
SCIENCE TEST ANSWER KEY
1. யுகலிப்டஸ் தாவர சிற்றினம் மிக அதிகமாக உள்ள நாடு எது?
A) இந்தியா
B) மலேசியா
C) ஆஸ்திரேலியா
D) அமெரிக்கா
விடை: A) இந்தியா
2. தாவரங்களின் சாறேற்றம் பற்றிய டிக்ஸன், ஜாலி என்ற விஞ்ஞானிகள் எந்த அடிப்படையில் முறை செய்தனர்?
A) நுண் துளையீர்ப்புக் கோட்பாடு
B) உள் ஈர்த்தல் கோட்பாடு
C) உயிர்க் கொள்கைகள்
D) நீர்மூலக்கூறுகளின் பிணைப்புச் சக்தி
விடை: D) நீர்மூலக்கூறுகளின் பிணைப்புச் சக்தி
3. தோல் சதைப்பற்று ஒற்றையடுக்காக _______ காணப்படுகிறது
A) ஸைலம் திசுக்களுக்கு உட்பகுதியில்
B) ஃப்ளோயம் திசுக்களுக்குள்
C) மீஸோபில் திசுக்களில்
D) ஸ்டீலின் வெளிப்புறத்தில்
விடை: D) ஸ்டீலின் வெளிப்புறத்தில்
4. ஃப்ளோயம் திசுக்கள் ______ ஆனவை
A) சல்லடைத் தட்டுகளால்
B) கார்க் செல்களால்
C) ஆஸ்டியோ ஸ்கிளீரைடுகளால்
D) க்ளோரென்சிமாக்களால்
விடை: A) சல்லடைத் தட்டுகளால்
5. தாவரங்களினால் உறிஞ்சப்படுகின்ற நீர் எதன் வழியாக ஊடுருவுகிறது?
A) ஃப்ளோயம் திசுக்கள்
B) கோலன்ச்சிமா
C) ஸைலம் திசுக்கள்
D) இலைகள்
விடை: C) ஸைலம் திசுக்கள்
6. சவ்வூடு பரவல் என்பதன் சமபதச் சொல் எது?
A) கீழ்க்கண்ட எவையும் இல்லை
B) விரவிப்பரவுதல்
C) உள்ளீர்த்தல்
D) விறைப்பழுத்தம்
விடை : ஆஸ்மாஸிஸ்
7. தாவரங்களின் நீர் உறிஞ்சும் தன்மை _______ ஏற்படுகிறது
A) சூரிய ஒளி இருக்கும் போது
B) ஒளிச்சேர்க்கை நடக்கும் பொழுது
C) இருட்டாய் இருக்கும் போது
D) இருபத்து நான்கு மணி நேரமும்
குறிப்பு :நீர் ஒளிச்சேர்க்கைக்காக மட்டும் பயன்படுவதில்லை பல்வேறு செயல்களுக்கும் பயன்படக்கூடியது.
விடை: D) இருபத்து நான்கு மணி நேரமும்
8. கீழ்கண்டவற்றுள் எது உச்சநிலைக்காடு?
A) முள்காடு
B) இலையுதிர் காடு
C) பசுமை மாறாக்காடு
D) ஆல்பைன் காடு
விடை: A) முள்காடு
9. ஆலமரத்தின் தூண்வேர்கள் (விழுதுகள்) பயன்படுவது
A) நீரை உறிஞ்சுவதற்கு
B) கிளைகளைத் தாங்குவதற்கு
C) அதிக அளவில் இலைகளை உற்பத்தி செய்வதற்கு
D) மேற்கண்ட மூன்றிற்காகவும்
விடை: B) கிளைகளைத் தாங்குவதற்கு
10. கேனாங் போட்டோமீட்டரினால் அறியப்படுவது
A) ஒளிச்சேர்க்கை
B) சுவாசித்தல்
C) நீராவிப் போக்கு
D) ஒளி சுவாசித்தல்
விடை: B) சுவாசித்தல்
11. இயற்கையில் அமோணிகரணம் நடைபெறும் இடம்
A) ஏரி
B) கடல்
C) நதி
D) சாக்கடை
விடை: D) சாக்கடை
12. ஸ்போர் என்பது ஒரு
A) பரலினப் பெருக்க செல்
B) பாலிலா இனப்பெருக்க செல்
C) உடல் செல்
D) தாவரம்
விடை: B) பாலிலா இனப்பெருக்க செல்
13. DNA அமைப்பைக் கண்டுபிடித்தவர்
A) வாட்சன் கிரிக்
B) ஹர்கோபிந்த் குரானா
C) லேண்ட்ஸ்டெய்னர்
D) கிரிகர் மெண்டல்
விடை: A) வாட்சன் கிரிக்
14. குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான பொருத்தத்தைத் தருக.
