
SCIENCE TEST ANSWER KEY
1. பறவை எச்சத்தை விற்பதன் மூலம் பொருளாதார லாபம் பெற்றுள்ள நாடு
A) USA
B) பெரு
C) ஆஸ்திரேலியா
D) மேற்கிந்தியத் தீவுகள்
விடை: B) பெரு
2. கரைந்துள்ள பைபிரினோஜன் கரையா ஃபைபிரின் எனும் பொருளாக மாறுவதற்கு காரணமானவை
A) துரோம்பின்
B) புரோதுரோம்பின்
C) துரோம்பிஸே
D) துரோம்போகைனேஸ்
விடை: A) துரோம்பின்
3. பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம்
A) கழுத்துப் பகுதி
B) இதயத்தின் அடிப்பகுதி
C) மூளையின் அடிப்பகுதி
D) வயிற்றுப்பகுதி
விடை: C) மூளையின் அடிப்பகுதி
4. இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தினை இது கொடுக்கின்றது.
A) ஹீமோகுளோபின்
B) அல்புமின்
C) காமா குளோபுளின்
D) மையோகுளோபின்
விடை: A) ஹீமோகுளோபின்
5. பெண்களுக்கான பாலியல் குணாதிசயங்கள் இதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது?
A) புரோஜெஸ்டிரோன்
B) எஸ்டிரோஜன்
C) டெஸ்டோஸ்டீரோன்
D) அல்டோஸ்டீரான்
விடை: B) எஸ்டிரோஜன்
6. ஒரு கலப்புயிரியை ஏதாவது ஒரு பெற்றோரோடு (ஓங்குத் தன்மை (அ) ஒடுங்குத் தன்மை உடைய) கலப்பு செய்வதற்குப் பெயர்
A) ஒற்றைப் பண்பு கலப்பு
B) பிற்கலப்பு
C) சோதனைக் கலப்பு
D) இரட்டைப் பண்பு கலப்பு
விடை: B) பிற்கலப்பு
7. உருவம் ஒத்த இரட்டையர்கள் இதனால் பிறக்கின்றார்கள்.
A) இரண்டு முட்டைகளை ஒரு விந்து கருவாக்குதல்
B) ஒரு முட்டையை இரண்டு விந்துக்கள் கருவாக்குதல்
C) ஒரு கருவுற்ற முட்டை இரண்டு பிளாஸ்டோ மியராக பிளவுபட்ட பிறகு பிரிக்கப்படுதல்
D) இரண்டு முட்டைகளை இரண்டு விந்துக்கள் கருவாக்குதல்
விடை: C) ஒரு கருவுற்ற முட்டை இரண்டு பிளாஸ்டோ மியராக பிளவுபட்ட பிறகு பிரிக்கப்படுதல்
8. மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆகக் காணப்படும் போது (22A + XXY) இந்த நோய் (சின்ட்ரோம்) ஏற்படுகின்றது.
A) டௌன்ஸ் சின்ட்ரோம்
B) கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம்
C) டர்னர்ஸ் சின்ட்ரோம்
D) எட்வேர்ட் சின்ட்ரோம்
விடை: B) கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம்
9. குழந்தை பிறந்த 15 நாட்களுக்குள் எந்த நோய்த்தடுப்பு மருந்து (வேக்ஸின்) கொடுக்கப்பட வேண்டும்?
