Course Content
TAMIL TEST DAY – 05 ANSWER KEY
100 QUESTIONS
0/1
WA – TAMIL TEST DAY – 05
About Lesson
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது (எந்தமிழ்நா)

(A) எந் + தமிழ் + நா 

(B) எந்த + தமிழ் + நா 

(C) எம் + தமிழ் + நா 

(D) எந்தம் + தமிழ் + நா 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) எம் + தமிழ் + நா 

 

  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (சுட்டல்)

(A) காட்டு விலங்குகளைச்_____ தடை செய்யப்பட்டுள்ளது. 

(B) செய்த தவறுகளை____ திருந்த உதவுகிறது. 

(C) தீயினால்____ புண் உள்ளாறும். 

(D) தலையில் மல்லிகைப் பூ____ 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) செய்த தவறுகளை____ திருந்த உதவுகிறது. 

 

  1. சரியான இணைப்புச் சொல் தேர்க :

காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். அவர் எளிமையை விரும்பியவர் 

(A) ஏனெனில் 

(B) அதனால் 

(C) ஆகையால் 

(D) அதுபோல 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) ஏனெனில் 

 

  1. சரியான இணைப்புச் சொல்

மாணிக்கம் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். அவர் எளிமையை விரும்பியவர் 

(A) எனவே 

(B) ஏனெனில் 

(C) மேலும் 

(D) அதனால் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) ஏனெனில் 

 

  1. சரியான இணைப்புச் சொல் தருக.

மழை____ உலகில் உயிர்கள் இல்லை. 

(A) ஏனெனில் 

(B) இல்லையெனில் 

(C) ஆகையால் 

(D) அதனால் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) இல்லையெனில் 

 

  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

பட்டமரத்தின் வருத்தங்கள்_____? 

(A) யார்? 

(B) யாவை? 

(C) எப்படி? 

(D) எதற்கு? 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) யாவை? 

 

  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

______ பேர் சுற்றுலா சென்றனர்? 

(A) எத்தகைய 

(B) எப்போது 

(C) எத்தனை 

(D) எவ்வாறு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) எத்தனை 

 

  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

சான்றோர்க்கு அழகாவது____” 

(A) எப்படி 

(B) எது 

(C) எங்கு 

(D) ஏன் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) எது 

 

  1. பொருத்தமான காலம் அமைத்தல்.

காண்என்னும் சொல்லின் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க. 

(A) காண்கிறான் 

(B) காண்பான் 

(C) கண்டான் 

(D) கண்டேன் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) காண்பான் 

 

  1. கீழ்கண்டவற்றுள் எந்தச் சொல்லை இடம்பெற்றுள்ள பிற சொற்களுடன் இணைத்து புதிய சொல்லை உருவாக்க இயலாது?

வான், மழை, விண், பூ, மணி 

(A) பூ 

(B) வான் 

(C) விண் 

(D) மணி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) விண் 

 

11.சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. 

சுவை, காப்பியம், பூ, வான், பொன், குறள் 

(A) காப்பியம் குறள் 

(B) சுவை பூ 

(C) காப்பியச் சுவை 

(D) பூ பொன் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) காப்பியச் சுவை 

 

  1. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.

இதைக் குடுத்துடுங்க 

(A) இதைக் குடித்து விடுங்கள் 

(B) இதைக் கொடுத்து விடுங்கள் 

(C) இதைக் கொடுத்து விட்டீர்கள் 

(D) இதைக் குடித்து வையுங்கள் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) இதைக் கொடுத்து விடுங்கள் 

 

  1. இரு பொருள் தருக :

விளக்கு 

(A) மின் விளக்கு, விலங்கு 

(B) குழல் விளக்கு, விளங்கு 

(C) விலக்கு அளித்தான், விளங்கினான் 

(D) அகல் விளக்கு, தெளிவுபடுத்து 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) அகல் விளக்கு, தெளிவுபடுத்து 

 

  1. உண்மைஎன்பதன் எதிர்ச்சொல் தருக.

