- ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
(A) 76
(B) 78
(C) 80
(D) 82
(E) விடை தெரியவில்லை
விடை : (B) 78
- 1³ + 2³ + 3³ + …. + n³ = 8281 எனில் 1 + 2 + 3 + …. + n இன் மதிப்பு காண்க.
(A) 91
(B) 81
(D) 93
(C) 901
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 91
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அல்ஃபா எண்ணெழுத்து தொடரின் அடுத்து வரும் உறுப்பைக் காண்க. Z1A, X2D, V6G, T21J, R88M, P445P, ?
(A) N 2676 S
(B) N 2676 T
(C) T 2670 N
(D) T 2676 N
(E) விடை தெரியவில்லை
விடை : (A) N 2676 S
- J2Z, K4X, I7V,_____ H16R, M22P விடுபட்டவையைக் காண்க.
(A) I11T
(B) L11S
(C) L12T
(D) L11T
(E) விடை தெரியவில்லை
விடை : (D) L11T
- இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு பகடைகளிலும் ஒரே முகமதிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் எத்தனை?
(A) 6
(B) 12
(C) 36
(D) 18
(E) விடை தெரியவில்லை
விடை : (A) 6
- ஓர் அணிவகுப்பில் ஒரு வரிசையில் 7 பேர் நிற்கிறார்கள். Q ஆனவர் R க்கு இடப்புறமாகவும் P க்கு வலப்புறமாகவும் நிற்கிறார். O ஆனவர் N க்கு வலப்புறமாகவும் P க்கு இடப்புறமாகவும் நிற்கிறார். இவ்வாறே S ஆனவர் R க்கு வலப்புறமாகவும் T க்கு இடப்புறமாகவும் நிற்கிறார். அந்த வரிசையின் நடுவில் நிற்பவர் யார்?
(A) P
(B) Q
(C) R
(D) O
(E) விடை தெரியவில்லை
விடை : (B) Q
- A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும், A மற்றும் C அந்த வேலையை 6 மணிநேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்?
(A) 6 மணி நேரத்தில்
(B) 12 மணி நேரத்தில்
(C) 4 மணி நேரத்தில்
(D) 10 மணி நேரத்தில்
(E) விடை தெரியவில்லை
விடை : (c) 4 மணி நேரத்தில்
183.10 விவசாயிகள் 21 நாட்களில், ஒரு நிலத்தை உழுது முடிக்கிறார்கள் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்கள் முன்னதாக உழுது முடிப்பர்?
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
(E) விடை தெரியவில்லை
விடை : (A) 6
- ஓர் அரைக் கோளத்தின் மொத்தப்பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ____ மடங்காகும்.
(A) π
(B) 4π
(C) 3π
(D) 2π
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 3π
- ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் அதன் உயரம் இரண்டு மடங்காகவும் மாறினால் அதன் கன அளவு _____ மடங்காக மாறும்.
(A) 6 மடங்கு
(B) 12 மடங்கு
(C) 18 மடங்கு
(D) 24 மடங்கு
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 18 மடங்கு
186.Rs.20,000 க்கு 15% ஆண்டு வட்டி வீதத்திற்கு 2⅓ ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி மதிப்பு காண்.
(A) 7272.50
(B) 7722.50
(C) 7772.50
(D) 7777.70
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 7772.50
- ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில்
ரூ.. 2028/- ஆகிறது எனில், அந்த அசலானது
(A) ரூ.1875
(B) ரூ.1612
(C) ரூ.1800
(D) ரூ.1825
(E) விடை தெரியவில்லை
விடை : (A) ரூ.1875
- ரூ.3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும். தனி வட்டியானது ரூ. Rs.4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனி வட்டிக்கு நிகராகும் காலம் என்ன?
(A) 2 வருடங்கள்
(B) 8 வருடங்கள்
(C) 4 வருடங்கள்
(D) 6 வருடங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை : (B) 8 வருடங்கள்
- பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ.8,500 கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ரூ.11,050 ஐச் செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம்?
(A) 10%
(B) 8%
(C) 11%
(D) 9%
(E) விடை தெரியவில்லை
விடை : (A) 10%
- ஓர் அசலானது 4 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில், வட்டி வீதம்
(A) 10%
(B) 15%
(C) 20%
(D) 25%
(E) விடை தெரியவில்லை
விடை : (D) 25%
- C ஆனது y ன் இருமடங்குடன் எதிர் விகிதத் தொடர்புடையது. மேலும்
y = 6 எனில் x ன் மதிப்பு 4. y = 8, எனில், x ன் மதிப்பு
(A) 2
(B) 3
(C) 5
(D) 6
(E) விடை தெரியவில்லை
விடை : (B) 3
- 4a= 5b மற்றும் 7b = 9c எனில் a:b:c
(A) 28:36:45
(B) 36:28:45
(C) 44:33:28
(D) 45:36:28
(E) விடை தெரியவில்லை
விடை : (D) 45:36:28
- 7:5 ஆனது x : 25, க்கு விகிதச்சமம் எனில் ‘x’ இன் மதிப்பு காண்க.
(A) 27
(B) 49
(C) 35
(D) 14
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 35
- 1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும்போது மீதி 12 ஐத் தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க.
(A) 6
(B) 174
(C) 522
(D) 696
(E) விடை தெரியவில்லை
விடை : (B) 174
- மீ.சி.ம.காண்க p² – 3p + 2, p2 – 4
(A) (P-1)
(B) (P-2)
(C) (P+2)
(D) (p-1) (P-2) (P+2)
(E) விடை தெரியவில்லை
விடை : (D) (p-1) (P-2) (P+2)
- இரு எண்களின் மீச்சிறு மடங்கு 180 எனில், கீழுள்ளவற்றுள் எது அந்த எண்களின் மீ.பொ.வ.ஆகாது?
(A) 45
(B) 60
(C) 75
(D) 90
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 75
- 18, 24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பொ.வ. காண்க.
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
(E) விடை தெரியவில்லை
விடை : (D) 6
- தேர்விற்கு விண்ணப்பித்த 270 நபர்களில், 252 நபர்கள் தேர்ச்சி அடைந்தனர் எனில்,தேர்ச்சி சதவீதம் என்ன?
(A) 80⅓%
(B) 83⅓%
(C) 93⅓%
(D) 98⅓%
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 93⅓%
- BODMAS யைப் பயன்படுத்திச் சரியான குறியீட்டைக் கட்டத்தில் நிரப்புக. 2__6-12+(4÷2) = 10
(A) +
(B) –
(C) ×
(D) ÷
(E) விடை தெரியவில்லை.
விடை : (C) ×
- ஒரு பழ வியாபாரி தான் வாங்கிய தன்னிடமிருந்த மீதி மாம்பழங்களில் மாம்பழங்களில் 10% அழுகி விட்டன.46⅔% பழங்களை விற்றுவிட்ட பின் 192 மாம்பழங்கள் மிஞ்சின எனில் அவர் வாங்கிய மொத்த மாம்பழங்கள் எவ்வளவு?
(A) 375
(B) 425
(C) 400
(D) 450
(E) விடை தெரியவில்லை
விடை : (C) 400