- கீழ்காணும் தொடர்களில் (ஒரு -ஓர்) சரியாக அமைந்த தொடர் எது?
(A) ஒரு அழகிய ஊஞ்சல் ஆடுகிறது
(B) ஓர் ஊஞ்சல் ஆடுகிறது
(C) ஒரு ஊஞ்சல் ஆடுகிறது
(D) ஓர் மர ஊஞ்சல் ஆடுகிறது
(E) விடை தெரியவில்லை
- சொல் – பொருள் – பொருத்துக.
(a) பண் 1. பதித்து
(b) இழைத்து 2. இசை
(c) பார் 3. பூஞ்சோலை
(d) நந்தவனம் 4. உலகம்
(A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 3 2 1 4
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
- பொருந்தா இணையைக் கண்டறிக :
சொல்லோடு பொருளைப் பொருத்துக.
- கா – சோலை
- கோ – அரசன்
- சோ – மதில்
- நா – கொடு
(A) கா – சோலை
(B) கோ – அரசன்
(C) சோ – மதில்
(D) நா – கொடு
(E) விடை தெரியவில்லை
- சரியான தொடரைத் தேர்ந்தெடு:
நான் மழையில் நனைந்தேன்
(A) உணர்ச்சித் தொடர்
(B) பிறவினைத் தொடர்
(C) உடன்பாட்டு வினைத் தொடர்
(D) பெயர்ப் பயனிலைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
- நான் நாளை மதுரை செல்கிறேன் – இது எவ்வகைத் தொடர்
(A) வினாத் தொடர்
(B) செய்தித் தொடர்
(C) கலவைத் தொடர்
(D) கட்டளைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
- கூட்டப் பெயரைக் குறிப்பிடு.
மக்கள்
(A) மக்கள் கூட்டம்
(B) மக்கள் தொகை
(C) மக்கள்கள்
(D) மனிதர்கள்
(E) விடை தெரியவில்லை
- கூட்டப் பெயரை எழுதுக.
திராட்சை
(A) குலை
(B) கொத்து
(C) குவியல்
(D) கூடை
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
மலை முகட்டில் மேகம் _____ அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் ____
(A) தங்கும் – தயங்கும்
(B) தவழும் – படியும்
(C) கூடும் – தயங்கும்
(D) சேரும் – கூடும்
(E) விடை தெரியவில்லை
- “முதலைக் கண்ணீர்” – இம்மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் தெளிக.
(A) முதலையின் கண்ணீர்
(B) பொய்யழுகை
(C) இல்லாத ஒன்று
(D) அவலநிலை
(E) விடை தெரியவில்லை
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (அவர்கள்)
(A) ஏழாம் வகுப்பு _____ மாணவர்கள்
(B) _____ ஏழாம் வகுப்பு மாணவர்கள்
(C) ____ மாணவர்கள் அவர்கள் உள்ளனர்
(D) நான் ____ மாணவர்கள்
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச் சொல்
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் _____ அவர் எளிமையை விரும்பியவர்.
(A) ஏனெனில்
(B) அதனால்
(C) ஆகையால்
(D) அதுபோல
(E) விடை தெரியவில்லை
- சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
நாயன்மார்கள் _______ பேர்?
(A) என்ன
(B) எப்படி
(C) எத்தனை
(D) எவ்வாறு
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான காலமறிக.
அவன் நேற்று திரைப்படம் _______ (காண்)
(A) காண்பான்
(B) கண்டான்
(C) காண்பிப்பான்
(D) காண்கிறான்
(E) விடை தெரியவில்லை
- சொற்களை இணைத்து புதிய சொல்லை உருவாக்கு.
ஆழ்,வயல், நாடு, கடல், விண், வளி
(A) ஆழ் கடல்
(B) ஆழ் வயல்
(C) விண் வயல்
(D) வளி நாடு
(E) விடை தெரியவில்லை
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.
பொருத்துக.
(a) விண் 1. மொழி
(b) தமிழ் 2. மீன்
(c) நூல் 3. நூல்
(d) நீதி 4. வெளி
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 1 3 2 4
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
16.குறில் நெடில் அடிப்படையில் பொருள் வேறுபாடு காண்க.
விடு – வீடு
(A) தங்குமிடம் – விட்டுவிடுதல்
(B) விட்டுவிடுதல் – தங்குமிடம்
(C) விட்டுவிடுதல் – தவிர்த்துவிடுதல்
(D) தங்குமிடம் – தாங்குமிடம்
(E) விடை தெரியவில்லை
- குறில் நெடில் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்க.
