Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST – 47
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

 

1. இந்தியாவில் தற்கால கணக்கெடுப்பின்படி காணப்படும் பாலூட்டிகளின் வகைகளின் எண்ணிக்கை

A) 4,100

B) 20,000

C) 4,200

D) 4,000

 

விடை: A) 4,100

 

 

2. சோதனைக்குழாய் குழந்தைகள் உருவாவதற்கு விந்துக்கள் சேமிக்கப்படுவது

A) திரவ ஆக்ஸிஜன்

B) திரவ பாஸ்பரஸ்

C) திரவ நைட்ரஜன்

D) திட நைட்ரஜன்

 

விடை: C) திரவ நைட்ரஜன்

 

 

3. இரத்தம் உறைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் பிளாஸ்மா புரதம்

A) குளோபுலின்

B) ஆல்புமின்

C) பைப்ரினோஜன்

D) கிரியாட்டினின்

 

விடை: C) பைப்ரினோஜன்

 

 

4.சிபிலிஸ் என்ற பாக்டீரிய நோய் உருவாக காரணமான கிருமி

A) விப்ரியோ காலரே

B) டிரிபோனிமா பாலிடம்

C) நிஸபுசேரியா கொனோரியா

D) எர்சினியா பெஸ்டிஸ்

 

விடை: B) டிரிபோனிமா பாலிடம்

 

 

5.எந்த ஹார்மோன் கோபம், ஓட்டம் மற்றும் பயமுறுத்தல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது?

A) எபிநெஃபரின்

B) குளுக்கோகான்

C) தைராக்ஸின்

D) வாஸோப்பிரஸ்ஸின்

 

விடை: A) எபிநெஃபரின்

 

 

6. கீழ்க்கண்டவற்றுள் நியூட்ரோபிள் பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

I.நியூட்ரோபிள் ஒரு சிறுதுகள் செல்

II.நியூட்ரோபின் இரத்த உறைதலைத் தொடங்கி வைக்கிறது.

III. நியூட்ரோபிள் ஒரு செல் முழுங்கு தன்மையுடைய செல்

IV. நியூட்ரோபிள் ஹிஸ்டமைனுக்கு எதிரான தன்மை கொண்டது.

A) II மட்டும்

B) IV மட்டும்

C) II மற்றும் IV

D) I மற்றும் III

 

விடை: D) I மற்றும் III

 

 

7. “வகைப்பாட்டியல்” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?

A) லின்னேயஸ்

B) அரிஸ்டாட்டில்

C) அகஸ்டின்- பைரமஸ் டி கேன்டோல்

D) தியோபிராஸ்டஸ்

 

விடை: C) அகஸ்டின்- பைரமஸ் டி கேன்டோல்

 

 

8. கீழ்க்கண்டவற்றுள் எது பாலினத்துடன் இணைந்தது இல்லை? 

A) டூக்னே மஸ்குலர் டிஸ்ட்ரோபி (தசை சிதைவு நோய்)

B) டே-சேக்ஸ் நோய் (தையல் நோய்)

C) ஹீமோபீலியா (இரத்த ஒழுகல் நோய்)

D) நிறக்குருடு

 

விடை: B) டே-சேக்ஸ் நோய் (தையல் நோய்)

 

 

9. இதயத்தின் “டப்” ஒலி …………. மூடுவதால் ஏற்படுகிறது. 

A) மிட்ரல் வால்வு

B) மூவிதழ் வால்வு

C) அரை நிலவு வால்வு

D) நுரையீரல் வால்வு

 

விடை: C) அரை நிலவு வால்வு

 

 

10. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரத்த அணுக்களும் அதன் வேலைகளின் பொருத்தத்தில் எவை தவறானவை ?

A) லிம்போசைட் – ஆன்டிபாடி

B) பிளேட்லெட்ஸ் – இரத்தம் உறைதல்

C) ஈசினோபின் – ஹிஸ்டமின் எதிரி

D) மோனோசைட் – ஹிப்பேரின்

 

விடை: D) மோனோசைட் – ஹிப்பேரின்

 

 

11. இரத்தம் உறைதலில் எந்த வைட்டமின் முக்கிய பங்காற்றுகிறது?

