நீரை பெறுகிறது.
400. பசிபிக் பெருங்கடலின் கலிபோர்னியா நீரோட்டம் எந்த நீரோட்டத்துடன் கலந்து விடுகிறது?
விடை: கலிபோர்னியா நீரோட்டம் வியாபார காற்று வீசும் பகுதியை அடையும் போது, இது வலது புறமாக திசை திருப்பப்பட்டு புவியிடைக் கோட்டு நீரோட்டத்துடன் கலந்து விடுகிறது.