(A) வாய்மை 

(B) தூய்மை 

(C) பொய்மை 

(D) மெய்ம்மை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) பொய்மை 

 

  1. இரு பொருள் தருக : ஆறு

ஆறு 

(A) காடு, மலை 

(B) குளம், குட்டை 

(C) கோடு, வட்டம்  

(D) நதி, எண் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) நதி, எண் 

 

  1. குறில் நெடில் பொருள் வேறுபாடு :

கொள்கோள் 

(A) பெறு விண்மீன் 

(B) பெறுபேறு 

(C) கொடுகலகம் 

(D) பேறுபெறு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) பெறு விண்மீன் 

 

  1. கோடிட்ட இடங்களுக்குப் பொருந்திய சொற்களைத் தேர்க.

_____ ,நான்_____ செல்கிறேன். 

(A) கொடு, கோடு 

(B) மடு, மாடு 

(C) அடு,ஆடு 

(D) விடு, வீடு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) விடு, வீடு 

 

  1. கூற்று. காரணம்சரியா? தவறா?

கூற்று : மாநகராட்சி சிறப்புக் கூட்டமொன்றில்தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார் .பொ.சி. 

காரணம் : ஆந்திரத்தின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்பதை எதிர்த்து .பொ.சி. முழங்கிய முழக்கம் இது. 

(A) கூற்று தவறு; காரணம் சரி 

(B) கூற்று சரி ; காரணம் சரி 

(C) கூற்று சரி; காரணம் தவறு 

(D) கூற்று தவறு ; காரணம் தவறு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) கூற்று சரி ; காரணம் சரி 

 

  1. கலைச்சொல் அறிதல்.

Linguistics 

(A) ஊடகம் 

(B) மொழியியல் 

(C) ஒலியியல் 

(D) இதழியல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) மொழியியல் 

 

  1. கலைச்சொற்களை அறிதல்.

Consonant 

(A) உயிரொலி 

(B) ஒலியன் 

(C) மெய்யொலி 

(D) மூக்கொலி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) மெய்யொலி 

 

  1. கலைச்சொற்களை அறிதல்.

Space Technology என்பதன் தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. 

(A) மீநுண் தொழில் நுட்பம் 

(B) உயிரித் தொழில் நுட்பம் 

(C) விண்வெளித் தொழில் நுட்பம்  

(D) விண்வெளிக் கதிர்கள் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) விண்வெளித் தொழில் நுட்பம்  

 

  1. கலைச்சொல் அறிக.

LAUNCH VEHICLE என்ற சொல்லின் கலைச்சொல் யாது? 

(A) வானூர்தி 

(B) ஏவு ஊர்தி 

(C) ஏவுகணை 

(D) நிலவு ஊர்தி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) ஏவு ஊர்தி 

 

பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு : (23-27) 

   தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையை நன்கு அறிந்திருந்தனர். கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். இதனைக்கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூய்என்னும் மணிமேகலை அடியால் அறியலாம். தண்ணீரால் பாதிப்படையாத மரங்களையே கப்பல் கட்டப் பயன்படுத்தினர். நீர்மட்ட வைப்பிற்கு‌வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்றமரங்களைப் பயன்படுத்தினர்.‌ பக்கங்களுக்கு தேக்கு, வெண்தேக்கு போன்ற மரங்களைப் பயன்படுத்தினர். நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர். பெரிய படகுகளில்முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதுமுண்டு. கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்று இவை அழைக்கப்பட்டன. 

 

  1. கப்பல் கட்டும் கலைஞர்களை மணிமேகலை எவ்வாறுஅழைக்கிறது?

(A) கலம் 

(B) கம்மியர் 

(C) கூஉய் 

(D) கூட்டம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) கம்மியர் 

 

  1. தச்சுமுழம் என்பது

(A) முகத்தலளவை 

(B) எண்ணளவை 

(C) நீட்டலளவை 

(D) கணக்களவை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) நீட்டலளவை 

 

  1. முன்பக்கத்தை குதிரை போன்று வடிவமைப்பது எவ்வாறுஅழைக்கப்பட்டது?