A) ‘O’ போலியோ
B) டி.பி.டீ. (DPT)
C) எம்.எம்.ஆர். தடுப்பு மருந்து
D) மீசில்ஸ் தடுப்பு மருந்து
விடை: A) ‘O’ போலியோ
10. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
பட்டியல் I பட்டியல் II
a) A, B, O இரத்த வகைகள் 1) நுட்ப திடீர் மாற்றத்திற்கு உதாரணம்
b) ஆணின் தலை வழுக்கை 2) இரட்டைப் பண்பு கலப்பு
c) கதிர் அரிவாள் சோகை நோய் 3) பல்கூட்டு அல்லீல்கள்
d) தன்னிச்சை விதி 4) பால் தன்மை மேலாதிக்க ஜீன்கள்
குறியீடுகள் :
a b c d
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 2 1 4 3
D) 1 2 3 4
விடை: B) 3 4 1 2
11. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
I) ADH என்பது அடினோ ஹைபோபைசிஸில் இருந்து சுரக்கின்றது
II) ADH என்பது இன்பன்டிபுலத்திலிருந்து சுரக்கின்றது
III) ADH என்பது நியூரோ ஹைப்போபைசிஸில் இருந்து சுரக்கின்றது
IV) ADH என்பது பீனியல் சுரப்பியில் இருந்து சுரக்கின்றது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (i) மற்றும் (ii) சரியானவை
B) (ii) மட்டும் சரியானது
C) (iii) மட்டும் சரியானது
D) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
விடை: C) (iii) மட்டும் சரியானது
12. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
உறுதி (A) : விந்துச் செல் அதன் கழுத்துப்பகுதியில் அக்ரோசோமினைக் கொண்டுள்ளது.
காரணம் (R) : சென்ட்ரியோலானது விந்துச் செல்லின் எண்ணிக்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A) மற்றும் (R)இரண்டும் தவறு
B) (A) சரி, ஆனால் (R) தவறு
C) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) சரியான காரணமாகும்
D) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) சரியான காரணமில்லை
விடை: B) (A) சரி, ஆனால் (R) தவறு
13. இந்தியாவில் எய்ட்ஸ் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வருடம்
A) 1932
B) 1986
C) 1990
D) 1992
விடை: B) 1986
14. முதல் வகை ஊர்வனவற்றில் இருப்பது
A) ஒரு வெண்டிரிக்கிள்
B) இரு பாகமாக பிரித்த வெண்டிரிக்கிள்
C) நிறைவற்ற வெண்டிரிக்கிள்
D) ஒற்றை ஆரிக்கிள்
விடை: B) இரு பாகமாக பிரித்த வெண்டிரிக்கிள்
15. கீழே வருவனவற்றில் எது பொருத்தம் இல்லாதது?
A) வைட்டமின் ‘A’ – கொழுப்பில் சுரையக் கூடியது
B) வைட்டமின் ‘C’ – நீரில் கரையக்கூடியது
C) வைட்டமின் ‘B’ – நீரில் கரையக்கூடியது
D) வைட்டமின் ‘D’ – நீரில் கரையக்கூடியது
விடை: D) வைட்டமின் ‘D’ – நீரில் கரையக்கூடியது
16. ஈயினால் பரவும் வியாதி
A) வயிற்றுப்போக்கு
B) எலும்புருக்கி நோய்
C) யானைக்கால்
D) மலேரியாக் காய்ச்சல்
விடை: A) வயிற்றுப்போக்கு
17. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை
A) 22
B) 44
C) 23
D) 46
விடை: D) 46
18. இரத்தம் சிவப்பு நிறமாக உள்ளதன் காரணம்
A) அலுமினியம்
B) இரும்பு
C) தாமிரம்
D) ஈயம்
விடை: B) இரும்பு
19. ஹீமோபிலியா என்ற நோய் மனிதரில் எவ்வாறு ஏற்படுகிறது?
