
SCIENCE TEST ANSWER KEY
1. போலியோ வைரஸ் உடலில் நுழையும் வழி
A) கொசுக் கடிப்பதனால்
B) தெள்ளுப்பூச்சி கடிப்பதனால்
C) சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால்
D) உமிழ்நீர் மற்றும் மூக்கிலிருந்து ஒழுகும் பொருளினல்
விடை: C) சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால்
2. மலேரியாக் காய்ச்சல் எதனால் உண்டாகிறது?
A) பெண் அனாபிலஸ் கொசுவினால்
B) மாசுபட்ட காற்று
C) வைரஸ்
D) பிளாஸ்மோடியம்
விடை: D) பிளாஸ்மோடியம்
3. நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் தனிமம்
A) செம்பு
B) இரும்பு
C) வெள்ளி
D) தங்கம்
விடை: B) இரும்பு
4. குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்
A) டால்ஃபின்
B) நட்சத்திர மீன்
C) சுறா மீன்
D) ஜெல்லி மீன்
விடை: C) சுறா மீன்
5. இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர்
A) அலெக்ஸாண்டர் பிளமிங்
B) எயின்ஸ்டீன்
C) வில்லியம் ஹார்வி
D) எட்வர்டு ஜென்னர்
விடை: C) வில்லியம் ஹார்வி
6. ஆர்னித்தாலஜி எனப்படுவது………….படிப்பு
A) பூச்சிகள் பற்றிய
B) புழுக்கள் பற்றிய
D) பறவைகள் பற்றிய
C) மீன்கள் பற்றிய
விடை: C) மீன்கள் பற்றிய
7. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதற் பாலூட்டியின் பெயர்
A) டாலி
B) போலி
C) ரூபி
D) வில்லி
விடை: A) டாலி
8. AIDS நோயை உறுதிப்படுத்தும் சோதனை
A) வைடால்
B) எலைசா
C) உயிர்த்திசு நோக்கு
D) வெஸ்டர்ன் பிளாட்
விடை: D) வெஸ்டர்ன் பிளாட்
9. தடுமன் நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி
A) HIV வைரஸ்
B) ரைனோ வைரஸ்
C) புகையிலை மொசைக் வைரஸ்
D) அடினோ வைரஸ்
விடை: B) ரைனோ வைரஸ்
10. இவற்றின் சிறுநீர் மூலமாக லெப்டோஸ் பைரோஸிஸ் நோய் பரவுகிறது
A) பல்லி
B) எலி
C) நாய்
D) பூனை
விடை: B) எலி
11. பெரியம்மை வைரஸ் நோய்க்கு தடுப்பு முறையை கண்டறிந்தவர்
A) டிமிட்ரி ஐவனோஸ்கி
B) எட்வர்டு ஜென்னர்
C) W.M. ஸ்டேன்லி
D) ராபர்ட் கோச்
விடை: B) எட்வர்டு ஜென்னர்
12. பிறந்த குழந்தைக்கு தரக்கூடிய தடுப்பு மருந்து
A) TT தடுப்பு
B) DPT தடுப்பு
C) MMR தடுப்பு
D) BCG தடுப்பு
விடை: D) BCG தடுப்பு
13. செல் பிரிதலின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையத்தில் வந்தடைகிறது
A) புரோநிலை
B) மெட்டாநிலை
C) அனாநிலை
D) டீலோநிலை
விடை: B) மெட்டாநிலை
14. பால் வெளியேற்றப்படுவதற்கு ஹார்மோன் காரணமாகும்?
A) ஆக்ஸிடோசின்
B) புரோலாக்டின்
C) தைராக்ஸின்
D) டெஸ்டோஸ்டீரோன்
விடை: A) ஆக்ஸிடோசின்
15. மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 45 ஆகக் காணப்படும் போது (22AA + x 0) இந்த நோய் (சின்ட்ரோம்) ஏற்படுகின்றது
A) டர்னர்ஸ் சின்ட்ரோம்
B) டௌன்ஸ் சின்ட்ரோம்
C) கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம்
D) எட்வர்ட்ஸ் சின்ட்ரோம்
விடை: A) டர்னர்ஸ் சின்ட்ரோம்
16. கீழ்க்கண்டவற்றுள் எந்த நோய் அரச பரம்பரை நோய் என அழைக்கப்படுகின்றது?