(A) அரிமுகம் 

(B) கரிமுகம் 

(C) நரிமுகம் 

(D) பரிமுகம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) பரிமுகம் 

 

  1. நீர்மட்ட வைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள்

(A) நாவல் 

(B) தேக்கு 

(C) பனை 

(D) தென்னை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) நாவல் 

 

  1. எதனால் பாதிப்படையாத மரங்களைக் கப்பல் கட்டப் பயன்படுத்தினர்?

(A) காற்று 

(B) நீர் 

(C) நெருப்பு 

(D) நிலம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) நீர் 

 

  1. கீழ்காணும் தொடர்களில் (ஒரு ஓர்) சரியாக அமைந்த தொடர் எது?

(A) ஒரு அழகிய சிற்றூரில் ஒர் பரந்த குளம் இருந்தது 

(B) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் இனிய குளம் இருந்தது 

(C) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு இனிய குளம் இருந்தது 

(D) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் இனிய குளம் இருந்தது 

 

  1. ஒரு.ஓர் பயன்பாட்டில் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். 

(B) ஓர் ஊரில் ஓர் விவசாயி இருந்தார். 

(C) ஓர் ஊரில் ஒரு விவசாயி இருந்தார். 

(D) ஒரு ஊரில் ஓர் விவசாயி இருந்தார் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) ஓர் ஊரில் ஒரு விவசாயி இருந்தார். 

 

  1. கீழ்காணும் தொடர்களில் (ஒருஓர்) சரியாக அமைந்த தொடர் எது?

(A) ஓர் பெரிய இடத்தில் அமர்ந்தான் 

(B) ஓர் இடத்தில் அமர்ந்தான் 

(C) ஒரு அழகிய வனத்தில் அமர்ந்தான் 

(D) ஒரு இடத்தில் அமர்ந்தான் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) ஓர் இடத்தில் அமர்ந்தான் 

 

  1. சொல்பொருள்பொருத்துக.

(a) மூத்தோர்  – 1.பெரியோர் 

(b) மாற்றார்   – 2.வழி 

(c) நெறி        – 3. இகழும்படி 

(d) தூற்றும்படி – 4. மற்றவர் 

(A) 3 2 1 4 

(B) 1 4 2 3 

(C) 2 3 4 1 

(D) 1 2 3 4 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) 1 4 2 3 

 

  1. சொல்பொருள்பொருத்துக.

(a) மழலை – 1. மகிழ்ச்சி 

(b) வனப்பு  – 2. குழந்தை 

(c) பூரிப்பு .  – 3. உடல் 

(d) மேனி    – 4. அழகு 

(A) 1 4 2 3 

(B) 2 4 1 3 

(C) 3 2 4 1 

(D) 1 2 3 4 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) 2 4 1 3 

 

  1. சொல்பொருள்பொருத்துக.

(a) புலி     – 1.முழங்கும் 

(b) யானை – 2.அலறும் 

(c) சிங்கம்  – 3.உறுமும் 

(d) ஆந்தை – 4.பிளிரும் 

(A) 3 4 1 2 

(B) 2 1 3 4 

(C) 1 2 3 4 

(D) 4 1 2 3 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) 3 4 1 2 

 

  1. ஒருமைபன்மை.

பிழையற்றத் தொடரைக் கண்டறிக. 

(A) பசு கன்றை ஈன்றன 

(B) பசு கன்றை ஈன்றார்கள் 

(C) பசு கன்றை ஈன்றது 

(D) பசு கன்றை ஈன்றனர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) பசு கன்றை ஈன்றது 

 

  1. பொருத்தமுடைய கலைச் சொல்லைக் கண்டறிக :

(A) EMBLEM —:சின்னம் 

(B) THESIS — அறிவாளர் 

(C) INTELLECTUAT — ஆய்வேடு 

(D) SYMBOLISM — மொழியியல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) EMBLEM —:சின்னம் 

 

36.ஒருமைபன்மை பிழையற்ற தொடர் எது? 

(A) குதிரை அவள் அருகில் வந்து நின்றது 

(B) குதிரை அவள் அருகில் வந்து நின்றாள் 

(C) குதிரை அவள் அருகில் வந்து நின்றன. 

