- எந்த கூட்டு வட்டி வீதத்தில் ₹ 5625 ஆனது 2 ஆண்டுகளில் ₹ 6084 ஆக மாறும்? (வட்டி ஆண்டுக்கு ஒரு முறை)
(A) 2%
(B) 2.08%
(C) 4%
(D) 4.08%
(E) விடை தெரியவில்லை
- இரு பகடைகள் உருட்டப்படும்போது கிடைக்கும் எண்களின் கூடுதல்
9 ஐ விட சிறியதாக இருக்க நிகழ்தகவு என்ன?
(A) 13/36
(B) 18/36
(C) 13/18
(D) 12/18
(E) விடை தெரியவில்லை
- 4 + 1 +1/4 +……..+ ∞ ன் மதிப்பு
(A) 16/3
(B) 4/3
(C) 32/3
(D) 64/3
(E) விடை தெரியவில்லை
- ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5×10⁵ மற்றும் 4×10⁴m எனில் அதன் பரப்பு காண்க.
(A) 9×10¹மீ²
(B) 9×109மீ²
(C) 2×10¹⁰மீ²
(D) 20×10²⁰மீ²
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் கூடுதல் காண்க. 6 +13 + 20+……..+ 97
(A) 721
(B) 724
(C) 727
(D) 750
(E) விடை தெரியவில்லை
- F1= 1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F10 ஆனது
(A) 29
(B) 322
(C) 199
(D) 123
(E) விடை தெரியவில்லை
- (i) சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் எப்போதும் இரு சமக் கூறிடும்.
(ii) சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் எப்போதும் செங்கோணத்தில் கொள்ளும்.
(A) (i) மற்றும் (ii) இரண்டும் சரி
(B) (i) சரி மற்றும் (ii) தவறு
(C) (i) தவறு மற்றும் (ii) சரி
(D) (i) மற்றும் (ii) இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
- கொடுக்கப்பட்ட காகிதத்தை மடித்தால் கீழ்க்கண்ட எந்த கனச்சதுரத்தை உருவாக்க முடியாது?
(A) 1, 2, 3 மற்றும் 4
(B) 1,2 மற்றும் 4
(C) 1,2 மற்றும் 3
(D) 1,3 மற்றும் 4
(E) விடை தெரியவில்லை
- கமல் ஒரு வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பார். பிமல், கமலை விட 50% அதிக திறமை உடையவர் எனில், அதே வேலையை பிமல் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
(A) 10.5 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 10 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
- 5 மாணவர்கள் அல்லது 3 மாணவிகள் ஒரு அறிவியல் திட்டச் செயலை 40 நாள்களில் முடிப்பர். 15 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் அதே திட்டச் செயலை முடிக்க எத்தனை நாள்களாகும்?
(A) 12
(B) 8
(C) 10
(D) 16
(E) விடை தெரியவில்லை
- ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்தப் புறப்பரப்பு
(A) 8πh²/9
(B) 9πh²/8
(C) 24πh²
(D) 56πh²/9
(E) விடை தெரியவில்லை
- 127. 28 செ.மீ விட்டமுடைய ஒரு வட்டத்தின் கால் பகுதியை ஒரு கூம்பாக வளைத்தால், கூம்பின் சாயுயரம் மற்றும் வளை பரப்பைக் காண்க
(A) 14 செ.மீ. 154 செ.மீ²
(B) 28 செ.மீ 154 செ.மீ²
(C) 28 செ.மீ. 308 செ.மீ²
(D) 14 செ.மீ, 308 செ.மீ²
(E) விடை தெரியவில்லை
- கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டு வட்டியைக் காண்க:
அசல் = ரூ. 5,000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n =1½ ஆண்டுகள். அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.
(A) ரூ.306.50
(B) ரூ.310.50
(C) ரூ.307
(D) ரூ.306.04
(E) விடை தெரியவில்லை
- ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், 2 வது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.
(A) ரூ.10,626
(B) ரூ.10,620
(C) ரூ.10,660
(D) ரூ.10,266
(E) விடை தெரியவில்லை
- அசல் ரூ.46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனி வட்டி மூலம் மொத்தத் தொகையாக ரூ.52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க
(A) 6%
(B) 8%
(C) 10%
(D) 4%
(E) விடை தெரியவில்லை
- ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனி வட்டியாக ரூ.21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க
(A) ரூ. 60,000
(B) ரூ.58,000
(C) ரூ.56,000
(D) ரூ. 54,000
(E) விடை தெரியவில்லை
- ரூ.1,000 க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்குத் தனி வட்டி
(A) ரூ. 2,000
(B) ரூ.1,000
(C) ரூ.200
(D) ரூ.100
(E) விடை தெரியவில்லை
- 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 13 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 14 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
- 134. ஒரு குடும்பம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக, வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வேலையை 1 : 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர் எனில், வேலையின் ஒவ்வொரு பகுதியையும் சதவீதமாக வெளிப்படுத்தவும்
(A) 10%,20%, 30%
(B) 12%, 24%, 36%
(C) 20⅔%,41⅓%, 62%
(D) 16⅔%, 33⅓%, 50%
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம (LCM) காண்க 24x²y³z⁴, 8x³y²z², 16xy²z³
(A) 8x³y³z³
(B) 48x³y³z³
(C) 48x³y³2⁴
(D) 48x²y³z⁴
(E) விடை தெரியவில்லை
- மீ. பொ. ம (LCM) காண்க 8x⁴y², 48x²y⁴
(A) 6xy
(B) 48x⁴y⁴
(C) 96x²y²
(D) 384x⁶y⁶
(E) விடை தெரியவில்லை
- x²+4x-12 மற்றும் x²- 5x+6 ஆகியவற்றின் ‘(மீ.பொ.கா.) மீப்பெரு பொது காரணி _____ ஆகும்.
(A) x-2
(B) x +2
(C) x+6
(D) x-3
(E) விடை தெரியவில்லை
- நூல் விற்பனையாளர் 175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாடவாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதிகபட்சமாக எத்தனை பெட்டிகள் தேவைப்படும்?
(A) 77
(B) 63
(C) 49
(D) 35
(E) விடை தெரியவில்லை
- சுருக்குக: 3√75 + 5√48-√243
(A) 25√5
(B) 15√3
(C) 26√3
(D) 26√5
(E) விடை தெரியவில்லை
- குறித்த விலை ரூ. 840 உடைய ஒரு பொருள் ரூ. 714 க்கு விற்கப்பட்டது. அதன் தள்ளுபடி சதவீதம் என்ன?
(A) 20%
(B) 15%
(C) 10%
(D) 5%
(E) விடை தெரியவில்லை
ANSWERS:
- (C) 4%
- (C) 13/18
- (A) 16/3
- (C) 2×10¹⁰மீ²
- (A) 721
- (D) 123
- (A) (i) மற்றும் (ii) இரண்டும் சரி
- (A) 1, 2, 3 மற்றும் 4
- (D) 10 நாட்கள்
- (B) 8
- (A) 8πh²/9
- (A) 14 செ.மீ. 154 செ.மீ²
- (D) ரூ.306.04
- (A) ரூ.10,626
- (B) 8%
- (C) ரூ.56,000
- (C) ரூ.200
- (C) 10 நாட்கள்
- (D) 16⅔%, 33⅓%, 50%
- 135. (C) 48x³y³2⁴
- (B) 48x⁴y⁴
- (A) x-2
- (D) 35
- (C) 26√3
- (B) 15%