A) பாக்டீரியா தொற்றினால்
B) பூச்சிகளின் தொற்றினால்
C) திடீர் மாற்றமடைந்த ஜீனினால்
D) வைரஸ் தொற்றினால்
விடை: C) திடீர் மாற்றமடைந்த ஜீனினால்
20. பட்டுப்புழு உணவாக உண்ணுவது
A) கறிவேப்பிலை
B) மா இலை
C) கொத்தமல்லி இலை
D) மல்பெரி இலை
விடை: D) மல்பெரி இலை
21. செரிகல்சர் என்பது
A) பட்டுப்பூச்சி வளர்த்தல்
B) மீன் வளர்த்தல்
C) செடிகள் வளர்த்தல்
D) தேனீ வளர்த்தல்
விடை: A) பட்டுப்பூச்சி வளர்த்தல்
22. பண்ணை விலங்குகளின் முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் புரட்சி
A) நிலப் புரட்சி
B) வெள்ளிப் புரட்சி
C) தங்கப் புரட்சி
D) வெள்ளைப் புரட்சி
விடை: B) வெள்ளிப் புரட்சி
23. ஜீன் என்பது
A) பரம்பரைக் காரணி
B) இளமையைக் காக்கும் மருந்து
C) மிகச்சிறிய உயிரினம்
D) ஓர் விதை
விடை: A) பரம்பரைக் காரணி
24. பரவும் தன்மையற்ற நோய்
A) காலரா
B) மலேரியா
C) கரோனரி இதயநோய்
D) எய்ட்ஸ்
விடை: C) கரோனரி இதயநோய்
25. இரத்தத் தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன?
A) நோய் எதிர்ப்புத்தன்மை
B) வாயு பரிமாற்றம்
C) இரத்தம் உறைதல்
D) அமில கார சமன்பாடு
விடை: C) இரத்தம் உறைதல்
26. பிலேரியாஸிஸ் நோய் உருவாக காரணமான காரணி
A) வைரஸ்
B) பாக்டீரியா
C) ஊச்சரேரியா பாங்கராப்டி
D) பிளாஸ்மோடியம்
விடை: C) ஊச்சரேரியா பாங்கராப்டி
27. பாலூட்டியின் உதரவிதானம் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது?
A) நரம்பு மண்டலம்
B) கழிவுநீக்க மண்டலம்
C) ஜீரண மண்டலம்
D) சுவாச மண்டலம்
விடை: D) சுவாச மண்டலம்
28. புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்
A) தோல் புற்றுநோய்
B) இரத்தப் புற்றுநோய்
C) நுரையீரல் புற்றுநோய்
D) எலும்பு புற்றுநோய்
விடை: A) தோல் புற்றுநோய்
29. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்
A) தமனி
B) சிறை
C) தந்துகிகள்
D) பெருஞ்சிரை
விடை: A) தமனி
30. குழந்தை பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்பு பற்கள்
A) கோரைப் பற்கள்
B) பால்பற்கள்
C) அறிவுப் பற்கள்
D) நிலைத்த பற்கள்
விடை: B) பால்பற்கள்
31. மீன்கள் நீந்திச் செல்லும் திசை மாற்றத்திற்கு கடினமான துடுப்புகள்
A) முதுகுத் துடுப்புகள்
B) மார்புத் துடுப்புகள்
C) இடுப்புத் துடுப்புகள்
D) வால் துடுப்புகள்
விடை: D) வால் துடுப்புகள்
32. மீன்களின் வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) பிஸி கல்சர்
B) செரிகல்சர்
C) வெர்மிகல்சர்
D) நீர் உயிரிகள் வளர்ப்பு
விடை: A) பிஸி கல்சர்
33. எலும்புத் தசையின் செயல் அலகு
A) மையோசின்
B) ஆக்டின்
C) சார்க்கோமியர்
D) தசை நார்
விடை: C) சார்க்கோமியர்
34. மிகப்பெரிய உயிருள்ள செல் எது?
A) நெருப்புக்கோழி முட்டை
B) பாரமீசியம்
C) யூக்ளினா
D) ஹைட்ரா
விடை: A) நெருப்புக்கோழி முட்டை
35. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை
A) டையாசிலிஸ்
B) அக்கு-பஞ்சர்
C) இ.சி.ஜி.