A) இரத்தசோகை
B) லியூக்கீமியா
C) ஹீமோபிலியா
D) நிறக்குருடு
விடை: C) ஹீமோபிலியா
17. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று நோய் தடுப்புத்தன்மை வாய்ந்ததில்லை?
A) போலியோ நோய் தடுப்பு வாக்சின்
B) பிசிஜி
C) ஆன்டிராபிஸ்
D) புரோஜெஸ்டிரோன்
விடை: D) புரோஜெஸ்டிரோன்
18. திடீர் மாற்றம் யாரால் கண்டறியப்பட்டது?
A) மார்கன்
B) ஹக்ஸ்லி
C) மெண்டல்
D) ஹீகோ தே விரிஸ்
விடை: D) ஹீகோ தே விரிஸ்
19. இரத்தம் சிவப்பாகத் தோன்றுவதற்குக் காரணம்
A) அல்புமின்
B) ஹீமோகுளோபின்
C) வைட்டமின் B
D) ரிலாக்ஸின்
விடை: B) ஹீமோகுளோபின்
20. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a) வளர்ச்சி ஹார்மோன். 1. பான்கிரியாஸ்
b) தைராக்ஸின் 2. டெஸ்டிஸ்
c) இன்சுலின் 3. பிட்டியூடரி
d) டெஸ்டோ ஸ்டீரோன். 4. தைராய்டு
குறியீடுகள் :
a b c d
A) 3 4 1 2
B) 4 3 2 1
C) 1 2 3 4
D) 2 1 4 3
விடை: A) 3 4 1 2
21. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a) தமனி – சுத்திகரிக்கப்பட்ட இரத்தம்
b) சிரை – பிராணவாயு செரிவூட்டப்பட்ட இரததம்
c) நுரையீரல் தமனி – பிராணவாயு இல்லாத இரத்தம்
d) நுரையீரல் சிரை – அசுத்த இரத்தம்
குறியீடுகள் :
a b c d
A) 2 3 4 1
B) 3 4 1 2
C) 4 1 2 3
D) 1 2 3 4
விடை: A) 2 3 4 1
22. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
உறுதி (A) : மலேரியாவுக்குக் காரணமான ஒட்டுண்ணி மனித இரத்தத்தை உணவாகக் கொள்கிறது.
காரணம் R: ஒட்டுண்ணிகளாக இருப்பவை தன் ஜீரண மண்டலத்தை இழந்துவதால் விலங்கை அவை ஆதார உணவுக்கு சார்ந்துள்ளது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
A) (A) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் R இரண்டும் தவறானவை
C) (A) சரி, ஆனால் R தவறு
D) (A) தவறு, ஆனால் R சரி
விடை: A) (A) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது (A) விற்கு சரியான விளக்கம்
23. மோனோகுளோனல் ஆண்டிபாடிகள் என்பது
A) நொதிகள்
B) உயிரி உரம்
C) உயிர் எதிர் பொருள்கள்
D) புற்றுநோய்
விடை: D) புற்றுநோய்
24. மனிதனில் இணை மூளை நரம்புகள் உள்ளன?
