Course Content
TAMIL TEST DAY – 07 ANSWER KEY
100 QUESTIONS
0/1
WA – TAMIL TEST DAY – 07
About Lesson

TAMIL TEST 7

 

  1. சரியான நிறுத்தற்குறி இட்ட சொற்றொடரினை தேர்ந்தெடு

(A) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணை வழுவமைதி ஆகும்.

(B) ‘என் அம்மை’ வந்தாள் – என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது ‘திணை வழுவமைதி’ ஆகும்.

(C) என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணைவழுவமைதி ஆகும்.

(D) (என் அம்மை வந்தாள் – என்று மாட்டைப்பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்

(E) விடை தெரியவில்லை.

 

  1. நிறுத்தற் குறியிடுக பூனையின் காலில் அடிபட்டு விட்டதே ஆ பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே

(A) ஆ, பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே

(B) ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே!

(C) ஆ பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே.

(D) ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே

(E) விடை தெரியவில்லை

 

  1. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக :

“நான் திடலில் ஓடினேன்

(A) தன்வினை

(B) செய்வினை

(C) பிறவினை

(D) செயப்பாட்டு வினை

(E) விடை தெரியவில்லை

 

 

  1. சரியான ஊர்ப் பெயரின் மரூஉ எது?

(A) புதுச்சேரி – புதுகை

(B) புதுக்கோட்டை புதுவை

(C) உதகமண்டலம் -உதகை

(D) கும்பகோணம் – கும்பை

(E) விடை தெரியவில்லை

 

  1. தில்லை என அழைக்கப்படும் ஊர்

(A) திருநெல்வேலி

(B) சிதம்பரம்

(C) சீர்காழி

(D) கன்னியாகுமரி

(E) விடை தெரியவில்லை

 

  1. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக

ஊர்ப்பெயரையும் அதன் மரூஉவையும் பொருத்துக

(a) தஞ்சாவூர்         1. குடந்தை

(b) திருநெல்வேலி    2. தஞ்சை

(c) கோயமுத்தூர்     3. நெல்லை

(d) கும்பகோணம்     4. கோவை

(A) 2 3 4 1

(B) 1 2 4 3

(C) 3 1 4 2

(D) 3 4 2 1

(E) விடை தெரியவில்லை

 

 

 

 

  1. சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க

விவாஹம்

(A) விழா

(B) திருமணம்

(C) பண்டிகை

(D) காதுகுத்து

(E) விடை தெரியவில்லை

 

  1. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக சர்க்கார்

(A) அரசாங்கம்

(B) ஜனநாயகம்

(C) அரவை

(D) ஆஸ்பத்திரி

(E) விடை தெரியவில்லை

 

  1. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.லைட் ஹவுஸ் என்பதன் தமிழ்ச் சொல்

(A) கலங்கரை விளக்கம்

(B) படகு வீடு

(C) மரவீடு

(D) கப்பல் விளக்கு

(E) விடை தெரியவில்லை

 

  1. நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு ‘கால் வலிக்கும்’ என்று விடை கூறுவது

(A) மறை விடை

(B) நேர் விடை

(C) உற்றது உரைத்தல் விடை

(D) உறுவது கூறல் விடை

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான வினை மரபை எடுத்தெழுதுக

(A) தண்ணீர் பருகினான்

(B) தண்ணீர் அருந்தினான்

(C) தண்ணீர் பறுகினான்

(D) தண்ணீர் குடித்தான்

(E) விடை தெரியவில்லை

 

  1. விடை வகையைத் தேர்ந்தெழுதுதல் “இது செய்வாயா? ” என்று வினவிய போது, “நீயே செய் என்று கூறுவது

(A) ஏவல் விடை

(B) சுட்டு விடை

(C) மறை விடை

(D) நேர் விடை

(E) விடை தெரியவில்லை

 

13.அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்) Download

(A) காணொலிக் கூட்டம்

(B) கீழிறக்கம்

(C) பதிவிறக்கம்

(D) மின்னனுக் கருவிகள்

(E) விடை தெரியவில்லை

 

  1. அலுவல் சார்ந்த கலைச்சொல் தேர்ந்தெழுதுதல் Personality

(A) நடவடிக்கை எடுத்தல்

(B) மனிதம்

(C) ஆளுமை

(D) கழகம்

(E) விடை தெரியவில்லை

  1. Thesis என்பதற்கான சரியான கலைச்சொல்லைக் கண்டறிக

(A) குறியீட்டியல்

(B) ஆய்வேடு

(C) அறிவாளர்

(D) சின்னம்

(E) விடை தெரியவில்லை

 