சிலை – சீலை
(A) சிற்பம் – புடவை
(B) புடவை – சிற்பம்
(C) கற்சிலை – ஓவியம்
(D) சிற்பம் – ஒழுக்கம்
(E) விடை தெரியவில்லை
- தழை – தாழை – பொருள் சரியாகப் பொருந்திய இணையைத் தேர்க.
(A) செழிக்கச் செய் – வாடச்செய்
(B) மலர் – மடல்
(C) மலர் – இலை
(D) இலை – மலர் வகை
(E) விடை தெரியவில்லை
- கூற்று : அயோத்திதாசர் “ஒரு பைசா தமிழன்” என்ற வார இதழைத் தொடங்கினார்.
காரணம் (1) : இவர் தனது ஆசிரியர் பெயரையே தம் பெயராக வைத்துக் கொண்டார்.
காரணம் (2) : ஒரு பைசா தமிழன் என்ற வார இதழ் 1 பைசாவிற்கு விற்கப்பட்டது.
காரணம் (3) : ஓர் ஆண்டிற்குப் பின் இவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.
(A) கூற்றும்,காரணங்களும் சரி
(B) கூற்று சரி காரணம் 1 தவறு 2, 3 சரி
(C) கூற்று சரி காரணம் 1, 2 சரி 3 மட்டும் தவறு
(D) கூற்றும் காரணம் 1, 3ம் சரி 2 மட்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
குச்சு, கிளை, கொம்பு, கவை, கொப்பு
(A) கவை,கிளை, குச்சு, கொம்பு, கொப்பு
(B) கவை, கிளை, குச்சு, கொப்பு, கொம்பு
(C) கவை, குச்சு, கொம்பு, கொப்பு, கிளை
(D) கவை, கிளை, கொம்பு, கொப்பு, குச்சு
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக:
வா
(A) வந்த
(B) வந்தான்
(C) வந்தவன்
(D) வந்து
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லைக் கொண்டு தொழிற்பெயரை உருவாக்கு :
நடி
(A) நடித்தான்
(B) நடித்தல்
(C) நடித்து
(D) நடித்த
(E) விடை தெரியவில்லை
- வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
உணர்
(A) உணர்ந்தான்
(B) உணர்வான்
(C) உணர்ந்தோர்
(D) உணர்தல்
(E) விடை தெரியவில்லை
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் :
ஏரி – ஏறி
(A) ஆறு – ஆற்றுப்படுத்தல்
(B) ஏறுதல் – எறிதல்
(C) ஆறு–குளம்
(D) நீர்நிலை – மேலே சென்று
(E) விடை தெரியவில்லை
- ஒலி வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்வு செய் :
மரை – மறை
(A) மறைதல் – மறைத்தல்
(B) தாமரை – மறத்தல்
(C) தாமரை – மறைத்தல்
(D) ஆணி – மறைதல்
(E) விடை தெரியவில்லை
- பொருள் வேறுபாடறிந்து சரியானவற்றைத் தேர்க.
போரில் பயன்படுத்தியது ____, பூனைக்கு உள்ளது_____.
(A) வாழ்,தாழ்
(B) வாள், வால்
(C) கால், காளை
(D) மனம், மணம்
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
Confidence
(A) அச்சம்
(B) நம்பிக்கை
(C) பயம்
(D) பொய்மை
(E) விடை தெரியவில்லை
- பிழையற்றத் தொடரைக் கண்டறிக.
(A) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்
(B) தேர்த் திருவிலாவிற்குச் செண்றணர்
(C) தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்
(D) தேர்த் திருவிழாவிற்குச் செண்றண்ர்
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.
(A) கருங்குவளை
(B) செந்நெல்
(C) விரிமலர்
(D) செம்மலர்
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) இலங்கை
(D) ஆந்திரா
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பாடுகிறாள், நடித்தார், நடிக்கின்றார், சிரிக்கின்றாள்
(A) பாடுகிறாள்
(B) நடித்தார்
(C) நடிக்கின்றார்
(D) சிரிக்கின்றாள்
(E) விடை தெரியவில்லை
- ‘கிளை‘ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) உறவினர்
(B) தாவர உறுப்பு
(C) வளர்
(D) பகைவர்
(E) விடை தெரியவில்லை
- சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தை தேர்ந்தெடு.
