
SCIENCE TEST ANSWER KEY
1. கீழ்க்கண்ட வரைபடத்தில் உள்ள மைட்டாஸிஸின் நிலை என்ன?
A) தொடக்க நிலை
B) நடுநிலை
C) பின்னடைதல் நிலை
D) முடிவு நிலை
விடை: C) பின்னடைதல் நிலை
2. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான காரணம்
A) இரத்தம் மாற்றுதல், கொசு கடித்தல், எச்சில் மூலம்
B) உறுப்பு மாற்றுதல், கைக்குலுக்கும் போது, இரத்தம் மாற்றுதல்
C) எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டவருடன் உடலுறவை மேற்கொள்ளுதல், எச்சில் மூலம், கைக்குலுக்கும் போது
D) இரத்தம் மாற்றுதல், எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டவருடன் உடலுறவை மேற்கொள்ளுதல், உறுப்பு மாற்றுதல்
விடை: D) இரத்தம் மாற்றுதல், எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டவருடன் உடலுறவை மேற்கொள்ளுதல், உறுப்பு மாற்றுதல்
3. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறிக:
A) பித்த உப்புக்கள் – சிறு திவளைகளாக்குதல்
B) வெள்ளையணுக்கள் – நோய் எதிர்ப்புத்தன்மை
C) நெப்ரான் – நரம்பு மண்டலம்
D) மாலைக்குருடு – வைட்டமின் ‘ஏ
விடை: C) நெப்ரான் – நரம்பு மண்டலம்
4. டி.என்.ஏ. மூலக்கூறு சுருளின் விட்டம்
A) 20A°
B) 30A°
C) 40A°
D) 50A°
விடை: A) 20A°
5. பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு
A) உணவு பிரமிடு
B) உணவு உலகம்
C) உணவு ஆற்றல்
D) உணவு வலை
விடை: D) உணவு வலை
6. எய்ட்ஸ் நோயினை உறுதி செய்யும் சோதனை
A) எலிசா சோதனை
B) வெஸ்டன் பிளாட் சோதனை
C) அமில கார சோதனை
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: B) வெஸ்டன் பிளாட் சோதனை
7. இரத்த சோகையின் போது
A) வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றன
B) சிவப்பு இரத்த அணுக்கள் குறைகின்றன
C) சிவப்பு இரத்த அணுக்கள் அதிகரிக்கின்றன
D) வெள்ளையணுக்கள் குறைகின்றன
விடை: B) சிவப்பு இரத்த அணுக்கள் குறைகின்றன
8. எ.கோலி என்ற பேக்டிரியம் சாதாரணமாக அமைந்து காணப்படும் இடம்
A) மண்
B) பால்
C) தண்ணீர்
D) மனிதனின் உணவுக் குடல்
விடை: D) மனிதனின் உணவுக் குடல்
9. மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
A) 48
B) 23
C) 46
D) 60
விடை: C) 46
10. மனித உடம்பில் காணப்படும் மிகப் பெரிய சுரப்பி
A) கல்லீரல்
B) பான்கிரியாஸ்
C) உமிழ்நீர் சுரப்பி
D) தைராய்டு
விடை: A) கல்லீரல்
11. நோய் தடுப்பூசி போடும் முறை எவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
A) லூயிஸ் பாஸ்டியர்
B) எட்வர்ட் ஜென்னர்
C) ரோனால்ட்ரோஸ்
D) கோல்கை
விடை: B) எட்வர்ட் ஜென்னர்
12. பித்தநீர் சுரக்குமிடம்
A) நுரையீரல்
B) கல்லீரல்
C) கணையம்
D) சிறுகுடல்
விடை: B) கல்லீரல்
13. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) வைட்டமின் A- இரத்தச்சோகை
B) குளூகோஸ்- கண்பார்வை
C) அயோடின் -கழுத்து வீக்கம்
D) சயனோகோபாலமின் -நீரிழிவு நோய்
விடை: C) அயோடின் -கழுத்து வீக்கம்
14. பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் அடியில் கண்ட ஒன்றைப் பெறுவதற்காகப் பூச்சிகளைப் பிடிக்கின்றன
A) கால்சியம்
B) நைட்ரஜன்
C) கார்பன்
D) கோபால்ட்
விடை: B) நைட்ரஜன்
15. குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்
A) அக்டின்
B) டியூபுலின்
C) ஹிஸ்டோன்
D) மையோசின்
விடை: C) ஹிஸ்டோன்
16. பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படுத்தும் முறை
A) ஐசோலேஷன்
B) ஸ்டெரிலைசேஷன்
C) பாஸ்டுரைசேஷன்
D) பெர்மெண்டேஷன்
விடை: C) பாஸ்டுரைசேஷன்
17. எது நியூக்ளியோலஸ்ஸில் அதிகமாகக் காணப்படும்
A) டி.என்.ஏ. மற்றும் புரதங்கள்
B) டி.என்.ஏ. மற்றும் லிப்பிடுகள்
C) ஆர்.என்.ஏ. மற்றும் லிப்பிடுகள்
D) ஆர்.என்.ஏ. மற்றும் புரதங்கள்
குறிப்பு : DNA : 30-40%, RNA : 0.5-10%, Protein : 50-60%
விடை: A) டி.என்.ஏ. மற்றும் புரதங்கள்
18. ஒரு ஜீன்-ஒரு நொதி கோட்பாட்டின் உருவாக்கியவர் யார்?