  1. கலைச் சொல்லுக்கானப் பொருளைத் தேர்ந்தெடு ‘Social Reformer’

(A) சமூக சீர்த்திருத்தவாதி

(B) சமூகப் போராளி

(C) சமூக உழைப்பாளி

(D) சமுதாய ஒருங்கிணைப்பாளர்

(E) விடை தெரியவில்லை

 

  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் விழலுக்கு இறைத்த நீர் போல

(A) பயனுள்ள செயல்

(B) பயனற்ற செயல்

(C) மிகுதியான செயல்

(D) தகுதியான செயல்

(E) விடை தெரியவில்லை

 

  1. “நகமும் சதையும் போல – உவமை கூறும் பொருள் தெளிக

(A) வேற்றுமை

(B) ஒற்றுமை

(C) பகைமை

(D) நட்பு

(E) விடை தெரியவில்லை

 

 

  1. மாணவர்கள் நன்றாகப் படித்தனர் – எவ்வகை வாக்கியம்

(A) பிறவினை

(B) தன்வினை

(C) செயப்பாட்டு வினை

(D) உணர்ச்சி தொடர்

(E) விடை தெரியவில்லை

 

  1. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார். – எவ்வகை வினை என கண்டறிக.

(A) தன்வினை

(B) பிறவினை

(C) செய்வினை

(D) செயப்பாட்டு வினை

(E) விடை தெரியவில்லை

 

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

அப்துல் நேற்று வந்தான்.

(A) பிற வினைத்தொடர்

(B) உணர்ச்சித் தொடர்

(C) தன்வினைத் தொடர்

(D) செய்வினைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

 

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் “கல்வியில் பெரியவர் கம்பர்”

(A) கல்வியில் புகழ் பெற்றவர் யார்?

(B) கல்வியில் சிறந்தவர் யார்?

(C) கவிதையில் பெரியவர் யார்?

(D) கல்வியில் பெரியவர் யார்?

(E) விடை தெரியவில்லை

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டி

(A) விருதுநகரின் முந்தைய பெயர் என்ன?

(B) விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டியா?

(C) விருதுநகர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(D) விருதுநகரும் விருதுப்பட்டியும் ஒன்றா?

(E) விடை தெரியவில்லை

 

  1. இரு வினைகளின் வேறுபாடு அறிந்து தவறான தொடரைத் தெரிவு செய்க நீங்கு – நீக்கு

(A) பெயரை நீக்கியவுடன் பள்ளியை விட்டு நீங்கு

(B) இக்குழுவை விட்டு நான் நீங்க வேண்டுமானால் என் பெயரை நீக்கு

(C) என் பெயரை நீக்க நினைத்தால் நீங்கு

(D) தவறான பதிவுகள் நீங்க வேண்டுமென்று நினைத்து நீக்கி விட்டேன்

(E) விடை தெரியவில்லை

 

  1. கீழ்கண்ட வினைகளின் பொருள் வேறுபாடு அறிக சேர்ந்து, சேர்த்து

(A) ஒன்று சேர்ந்து வீட்டினைக் கட்டினர்

(B) அனைவரையும் சேர்த்து கல்வியை புகட்டினர்

(C) அனைவரும் ஒன்று சேர்ந்து சிதறியுள்ள விறகினை சேர்த்து பல கட்டுகளாக கட்டினர்

(D) சேர்த்து வைத்த சொத்து வீண் போகாது

(E) விடை தெரியவில்லை

 

  1. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. புதைந்து, புதைத்து

(A) ரவி மண்ணில் புதைந்தப் பொருளை புதைத்து வைத்தான்

(B) புதைந்தப் பொருளை மறைத்து வைத்தல்

(C) புதையலைக் கண்டு மகிழ்ந்தான்

(D) ரவி புதைத்தப் புதையலை மறந்தான்

(E) விடை தெரியவில்லை

  1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக

(A) பெண்கள் கல்வியும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார் கம்பர் விருந்தும், ஈகையும்,

(B) கம்பர் குறிப்பிட்டுள்ளார் கல்வியும், செல்வமும் பெண்கள் பெற்ற ஈகையும், விருந்தும் செய்வதாக

(C) செல்வமும், விருந்தும் பெற்ற பெண்கள் கல்வியும் ஈகையும் பெண்கள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்

(D) கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்

(E) விடை தெரியவில்லை

 