a) காஃபீன் – 1) புகையிலை
b) ஓபியம் – 2) காபி
c) நிகோடின் – 3) சிங்கோனா
d) குவினைன் – 4) பாப்பி
குறியீடுகள் :
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 2 4 1 3
D) 4 3 1 2
விடை: C) 2 4 1 3
15. கீழ்க்கண்ட தாவரங்களில் எது குறுகிய பரவு நிலையைக் கொண்டது?
A) ஜிங்கோ
B) யூகலிப்டஸ்
C) தேக்கு
D) வேம்பு
விடை: A) ஜிங்கோ
16. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) மைட்டோகாண்டிரியா – ஒளி பாஸ்பாரிகரணம்
B) ரைபோசோம்கள் – புரதச் சேர்க்கை
C) ஈஸ்ட் – காற்று சுவாச பூஞ்சை
D) ஃபெரடாக்சின் – கிரியா ஊக்கி
விடை: B) ரைபோசோம்கள் – புரதச் சேர்க்கை
17. மிகச்சிறிய மலரும் தாவரம்
A) யுட்ரிகுலேரியா
B) உல்ஃபியா
C) அராபிடாப்சிஸ்
D) செரட்டோபில்லம்
விடை: B) உல்ஃபியா
18. கீழ்க்கண்ட தாவரங்களில் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் எது?
A) செம்பருத்தி
B) வாழை
C) கரிசலாங்கண்ணி
D) கிலுகிலுப்பை
விடை: C) கரிசலாங்கண்ணி
19. பெனிசிலியம் என்பது
I. ஒரு பூஞ்சை
II. ஒரு பச்சை மோல்டு
III.ஒரு பாக்டீரியம்
IV. ஒரு மருந்து
இக்கூற்றுகளில் :
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் IV சரியானவை
D) எல்லாமே சரியானவை
விடை: B) I மற்றும் II சரியானவை
20. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
I. செல்லின் எல்லா செய்கைகளையும் DNA கட்டுப்படுத்துகிறது
II. ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு மரபுப் பண்புகளைக் கடத்துகிறது
III.புரதச் சேர்க்கையைக் கட்டுப்படுத்துகிறது
IV.RNA வை உற்பத்தி செய்கிறது
இக்கூற்றுக்களில் :
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) எல்லாம் சரியானவை
விடை: D) எல்லாம் சரியானவை
21. மெண்டல் தனது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய தாவரம்
A) அவரைச் செடி
B) கத்திரிச் செடி
C) பட்டாணிச் செடி
D) கொண்டைக்கடலைச் செடி
விடை: C) பட்டாணிச் செடி
22. இனச்செல் தோற்றத்திற்குக் காரணமான செல் பிரிதல்
A) நேர்முகப் பிரிவு
B) மறைமுகப் பிரிவு
C) குன்றல் பிரிவு
D) இருசம பிரிவு
விடை: C) குன்றல் பிரிவு
23. அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்
A) விருதுநகர்
B) திருச்சிராப்பள்ளி
C) கோயம்புத்தூர்
D) மதுரை
விடை: A) விருதுநகர்
24. கீழ்க்கண்ட தாவரங்களில் புதர்ச் செடிக்கு உதாரணமாக சொல்லப்படுவது எது?
A) அரளி
B) செம்பருத்தி
C) நெல்
D) மா
விடை: B) செம்பருத்தி
25. தொற்று தாவரங்கள், மற்ற தாவரங்களை இதற்காக சார்ந்து இருக்கும்
A) முழுமையாக சார்ந்து இருக்கும்
B) இடத்துக்காக மட்டும்
C) உணவுக்காக மட்டும்
D) நிழலுக்காக மட்டும்
விடை: B) இடத்துக்காக மட்டும்
26. பென்சிலினை முதலில் கண்டு பிடித்தவர் யார்?