A) ஹென்றி ஆஸ்பான்
B) பீடில் மற்றும் டாட்டம்
C) ஜேகோப் மற்றும் மோனாட்
D) பெஸ்ட் மற்றும் டைலர்
விடை: B) பீடில் மற்றும் டாட்டம்
19. இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் கருவி
A) ஸ்பிக்மோமானோமீட்டர்
B) இரத்த அழுத்த மீட்டர்
C) தெர்மோமீட்டர்
D) ஸ்டெதாஸ்கோப்
விடை: A) ஸ்பிக்மோமானோமீட்டர்
20. உலக சுற்றுச் சூழல் நாள் என்பது
A) மார்ச் 21ம் தேதி
B) ஜூன் 5ம் தேதி
C) டிசம்பர் 1ம் தேதி
D) டிசம்பர் 2ம் தேதி
விடை: B) ஜூன் 5ம் தேதி
21. நேட்டாலிட்டி எனப்படுவது
A) பிறப்பு விகிதம்
B) இறப்பு விகிதம்
C) வாழும் விகிதம்
D) இவை அனைத்தும்
விடை: A) பிறப்பு விகிதம்
22. டிப்த்தீரியா என்ற நோய் எதனுடன் தொடர்புடையது
A) நுரையீரல்
B) கல்லீரல்
C) தொண்டை
D) இரத்தம்
விடை: C) தொண்டை
23. செல் சவ்வு ஒரு
A) ஊடுருவும் தன்மை உடையது
B) ஊடுருவும் தன்மை அற்றது
c) ஒரு பக்க கசிவுடையது (அ) தேர்ந்தெடுத்து ஊடுருவும் தன்மை உடையது
D)பிளாஸ்மா டெஸ்மேட்டா
விடை: c) ஒரு பக்க கசிவுடையது (அ) தேர்ந்தெடுத்து ஊடுருவும் தன்மை உடையது
24. DPT-ன் விரிவாக்கம்
A) டிப்ளமோ இன் பிசியோதெரபி
B) டிப்தீரியா, பெர்டூசிஸ் (வறட்சியான இருமல்), டெடானஸ்
C) யேல் பைரிடிக் அன்டீஜன்
D) டிப்தீரியா, பெராலிஸிஸ், டெடானஸ்
விடை: B) டிப்தீரியா, பெர்டூசிஸ் (வறட்சியான இருமல்), டெடானஸ்
25. வைரஸ் கீழே கூறப்பட்ட ஒன்றைப் பெற்றுள்ளது.
A) டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ.