  1. பொருத்தமான காலம் அமைத்தல் சரியான தொடரைத் தேர்ந்தெடு

(A) பாடல் பாடினான் (இறந்த காலம்)

(B) பாடல் பாடுகிறான் (எதிர் காலம்)

(C) பாடல் பாடுவான் (நிகழ் காலம்)

(D) பாடல் பாடுகிறார்கள் (இறந்த காலம்)

(E) விடை தெரியவில்லை

 

  1. அகர வரிசைப்படி கீழ்கண்ட சொற்களை சீர் செய்க

காண், கொல், கிளி, கீரி, குடுவை, கேள்வி

(A) காண், கிளி, கீரி, குடுவை, கேள்வி, கொல்

(B) கொல், கேள்வி, குடுவை, கீரி, கிளி, காண்

(C) கீரி, குடுவை, கேள்வி, கிளி, காண், கொல்

(D) கிளி, குடுவை, கீரி, கேள்வி, கொல், காண்

(E) விடை தெரியவில்லை

 

  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில்‌ சேர்க்க (தலை)

(A) உழந்தும் உரலே _____

(B) உழந்தும் உலவே ____

(C) உழந்தும் உறவே _____

(D) உழந்தும் உழவே _____

(E) விடை தெரியவில்லை

 

  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (தொடுதல்)

(A) காற்றின் மெல்லிய _____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது

(B) கைகளின் நேர்த்தியான _____ பூக்களை மாலையாக்குகிறது.

(C) சூடான பொருளை கையால் ____ இருக்க வேண்டும்

(D) ____ சுருங்கி’ என்பது ஒருவகைத் தாவரம்

(E) விடை தெரியவில்லை

 

32.சரியான இணைப்புச் சொல் தேர்க :

நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும், துன்பப்பட நேரிடும்.

(A) ஏனெனில்

(B) அதனால்

(C) இல்லையென்றால்

(D) மேலும்

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான இணைப்புச் சொல் தருக

அலுவலகப் பணிகாரணமாக வெளியூர் சென்ற என் தந்தை ஊர் திரும்ப ____ இரண்டு நாட்கள் ஆகும் என்றார்.

(A) மேலும்

(B) அதனால்

(C) இல்லையெனில்

(D) ஏனெனில்

(E) விடை தெரியவில்லை

 

  1. இணைப்புச் சொல் தருக.

செல்வத்தின் பயன் ஈதல் _____ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்

(A) எனவே

(B) இல்லையென்றால்

(C) மேலும்

(D) அதுபோல

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு ____ ?

(A) யார்?

(B) ஏன்?

(C) யாது?

(D) யாவை?

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

ஆழ்வார்கள் _____ பேர்?

(A) எத்துணை

(B) எத்தனை

(C) எப்போது

(D) எப்பொழுது

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு

ஆத்திசூடியின் ஆசிரியர் _____?

(A) எப்படி

(B) எது

(C) ஏன்

(D) யார்

(E) விடை தெரியவில்லை

 

  1. பொருத்தமான காலம் அமைத்தல்

‘படி’ என்னும் சொல்லின் நிகழ்காலத்தைத் தேர்ந்தெடு

(A) படித்தான்

(B) படிப்பான்

(C) படிப்பாள்

(D) படிக்கிறான்

(E) விடை தெரியவில்லை

 

  1. வழுஉச் சொல்லற்றத் தொடர் எது?

(A) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னந்தோட்டம் என்பர்

(B) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னந்தோப்பு என்பர்

(C) தென்னை மரங்கள் தென்னங்காடு என்பர்

(D) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னங்கூட்டம் என்பர்

(E) விடை தெரியவில்லை

 

  1. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்

பொருத்துக

(a) கண்     1. மழை

(b) பொன்   2. தேன்

(c) மலை   3. விலங்கு

(d) வான்    4. மணி

(A) 1 2 3 4

(B) 4 3 2 1

(C) 1 3 2 4

(D) 4 1 2 3

(E) விடை தெரியவில்லை

 

  1. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று வந்துடறேன்

(A) வந்து தருகிறேன்

(B) வந்து விடுகிறேன்

(C) வந்து விட்டேன்

(D) வந்து ஓடுகிறேன்

(E) விடை தெரியவில்லை

 

  1. இரு பொருள் தருக.

திங்கள்

(A) கிழமை, சந்திரன்

(B) நாள், சூரியன்

(C) பூமி, நட்சத்திரம்

(D) உலகம், ஞாயிறு

(E) விடை தெரியவில்லை

 

  1. இருபொருள் தரக்கூடிய சொல்

ஆடை தைக்க உதவுவது____

முதுரை அற____

(A) பஞ்சு

(B) நூல்

(C) ஊசி

(D) தையல்

(E) விடை தெரியவில்லை.