(A) வீரன், அண்ணன், மருதன் – ஆண் பால்
(B) வீரன் அண்ணன் மருதன் – ஆண்பால்
(C) வீரன் அண்ணன் மருதன் ஆண்பால்
(D) ‘வீரன்‘ அண்ணன், மருதன் – ஆண்பால்.
(E) விடை தெரியவில்லை
- சரியான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தேர்க.
(A) சிகாமணியின் தந்தை “பண்டுக்கிழவர்.
(B) சிகாமணியின் தந்தை, பண்டுக்கிழவர்.
(C) சிகாமணியின், தந்தை பண்டுக்கிழவர்.
(D) சிகாமணியின்! தந்தை பண்டுக்கிழவர்.
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப்பெயரின் மரூஉவை எழுது.
மன்னார்குடி
(A) மதுரை
(B) மன்னை
(C) மானாமதுரை
(D) கோவை
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
கும்பகோணம்
(A) குடுமியான் மலை
(B) கூடம்குளம்
(C) குடந்தை
(D) கும்பை
(E) விடை தெரியவில்லை
- பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.
‘அலர்ஜி‘ என்பதன் தமிழ்ச் சொல்
(A) உண்ணாமை
(B) ஒவ்வாமை
(C) படை, சொரி
(D) சிரங்கு
(E) விடை தெரியவில்லை
- எனக்கு எழுதித் தருகிறாயா? என்ற வினாவிற்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது
(A) மறை விடை
(B) உறுவது கூறல்
(C) வினா எதிர் வினாதல் விடை
(D) உற்றது உரைத்தல் விடை
(E) விடை தெரியவில்லை
- விடை வகையை கண்டறிக.
‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்கு ‘போவேன்‘ என்று கூறுவது
(A) ஏவல் விடை
(B) சுட்டு விடை
(C) உறுவது கூறல் விடை
(D) நேர் விடை
(E) விடை தெரியவில்லை
- ‘உனக்குக் கதை எழுதத் தெரியுமா?’ என்ற வினாவிற்குக் ‘கட்டுரை எழுதத் தெரியும்‘ என்று கூறுவது எவ்வகை விடை?
(A) உற்றது உரைத்தல் விடை
(B) உறுவது கூறல் விடை
(C) ஏவல் விடை
(D) இனமொழி விடை
(E) விடை தெரியவில்லை
- ‘எலியும் பூனையும் போல‘ உவமை கூறும் பொருளை எழுதுக
(A) பகைமை
(B) ஒற்றுமை
(C) நட்பு
(D) வேற்றுமை
(E) விடை தெரியவில்லை
42.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்.
மழைமுகம் காணாப் பயிர் போல
(A) மழை பொழியாத நிலை
(B) மழையின் முகம் பயிரின் வருத்தம்
(C) நீண்ட நாள் காணாமல் ஏங்குவது
(D) வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த நிலை
(E) விடை தெரியவில்லை
43.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் – தன் வினை, பிற வினை, செய் வினை, செயப்பாட்டு வினை.
செய் வினையைத் தேர்ந்தெடு
(A) கண்ணன் நேற்று வந்தான்
(B) இது நாற்காலி
(C) குமரன் மழையில் நனைந்தான்
(D) கவிதா உரை படித்தாள்
(E) விடை தெரியவில்லை
- செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
(A) தோசை வைத்தார்
(B) தோசை வைத்தான்
(C) தோசை வைக்கப்பட்டது
(D) தோசை வைத்தல்
(E) விடை தெரியவில்லை
- இருவினைகளின் பொருளை வேறுபடுத்துக. ‘
பணிந்து– பணித்து – இரு வினைகளின் பொருள் வேறுபாடு உணர்த்தும் தொடரைத் தேர்க.
(A) பெரியோர்களிடம் பணிந்து நடக்க வேண்டும் என்று ஆசிரியர் பணித்தார்
(B) இறைவனிடம் பணியாதவர்கள் பணித்தனர்
(C) பணியாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்
(D) பணிந்தால் படிப்பறிவு வளரும்
(E) விடை தெரியவில்லை
- இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
மாறு, மாற்று
(A) மாறுபாடு அறிந்து மாற்று
(B) மனிதராக மாறு, மற்றவரையும் மாற்று
(C) மாறுபாடு அற்ற சமூகமாக மாறு
(D) மனிதராக மாரு சமூகத்தை மாற்று
(E) விடை தெரியவில்லை
- இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
சேர்ந்து – சேர்த்து
(A) மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர் ஆசிரியர் சேர்ந்து வைத்தார்.