A) பெர்ல்மேன்
B) செய்ன்
C) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
D) கிளட்டர்பக்
விடை: C) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
27. செல்லைக் (Cell) கண்டு பிடித்தவர் யார்?
A) ராபர்ட் ஹீக்
B) டட்ரோச்சட்
C) ராபர்ட் பிரௌன்
D) வாள்மோஹ்ல் மற்றும் பர்க்கிங்ஸ்
விடை: A) ராபர்ட் ஹீக்
28. ரோஜா தண்டில் காணப்படும் கூர்மையான நீட்சிக்குப் பெயர்
A) கொக்கிகள்
B) முள்
C) தண்டு முட்கள்
D) முள் தண்டு
விடை: B) முள்
29. சோரை உடைய இலைகளுக்கு என்ன பெயர்?
A) செதில் இலைகள்
B) ஸ்போரோபில்கள்
C) சிறு இலைகள்
D) கூட்டிலைகள்
விடை: B) ஸ்போரோபில்கள்
30. சாறுண்ணி உயிரி
A) மண்புழு
B) யூக்ளினா
C) அமீபா
D) பூஞ்சை
விடை: D) பூஞ்சை
31. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் – I பட்டியல்-II
A) கேரட். – 1) வித்திலை
B) வேர்க்கடலை. – 2) தண்டு
C) வெண்டை. – 3) வேர்
D) உருளைக்கிழங்கு – 4.கனி
குறியீடுகள் :
A) 3 1 4 2
B) 2 3 1 4
C) 4 2 3 1
D) 1 4 2 3
விடை: A) 3 1 4 2
32. மியோசிஸ் குறித்த கிழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
A) இது மரபுப் பண்பு வேறுபாடுகளைக் கொண்டு வருகிறது.
B) கேமிட்டுகளில் குரோமோசோம் எண்ணிக்கையை குறைக்கிறது
C) உயிரிகளில் குரோமோசோம் எண்ணிக்கையை நிலைப்படுத்துகிறது
D) இது ஆக்குத் திசு பகுதியில் நடைபெறுகிறது
விடை: D) இது ஆக்குத் திசு பகுதியில் நடைபெறுகிறது
33. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : வளரிடத்திலிருந்து பூஞ்சை உணவைப் பெறுகின்றன.
காரணம் (R) : வளரிடத்தில் பூஞ்சை செரிமான நொதிகளைச் சுரக்கின்றன.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) க்கு சரியான விளக்கம் ஆகும்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) க்கு சரியான விளக்கம் ஆகும்
34. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஜோடி எது?
A) ரைசோபியம் – கூட்டுயிரி நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
B) ஸ்ட்ரெப்டோ காக்கஸ் லாக்டிஸ் – வினிகர் உற்பத்தி
C) அசோட்டோபாக்டர் – கூட்டுயிரியற்ற நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
D) ஈஸ்ட் – நொதித்தல்
விடை: B) ஸ்ட்ரெப்டோ காக்கஸ் லாக்டிஸ் – வினிகர் உற்பத்தி
35. கீழ்க்கண்டவற்றுள் சரியான வரிசையைக் கண்டுபிடி.
A) எலக்ட்ரான் போக்குவரத்து ATP உற்பத்தி கிளைகாலிசிஸ், கிரெப் சுழற்சி
B) கிரெப் சுழற்சி, கிளைகாலிசிஸ், ATP உற்பத்தி எலக்ட்ரான் போக்குவாத்து
C) கிளைகாலிசிஸ் கிரெப் சுழற்சி, எலக்ட்ரான் போக்குவரத்து ATP உற்பத்தி
D) ATP உற்பத்தி கிளைகாலிசிஸ், கிரேப் சுழற்சி, எலக்ட்ரான் போக்குவரத்து
விடை: C) கிளைகாலிசிஸ் கிரெப் சுழற்சி, எலக்ட்ரான் போக்குவரத்து ATP உற்பத்தி
36. நெல், வைக்கோல் கடினத் தன்மையுடன் இருக்கக் காரணம்
A) கடின நார்கள்
B) கற்செல்கள்
C) கோலன்கைமா
D) சிலிகா
விடை: A) கடின நார்கள்
37. மரக்கட்டை எதிலிருந்து உருவாகிறது?