 

  1. இருபொருள் தருக.

மாலை

(A) பூமாலை, மாலைப்பொழுது

(B) பூக்கள், சிறுபொழுது

(C) பூ காலைப்பொழுது

(D) பூக்கள், பெரும்பொழுது

(E) விடை தெரியவில்லை

  1. குறில், நெடில் வேறுபாடுணர்ந்து பொருளறிக

அறு – ஆறு

(A) நதி – ஓர் எண்

(B) வெட்டுதல் அறுத்தல்

(C) வெட்டுதல் – நதி

(D) அறுத்தல் – கட்டுதல்

(E) விடை தெரியவில்லை

 

  1. கோடிட்ட இடங்களுக்கு பொருந்திய சொற்களைத் தேர்க

____வில் ____ குளித்தது.

(A) விடு,வீடு

(B) சுடு,சூடு

(C) மடு, மாடு

(D) அடு,ஆடு

(E) விடை தெரியவில்லை

 

  1. கூற்று காரணம் – சரியா தவறா?

கூற்று 1 : பழந்தமிழர்கள், மழைச்சோற்று நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

கூற்று 2 : ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்

கூற்று 3 : ஊர் பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர்.

கூற்று 4 : மழையில் நனைந்து கொண்டே உண்பர்.

(A) கூற்று 1 தவறு, 2, 3, 4 சரி

(B) கூற்று 1,2.3 சரி, 4 மட்டும் தவறு

(C) கூற்று 1,2,3, 4 சரி

(D) கூற்று 1. 2 சரி, 3, 4 தவறு

(E) விடை தெரியவில்லை

 

 

  1. கூற்று சரியா தவறா?

கூற்று 1 : தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலை ஞாயிறு

கூற்று 2 : கூத்துக்கலையின் ஒப்பனை, கதை சொல்லும் முறை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புதுவித நாடகங்களை உருவாக்கியவர்

கூற்று 3 : இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர்

(A) கூற்று 1, 2, 3 சரி

(B) கூற்று 1 மட்டும் சரி ,2, 3 தவறு

(C) கூற்று 1, 2 சரி, 3 மட்டும் தவறு

(D) கூற்று 1, 3 சரி. 2 மட்டும் தவறு

(E) விடை தெரியவில்லை

 

  1. கலைச்சொல் தருக

Humanity

(A) கருணை

(B) மனிதநேயம்

(C) இறை உணர்வு

(D) ஈரப்பதம்

(E) விடை தெரியவில்லை.

 

  1. கலைச்சொற்களை அறிதல்

Tornado – என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடு

(A) புயல்

(B) சூறாவளி

(C) பெருங்காற்று

(D) சுழல் காற்று

(E) விடை தெரியவில்லை

 

 

  1. Saline Soil என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைக் கண்டறிக

(A) களர் நிலம்

(B) உவர் நிலம்

(C) செம்மண் நிலம்

(D) கரிசல் நிலம்

(E) விடை தெரியவில்லை

 

  1. அகரவரிசைப்படுத்துக

மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மௌனம், மொழிபெயர்ப்பு,

(A) மனத்துயர், மாவிலை, மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு, மௌனம்

(B) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மௌனம், மொழிபெயர்ப்பு

(C) மொழிபெயர்ப்பு, மாவிலை, மெளனம், மீமிசை, முந்நீர். மனத்துயர், மேடுபள்ளம்

(D) மேடுபள்ளம், மனத்துயர், முந்நீர், மொழிபெயர்ப்பு, மாவிலை, மௌனம், மீமிசை

(E) விடை தெரியவில்லை

 

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க

உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.

(A) அச்சாணி, உழுவோர், உலகத்தார்க்கு, போற்றப்பட்டனர், எனப்

(B) அச்சாணி, உழுவோர், எனப், உலகத்தார்க்கு, போற்றப்பட்டனர்

(C) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், எனப், போற்றப்பட்டனர்

(D) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், போற்றப்பட்டனர், எனப்

(E) விடை தெரியவில்லை

 

  1. வேர்ச் சொல்லைக் கொடுத்து தொழிற்பெயரை உருவாக்கல் கொடு

(A) கொடுத்து

(B) கொடுக்கிறான்

(C) கொடுத்தல்

(D) கொடுத்த

(E) விடை தெரியவில்லை

 

  1. வேர்ச் சொல்லுக்குரிய வினைமுற்றைக் கண்டுபிடி

போ

(A) போனான்

(B) போகிற

(C) போகின

(D) போகுவார்

(E) விடை தெரியவில்லை

 

  1. ‘படி’ என்பதன் வினையாலணையும் பெயர்

(A) படித்தான்

(B) படித்த

(C) படித்தவர்

(D) படித்தல்

(E) விடை தெரியவில்லை

 

  1. சென்றனர் – வேர்ச்சொல்லைத் தருக.