A) A (எ)

B) D (டி)

C) E (இ)

D) K (கே)

 

விடை: D) K (கே)

 

 

12. சுற்றுச்சூழலில் இது ஒரு வகையான உயிரியல் கூறு.

A) உற்பத்தியாளர்

B) ஹைட்ரோஸ்பியர்

C) சுற்றுச்சூழல் மண்டலம்

D) லித்தோஸ்பியர்

 

விடை: A) உற்பத்தியாளர்

 

 

13. டி.என்.ஏ.வில் சமநிலையில் பியூரின் மற்றும் பிரமிடின் மூலக்கூறுகள் உள்ளன என்பதை கண்டறிந்தவர் இவர் ஆவார்.

Α) மிஸ்ச்சர்

B) பிஸ்ச்சர்

C) ஸர்காக்ப்

D) வில்க்கின்ஸ்

 

விடை: C) ஸர்காக்ப்

 

 

14. கீழ்கண்டவற்றில் தவறான ஒன்றை தேர்ந்தெடு.

1. யுத்திரியா எல்லாம் பாலூட்டியை சார்ந்தது.

2. டிப்னாய் மீன்களின் வகையாகும்.

3. பல்லிகள் மற்றும் பாம்புகள் லெசர்ட்டியியா வகையை சார்ந்தது.

4. இந்தியாவில் 1978ம் ஆண்டு தடுப்பூசி போடும் முறை தொடங்கப்பட்டது.

A) 1, 3 மட்டும்

B) 3,2,4 மட்டும் 

C) 2, 3 மட்டும்

D) 3 மட்டும்

 

விடை: B) 3,2,4 மட்டும்

 

 

15. மெண்டல் அவருடைய செய்முறைக்கு எந்த வகையான வண்ணங்கள் பட்டாணியின் தட்டை உபயோகப்படுத்தினார்?

A) பச்சை மற்றும் ஊதா

B) சாம்பல் மற்றும் ஊதா

C) சாம்பல் மற்றும் மஞ்சள்

D) பச்சை மற்றும் மஞ்சள்

 

விடை: D) பச்சை மற்றும் மஞ்சள்

 

 

16. விளக்கு தூரிகை குரோமோசோம் மீன்களின் எந்த செல்லில் காணப்படுகிறது?

A) நரம்பு செல்

B) ஊசைட்

C) விந்து செல்

D) இரத்த செல்

 

விடை: B) ஊசைட்

 

 

17. மரபுரிமை குரோமோசோம் கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?

A) ஸ்ட்ராஸ்பர்ஜெர் மற்றும் ஃப்ளமிங்

B) சட்டன் மற்றும் பவரி

C) மெண்டல்

D) ஹெர்ட்விக் மற்றும் வான் பென்டன்

 

விடை: B) சட்டன் மற்றும் பவரி

 

 

18. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மனிதர்களில் பிறவியிலேயே உள்ள வளர்சிதை மாற்றக் குறைபாட்டினால் உண்டாகும் நோய் அல்ல?

A) ஃபினைல் கீட்டோநியூரியா

B) டர்னர்ஸ் சின்ட்ரோம்

C) அல்காப்டோநியூரியா

D) வெண்ணியம்

 

விடை: B) டர்னர்ஸ் சின்ட்ரோம்

 

 

19. பருவ வயதில் உள்ளவர்களுக்கு கால்சிய சத்துக் குறைவினால் உண்டாகும் நோய்

A) முன்கழுத்து கழலை

B) ரிக்கெட்ஸ்

C) ஆஸ்டியோமலாசியா

D) கிரிட்டினிஸம்

 

விடை: C) ஆஸ்டியோமலாசியா

 

 

20. புரோத்ராம்பின் எதில் உருவாக்கப்படுகிறது?