(D) குதிரை அவள் அருகில் வந்து நின்றான் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) குதிரை அவள் அருகில் வந்து நின்றது 

 

  1. பொம்மையை உடைத்தது யார்? – இது எவ்வகைத் தொடர்?

(A) கட்டளைத் தொடர் 

(B) வினாத் தொடர் 

(C) செய்தித் தொடர் 

(D) உணர்ச்சித் தொடர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) வினாத் தொடர் 

 

  1. சொற்களின் கூட்டப் பெயர்கள் பொருத்துக.

(a) .  — 1. குவியல் 

(b) ஆடு — 2.மந்தை 

(c) புல் — 3.நிரை 

(d) கல் — 4.கட்டு 

(A) 1 3 4 2 

(B) 1 2 3 4 

(C) 3 2 4 1 

(D) 4 3 2 1 

(E) விடை தெரியவில்லை . 

விடை: (C) 3 2 4 1 

 

  1. கூட்டுப் பெயரை எழுது.

எறும்பு 

(A) எறும்பு வரிசை 

(B) எறும்பு சாரை 

(C) எறும்பு புற்று 

(D) எறும்பு கூடு 

(E) விடை தெரியவில்லை . 

விடை: (B) எறும்பு சாரை 

 

  1. கூட்டப் பெயரை எழுதுக.

தென்னை 

(A) தோப்பு 

(B) வயல் 

(C) தோட்டம் 

(D) காடு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) தோப்பு 

 

  1. சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டறிக.

கல் என்னும் சொல்லின் சரியான கூட்டுப் பெயர் எது ? 

(A) கற்கட்டு 

(B) கற்குவியல் 

(C) கட்குலை 

(D) கட்குவியல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) கற்குவியல் 

 

  1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

இலைக்கு வேறு பெயர்____ 

(A) தலை 

(B) தழை 

(C) தளை 

(D) தாளை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) தழை 

 

43.பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல். 

வாழ்க்கையில்_____ மீண்டும் வெல்லும். இதைத் தத்துவமாய்த்____ கூத்து சொல்லும். 

(A) வெற்றிதோல்வி 

(B) தோற்பவைதோற்பாவை 

(C) நன்மைதீமை 

(D) தோல்விவெற்றி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) தோற்பவைதோற்பாவை 

 

  1. அணிகலன், புன்னகைஎன்ற பொருள்களைத் தரும் சொல்லைக் கண்டறிக.

(A) அணி 

(B) உவகை 

(C) நகை 

(D) மாலை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) நகை 

 

  1. அகரவரிசைப்படி சரியாக அமைந்த வரிசையைத் தேர்க.

பைந்தமிழ், புதுமனை, பொதுவுடைமை, போராட்டம், பாராட்டு, பேருந்து, பதிவிறக்கம். 

(A) புதுமனை, போராட்டம், பாராட்டு, பைந்தமிழ், பேருந்து, பதிவிறக்கம், பொதுவுடைமை. 

(B) பைந்தமிழ், புதுமனை, பொதுவுடைமை, போராட்டம், பாராட்டு, பேருந்து, பதிவிறக்கம். 

(C) பதிவிறக்கம், பாராட்டு, புதுமனை, பேருந்து, பைந்தமிழ், பொதுவுடைமை, போராட்டம். 

(D) புதுமனை, பைந்தமிழ், போராட்டம், பொதுவுடைமை, பாராட்டு, பேருந்து, பதிவிறக்கம். 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) பதிவிறக்கம், பாராட்டு, புதுமனை, பேருந்து, பைந்தமிழ், பொதுவுடைமை, போராட்டம். 

 

46.சரியான இணையைக் கண்டறிக 

(A) ஆஸ்திதுன்பம் 

(B) அனுமதிஇசைவு 

(C) உஷார்இயல்பு 

(D) இம்சைமணிமுடி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) அனுமதி இசைவு 

 

  1. விடைக்கேற்ற வினா அமைக்க :

கோதை கவிதையைப் படித்தாள் 

(A) கோதை எதைப் படித்தாள்? 

(B) கோதை எப்படிப் படித்தாள் ? 

(C) கோதை எங்கே படித்தாள்? 

(D) கோதை ஏன் படித்தாள்? 