(A) சென்றான்

(B) சென்ற

(C) சென்று

(D) செல்

(E) விடை தெரியவில்லை

 

  1. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

மகிழ்வித்தனன்

(A) மகிழ்ச்சி

(B) கிழ்

(C) மகிழ்வி

(D) மகிள்

(E) விடை தெரியவில்லை

 

  1. நடப்பாள் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக

(A) நடந்த

(B) நட

(C) நடந்து

(D) நடந்தன

(E) விடை தெரியவில்லை

 

  1. ‘மலை எனும் பொருள் தரும் சொற்களைத் தேர்க

(A) பொருப்பு, வெற்பு, அசலம்

(B) வெற்பு, வேங்கடம், அசலம்

(C) மறை, வேதம், துறை

(D) குன்றம், கிரி, மறை

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

பிள்ளை, குட்டி, மடலி, வடலி, கன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

(A) இளம் விலங்கினம்

(B) தென்னை ஓலை

(C) இலைகள்

(D) இளம் பயிர் வகை

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒலி மற்றும் பொருள்‌ வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

விலை – விளை

(A) விருப்பம் – உண்டாக்குதல்

(B) பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்

(C) இன்பம் – துன்பம்

(D) மதிப்பு – விருப்பம்

(E) விடை தெரியவில்லை

 

  1. பொருள் வேறுபாடறிந்து சரியானவற்றைத் தேர்க

வாசலில் போடுவது ____, பந்தின் வடிவம் ____

(A) கோலம், கோளம்

(B) கோளம், கோடு

(C) பூ, வட்டம்

(D) கோல், கோள்

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் கூறு

கூரை, கூறை

(A) புடவை, வீட்டின் கூரை

(B) வீட்டின் தரை, புடவை

(C) வீட்டின் தரை, புடவைக்கரை

(D) வீட்டின் கூரை, புடவை

(E) விடை தெரியவில்லை

 

  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக

Transplantation

(A) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

(B) சிறுநீரகச் செயலிழப்பு

(C) இதயநோய்

(D) மூட்டுவலி

(E) விடை தெரியவில்லை

 

  1. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு

CONSONANT

(A) ஒப்பெழுத்து

(B) மெய்யெழுத்து

(C) கலந்துரையாடல்

(D) தீபகற்பம்

(E) விடை தெரியவில்லை

 

  1. பொருத்துக

(a) பால் பண்ணை      1. Loom

(b) தோல் பதனிடுதல்   2. Dairy Farm

(c) சாயம் ஏற்றுதல்.     3. Tanning

(d) தறி                 4. Dyeing

(A) 3 4 2 1

(B) 2 3 4 1

(C) 1 2 3 4

(D) 2 4 1 3

(E) விடை தெரியவில்லை

 

  1. மரபுப்பிழை நீக்குக

பால் குடித்தான்

(A) பருகினான்

(B) சாப்பிட்டான்

(C) உண்டான்

(D) சுவைத்தான்

(E) விடை தெரியவில்லை

 

 

  1. சந்திப் பிழையை நீக்குக

கண்காணிப்பு கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையை திருப்புகிறது.

(A) கண்க்காணிப்புக் கருவி அசைவு நிகழும்ப் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது

(B) கண்க்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது

(C) கண்க்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையை திருப்புகிறது.