A) கல்லீரல்

B) மண்ணீரல்

C) கணையம்

D) சிறுநீரகம்

 

விடை: A) கல்லீரல்

 

 

21. ஒரு மனிதனின் போர் உணர்வு, அச்ச உணர்வு மற்றும் விரைவு ஒட்டம் நிர்வகிக்கும் ஹார்மோன் ஆகியவற்றை

A) தைராக்ஸின்

B) அட்ரினலின்

C) ஆன்ட்ரோஜன்

D) புரோஜஸ்டீரோன்

 

விடை: B) அட்ரினலின்

 

 

22. குயுலக்ஸ் கொசுவின் வாழ்க்கை, சுழற்சியின் நிலைகள் சரியான வரிசையில் உள்ள ஒன்றை தேர்ந்தெடு

A) முதிர்நிலை, முட்டை, லார்வா, பியூப்பா

B) பியூப்பா, லார்வா, முட்டை முதிர்நிலை

C) முட்டை, லார்வா, பியூப்பா, முதிர்நிலை

D) லார்வா, பியூப்பா, முதிர்நிலை, முட்டை

 

விடை: C) முட்டை, லார்வா, பியூப்பா, முதிர்நிலை

 

 

23. ……….. வைட்டமின் அசைவ உணவில் மட்டும் கிடைக்கக் கூடியது.

A) B12

B) B₁

C) B3

D)B2

 

விடை: A) B12

 

 

24. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் இதன் குறைவால் உடலில் காய்ட்டர் வியாதி ஏற்படுகின்றது.

A) அயோடின்

B) கால்சியம்

C) பொட்டாசியம்

D) சோடியம்

 

விடை: A) அயோடின்

 

 

25. கீழ்க்காண்கிறவற்றுள் ஸ்டீராய்டு அல்லாத ஹார்மோன் எது?

A) ஈஸ்ட்ரடையால்

B) புரோஸ்டோகிலான்டின்

C) ப்ரகஸ்டிரோன்

D) ஈஸ்ரோன்

 

விடை: B) புரோஸ்டோகிலான்டின்

 

 

26. நுரையீரலில் இருந்து …………… பல்மோ சிறை மூலமாக ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட இரத்தம் செல்கின்றது.

A) வலது வெண்டிரிகில்

B) இடது ஆரிக்கில்

C) வலது ஆரிக்கில்

D) இடது வெண்டிரிகில்

 

விடை: B) இடது ஆரிக்கில்

 

 

27. ஒரு உயிரினத்தின் பால் பண்புகள் முதிர்ச்சி அடைதல் நேரம்

A) முன்எஸ்ட்ரஸ்

B) பூப்பெய்துதல்

C) டைஎஸ்ட்ரஸ்

D) மெட்டெஸ்ட்ரஸ்

 

விடை: B) பூப்பெய்துதல்

 

 

28. ஒற்றைப் பண்பகக் கலப்பின குறுக்கில் காணப்படும் மரபுசார் வடிவம்

A) 3:1

B) 9:7

C) 9:3:3:1

D) 1:2:1

 

விடை: D) 1:2:1

 

 

29. எந்த ஹார்மோன் அட்ரினலின் சுரத்தலை கட்டுப்படுத்துகின்றது?

A) பாலிக்கிள் தூண்டும் ஹார்மோன்

B) தைராய்டு தூண்டும் ஹார்மோன்

C) அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்

D) லுயுடினைசிங் ஹார்மோன்

 

விடை: C) அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்

 

 

30. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று (A) : எஸ்கெரிசியா என்ற பாக்டீரியா புரோகேரியாட்டை சார்ந்தது.

காரணம் (R) : அது கசையிழையால் நகரும் திறன் கொண்டது.

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

C) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.

D) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

விடை: B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

 

 

31. பின்வருவனவற்றை பொருத்துக:

a) பைரிடாக்சின் – 1. வைட்டமின் B5

b) ரைபோபிளவின் – 2. வைட்டமின் B1

c) தயாமின் – 3. வைட்டமின் B6

d) நியாசின் – 4. வைட்டமின் B₂

A) 2 1 3 4

B) 4 3 1 2

C) 3 4 2 1

D) 3 2 4 1

 

விடை: C) 3 4 2 1

 

 

32. ஐந்துலக வகைபாட்டினைத் தோற்றுவித்தவர்

A) விட்டேக்கர்

B) டிக்கன்ஸ்

C) சார்லஸ் டார்வின்

D) கார்ல் லின்னேயஸ்

 

விடை: A) விட்டேக்கர்

 

 

33. பட்டியல் I-ஐ (தடுப்பூசி) பட்டியல் II உடன் (நோய்கள்) பொருத்தி, சரியான விடையை தேர்ந்தெடுக்க:

பட்டியல் I                   பட்டியல் II 

a) பெர்டியூசிஸ் – 1. டைபாய்டு காய்ச்சல்

b) வாரிசெல்லா – 2.சின்னம்மை

c) TAB – 3. போலியோ

d) OPV – 4. கக்குவான் இருமல்

A) 4 1 2 3

B) 4 2 1 3

C) 2 4 3 1

D) 3 2 4 1

 

விடை: B) 4 2 1 3

 

 

34. எச்.ஐ.வி. வைரஸில் காணப்படும் மரபுப் பொருள் ……….. ஆகும்.

A) டி.என்.ஏ.

B) ஓரிழை டி.என்.ஏ.

C) ஈரிழை ஆர்.என்.ஏ

D) ஓரிழை ஆர்.என்.ஏ

 

விடை: C) ஈரிழை ஆர்.என்.ஏ

 

 

35. இதய அறைகளின், சுருங்குதல் (சிஸ்டோல்) மற்றும் விரிவடைதல் (டையஸ்டோல்) இவ்வாறு அழைக்கப்படுகிறது.

A) மொத்தக் கூடுதல்

B) கார்டியாக் சுழற்சி

C) ஏற்பு இயலாக் கால அளவு

D) இதயத்திலிருந்து வெளிப்படும் குருதியின் அளவு

 

விடை: B) கார்டியாக் சுழற்சி

 

 

36. பின்வருவனவற்றுள் எவை “இந்தியாவின் உயிரிய மிகைப் பல்வகைமை” இடமாகும்?

A) ஆரவல்லி மலை

B) மேற்குத் தொடர்ச்சி மலை

C) இன்டோ-கான்ஜெட்டிக் சமவெளி

D) கிழக்கு தொடர்ச்சி மலை

 

விடை: B) மேற்குத் தொடர்ச்சி மலை

 

 

37. கீழ்க்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?

A) கணையம் – குளுக்ககான் 

B) சிறுகுடல் – ஸ்டோமட்டேஸ்டேடின்

C) விந்தகம் – ஈஸ்ட்ரோஜென்

D) அட்ரீனல் சுரப்பி – குளுக்கோகார்டிகாய்ட்ஸ்

 

விடை: C) விந்தகம் – ஈஸ்ட்ரோஜென்

 

 

38. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது? 

A) எமி நெப்பின்

B) இன்சுலின்

C) ஆக்ஸிடோசின்

D) குளுக்ககான் 

 

விடை: C) ஆக்ஸிடோசின்

 

 

39.கீழ்க்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?

a) தைராய்டு ஹார்மோன் – 1. குசிங்ஸ் நோய்

b) இன்சுலின் – 2. பிக்ஸிடிமா

c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் – 3. அக்ரோமேகாலி

d) வளர் ஹார்மோன் – 4. நீரழிவு நோய்

A) 1 2 3 4

B) 2 4 3 1

C) 4 2 1 3

D) 2 4 1 3

 

விடை: D) 2 4 1 3

 

 

40. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடையானது

A) 28,000 டால்டன்கள்

B) 5,700 டால்டன்கள்

C) 2,000 டால்டன்கள்

D) 5,808 டால்டன்கள்

 

விடை: D) 5,808 டால்டன்கள்

 

 

41.டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் உற்பத்தியை தடுப்பது

A) கார்பஸ் லூட்டியம்

B) இன்ஹிபிட்டின்

C) ஈஸ்டிரோஜன்

D) புரோஜெஸ்டிரோன்

 

விடை: B) இன்ஹிபிட்டின்

 

 

42. மனிதனில் எத்தனை மரபு குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

A) ஏறக்குறைய 100

B) ஏறக்குறைய 400

C) 300க்கும் குறைவான

D) 300க்கும் அதிகமான

 

விடை: D) 300க்கும் அதிகமான

 

 

43. இவற்றில் எவை இரத்த உறைதலை ஏற்படுத்தாத ஒரு காரணி?