(E) விடை தெரியவில்லை 

விடை :(A) கோதை எதைப் படித்தாள்? 

 

  1. வேர்ச் சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்கல்.

தா 

(A) தந்தான் 

(B) தந்து 

(C) தந்த 

(D) தந்தவர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) தந்தவர் 

 

  1. வாழ்க்கைஎன்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.

(A) வாழ் 

(B) வாழு 

(C) வாழ 

(D) வாழ்ந்த 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) வாழ் 

 

 

  1. தந்தான்வேர்ச்சொல்லைத் தருக.

(A) தருதல் 

(B) தரு 

(C) தா 

(D) தந்த 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) தா 

 

  1. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.

கேட்டனன் 

(A) கேட் 

(B) கேட்ட 

(C) கேல் 

(D) கேள் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) கேள் 

 

52.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க. 

பார்த்தான் 

(A) பார்த்த 

(B) பார் 

(C) பார்த்து 

(D) பார்த்தல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) பார் 

 

  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

திங்கள் 

(A) மாதம்,கிழமை, சந்திரன், நிலவு 

(B) வாரம், நாள், சந்திரன், பகலவன் 

(C) கிழமை, சந்திரன், நாள், சூரியன் 

(D) சந்திரன், சூரியன், பகலவன், பரிதி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) மாதம்,கிழமை, சந்திரன், நிலவு 

 

  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

எழினி, கிழி, படாம், திரைச்சீலை எனும் சொற்கள் எதனைக் குறிக்கும். 

(A) ஓவியம் வரையப் பயன்படும் துணி 

(B) நாடக அரங்கின் திரைச்சீலை 

(C) பாய்மரம் 

(D) எழிலோவியம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) ஓவியம் வரையப் பயன்படும் துணி 

 

  1. ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிக.

(A) வயலில் களை எடுத்தனர் 

(B) வயலில் கலை எடுத்தனர் 

(C) வயலில் கழை எடுத்தனர் 

(D) வயளில் காளை எடுத்தனர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) வயலில் களை எடுத்தனர் 

 

  1. கூரை, கூறைபொருள் வேறுபாடு உணர்க.

(A) கூறுதல், விளக்குதல் 

(B) வீட்டின் கூரை, புடவை 

(C) மேல், கீழ் 

(D) சீராக்குதல், கூராக்குதல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) வீட்டின் கூரை, புடவை 

 

  1. மயங்கொலிப் பிழையற்ற தொடர்களை அறிக.
  2. பறவையிடம் இருப்பது இறகு
  3. பறவைக்கு இருப்பது அலகு
  4. மன்னரிடம் இருப்பது வாள்
  5. சிவப்பு நிறத்தில் இருப்பது குறுதி

(A) 1, 3, 4 சரி 

(B) 2, 3, 4 சரி 

(C) 1, 2, 3 சரி 

(D) 2, 4, 3 சரி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) 1, 2, 3 சரி 

 

  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.

Trust 

(A) அறக்கட்டளை 

(B) தன்னார்வலர் 

(C) சமூகப் பணியாளர் 

(D) தொண்டு நிறுவனம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) அறக்கட்டளை 

 

  1. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு.

Equestrain 

(A) தலைமைப்பண்பு 

(B) சமத்துவம் 

(C) மனநோய் 

(D) குதிரையேற்றம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) குதிரையேற்றம் 

 

  1. சொற்களை ஒழுங்குபடுத்துக

(A) ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது 

(B) அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ் 

(C) தமிழ் ஏகலை கலையை அம்புவிடும் என்றது 

(D) அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ் 

 

  1. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கூடை _____ 

(A) செய் 

(B) முடை 

(C) கட்டு 

(D) படை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) முடை 

 

  1. பிழை நீக்கி எழுதுக.