(D) கண்க்காணிப்பு கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது

(E) விடை தெரியவில்லை

 

  1. கோழி கூவும் – மரபுப் பிழையை நீக்குக

(A) கோழி குறுகும்

(B) கோழி கொக்கரிக்கும்

(C) கோழி அகவும்

(D) கோழி கரையும்

(E) விடை தெரியவில்லை

 

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

மென்றொடர்க் குற்றியலுகரம்

(A) பண்பு

(B) மஞ்சு

(C) கண்டு

(D) எஃகு

(E) விடை தெரியவில்லை

 

  1. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – இவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

(A) பாக்கு

(B) பஞ்சு

(C) பாட்டு

(D) பத்து

(E) விடை தெரியவில்லை

 

  1. ‘நல்கினாள்’ என்பதன் எதிர்ச்சொல்

(A) கொடுத்தாள்

(B) எடுத்தாள்

(C) தந்தாள்

(D) தருகிறாள்

(E) விடை தெரியவில்லை

 

  1. எதிர்ச்சொல் தருக

சோம்பல்

(A) அழிவு

(B) துன்பம்

(C) சுறுசுறுப்பு

(D) சோகம்

(E) விடை தெரியவில்லை

 

  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

இரவலர்

(A) புரவலர்

(B) அரிது

(C) ஏற்றல்

(D) உறவினர்

(E) விடை தெரியவில்லை

 

 

  1. பிரித்தெழுதுக

தம்முயிர்

(A) தம் + உயிர்

(B) தமது + உயிர்

(C) தம்மு + உயிர்

(D) தன் + உயிர்

(E) விடை தெரியவில்லை

 

  1. சேர்த்து எழுதுக

பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

(A) பருத்திஎல்லாம்

(B) பருத்தியெல்லாம்

(C) பருத்தெல்லாம்

(D) பருத்திதெல்லாம்

(E) விடை தெரியவில்லை

 

  1. வட்டு + ஆடினான் என்பதைச் சேர்த்தெழுதுக.

(A) வட்டு ஆடினான்

(B) வட்டினான்

(C) வட்டாடினான்

(D) வட்டுடாடினான்

(E) விடை தெரியவில்லை

 

காலில் காயத்திற்குக் கட்டுப் போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். “எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?” என்று நடத்துனர் கேட்டார். அதே நேரம் அருகிலிருந்த ஒருவர் “உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?” என்று கேட்டார். அதற்கு அவன் “செங்கல்பட்டு என்று கூறினான். அவன் கூறியது இருவரின் வினாவிற்கும் பொருத்தமான விடையாக அமைந்தது. அவன் செல்ல வேண்டிய ஊர் செங்கல்பட்டு என்று நடத்துனர் புரிந்து கொண்டார். அவன் காலில் செங்கல் பட்டு காயம் ஏற்பட்டது என மற்றவர் புரிந்து கொண்டனர். இவ்வாறு ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது ‘இரட்டுற மொழிதல்’ என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.

 

  1. இப்பத்தியில் பயின்று வரும் அணி யாது?

(A) தற்குறிப்பேற்ற அணி

(B) சிலேடை அணி

(C) உவமையணி

(D) எடுத்துக்காட்டு உவமையணி

(E) விடை தெரியவில்லை

 

  1. இப்பத்தியில் இடம் பெறும் ஊரின் பெயர்?

(A) காஞ்சிபுரம்

(B) மாம்பட்டு

(C) செங்கோட்டை

(D) செங்கல்பட்டு

(E) விடை தெரியவில்லை

 

  1. இளைஞன் பயணம் செய்த வாகனம் எது ?

(A) சிற்றுந்து

(B) மகிழுந்து

(C) பேருந்து

(D) தொடர்வண்டி

(E) விடை தெரியவில்லை

 

  1. இப்பத்தியில் இடம் பெறும் வினாத் தொடரைத் தேர்ந்தெடு

(A) உன் பயணச்சீட்டைக் கொடு

(B) உன் பயணச்சீட்டு

(C) உன் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்

(D) எந்த ஊருக்கு பயணச்சீட்டு வேண்டும்?

(E) விடை தெரியவில்லை

  1. இளைஞனுக்கு அடிப்பட்ட இடம் குறிப்பிடு

(A) தலை

(B) கால்

(C) கை

(D) உடல்

(E) விடை தெரியவில்லை

 

  1. கீழ்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது?

(A) ஒரு ஊர்

(B) ஓர் ஊர்

(C) ஓர் பழைய ஊர்

(D) ஒரு இனிய ஊர்

(E) விடை தெரியவில்லை

 

  1. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

(A) மாலை நடக்கும் ஓர் பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(B) மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(C) மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(D) மாலை நடக்கும் ஓர் பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(E) விடை தெரியவில்லை

 

  1. பிழையற்றத் தொடரைக் கண்டறிக

ஒரு – ஓர்

(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(B) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(C) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(D) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியாக பொருந்தும் இணையைக் கண்டறிக

(A) நந்தவனம் – இசை

(B) பார் – பூஞ்சோலை

(C) பணி – உலகம்

(D) இழைத்து – செய்து

(E) விடை தெரியவில்லை

 