D) ஆன்ஜியோ பிளாஸ்டி
விடை: A) டையாசிலிஸ்
36. பாலில் காணப்படும் கார்போ ஹைட்ரேட்டு
A) சுக்ரோஸ்
B) குளுக்கோஸ்
C) லேக்டோஸ்
D) பிரக்டோஸ்
விடை:C) லேக்டோஸ்
37. எதில் டார்டாரிக் அமிலம் உள்ளது?
A) வினிகர்
B) எலுமிச்சை சாறு
C) திராட்சை
D) பால்
விடை: C) திராட்சை
38. புரத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோய்
A) வயிற்றுப்போக்கு
B) அனரெக்ஸிமா நெர்வோசா
C) உடல் பருமன்
D) மாராஸ்மஸ்
விடை: D) மாராஸ்மஸ்
39. எஸ்செரியா கோலை உயிரி ஓர் ………ஆகும்.
A) வைரஸ்
B) பாக்டீரியா
C) புரோட்டோசோவா
D) நுண்புழு
விடை: B) பாக்டீரியா
40. பாலூட்டிகளின் முட்டைகளில் கரு உணவு காணப்படுவதில்லை. எனவே, இத்தகைய முட்டைகள் ……….. எனப்படும்.
A) எலெசிதல்
B) மைக்ரோலெசிதல்
C) மீசோலெசிதல்
D) கிளிடாய்க்
விடை: A) எலெசிதல்
41. பாக்டீரியோபேஜ் என்பது
A) வைரஸ்
B) பூஞ்சைகள்
C) பாக்டீரியம்
D) தட்டைப்புழு
விடை: A) வைரஸ்
42. குரோமோசோம்கள் காணப்படும் இடம்
A) சைட்டோபிளாசம்
B) மைட்டோகாண்டிரியா
C) உட்கரு
D) ரைபோசோம்
விடை: C) உட்கரு
43. குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்றப் பயன்படும் என்சைம் எது?
A) டயஸ்டேஸ்
B) இன்வர்டேஸ்
C) சைமேஸ்
D) மால்டேஸ்
விடை: C) சைமேஸ்
44. உமிழ்நீரில் காணப்படும் என்சைம்
A) பெப்சின்
B) லிப்பேஸ்
C) அமிலேஸ்
D) டயலின்
விடை: D) டயலின்
45. இருவாழ்விக்கு ஒரு உதாரணம்
A) ஓணான்
B) மீன்
C) தவளை
D) முதலை
விடை: C) தவளை
46. கீழ்க்கண்டவற்றுள் உணவுச் சங்கிலியில் சரியான வரிசையுடையது எது?
A) கால்நடை → புற்கள் → மனிதன்
B) புற்கள் → மனிதன் → கால்நடை
C) புற்கள் → கால்நடை → மனிதன்
D) மனிதன் → கால்நடை→ புற்கள்
விடை: C) புற்கள் → கால்நடை → மனிதன்
47. கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?
A) கண்மனி
B) குருட்டுப் புள்ளி
C) விழித்திரை
D) லென்சு
விடை: C) விழித்திரை
48. இந்திய அரசு எந்த இடத்திலுள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் கோழிப்பண்ணைஆராய்ச்சி பிரிவை நிறுவியது?
A) டில்லி
B) மும்பை
C) கொல்கத்தா
D) இஜத்நகர்
விடை: D) இஜத்நகர்
49. குருதியின் pH மதிப்பு
A) 2.4 . 3.4 pH
B) 4.0 – 4.4 pH
D) 7.3 – 7.5 pH
C) 4.5 – 5.5 pH
விடை: C) 4.5 – 5.5 pH
50. வெர்மிடெக் என்னும் வார்த்தையை உருவாக்கியவர்
A) முனைவர் சுல்தான் இஸ்மாயில்
B) முனைவர் அப்துல் இஸ்மாயில்
C) முனைவர் ஜெ.ஏ. போஸ்
D) முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன்
விடை: A) முனைவர் சுல்தான் இஸ்மாயில்