அந்தப் புஞ்சை ரோட்டோரத்தில் இருந்தது 

(A) அந்தப் புன்செய் சாலையோரத்தில் இருந்தது 

(B) அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்தது 

(C) அந்தப் புன்செய் ரோட்டோரத்தில் இருந்தது 

(D) அந்தப் பூஞ்சை சாலையோரத்தில் இருந்தது 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) அந்தப் புன்செய் சாலையோரத்தில் இருந்தது 

 

  1. இன எழுத்துக்கள் அடிப்படையில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) மஞ்சள் 

(B) கல்வி 

(C) வந்தான் 

(D) தம்பி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) கல்வி 

 

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) குறிஞ்சி 

(B) நெய்தல் 

(C) முல்லை 

(D) மதுரை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) மதுரை 

 

  1. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக. 

(A) பண்பு 

(B) மஞ்சு 

(C) கண்டு 

(D) எஃகு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) எஃகு 

 

  1. இடர் ஆழி என்பதன் எதிர்ச்சொல்

(A) துன்பக்கடல் 

(B) துன்பச் சக்கரம் 

(C) இன்பக் கடல் 

(D) தூயச் சக்கரம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) இன்பக் கடல் 

 

  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.

உண்மை 

(A) பொய்மை 

(B) விலகு 

(C) தெளிவு 

(D) சோர்வு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) பொய்மை 

 

  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

மிசை‘ – என்பதன் எதிர்ச்சொல் என்ன? 

(A) கீழே 

(B) மேலே 

(C) இசை 

(D) வசை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) கீழே 

 

  1. சேர்த்தெழுதுக :

எதிர் + ஒலிக்க 

(A) எதிரலிக்க 

(B) எதிர்ஒலிக்க 

(C) எதிரொலிக்க 

(D) எதிர்ரொலிக்க 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) எதிரொலிக்க 

 

  1. சேர்த்தெழுதுதல்.

நெடுமை + தேர்என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

(A) நெடுதேர் 

(B) நெடுத்தேர் 

(C) நெடுந்தேர் 

(D) நெடுமைதேர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) நெடுந்தேர் 

 

 

  1. தேம்பாவணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(A) தேம் + பாவணி 

(B) தேம் + அணி 

(C) தேம்பா + அணி 

(D) தேம்பு + பாவணி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) தேம்பா + அணி 

 

  1. சரியான நிறுத்தற்குறிகளை தேர்ந்தெடு.

(A) ‘எது, என்ன, எங்கு, எப்படிபோன்றன வினாச்சொற்கள் ஆகும் 

(B) எது, என்ன? எங்கு, எப்படி போன்றன வினாச்சொற்கள் ஆகும் 

(C) எது, என்ன, எங்கு, எப்படி போன்றன வினாச்சொற்கள் ஆகும் 

(D) ‘எது‘ ‘என்ன‘ ‘எங்கு, எப்படி போன்றனவினாச்சொற்கள் ஆகும் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) ‘எது, என்ன, எங்கு, எப்படிபோன்றன வினாச்சொற்கள் ஆகும் 

 

  1. பொருத்தமான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தோக.

(A) வண்டியில் ஏறுங்கள் அவர் அன்புக் கட்டளையிட்டார். 

(B) “வண்டியில் ஏறுங்கள்…..!” அவர் அன்புக்கட்டளையிட்டார் 

(C) வண்டியில் ஏறுங்கள்! அவர் அன்புக் கட்டளையிட்டார் 

(D) வண்டியில் ஏறுங்கள். அவர் அன்புக் கட்டளையிட்டார். 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) “வண்டியில் ஏறுங்கள்…..!” அவர் அன்புக் கட்டளையிட்டார் 

 

  1. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுது.

சைதாப்பேட்டை 

(A) சைதா 

(B) சைதாபேட்டையூர் 

(C) சாதாப்பேட்டை 

(D) சைதை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) சைதை 

 

  1. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

தஞ்சாவூர் 

(A) தஞ்சை 

(B) தாஞ்சூர் 

(C) தஞ்சையூர் 

(D) தாஞ்சை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) தஞ்சை 

 

  1. கும்பகோணம் என்பதன் மரூஉ

(A) குடந்தை 

(B) கும்பம் 

(C) கோணம் 

(D) கோவை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) குடந்தை 

 

  1. ஊர்ப்பெயர்களின் மரூஉவை கண்டறிக.

திருச்சிராப்பள்ளி என்பதன் மரூஉவைத் தேர்ந்தெடுக்க. 