88.சொல் – பொருள் – பொருத்துக

(a) எத்தனிக்கும்                  1. சமம்

(b) வெற்பு                   2. வயல்

(c) கழனி                    3. மலை

(d) நிகர்                      4. முயலும்

(A) 4 3 2 1

(B) 1 2 4 3

(C) 3 1 2 4

(D) 4 1 3 2

(E) விடை தெரியவில்லை

 

  1. சொல் – பொருள் பொருத்துக

(a) பயிலுதல்          1.மேகம்

(b) நாணம்            2. படித்தல்

(c) முகில்             3. எமன்

(d) காலன்                   4. வெட்கம்

(A) 2 4 1 3

(B) 3 2 1 4

(C) 1 2 3 4

(D) 2 3 4 1

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒருமை – பன்மை பிழையற்றச் சொல்லைத் தேர்க

கண்ணகியின் சிலம்பு ____

(A) இதுவல்ல

(B) இதுவன்று

(C) இவையன்று

(D) இவையல்ல

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒருமை பன்மை பிழை

கன்று ____ தலையை ஆட்டியது.

(A) தான்

(B) தாம்

(C) தமது

(D) தனது

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒருமை – பன்மை பிழையற்றத் தொடர் எது?

(A) என் தங்கை பரிசு பெற்றான்

(B) என் தங்கை பரிசு பெற்றன

(C) என் தங்கை பரிசு பெற்றது

(D) என் தங்கை பரிசு பெற்றாள்

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான தொடரைத் தேர்ந்தெடு

நான் நன்றாக தேர்வு எழுதினேன்

(A) உணர்ச்சித் தொடர்

(B) எதிர்மறை வினைத்தொடர்

(C) உடன்பாட்டு வினைத்தொடர்

(D) செயப்பாட்டு வினைத்தொடர்

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான தொடரைத் தேர்ந்தெடு

‘அறைக்குப் புத்தகங்கள் வருவித்தார்’

(A) தன் வினைத்தொடர்

(B) உடன்பாட்டு வினைத்தொடர்

(C) செய்தித்தொடர்

(D) பிற வினைத்தொடர்

(E) விடை தெரியவில்லை

 

  1. கூட்டுப் பெயரைக் குறிப்பிடு

மா

(A) மாங்கொல்லை

(B) மாமரங்கள்

(C) மாந்தோப்பு

(D) மாந்தோட்டம்

(E) விடை தெரியவில்லை

 

96.கூட்டப் பெயரைக் குறிப்பிடு

கல்

(A) கல் குட்டை

(B) கற் குவியல்

(C) கல் குவாரி

(D) கல் கோபுரம்

(E) விடை தெரியவில்லை

 

  1. சொற்களின் கூட்டப்பெயர்கள் கீழ்க்காணும் சொல்லின் கூட்டுப்பெயர் யாது?

ஆடு

(A) ஆட்டுக்கூட்டம்

(B) ஆட்டு மந்தை

(C) ஆட்டுப்படை

(D) ஆட்டு நிரை

(E) விடை தெரியவில்லை

 

  1. நீண்டதொரு காலப்பகுதி எனும் பொருளைத் தரும் சொல்

(A) ஆழி

(B) ஊழி

(C) வாழி

(D) பாழி

(E) விடை தெரியவில்லை

 

  1. ‘அகம்– இச்சொல் தரும் இரு பொருள்களைக் கண்டறிக.

(A) வீடு, அன்பு

(B) அறிவு, நட்பு

(C) வீடு, மனம்

(D) அறிவு, பண்பு

(E) விடை தெரியவில்லை

 

  1. சரியான இணையைத் தெரிவு செய்க

(A) உத்தரவு     – பணி

(B) கஜானா      – வருவாய்

(C) பாக்கி        – இழப்பு

(D) அலங்காரம்       – ஒப்பனை

(E) விடை தெரியவில்லை

 

விடைகள்

விடை – (A) “என் அம்மை வந்தாள்என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணை வழுவமைதி ஆகும்.

விடை – (B) ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே
விடை – (C) உதகமண்டலம்உதகை
விடை – (B) சிதம்பரம்
விடை – (A) 2 3 4 1
விடை – (B) திருமணம்
விடை – (A) அரசாங்கம்
விடை – (A) கலங்கரை விளக்கம்
விடை – (D) உறுவது கூறல் விடை
விடை – (D) தண்ணீர் குடித்தான்
விடை – (A) ஏவல் விடை
விடை – (C) பதிவிறக்கம்
விடை – (C) ஆளுமை
விடை – (B) ஆய்வேடு
விடை – (A) சமூக சீர்த்திருத்தவாதி
விடை – (B) பயனற்ற செயல்
விடை – (D) நட்பு
விடை – (B) தன்வினை
விடை – (B) பிறவினை
விடை – (C) தன்வினைத் தொடர்
விடை – (D) கல்வியில் பெரியவர் யார்?