A) 10 இணைகள்
B) 12 இணைகள்
C) 14 இணைகள்
D) 31 இணைகள்
விடை: B) 12 இணைகள்
25. எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) எலக்ட்ரோ கார்டியாகிராஃப் -நுரையீரல்கள்
B) ஸ்பிக்மோமானோ மீட்டர். – இரத்த அழுத்தம்
C) எலக்ட்ரோ என் செபலோகிராஃப் – இதயம்
D) எண்டோஸ்கோப்பி – மூளை
விடை: B) ஸ்பிக்மோமானோ மீட்டர் – இரத்த அழுத்தம்
26. கருவற்ற கோழி முட்டைகளின் அடைகாத்தல் காலம்
A) 11-12 நாட்கள்
B) 21-22 நாட்கள்
C) 31-32 நாட்கள்
D) 41-42 நாட்கள்
விடை: B) 21-22 நாட்கள்
27. குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோை ஆல்கஹாலாக மாற்றும் நொதி
A) டயஸ்டேஸ்
B) இன்வர்டேல்
C) சைமேஸ்
D) மால்டேஸ்
விடை: C) சைமேஸ்
28. இரைப்பையில் சுரக்கும் அமிலம்
A) சோடியம் குளோரைடு
B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
C) பாஸ்போரிக் அமிலம்
D) கந்தக அமிலம்
விடை: B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
29. கொரில்லா குரங்கிலுள்ள குரோமோ சோம்களின் மொத்த எண்ணிக்கை
A) 46
B) 48
C) 50
D) 52
விடை: B) 48
30. எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி. என்ற வைரஸைக் கண்டுபிடித்தவர்கள்
A) ராபர்ட் கேலோ மற்றும் குழுவினரும்
B) கரோலஸ் லினேயஸ்
C) ராபர்ட் எச். விட்டாகர்
D) ஆன்டன் வான் லூவன்ஹூக்
விடை: A) ராபர்ட் கேலோ மற்றும் குழுவினரும்
31. குழந்தைகள் பிறக்கும் போதே தைராக்ஸின் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்
A) காய்டர்
B) எண்டமிக் காய்டர்
C) கிரிடினிசம்
D) மிக்ஸிடிமா
விடை: C) கிரிடினிசம்
32. சிறுநீரகத்தின் தோற்ற மற்றும் வேலை செய்யும் அடிப்படை அலகு
A) கிளாமருலஸ்
B) ஹென்லேயின் வளைவு
C) மால்பீஜியன் உறுப்பு
D) நெஃப்ரான்
விடை: D) நெஃப்ரான்
33. ‘எய்ட்ஸ்’ ஏற்படக் காரணமாக இருப்பது
A) வைரஸ்
B) பேக்டீரியா
C) பூஞ்சைகள்
D) கொசு
விடை: A) வைரஸ்
34. பின்வரும் எந்த நிறமியால் தோல் புற்றுநோய் குறைகிறது?
A) பச்சையம்
B) பாக்டீரிய பச்சையம்
C) பைகோஎரித்ரின்
D) கேந்தாஜேந்தின்
விடை: D) கேந்தாஜேந்தின்
35. தடித்த சுவருடைய புரோவென்டரிகுலஸ் பை இதில் இங்கு காணப்படுகிறது.
A) புறாவின் வாய்குழியில்
B) புறாவின் உணவுக்குழல் பகுதியில் சற்று பருத்த பின்பகுதி, ‘
C) ஆமையின் சுவாசக் குழல் பகுதியில்
D) எலியில்
விடை: B) புறாவின் உணவுக்குழல் பகுதியில் சற்று பருத்த பின்பகுதி
36. ஸ்டார்ச்சின் ஒத்த அமைப்பினை பெற்றிருந்தாலும் மனிதனால் எளிதில் ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட்
A) செல்லுலோஸ்
B) விலங்கு ஸ்டார்ச்
D) ஒரு புரதம்
C) ஒரு லிப்பிடு
விடை: A) செல்லுலோஸ்
37. டக்டஸ் கரோட்டிகஸ் எனப்படுவது
A) ஓணாணின் உணவுக்குழல்
B) ஓணானின் தலைத் தமனியையும், உள்ளுறுப்புத் தமனியையும் இணைக்கும் சிறிய ரத்த நாளம்
C) ஓணானின் கழிவு நீக்க மண்டலம்
D) ஓணானின் ஒரு சிறிய எலும்பு இணைப்பு
விடை: B) ஓணானின் தலைத் தமனியையும், உள்ளுறுப்புத் தமனியையும் இணைக்கும் சிறிய ரத்த நாளம்
38. மனிதனின் உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர்
A) புரதநொதி (புரோட்டீயேல்)
B) டிரிப்சின்
C) ரெனின்
D) அமைலேஸ்
விடை: D) அமைலேஸ்
39. பின்வரும் எந்த உயிரினம் மண்ணின் தங்கம் காட்டுவோன் ஆக உள்ளது?
A) ஈகுவிசெட்டம்
B) வலோஜியா கேன்டிடா
C) எரியோகோனியம் ஒவிலிபோலியம்
D) போக்மிரியா நிவியா
விடை: A) ஈகுவிசெட்டம்
40. ஒரு சில காகிதங்கள் உடையக் கூடியதாகவும் மஞ்சளாகவும் மாறுவது ஏன்?
A) அமிலம் உருவாகி செல்லுலோஸ் சிதைக்கப் படுகிறது
B) புறஊதாக் கதிர்களினால் லிக்னின் அழிக்கப்படுகிறது.