A) முதலாம் புளோயம்
B) முதலாம் சைலம்
C) இரண்டாம் சைலம்
D) இரண்டாம் புளோயம்
விடை: C) இரண்டாம் சைலம்
38. பெர்ரி கனி காணப்படுவது
A) துளசி
B) தக்காளி
C) முந்திரி
D) பட்டாணி
விடை: B) தக்காளி
39. மண்ணற்ற நிலையில் தாவரங்களை வளர்க்கும் முறை
A) ஹைட்ராலஜி
B) ஹைட்ரோட்ரோபிசம்
C) ஹைட்ரோஃபோனிக்ஸ்
D) ஹைட்ரோடாக்சிஸ்
விடை: C) ஹைட்ரோஃபோனிக்ஸ்
40. எளிதில் கிடைக்கக்கூடிய சுவாசத் தளப்பொருள்
A) குளூகோஸ்
B) ஃபிரக்டோஸ்
C) தரசம்
D) லேக்டோஸ்
விடை: C) தரசம்
41. பாசி என்பது ஒரு
A) பச்சைத் தாவரம்
B) பச்சையமற்ற தாவரம்
C) ஒட்டுண்ணி தாவரம்
D) மட்குண்ணி தாவரம்
விடை: A) பச்சைத் தாவரம்
42. தேங்காய் இயற்கையாகப் பரவுதல்
A) விலங்கினங்களின் மூலம்
B) நீரின் மூலம்
C) காற்றின் மூலம்
D) மேற்கண்ட மூன்றினாலும்
விடை: B) நீரின் மூலம்
43. நைட்ரஜன் காணப்படும் கரிம சேர்மங்கள்
A) குளூகோஸ்
B) ஃபிரக்டோஸ்
C) புரதங்கள்
D) கொழுப்புகள்
விடை: C) புரதங்கள்
44. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு
A) எபிகல்சர்
B) ஆர்போரிகல்சர்
C) மொரிகல்சர்
D) ஆய்ஸ்டர்கல்சர்
விடை: B) ஆர்போரிகல்சர்
45. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான மூன்று முக்கிய ஊட்டப் பொருள்களாவன
A) கால்சியம், சோடியம், பொட்டாசியம்
B) ஆக்ஸிஜன், இரும்பு, பாஸ்பரஸ்
C) மக்னீசியம், இரும்பு, கார்பன்
D) ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன்
விடை : நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்
46. ஒளிக்சேர்க்கையினால் முதல் உருவாகும் நிலையான விளைபொருள் எது?
A) ஸ்டார்ச்
B) சர்க்கரை
C) புரோட்டின்
D) அமினோ அமிலங்கள்
விடை: A) ஸ்டார்ச்
47. கானாங்ஸ் போட்டோ மீட்டர் எதற்குப் பயன்படுகிறது?
A) ஒளியின் அடர்த்தியை அளப்பதற்கு
B) தாவரங்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை அளப்பதற்கு
C) தாவரங்களின் ஒளிச்சேர்க்கையினை அளப்பதற்கு
D) தாவரங்களில் உள்ள உணவுப் பொருட்களை அளப்பதற்கு
விடை: B) தாவரங்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை அளப்பதற்கு
48. பைலிபெரஸ் தளம் எதிலிருந்து உருவாகும்?
A) பாரன்சிமா உயிரணுக்கள்
B) புறத்தோல் உயிரணுக்கள்
C) நார் உயிரணுக்கள்
D) உட்தோல் உயிரணுக்கள்
விடை: B) புறத்தோல் உயிரணுக்கள்
49. பேசிக்குலார் கேம்பியம் ______ செடியின் தண்டில் உள்ளது
A) ஒரைசா
B) சொர்கம்
C) சிட்ரஸ்
D) சைப்பீரஸ்
விடை: B) சொர்கம்
50. பின்வருவனவற்றுள் வறண்ட நிலத் தாவரம் அல்லாத ஒன்று எது
A) ஒபுன்ஷியா
B) சேரேயஸ்
C) யூபோர்பியா திருக்கள்ளி
D) பியூட்டியா பிராண்டோசா
விடை: C) யூபோர்பியா திருக்கள்ளி