விடை – (A)விருதுநகரின் முந்தைய பெயர் என்ன?
விடை – (C) என் பெயரை நீக்க நினைத்தால் நீங்கு
விடை – (C) அனைவரும் ஒன்று சேர்ந்து  சிதறியுள்ள விறகினை சேர்த்து பல கட்டுகளாக கட்டினர்
விடை – (A) ரவி மண்ணில் புதைந்தப் பொருளை புதைத்து வைத்தான்
விடை – (D) கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்
விடை – (A) பாடல் பாடினான் (இறந்த காலம்)
விடை – (A) காண், கிளி, கீரி, குடுவை, கேள்வி, கொல்
விடை – (D) உழந்தும் உழவே _____
விடை – (A) காற்றின் மெல்லிய _____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது
விடை – (C)இல்லையென்றால்
விடை – (A) மேலும்
விடை – (A) எனவே
விடை – (C) யாது?
விடை – (B) எத்தனை
விடை – (D) யார்
விடை – (D) படிக்கிறான்
விடை – (B) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னந்தோப்பு என்பர்
விடை – (B) 4 3 2 1
விடை – (B) வந்து விடுகிறேன்
விடை– (A) கிழமை, சந்திரன்
விடை– (B) நூல்
விடை– (A) பூமாலை, மாலைப்பொழுது

விடை– (C) வெட்டுதல்நதி
விடை– (C) மடு, மாடு
விடை– (B) கூற்று 1,2.3 சரி, 4 மட்டும் தவறு
விடை – (A) கூற்று 1, 2, 3 சரி
விடை – (B) மனிதநேயம்
விடை – (B) சூறாவளி
விடை– (A) களர் நிலம்
விடை– (A) மனத்துயர், மாவிலை, மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு, மௌனம்
விடை – (C) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், எனப், போற்றப்பட்டனர்

விடை – (C) கொடுத்தல்
விடை – (A) போனான்
விடை – (C)படித்தவர்
விடை – (D)செல்
விடை – (B)மகிழ்
விடை – (B) நட
விடை – (A) பொருப்பு, வெற்பு, அசலம்
விடை – (D) இளம் பயிர் வகை
விடை – (B) பொருளின் மதிப்பு
உண்டாக்குதல்

விடை – (A) கோலம், கோளம்
விடை – (B) வீட்டின் தரை, புடவை
விடை – (A) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
விடை – (B) மெய்யெழுத்து
விடை – (B) 2 3 4 1
விடை – (A) பருகினான்
விடை – (B) கண்க்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது
விடை – (B) கோழி கொக்கரிக்கும்
விடை – (D)எஃகு
விடை – (B) பஞ்சு
விடை – (B) எடுத்தாள்
விடை – (C) சுறுசுறுப்பு
விடை – (A) புரவலர்
விடை – (A) தம் + உயிர்
விடை – (B) பருத்தியெல்லாம்
விடை – (C) வட்டாடினான்
விடை – (B) சிலேடை அணி
விடை – (D) செங்கல்பட்டு
விடை – (C) பேருந்து
விடை – (D) எந்த ஊருக்கு பயணச்சீட்டு வேண்டும்?
விடை – (B) கால்
விடை – (B) ஓர் ஊர்
விடை – (C) மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் தலைமை தாங்குகிறார்

விடை – (B)ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
விடை – (D) இழைத்துசெய்து
விடை – (A) 4 3 2 1
விடை – (A) 2 4 1 3
விடை – (B)இதுவன்று
விடை – (D) தனது
விடை – (D) என் தங்கை பரிசு பெற்றாள்
விடை – (C) உடன்பாட்டு வினைத்தொடர்
விடை – (D) பிற வினைத்தொடர்
விடை – (C) மாந்தோப்பு
விடை – (B) கற் குவியல்
விடை – (B) ஊழி
விடை – (C) வீடு, மனம்
விடை – (B) ஆட்டு மந்தை
விடை – (D)அலங்காரம் ஒப்பனை

Exercise Files
Tamil Test 7 – 21-12-2022 – WA.pdf
Size: 299.00 KB
Join the conversation