(A) திருவை 

(B) திருச்சி 

(C) திருப்பள்ளி 

(D) திருகை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) திருச்சி 

 

  1. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

காலிங் பெல் 

(A) அழைப்போசை 

(B) அழைப்பாளர் 

(C) அழைக்கும் ஒலி 

(D) அழைப்பு மணி 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) அழைப்பு மணி 

 

  1. பிறமொழி சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைக் கண்டறி.

‘DIDACTIC COMPILATION’ 

(A) நீதிநூல் திரட்டு 

(B) பதிற்றுப்பத்து 

(C) இரட்டைக்காப்பியங்கள் 

(D) வேத மறை நூல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) நீதிநூல் திரட்டு 

 

  1. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்

ஆன்டிபயாடிக்என்பதன் தமிழ்ச் சொல் 

(A) மருந்து  

(B) மாத்திரை 

(C) நுண்ணுயிர் முறி 

(D) மூலிகை 

(E) விடை தெரியவில்லை. 

விடை: (C) நுண்ணுயிர் முறி 

 

  1. இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் வினவியதற்குஅதோ, அங்கே நிற்கும்என்று மற்றொருவர் கூறியது____ விடை.

(A) வினா எதிர் வினாதல் விடை 

(B) மறை விடை 

(C) சுட்டு விடை 

(D) இனமொழி விடை  

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) சுட்டு விடை 

 

  1. விடை வகைகள் :

ஊருக்குப் போவாயா? என்ற கேள்விக்குப்போகமாட்டேன்எனக் கூறல் 

(A) ஏவல் விடை 

(B) இனமொழி விடை 

(C) மறை விடை 

(D) நேர் விடை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) மறை விடை 

 

  1. எவ்வகை விடை எனத் தேர்க.

கடைத்தெரு எங்குள்ளது?” என்ற வினாவிற்கு இடப்பக்கத்தில் உள்ளது. எனக் கூறல். 

(A) ஏவல் விடை 

(B) இனமொழி விடை 

(C) சுட்டு விடை 

(D) நேர் விடை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) சுட்டு விடை 

 

  1. அலுவல் சார்ந்த கலைச்சொல்

Entrepreneur – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க. 

(A) கணக்காயர் 

(B) பொறியாளர் 

(C) தொழில் முனைவோர் 

(D) மருத்துவர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) தொழில் முனைவோர் 

 

 

85.அலுவல் சார்ந்த கலைச்சொல் தேர்ந்தெழுதுதல். 

Responsibility 

(A) செல்வம் 

(B) லட்சியம் 

(C) நற்பண்பு 

(D) கடமை 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) கடமை 

 

  1. அலுவல் சார்ந்த சரியான கலைச்சொல்லைக் கண்டறிக.

Escalator 

(A) மின்படிக்கட்டு 

(B) மின்தூக்கி 

(C) மின்னஞ்சல் 

(D) மின்நூலகம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) மின்படிக்கட்டு 

 

  1. கலைச்சொல்லிற்க்கானப் பொருளைத் தேர்ந்தெடு.

‘HOMOGRAPH’ 

(A) உயிரெழுத்து 

(B) ஒப்பெழுத்து 

(C) சிலையெழுத்து 

(D) தலையெழுத்து 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) ஒப்பெழுத்து 

 

  1. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல‘ – உவமை கூறும் பொருள் தெளிக. 

(A) தற்செயல் நிகழ்வு 

(B) எதிர்பாரா நிகழ்வு 

(C) எதிர்பார்த்த நிகழ்வு 

(D) திட்டமிட்ட நிகழ்வு 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) எதிர்பாரா நிகழ்வு 

 

89.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 

பசுமரத்து ஆணி போல 

(A) எளிதில் மனதில் பதியாமை 

(B) எளிதில் மனதில் அகழாமை 

(C) எளிதில் மனதில் புரிதல் 

(D) எளிதில் மனதில் பதிதல் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) எளிதில் மனதில் பதிதல் 

 

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்தன்வினை, பிறவினை செயப்பாட்டுவினை.