A) பைப்ரினோஜன்

B) இரத்தத்தட்டுகள்

C) த்ரோம்பின்

D) ஆல்புமின் 

 

விடை: D) ஆல்புமின்

 

 

44. கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானதை கண்டுபிடிக்கவும்

A) மூன்றுக்கு மேலான நிறுத்தம் ஜீன் கோடுகள் ஆகும்.

B) மார்கன் மற்றும் போவேரி ஜீன்கள் குரோமோசோமில் உள்ளது கண்டறிந்தார்கள்

C) 17 ஜின்கள் மனிதனின் Y குரோமோசோமில் உள்ளது.

D) ஒரு DNA வில் இரண்டு நியுகளியோடைகள் இடையே உள்ள தூரம் 4.3 A ஆகும்.

 

விடை: C) 17 ஜின்கள் மனிதனின் Y குரோமோசோமில் உள்ளது.

 

 

45. செல்கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள் யார்?

A) எம்.ஜெ. ஸில்டன் மற்றும் தியோடர் ஸிவான்

B) ஜெ.டி. வாட்சன் மற்றும் எப்.எச்.சி. கிரிக்

C) எப். ஜேக்கப் மற்றும் ஜெ. மோனாட்

D) சி.எச். மெக்லியாட் மற்றும் எச் மெக்கார்ட்டி

 

விடை: A) எம்.ஜெ. ஸில்டன் மற்றும் தியோடர் ஸிவான்

 

 

46. ஒரு குறிப்பு இடத்தின் எல்லா வகுப்பு உயிரினங்களும் முற்றிலும் மாறுபடுதற்கு என்ன பெயர்?

A) முடிவு வகுப்புகள்

B) முதன்மை சிற்றினம்

C) சீர்

D) செரார்ச் முடிவு நிலை

 

விடை: C) சீர்

 

 

47. ஒரு மனித கரு வளர்ச்சியின் போது 4வது வாரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வில் எந்த ஒன்று கீழ்க்கண்டவற்றுள் சரியானது.

A) கரு அளவு 2 mm மட்டும் தண்டு வட குழல் வளர்தல்

B) கரு அளவு 5 mm மட்டும் இரத்த நாளங்கள் வளர்தல்

C) கரு அளவு 12 mm மட்டும் காது, கண்கள் வளர்கின்றது

D) சிசு அளவு 17 mm மட்டும் எல்லா உள்ளுறுப்புகள் வளர்ந்து காணப்படும்.

 

விடை: B) கரு அளவு 5 mm மட்டும் இரத்த நாளங்கள் வளர்தல்

 

 

48. கீழ்க்கண்டவற்றுள் எது பயம் உணர்ச்சி மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்த காரணமாக உள்ளது?

A) அடிரினல் சுரப்பி

B) பினியல் சுரப்பு

C) பாராதைராய்டு சுரப்பி

D) தைமஸ் சுரப்பி

 

விடை: A) அடிரினல் சுரப்பி

 

 

49. ஆரோக்கியமான மனித இரத்தத்தில் ஒரு கன சதுர மில்லி மீட்டர் அளவில் உள்ள இரத்த சிவப்பணு எண்ணிக்கை

A) 5,000

B) 50,000

C) 5,00,000

D) 50,00,000

 

விடை: D) 50,00,000

 

 

50. செல்கள் புற்று நோய் செல்லாக மாறும் போது நடைபெறும் சரியான நிலைகளை வகைப்படுத்துக

1. N-நிலை

2. T-நிலை

3. அபரித மற்றும் ஒழுங்கற்ற செல் வளர்ச்சி

4. M-நிலை

A) 1, 4, 2, 3

B) 4, 2, 1, 3

C) 3, 2, 1, 4

D) 3, 1, 2, 4

 

விடை: C) 3, 2, 1, 4

 

 

Join the conversation