SCIENCE TEST ANSWER KEY
1. பச்சையத்தைக் கரைக்கக் கூடியது
A) அங்கக கரைப்பான்கள்
B) அனங்கக கரைப்பான்கள்
C) அங்கக கரைப்பான்கள் மற்றும் அனங்கக கரைப்பான்கள்
D) இவை எதுவுமில்லை
விடை: A) அங்கக கரைப்பான்கள்
2. தாவரங்களில் சுவாசித்தலின்போது வெளிவரும் வாயு
A) ஆக்ஸிஜன்
B) கார்பன்-டை-ஆக்ஸைடு
C) சல்பர்-டை-ஆக்ஸைடு
D) அம்மோனியா
விடை: B) கார்பன்-டை-ஆக்ஸைடு
3. ஒரு பாக்டீரியா செல்லில், சுவாசித்தல் நடைபெறும் இடம்
A) புரோட்டோ பிளாஸ்மிக் சவ்வு
B) சென்ட்ரோசோம்
C) காண்டிரியோசோம்
D) மைட்டோகாண்டிரியா
விடை: A) புரோட்டோ பிளாஸ்மிக் சவ்வு
4. செல்சவ்வில் காணப்படும் உணர் உறுப்புகள்
A) கார்போஹைட்ரேட்டுகள்
B) புரோட்டீன்கள்
C) நியூக்ளிக் அமிலங்கள்
D) லிப்பிடுகள்
விடை: B) புரோட்டீன்கள்
5. கிளைகாலிசிஸ் எதில் நடைபெறுகிறது?
A) சைட்டோபிளாசம்
B) மைட்டோகாண்ட்ரியா
C) குமிழ்கள்
D) பசுங்கணிகம்
விடை; A) சைட்டோபிளாசம்
6. சிட்ரஸ் கேன்கர் என்ற நோயை ஏற்படுத்தும் காரணி
A) ஸான்தோமோனாஸ் சிட்ரி
B) டொபக்கோ மொசைக் வைரஸ்
C) அல்புனோ கான்டிடா
D) லெப்டோஸ்பைரா
விடை;A) ஸான்தோமோனாஸ் சிட்ரி
7. பொருந்தா ஒன்றினைக் கண்டறிக.
A) பெர்ரி
B) சூலக வெடிகனி
C) ட்ரூப்
D) பெப்போ
விடை:B) சூலக வெடிகனி
8. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
பூவிதழ். – 1) துணைப்பாகம்
புல்லிவட்டம். – 2) ஒருவித்திலைத் தாவரம்
சூலகம். – 3) சீத்தாப்பூ
தொடுயிதழமைவு. – 4) சூலிலை
குறியீடுகள் :
A) 2 1 4 3
B) 4 3 1 2
C) 2 3 1 4
D) 2 3 4 1
விடை; A) 2 1 4 3
9. லைசோசோமின் வேறுப்பெயர்
A) தற்கொலைப் பைகள்
B) செல்லின் ஆற்றல் நிலையம்
C) காண்டிரியோசோம்
D) டிக்டியோசோம்
விடை; A) தற்கொலைப் பைகள்
10.ஒரு மைக்ரானின் அளவு
A) 1/1000 மிமீ
B) 1/1000A
C) 1/1000 மி.மைக்ரான்
D) 1/1000 cm
விடை: A) 1/1000 மிமீ
11. உலகம் வெப்பமாதலை ஏற்படுத்தும் பொருள்
A) ஈயம்
B) கார்பன் மோனாக்ஸைடு
C) துகள் போன்ற பொருட்கள்
D) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
விடை: D) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
12. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?
A) புற்கள்
B) எலுமிச்சை
C) லெகுமினஸ் தாவரம்
D) வேப்பமரம்
விடை; C) லெகுமினஸ் தாவரம்
13. ஃபுளோயம் திசு சார்ந்தவற்றில் பொருந்தாதவற்றை கண்டறிக.