(B) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டதால் ஆசிரியர் சேர்த்து வைத்தார்
(C) ஆசிரியர் சேர்ந்து வைத்தார் மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர்
(D) மாணவர்கள் சேர்த்தார்களா? ஆசிரியர் சேர்ந்து வைத்தார்
(E) விடை தெரியவில்லை
பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு:
நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கியவர். நரி கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. ‘கப்பலுக்குப் போன மச்சான்‘ என்னும் நாவலையும் படைத்துள்ளார். இவரது இயற்பெயர் முகம்மதுரஃபி.
- நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?
(A) முகம்மதுரஃபி
(B) முகம்மதுரூமி
(C) மகம்மதுரஃபி
(D) நாகூர் முகம்மது
(E) விடை தெரியவில்லை
- நாகூர்ரூமி எந்த மாவட்டத்தில் பிறந்தவர்?
(A) நாகூர்
(B) தஞ்சாவூர்
(C) நாகை
(D) மயிலை
(E) விடை தெரியவில்லை
- நாகூர்ரூமி முதன்முதலாக எந்த இதழில் எழுத ஆரம்பித்தார்?
(A) நரியின் கால்கள்
(B) ஏழாவது சுவை
(C) சொல்லாத சொல்
(D) கணையாழி
(E) விடை தெரியவில்லை
- நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள் எத்தனை வெளியாகியுள்ளன?
(A) இரண்டு
(B) ஒன்று
(C) மூன்று
(D) நான்கு
(E) விடை தெரியவில்லை
52.நாகூர்ரூமி எழுதிய நாவலின் பெயர் யாது?
(A) கணையாழி
(B) கப்பலுக்கு போன மச்சான்
(C) ஏழாவது சுவை
(D) புதிய பார்வை
(E) விடை தெரியவில்லை
- ஒரு–ஓர் பயன்பாடு சரியாக உள்ள தொடரைத் தேர்க.
(A) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(B) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
(C) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
(D) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(E) விடை தெரியவில்லை
- பிழை திருத்துக (ஒரு – ஓர்)
பின்வருவனவற்றுள் பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) சென்னை ஒரு மாநகரம்
(B) சென்னைக்கு ஓர் மாணவன் வந்தான்
(C) வந்தாரை வாழ வைக்கும் ஓர் நகரம் சென்னை
(D) சென்னை தொழில் நுட்பப் பூங்காக்கள் நிறைந்த ஓர் நகரம்
(E) விடை தெரியவில்லை
- சொல் – பொருள் – பொருத்துக.
(a) பொக்கிஷம் 1. அழகு
(b) சாஸ்தி 2. செல்வம்
(c) விஸ்தாரம் 3.மிகுதி
(d) சிங்காரம் 4. பெரும் பரப்பு
(A) 2 3 4 1
(B) 1 3 2 4
(C) 1 2 3 4
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
- ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?
(A) மேகங்கள் சூழ்ந்து கொண்டன
(B) மேகம் சூழ்ந்து கொண்டன
(C) மேகம் சூழ்ந்து கொண்டனர்
(D) மேகங்கள் சூழ்ந்துள்ளது
(E) விடை தெரியவில்லை
- ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) இது பழம் அல்ல
(B) இது பழம் அன்று
(C) இது பழங்கள் அல்ல
(D) இது பழங்கள் அன்று
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டச் சொல்லின் கூட்டுப்பெயரினை எழுது.
வாழைமரம்
(A) வாழைத் தோப்பு
(B) வாழைக்கன்று
(C) வாழைத் தோட்டம்
(D) வாழையிலை
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
(a) விளைவுக்கு 1. பால்
(b) அறிவுக்கு 2. வேல்
(c) இளமைக்கு 3. நீர்
(d) புலவர்க்கு 4. தோள்
(A) 1 2 3 4
(B) 3 4 1 2
(C) 1 3 2 4
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்.
– என்பதன் தமிழ் எண்
(A) ச
(B) க
(C) ரு
(D) அ
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு
பிறருக்கு கொடுத்தலே செல்வத்தின் பயன் _____ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
(A) அதுபோல
(B) மேலும்
(C) ஏனெனில்
(D) அதனால்
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச்சொல்
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
(A) அதனால்
(B) அதுபோல
(C) எனவே
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச்சொல்
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.