C) பாக்டீரியாக்களால் செல்லுலோஸ் பாதிக்கப்படுகிறது.
D) புரோட்டீன் சிதைவு அடைகிறது
விடை: A) அமிலம் உருவாகி செல்லுலோஸ் சிதைக்கப் படுகிறது.
41. ஆக்ஸிடோஸின் ஹார்மோன் கட்டுப்படுத்துவது
A) வளர்ச்சி
B) பால்சுரப்பு
C) குழந்தை பிறப்பு
D) பால்சுரப்பு மற்றும் குழந்தை பிறப்பு
விடை: D) பால்சுரப்பு மற்றும் குழந்தை பிறப்பு
42. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையாகும்?
A) விந்துக் குழாய் அகற்றல்
B) சினைப்பை அகற்றல்
C) விந்தகம் அகற்றல்
D) கருப்பை அகற்றல்
விடை: A) விந்துக் குழாய் அகற்றல்
43. மனிதனில் நடைபெறும் சுவாசத்தின் காற்றில்லா இறுதிப் பொருள்
A) லாக்டிக் அமிலம்
B) எத்தில் ஆல்கஹால்
C) எத்தில் ஆல்கஹால்+கார்பன் டை ஆக்ஸைடு
D) லாக்டிக் அமிலம்+கார்பன் டை ஆக்ஸைடு
விடை: A) லாக்டிக் அமிலம்
44. நாளமில்லா சுரப்பிகள் என்பவை
A) நாளங்கள் இல்லாத சுரப்பிகள்
B) சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன.
C) ஹார்மோன்களை சுரக்கின்றன
D) இவை அனைத்தும்
விடை: D) இவை அனைத்தும்
45. ஹெபேரின் என்பது
A) உறைதலை தூண்டக்கூடியது
B) உறைதலை தடுப்பது
C) ஹீமோ ஸ்டாடிக்
D) இவற்றுள் ஏதுமில்லை
விடை: B) உறைதலை தடுப்பது
46. கீழ்க்கண்டவற்றுள் எது மெண்டலியன் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்.
A) 1:1:1:1
B) 9:3:3:1
C) 7:1:1:7
D) 1:7:7:1
விடை: B) 9:3:3:1
47. மனிதனில் இதயத் துடிப்பின் தோற்றத்தில் கீழ்க்கண்டவற்றிலிருந்து தவறான விடைகளை தேர்ந்தெடு;
I) சைனோ-ஆரிக்குலர் கணு (SA கணு)பேஸ் மேக்கராக செயல்படுவதில்லை.
II) சைனோ-ஆரிக்குலர் கணு பேஸ் மேக்கராக செயல்படுகிறது.
III)பேஸ்மேக்கர் வலது ஆரிக்கிளின் மேற்புறத்தில் அமைந்துள்ளது.
IV) பேஸ்மேக்கர் ஆரிக்கிளின் மேற்புறத்தில் உள்ளது.
இவற்றுள்,
A) I மட்டும்
B) I மற்றும் II
C) I மற்றும் IV
D) III மற்றும் IV
விடை: C) I மற்றும் IV
48. கொடுக்கப்பட்டுள்ளவையில் எது மைட்டாசிஸ் நிலைகளின் சரியான வரிசை
A) புரோபேஸ், மெட்டாபேஸ், அனாபேஸ், டீலோபேஸ்
B) மெட்டாபேஸ், அனாபேஸ், டீலோபேஸ், புரோபேஸ்
C) அனாபேஸ், புரோபேஸ், மெட்டாபேஸ், டீலோபேஸ்
D) புரோபேஸ், அனாபேஸ், டீலோபேஸ், மெட்டாபேஸ்
விடை: A) புரோபேஸ், மெட்டாபேஸ், அனாபேஸ், டீலோபேஸ்
49. கார்னியா என்பது
A) விழி வெண்படலம்
B) பியூபல்
C) விழித்திரை
D) கண்ணின் லென்சுக்கு முன் காணப்படும் ஒளிபுகும் படலம்
விடை: D) கண்ணின் லென்சுக்கு முன் காணப்படும் ஒளிபுகும் படலம்
50. உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வீதத்திற்கு காரணமான ஹார்மோன்
A) அட்ரீனலின்
B) தைராக்ஸின்
C) செக்ரெட்டின்
D) காஸ்டிரின்
விடை: A) அட்ரீனலின்