A) சல்லடைக் குழாய்
B) துணை செல்கள்
C) ஃபுளோயம் நார்கள்
D) மர நார்கள்
விடை: D) மர நார்கள்
14. ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது
A) துண்டாதல்
B) ஸ்போர் உருவாதல்
C) இணைவு
D) பிளத்தல்
விடை; C) இணைவு
15. தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை,
A) ஒருவித்திலை மற்றும் இருவித்திலைத் தாவரங்கள்
B) பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்
C) கிரிப்டோகாம் மற்றும் ஃபெனரோகாம்
D) நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை
விடை: C) கிரிப்டோகாம் மற்றும் ஃபெனரோகாம்
16. எந்தக் குறைபாட்டின் காரணமாக இலை மஞ்சளாகிறது?
A) இரும்பு
B) கார்பன்
C) கார்பன் மோனாக்ஸைடு
D) துத்தநாகம்
விடை; D) துத்தநாகம்
17. ஒரு சிறந்த பூச்சிக்கொல்லியாகப் பயன்படுவது
A) கார்பன்
B) கார்பன் டெப்ரா குளோரைடு
C) சல்பர்
D) காப்பர்
விடை: C) சல்பர்
18. பூமியில் உள்ள ஓசோன் படலம் எவ்வாறு உயிரினங்களுக்கு உதவுகிறது?
A) ஆக்ஸிஜனை வழங்குகிறது
B) நைட்ரஜன் சுழற்சியை கட்டுப்படுத்துகிறது
C) வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது
D) புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது
விடை: D) புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது
19. இருட்செயல் பற்றிய ஆய்விற்காக நோபல் பரிசுப் பெற்றவர்
A) மெல்வின் கால்வின்
B) கார்னர்
C) அல்லார்ட்
D) கிரப்
விடை; A) மெல்வின் கால்வின்
20. சிட்ரஸ் கேன்கர் என்னும் நோய் இதன் மூலம் உருவாகிறது?
A) பாக்டீரியம்
B) பூஞ்சை
C) வைரஸ்
D) கொக்கிப்புழு
விடை: A) பாக்டீரியம்
21. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை எடுத்து எழுது.
A) பெர்ரி
B) காப்சூல்
C) ட்ரூப்
D)பெப்போ
விடை; B) காப்சூல்
22. மிக அதிக அளவில் காணப்படும் கண்ணாடி வீடு வாயு
A) CH4
B)NO2
C) SO2
D) CO2
விடை; D) CO2
23. கோலைன் நிறைந்த ஆதாரத் தாவரம்
A) ஈஸ்ட்
B) காளான்கள்
C) பச்சை இலைகள்
D) தானியங்கள்
விடை: C) பச்சை இலைகள்
24. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை எழுதுக.
A) சூலிலை
B) மகரந்தத்தாள்
C) சூல்
D) புல்லி
விடை; D) புல்லி
25. கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் வேதிய சேர்ம பாக்டீரியாவை கண்டறியவும்
A) ரைசோபியம்
B) கிளாஸ்டிரீடியம்
C) நைட்ரோபேக்டர்
D) பெகியோடா
விடை; D) பெகியோடா
26. தாவரங்களிலிருந்து திரவ துளிகளாக நீர் வெளியேறும் முறை
A) நீர்க்கசிவு
B) நீராவிப்போதல்
C) டிரான்ஸ்டக்ஷன்
D) டிரான்ஸ்பார்மேஷன்
விடை; A) நீர்க்கசிவு
27. ‘சைரனின்’ என்ற பாலியல் ஹார்மோன் உற்பத்தி செய்யும் உயிரி
A) ஆல்கா
B) பூஞ்சை
C) லைகன்
D) பாக்டீரியா
விடை: B) பூஞ்சை
28. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஒரு முழுமையான தண்டு ஒட்டுண்ணி?