(A) ஏனெனில்
(B) ஆகையால்
(C) அதனால்
(D) அதுபோல
(E) விடை தெரியவில்லை
- சரியான வினாச்சொல் அமைந்த தொடரைத் தேர்க.
(A) இனஎழுத்துகள் என்றால் எப்போது?
(B) இனஎழுத்துகள் என்றால் யார்?
(C) இனஎழுத்துகள் என்றால் ஏன்?
(D) இனஎழுத்துகள் என்றால் என்ன?
(E) விடை தெரியவில்லை
- பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.
(A) பேப்பரப் படித்துக்கொண்டு இரு
(B) செய்தித்தாளை படித்துக்கொண்டு இரு
(C) காகிதத்தை படிச்சிக்கிட்டு இரு
(D) காகிதத்தை படிச்சிட்டு இரு
(E) விடை தெரியவில்லை
- பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
‘வவுத்து வலி‘
(A) வருத்து வலி
(B) வயற்று வலி
(C) வயிற்று வலி
(D) வவுறு வலி
(E) விடை தெரியவில்லை
- இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
நீதிமன்றத்தில் தொடுப்பது ____
‘நீச்சத் தண்ணி குடி‘ என்பது பேச்சு ____
(A) சொல்
(B) வலக்கு
(C) விளக்கு
(D) வழக்கு
(E) விடை தெரியவில்லை
- இரு பொருள் தருக.
தாரணி‘
(A) பூமி, உலகம்
(B) சூரியன், உலகம்
(C) கதிரவன், மதி
(D) கடல்,பூமி
(E) விடை தெரியவில்லை
- கலைச் சொல் அறிக.
Journalism
(A) கணினியியல்
(B) மொழியியல்
(C) ஒலியியல்
(D) இதழியல்
(E) விடை தெரியவில்லை
- கலைச் சொற்களை அறிதல்
Herbs
(A) நோய்
(B) மூலிகை
(C) மரபணு
(D) ஒவ்வாமை
(E) விடை தெரியவில்லை
- கலைச்சொல் தருக.
Conical stone
(A) கல்
(B) நடுகல்
(C) கல்வெட்டு
(D) குமிழிக்கல்
(E) விடை தெரியவில்லை
- கலைச்சொல் அறிக.
Consonant
(A) உயிரெழுத்து
(B) மெய்யெழுத்து
(C) ஒப்பெழுத்து
(D) ஆய்த எழுத்து
(E) விடை தெரியவில்லை
- நடத்தல் – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.
(A) நடந்த
(B) நடந்து
(C) நட
(D) நடந்தவர்
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க :
கேட்டனன்
(A) கேல்
(B) கேட்க
(C) கேட்ட
(D) கேள்
(E) விடை தெரியவில்லை
75.ஓடியவர் – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.
(A) ஓடிய
(B) ஓடு
(C) ஓடி
(D) ஓடினான்
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் : தந்தான்
(A) தந்து
(B) தா
(C) தந்த
(D) தருகின்றான்
(E) விடை தெரியவில்லை
- மரம்,விலங்கு, பெரிய, அழகு, வண்டு எனப் பொருள் தரும் சொல்லை எழுதுக.
(A) தா
(B) மா
(C) தீ
(D) பூ
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
Volunteer
(A) தன்னார்வலர்
(B) தொகுப்பாளர்
(C) தலைவர்
(D) தொண்டர்
(E) விடை தெரியவில்லை
- பொருத்துக.
(a) பள்ளத்தாக்கு 1. Plain
(b) புதர் 2. Tribes
(c) சமவெளி 3.Valley
(d) பழங்குடியினர் 4. Thicket
(A) 3 4 1 2
(B) 4 1 2 3
(C) 3 2 1 4
(D) 1 2 4 3
(E) விடை தெரியவில்லை
- மரபுப்பிழையற்ற தொடரைத் தேர்க.
(A) கோழி கொக்கரிக்கும்
(B) கோழி கத்தும்
(C) கோழி அகவும்
(D) கோழி கூவும்
(E) விடை தெரியவில்லை
- மரபுப் பிழைகளை நீக்கிச் சரியானதைத் தேர்க.