B) டி.என்.ஏ. மட்டும்
C) ஆர்.என்.ஏ. மட்டும்
D) ஆர்.என்.ஏ. (அ) டி.என்.ஏ. (ஒன்று மட்டும்)
விடை: D) ஆர்.என்.ஏ. (அ) டி.என்.ஏ. (ஒன்று மட்டும்)
26. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
a) இரத்த வகை 1) அன்ட்டிகோயாகுலன்ட்
b) இரத்த சுழற்சி 2) எரித்ரோபிளாஸ்டோசிஸ் ஃபீடாலிஸ
c) Rh காரணி 3) வில்லியம் ஹார்வே
d) ஹிபாரின் 4) லேன்ட்ஸ்டீனர்
குறியீடுகள் :
A b c d
A) 2 1 3 4
B) 4 2 3 1
C) 1 2 3 4
D) 4 3 2 1
விடை: D) 4 3 2 1
27. சால்மன் மீனினம் ஆற்றில் முட்டையிடுவதற்கு ஒரே இடத்தையே ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கிறது.இதற்கு
A) வாசனை முக்கியப் பங்கு வகிக்கிறது
B) பார்வை முக்கியப் பங்கு வகிக்கிறது
C) வாசனை, பார்வை இரண்டும் முக்கியப் பங்கு
வகிக்கிறது
D) மேற்சொன்ன எதுவுமில்லை
விடை: A) வாசனை முக்கியப் பங்கு வகிக்கிறது
28. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே I கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
a)இரத்தம் உறைதல் 1) இன்கலின்
b) இரத்த குளுக்கோஸ் அளவு 2) விட்டமின் K
c) சக்தியின் உறைவிடம் 3) மாவுச்சத்து
d) வினிகர் 4) அசெட்டிக் அமிலம்
குறியீடுகள் :
A b c d
A) 2 1 3 4
B) 1 2 3 4
C) 4 1 3 2
D) 3 4 2 1
விடை: A) 2 1 3 4
29. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
a) யானைக்கால் நோய் 1) என்டமீபா
b) கலா-அசார் 2) ஃபைலேரியல் வா்ம்
c) உறங்கும் வியாதி 3) லீஷ்மேனியா டோனோவானி
d) அமீபயாசிஸ் 4) டிரிப்பனோசோமா
குறியீடுகள் :
a b c d
A) 3 4 2 1
B) 2 3 4 1
C) 1 4 3 2
D) 4 2 3 1
விடை: B) 2 3 4 1
30. கீழ்க்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை எடுத்துக்காட்டுக.
A) ஹிமோகுளோபின் -ஹாலத்தூரியன்கள்
B) ஹீமோசியானின் -ஆர்த்ரோபோடாக்கள்
C) மோல்பாடின் -அசிடியன்கள்
D) வனடியம் குரோமோஜன் -பாலூட்டிகள்
விடை: B) ஹீமோசியானின் -ஆர்த்ரோபோடாக்கள்
31. நிறக்குருடு இந்த ஒரு ஜீனினால் உண்டாக்கப்படுகின்றது.
A) பெண்ணின் ஓங்கு பண்பு ஜீன்
B) ஆணின் ஓங்கு பண்பு ஜீன்
C) பெண்ணின் ஒடுங்கு பண்பு ஜீன்
D) ஆணின் ஒடுங்கு பண்பு ஜீன்
விடை: C) பெண்ணின் ஒடுங்கு பண்பு ஜீன்
32. மனிதனில் எண்ட் அமீபா ஜீன் ஜிவாலிஸ் எப்பகுதியைப் பாதிக்கிறது?
A) இரைப்பை
B) குடல்
C) வாய்க்குழி
D) சிறுகுடல்
விடை: D) சிறுகுடல்
33. இனப்பெருக்கம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
A) எண்டோக்கிரைன் சிஸ்டம்
B) நியூரோ எண்டோக்கிரைன் சிஸ்டம்
C) நரம்பு மண்டலம்
D) நோய் எதிர்ப்பு மண்டலம்
விடை: A) எண்டோக்கிரைன் சிஸ்டம்
34.விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்
A) நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
B) பாசோரியல் தகவமைப்பு
C) நீர்வாழ்த் தகவமைப்பு
D) பறப்பதற்கான தகவமைப்பு
விடை: B) பாசோரியல் தகவமைப்பு
35. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது.
A) FSH
B) TSH
C) இன்சுலின்
D) குளுக்காஹான்
விடை: D) குளுக்காஹான்
36. அக்ரோமெகாலி பின்கண்ட காரணங்களில் ஒன்றினால் 64 ஏற்படுகிறது.
A) வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
B) வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்
C) இன்சுலின் அதிகம் சுரப்பதால்
D) குளுக்காஹான் குறைவாகச் சுரப்பதால்
விடை: A) வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
37. செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A) கார்ப்பஸ் லென்டியா
B) கார்ப்போரா அல்லேட்டா
C) கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
D) கார்பஸ் அல்பிகன்ஸ்
விடை: D) கார்பஸ் அல்பிகன்ஸ்
38. இரத்தம் உறைதலுக்கான முக்கியமான வைட்டமின்
A) வைட்டமின் A
B) வைட்டமின் B
C) வைட்டமின் C
D) வைட்டமின் K
விடை: D) வைட்டமின் K
39. சிறுநீரகத்தைப் பற்றி அறியும் படிப்பு
A) நெப்ராலஜி
B) கைனகாலஜி
C) கார்டியாலஜி
D) அஃப்தால்மாலஜி
விடை: A) நெப்ராலஜி
40. ECG என்பதன் விரிவாக்கம்
A) எலக்ட்ரோகார்டியோகிராம்
B) எலக்ட்ரிகல் கண்டக்டிவிட்டி கிராஃப்
C) எலக்ட்ரோ சர்குலேஷன் கிராஃப்
D) இவை எதுவுமில்லை
விடை: A) எலக்ட்ரோகார்டியோகிராம்
41. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் புரோட்டீன்
A) அல்புமின்
B). G-குரோபுலின்கள்
C) ஃபைப்ரினோஜன்
D) Y-குளோபுலின்கள்
விடை: C) ஃபைப்ரினோஜன்
42. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாததைக் குறிப்பிடு,
A) மூச்சுக்குழல்
B) ஸ்பைரக்கிள்
C) எபிபோடைட்
D) மால்பீஜியன் நுண்குழல்
விடை: D) மால்பீஜியன் நுண்குழல்
43. உடலின் வெப்பநிலையை சீர் செய்யும் சுரப்பி
A) பிட்யூட்டரி சுரப்பி
B) அட்ரினல் சுரப்பி
C) தைராய்டு
D) ஹைப்போதலாமஸ்
விடை: C) தைராய்டு
44. ரெஸ்ட்ரிக்ஷன் என்டோநியூக்ளியஸ் பின்வருவன வற்றுள் எதை வெட்டுவதற்குப் பயன்படுகிறது?
A) டி.என்.ஏ.
B) குரோமோசோம்
C) செல்சுவர்
D) ஆர்.என்.ஏ.
விடை: A) டி.என்.ஏ.
45. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) கேன்சர் -HBV
B) ரேபிஸ் -ஆன்கோஜெனிக் வைரஸ்
C) ஹிபாடிடிஸ் -ரேப்டோ வைரஸ்
D) செங்கல் வடிவம் -அம்மை வைரஸ்
விடை: D) செங்கல் வடிவம் – அம்மை வைரஸ்
46. இரத்த செல்களை எண்ணும் கருவியின் பெயர்
A) ஹிமோசைட்டோ மீட்டர்
B) எலக்ட்ரோ கார்டியோகிராப்
C) ஸ்டெதஸ்கோப்
D) ஸ்பிக்மோ மானோமீட்டர்
விடை: A) ஹிமோசைட்டோ மீட்டர்
47. இரத்தச் சிவப்பணுக்கள் அதிகரிப்பதால் ஏற்படும் தன்மை
A) லுகீமியா
B) அனீமியா
C) புற்றுநோய்
D) பாலிசைத்தீமியா
விடை: D) பாலிசைத்தீமியா
48. ஹோலாண்ட்ரீக் மரபணுக்கள் காணப்படுவது
A) ஆட்டோம்சோம்களில்
B) X மற்றும் Y குரோமோசோம்களில்
C) Y குரோமோசோம்களில்
D) X குரோமோசோம்களில்
விடை: C) Y குரோமோசோம்களில்
49. இயற்கையான கருவுறுதல் நடைபெறாமல் தடுப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) கருத்தடை
B) வாசெக்டமி
C) டியூபெக்டமி
D) கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனங்கள்
விடை: D) கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனங்கள்
50. தொடை இடுக்கினில் ஏற்படும் குடல் பிதுக்கம்
A) இன்குயின்ஸ்
B) தொப்புள்
C) விந்துப்பை
D) மேல்தொடை பிதுக்கம்
விடை: D) மேல்தொடை பிதுக்கம்