A) கஸ்கூட்டா
B) டிராசெரா
C) விஸ்கம்
D) வாண்டா
விடை: A) கஸ்கூட்டா
29. உண்ணத்தகுந்த தடுப்பு மருந்தானது வெற்றிகரமாக எந்த தாவரத்தில் உருவாக்கப் பட்டது ?
A) பட்டாணி
B) மாம்பழம்
C) உருளை
D) முட்டைகோஸ்
விடை; D) முட்டைகோஸ்
30. ஒரு புரோகாரியோட் வகை செல்லின் பண்பை கண்டறியவும்
A) செல்சுவர் காணப்படுவது
B) 80S வகை ரைபோசோம் காணப்படுதல்
C) மரபணு பொருள் காணப்படுவதில்லை
D) 70S வகை ரைபோசோம் காணப்படுதல்
விடை: D) 70S வகை ரைபோசோம் காணப்படுதல்
31. சுவாசத்தின் போது ஆக்ஸிகரண பாஸ்பரி கரணம் நடைபெறும் பகுதி
A) பசுங்கனிகத்தின் மாட்ரிக்ஸ்
B) மைட்டோகாண்டிரியாவின் மாட்ரிக்ஸ்
C) மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வு
D) பசுங்கணிகத்தின் கிரானாபகுதி
விடை: C) மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வு
32. ஒன்றைத் தவிர மற்ற அனைத்துச் செல்களிலும் மைட்டோ காண்ட்ரியா காணப்படுகிறது?
A) ஈஸ்ட்
B) பாக்டீரியா
C) பூஞ்சை
D) ஆல்கா
விடை: A) ஈஸ்ட்
33. ‘டாக்ஸால்’ என்பது எந்த தாவர குழுமத்திலிருந்து பெறப்படுகிறது?
A) பிரையோபைட்
B) ஜிம்னோஸ்பெர்ம்
C) டெரிடோபைட்
D) லைகன்
விடை; B) ஜிம்னோஸ்பெர்ம்
34. ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆல்கா
A) கிராஸில்லேரியா
B) குளோரெல்லா
C) போட்ரியோகாக்கஸ்
D) சார்காஸம்
விடை: C) போட்ரியோகாக்கஸ்
35. இரு பண்பு கலப்பின் அடிப்படையில் அமைந்த விதி
A) ஒங்கு விதி
B) தனித்துப் பிரிதல் விதி
C) சார்பின்றி ஒதுங்குதல் விதி
D) கேமிட்டுகளின் தூய தன்மை
விடை; C) சார்பின்றி ஒதுங்குதல் விதி
36. இருபண்பு கலப்பின விகிதம்
A) 1:2:1
B) 3:1
C) 1:1
D) 9:3:3:1
விடை; D) 9:3:3:1
37. ஆர்னித்தோபில்லி’ என்பது
A) காற்றின் உதவியுடன் நடைபெறும் மகரந்த சேர்க்கை
B) பறவைகள் உதவியுடன் நடைபெறும் மகரந்த சேர்க்கை
C) பூச்சிகள் வழி நடைபெறும் மகரந்த சேர்க்கை
D) காற்று வழி விதை பரவுதல்
விடை: B) பறவைகள் உதவியுடன் நடைபெறும் மகரந்த சேர்க்கை
38. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
பூச்சி உண்ணும் தாவரம்/தாவரங்களை கண்டு பிடிக்கவும்
I) நெபன்தஸ் II) டிராசிரா III) வாண்டா. IV) கஸ்கூட்டா
இவற்றில்:
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் சரியானவை
விடை; B) I மற்றும் II சரியானவை
39. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது/எவை உவர் சதுப்பு நிலத்தாவரங்களுக்கு பொருந்துபவை?