கொடியிலுள்ள மலரை எடுத்து வா
(A) பறித்து
(B) கொய்து
(C) தொடுத்து
(D) எடுத்து
(E) விடை தெரியவில்லை
- ‘எளிது‘ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
(A) அரிது
(B) சிறிது
(C) பெரிது
(D) வறிது
(E) விடை தெரியவில்லை
- பிரித்தெழுதுக:
தானென்று
(A) தானெ + என்று
(B) தான் + என்று
(C) தா + னென்று
(D) தான் + னென்று
(E) விடை தெரியவில்லை
- நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) நன்றி + யறிதல்
(B) நன்றி + அறிதல்
(C) நன்று + அறிதல்
(D) நன்று + யறிதல்
(E) விடை தெரியவில்லை
- ‘மின்னணு‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) மின் + அணு
(B) மின் + னணு
(C) மின்ன + அணு
(D) மின்னல் + அணு
(E) விடை தெரியவில்லை
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்.
(A) போக்குதல்
(B) தள்ளுதல்
(C) அழித்தல்
(D) சேர்த்தல்
(E) விடை தெரியவில்லை
- திருநெல்வேலி என்பதன் மரூஉ
(A) நெல்வேலி
(B) மல்லை
(C) தில்லை
(D) நெல்லை
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக. “
திருச்சிராப்பள்ளி
(A) குடந்தை
(B) நெல்லை
(C) மயிலை
(D) திருச்சி
(E) விடை தெரியவில்லை
- பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
வாடகை
(A) வருமானம்
(B) குடிக்கூலி
(C) செலவு
(D) சிக்கனம்
(E) விடை தெரியவில்லை
- பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
‘LUTE MUSIC”
(A) வீணை இசை
(B) நாத ஓசை
(C) யாழிசை
(D) குழலிசை
(E) விடை தெரியவில்லை
- அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்.
Compact Disk – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) மின்னஞ்சல்
(B) குறுந்தகடு
(C) மென்பொருள்
(D) மின்நூல்
(E) விடை தெரியவில்லை
- கலைச்சொல் தேர்ந்தெழுதுதல்.
Video Conference
(A) கூட்டம்
(B) வழிபாட்டுக் கூட்டம்
(C) காணொலிக் கூட்டம்
(D) பதிவிறக்கம்
(E) விடை தெரியவில்லை
- அலுவல் சார்ந்த சொல் (கலைச்சொல்)
Discipline
(A) அடக்கம்
(B) ஒழுக்கம்
(C) பணிவு
(D) பொறுமை
(E) விடை தெரியவில்லை
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“கண்ணினைக் காக்கும் இமை போல“
(A) உடனிருத்தல்
(B) பேணல்
(C) தவித்தல்
(D) வாட்டுதல்
(E) விடை தெரியவில்லை
95.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்
(A) சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
(B) இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்
(C) சிலப்பதிகாரம் இயற்றியவர் என்னும் காப்பியத்தை இளங்கோவடிகள்
(D) காப்பியத்தை சிலப்பதிகாரம் என்னும் இளங்கோவடிகள் இயற்றியவர்
(E) விடை தெரியவில்லை
- ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக. (சரியானதை தேர்ந்தெடு
விரிந்தது – விரித்தது
(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில் தோகையை விரிந்தன.
(B) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரிந்தன.
(D) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது: மயில் தோகையை விரித்தது.
(E) விடை தெரியவில்லை
- அகரவரிசைப்படுத்துக.
நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்
(A) தோட்டம், நட்பு, மகிழ்ச்சி, வீடு, விளையாட்டு, அன்பு, பள்ளி
(B) அன்பு, தோட்டம், நட்பு, பள்ளி, மகிழ்ச்சி, விளையாட்டு, வீடு
(C) நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்
(D) நட்பு, வீடு, மகிழ்ச்சி, விளையாட்டு, தோட்டம், பள்ளி, அன்பு
(E) விடை தெரியவில்லை
- எவ்வளவு உயரமான மரம்! – இது எவ்வகைத் தொடர் என கண்டறிக.
(A) வினாத் தொடர்
(B) கட்டளைத் தொடர்
(C) செய்தித் தொடர்‘
(D) உணர்ச்சித் தொடர்
(E) விடை தெரியவில்லை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
கியூரி அம்மையார் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.
(A) கியூரி அம்மையார் பிறந்த ஊர் எது?
(B) கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
(C) கியூரி அம்மையார் எங்கு வாழ்ந்தார்?
(D) கியூரி அம்மையார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
(E) விடை தெரியவில்லை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.
(A) உலகப் பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறளா?