செயப்பாட்டு வினையைத் தெரிவுச் செய் 

(A) பாடல் அவளால் பாடப்பட்டது 

(B) பந்து உருண்டது 

(C) என் அண்ணன் நாளை வருவான் 

(D) அவள் பாடினாள் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) பாடல் அவளால் பாடப்பட்டது 

 

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

கந்தனைத் திருந்தச் செய்தான் 

(A) செய்வினைத் தொடர் 

(B) செயப்பாட்டு வினைத் தொடர் 

(C) தன்வினைத்தொடர் 

(D) பிறவினைத்தொடர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) பிறவினைத்தொடர் 

 

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

கவிதா உரை படித்தாள் 

(A) வினாத் தொடர் 

(B) செய்வினைத்தொடர் 

(C) கட்டளைத்தொடர் 

(D) செயப்பாட்டு வினைத் தொடர் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) செய்வினைத்தொடர் 

 

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் இரண்டாயிரம் ஆண்டு காலத் தொன்மையுடையது 

(A) வீர விளையாட்டான ஏறு தழுவுதல் எவ்வளவு நேரமுடையது? 

(B) இந்தியர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்குவது எத்தனை ஆண்டு? 

(C) தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மையுடையது? 

(D) தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் பொங்கல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மையுடையது? 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மையுடையது? 

 

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர்வாணிதாசன் 

(A) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்பது என்ன? 

(B) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்? 

(C) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் யாரை குறிக்கும்? 

(D) புகழப்படும் வேர்ட்ஸ்வொர்த் யார்? 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்? 

 

  1. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்.

விரிந்ததுவிரித்தது 

(A) மயில் தோகையை விரித்ததால் இதழ்கள் விரிந்தன 

(B) பூக்கள் விரிந்ததால் மயில்கள் ஆடின 

(C) இதழ்கள் விரிந்ததால் மயில்கள் அகவின 

(D) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது 

(E) விடை தெரியவில்லை 

விடை: (D) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது 

 

  1. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக.

பொருந்து, பொருத்து 

(A) பொருத்து இருந்தால் காலம் கைகூடும் 

(B) விடையினை சரியாக பொருத்தி, வேலையில் பொருந்து 

(C) வேலையில் பொருத்தினால் இலாபம் அடையலாம் 

(D) பொறுத்தார் பூமி ஆள்வார் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) விடையினை சரியாக பொருத்தி, வேலையில் பொருந்து 

 

  1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக. சரியான தொடரைக் கண்டறி.

அறுத்துஅறுந்து 

(A) கதிர் அறுந்ததால் விரல் அறுத்தது 

(B) கதிர் அறுந்து விரல் அறுந்தது 

(C) கதிர் அறுத்தபோது விரல் அறுந்தது 

(D) கதிர் அறுந்தபோது விரல் அறுத்தது 

(E) விடை தெரியவில்லை 

விடை: (C) கதிர் அறுத்தபோது விரல் அறுந்தது 

 

  1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.

(A) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது 

(B) தம்மின் மக்கள்தம் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது 

(C) தம்மின்தம் மக்கள் மாநிலத்து அறிவுடைமை மன்னுயிர்க்கு எல்லாம் இனிது 

(D) மன்னுயிர்க்கு மக்கள் மாநிலத்து அறிவுடைமை தம்மின்தம் எல்லாம் இனிது 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது 

 

  1. கலைச்சொல் அறிக

Inscriptions 

(A) கையெழுத்துப்படி 

(B) கல்வெட்டு 

(C) கருத்துப்படம் 

(D) சொற்சுருக்கம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (B) கல்வெட்டு 

 

  1. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி 

(A) பாரதம், பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து 

(B) பீலி, பூமி, பெண்கள், பேருந்து, பாரதம், புதுமை 

(C) புதுமை, பெண்கள், பூமி, பாரதம், பேருந்து, பீலி 

(D) பெண்கள், பேருந்து, பூமி, புதுமை, பீலி, பாரதம் 

(E) விடை தெரியவில்லை 

விடை: (A) பாரதம், பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து 

Exercise Files
TAMIL TEST 5 – With Ans.pdf
Size: 639.34 KB
Join the conversation