I. சுவாசவேர் காணப்படுகிறது
II. விவிபேரி விதை முளைத்தல்
III.உப்பு சுரக்கும் சுரப்பிகள் உள்ளன
IV. இலைகளில் ஏரன்கைமா திசு காணப்படுதல்
இவற்றில்:
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் சரியானவை
விடை; D) அனைத்தும் சரியானவை
40. பசுங்கணிகங்களின் ‘க்ரானா’ பகுதிகளின் உள்புறம் உள்ள ஒளிச்சேர்க்கை அலகுகள் யாவை?
A ) க்ரிஸ்டே
B) தைலகாய்டுகள்
C) க்ரானா
D) குவாண்டோசோம்ஸ்
விடை; B) தைலகாய்டுகள்
41. DNA-வின் ஒரு இழையில் உள்ள காரங்களின் வரிசைக்கிரமம் ATGACTGTC எனில் அதன் மாற்று இழையில் உள்ள காரங்களின் வரிசைக் கிராமம்
A) TACTGACAG
B) TUCTGUCTA
C) GUAGTAGAC
D) TGACGATGA
விடை; A) TACTGACAG
42. இரு பெயரிட்டழைத்தல் முறை என்னும் வாசகத்தை புனைந்தவர்
A) அரிஸ்டாடில்
B) குவியர்
C) லின்னேயஸ்
D) லாமார்க்
விடை: C) லின்னேயஸ்
43. அசிடாபுலேரியா என்பது
A) ஒரு செல் பூஞ்சை
B) பல செல் பூஞ்சை
C) ஒரு செல் பாசி
D) பல செல் பாசி
விடை; C) ஒரு செல் பாசி
44.உலகத்தின் மிக உயரமான மரத்தின் தாவரவியல் பெயரென்ன?
A) டிரோகார்பஸ் ஆல்பஸ்
B) டர்மினாலியா கடாபா
C) செகோயா செம்பர்வைரன்ஸ்
D) சன்டாலம் செம்பர்வைரன்ஸ்
விடை; C) செகோயா செம்பர்வைரன்ஸ்
45. அக்ரோஸ்டாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
A) புற்கள்
B) பழங்கள்
C) மலர்கள்
D) உலர் பழங்கள்
விடை; A) புற்கள்
46. தாவரங்களின் டிக்டியோ சோம்களின் மறுபெயர் என்ன?
A) ரைபோசோம்ஸ்
B) லைசோசோம்ஸ்
C) கோல்கி பாடீஸ்
D) பாலிசோம்ஸ்
விடை; C) கோல்கி பாடீஸ்
47. எவ்வகை தாவர தொகுப்பு ‘வாஸ்குலார் திசு இல்லா பூக்காத் தாவரங்கள்’ என கூறப்படுகிறது?
A) டெரிடோஃபைட்கள்
B) பிரையோஃபைட்கள்
C) ஜிம்னோஸ்பெர்ம்கள்
D) ஆஞ்சியோஸ்பெர்ம்
விடை: B) பிரையோஃபைட்கள்
48. இவற்றுள் எது ‘தற்கொலைப் பைகள்’ அழைக்கப்படுகிறது?
A) உட்கருமணிகள்
B) மைட்டோகான்ட்ரியா
C) சென்டரோசோம்கள்
D) லைசோசோம்கள்
விடை: D) லைசோசோம்கள்
49. தாவரங்களில் நீர் கடத்தும் திசு
A) சைலம்
B) ஸ்கிளீரைடுகள்
C) ஃபுளோயம்
D) கோலன்கைமா
விடை: A) சைலம்
50. ஒளிசேர்க்கை ஆய்வில் முதலில் பயன்படுத்தப்பட்ட ஒரு செல்பாசி எது ?
A) க்ளோரெல்லா வல்காரிஸ்
B) க்ளாமிடோமோனாஸ் வல்காரிஸ்
C) ஸ்பைருலினா வல்காரிஸ்
D) வால்வாக்ஸ் வல்காரிஸ்
விடை: B) க்ளாமிடோமோனாஸ் வல்காரிஸ்