(B) எந்த நூல் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது?
(C) போற்றப்படும் உலகப் பொதுமறை நூல் எது?
(D) நூல் போற்றப்படுகிறது உலகப் பொதுமறை என்று ?
(E) விடை தெரியவில்லை
ANSWERS:
- (B) ஓர் ஊஞ்சல் ஆடுகிறது
- (D) 2 1 4 3
- (D) நா – கொடு
- (C) உடன்பாட்டு வினைத் தொடர்
- (B) செய்தித் தொடர்
- (A) மக்கள் கூட்டம்
- (A) குலை
- (A) தங்கும் – தயங்கும்
- (B) பொய்யழுகை
- (B) _____ ஏழாம் வகுப்பு மாணவர்கள்
- (A) ஏனெனில்
- (C) எத்தனை
- (B) கண்டான்
- (A) ஆழ் கடல்
- (D) 2 1 4 3
- (B) விட்டுவிடுதல் – தங்குமிடம்
- (A) சிற்பம் – புடவை
- (D) இலை – மலர் வகை
- (D) கூற்றும் காரணம் 1, 3ம் சரி 2 மட்டும் தவறு
- (B) கவை, கிளை, குச்சு, கொப்பு, கொம்பு
- (D) வந்து
- (B) நடித்தல்
- (C) உணர்ந்தோர்
- (D) நீர்நிலை – மேலே சென்று
- (C) தாமரை – மறைத்தல்
- (B) வாள், வால்
- (B) நம்பிக்கை
- (C) தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்
- (C) விரிமலர்
- (C) இலங்கை
- (B) நடித்தார்
- (D) பகைவர்
- (A) வீரன், அண்ணன், மருதன் – ஆண் பால்
- (B) சிகாமணியின் தந்தை, பண்டுக்கிழவர்.
- (B) மன்னை
- (C) குடந்தை
- (B)ஒவ்வாமை
- (C)வினா எதிர் வினாதல் விடை
- (D) நேர் விடை
- (D) இனமொழி விடை
- (A) பகைமை
- (C) நீண்ட நாள் காணாமல் ஏங்குவது
- (D) கவிதா உரை படித்தாள்
- (C) தோசை வைக்கப்பட்டது
- (A) பெரியோர்களிடம் பணிந்து நடக்க வேண்டும் என்று ஆசிரியர் பணித்தார்
- (B) மனிதராக மாறு, மற்றவரையும் மாற்று
- (B) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டதால் ஆசிரியர் சேர்த்து வைத்தார்
- (A) முகம்மதுரஃபி
- (B) தஞ்சாவூர்
- (D) கணையாழி
- (C) மூன்று
- (B) கப்பலுக்கு போன மச்சான்
- (A) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
- (A) சென்னை ஒரு மாநகரம்
- (A) 2 3 4 1
- (A) மேகங்கள் சூழ்ந்து கொண்டன
- (B) இது பழம் அன்று
- (C) வாழைத் தோட்டம்
- (B) 3 4 1 2
- (C) ரு
- (D) அதனால்
- (A) அதனால்
- (A) ஏனெனில்
- (D) இனஎழுத்துகள் என்றால் என்ன?
- (B) செய்தித்தாளை படித்துக்கொண்டு இரு
- (C) வயிற்று வலி
- (D) வழக்கு
- (A) பூமி, உலகம்
- (D) இதழியல்
- (B) மூலிகை
- (D) குமிழிக்கல்
- (B) மெய்யெழுத்து
- (C) நட
- (D) கேள்
- (B) ஓடு
- (B) தா
- (B) மா
- (A) தன்னார்வலர்
- (A) 3 4 1 2
- (A) கோழி கொக்கரிக்கும்
- (B) கொய்து
- (A) அரிது
- (B) தான் + என்று
- (B) நன்றி + அறிதல்
- (A) மின் + அணு
- (D) சேர்த்தல்
- (D)நெல்லை
- (D) திருச்சி
- (B) குடிக்கூலி
- (C) யாழிசை
- (B) குறுந்தகடு
- (C) காணொலிக் கூட்டம்
- (B) ஒழுக்கம்
- (B) பேணல்
- (A) சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
- (B) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
- (B) அன்பு, தோட்டம், நட்பு, பள்ளி, மகிழ்ச்சி, விளையாட்டு, வீடு
- (D) உணர்ச்சித் தொடர்
- (B) கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- (B) எந்த நூல் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது?