Course Content
8TH STD – வானிலை மற்றும் காலநிலை
0/2
10TH STD – இந்தியா- காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்
0/2
WA – WEATHER AND CLIMATE – 03
About Lesson

8 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் கல்வி
அலகு 2 – புவியியல்

வானிலை மற்றும் காலநிலை

அறிமுகம்
1. புவியின் இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று எது ?
விடை : காலநிலை

 

 

 

2. புவியின் காலநிலையால் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை எவை ?
விடை : நிலத்தோற்றம், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

 

 

வானிலை (Weather)
3. புவியின் வானிலை என்பது ?
விடை: ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின்திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும்.

 

 

 

4. குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வைக் குறிப்பது எது ?
விடை : வானிலை

 

 

5. புவியின் வானிலை எப்படி மாறக்கூடியது?
விடை: நேரத்திற்கு நேரம், காலத்திற்கு காலம் ஒரு வருடத்திற்குள்ளாகவே மாறக்கூடியது.

 

 

 

6. காலையில் புவியின் வானிலை எப்படி காட்சியளிக்கும்?
விடை: தெளிவான வானத்துடன் வெப்பமாக இருக்கும்.

 

 

 

7. மாலை நேரத்தில் புவியின் வானிலை எப்படி காட்சியளிக்கும்?
விடை: மேகமூட்டத்துடன் கூடிய மழையாக காட்சியளிக்கும்.

 

 

 

8. புவியின் குளிர்காலத்தில் குளிராகவும், கோடைக்காலத்தில் வெப்பமாகவும் இருப்பது எது?
விடை: வானிலை

 

 

 

காலநிலை (Climate)
9. புவியின் ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பது எது?
விடை: காலநிலை

 

 

 

10. புவியின் காலநிலை எப்படி கணக்கிடப்படுகிறது?
விடை: வளிமண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.

 

 

 

11. காலநிலையின் கூறுகளும் மற்றும் வானிலையின் கூறுகளும் எப்படி இருக்கும்?
விடை: ஒன்றாக இருக்கும்.

 

 

 

12. புவியின் வளிமண்டலத்தில் அடிக்கடி மாறாமல் இருப்பது எது?
விடை: காலநிலை அடிக்கடி மாறக்கூடியது அல்ல.

 

 

 

வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள்
13. புவியின் வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள் எவை?
விடை : சூரியக்கதிர்களின் படுகோணம், சூரிய ஒளிப்படும் நேரம், உயரம், நிலம் மற்றும் நீர் பரவல், அமைவிடம், மலைத்தொடர்களின் திசை அமைவு, காற்றழுத்தம், காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவை ஓரிடத்தின் / பகுதியின் / பிரதேசத்தின் காலநிலையையும், வானிலையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

 

 

 

14. புவியின் வடிவம்?
விடை: கோள வடிவமானது.

 

 

 

15. புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?
விடை : புவியின் கோள வடிவம் காரணமாகும்.

 

 

 

16. புவியின் துருவப் பகுதிகள் சூரியக் கதிர்களை எவ்வாறு பெறுகின்றன ?
விடை: சாய்வாக பெறுகின்றன.

 

 

 

17. புவியில் மிகக் கடும் குளிர் நிலவும் பகுதி எது ?
விடை: துருவப் பகுதி

 

 

 

18. புவியில் துருவப் பகுதியில் மிகக் கடும் குளிர் நிலவ காரணம்?
விடை: துருவப் பகுதியில் சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் துருவப் பகுதியில் மிகக் கடும் குளிர் நிலவுகிறது.

 

 

 

19. புவியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகள் சூரியக்கதிர்களை எவ்வாறு பெறுகின்றன ?
விடை: செங்குத்தாக பெறுகின்றன.

 

 

 

20. புவியில் காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ள பகுதி எது?
விடை: பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது.

 

 

 

21. புவியின் நீரோட்டத்திற்கும், காற்றோட்டத்திற்கும் காரணமாக இருப்பது எது ?
விடை: வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

 

 

22. புவியின் வெப்பக்காற்று வளிமண்டலத்தில் மேல் நோக்கிச் செல்வதால் அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் எவ்வாறு உள்ளது ?
விடை: குறைவாக உள்ளது.

 

 

 

23. குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுவதற்கான காரணம்?
விடை: காற்றின் அழுத்தம் குறைவாக உள்ளதால் குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுகின்றது.

 

 

 

வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக்கூறுகள்
24. புவியின் வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக்கூறுகள் எவை ?
விடை : வெப்பநிலை, மழை வீழ்ச்சி, காற்றழுத்தம், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை வானிலை மற்றும் காலநிலையின் முக்கியக் கூறுகளாகும்.

 

 

 

வெப்ப நிலை (Temperature)
25. புவியின் வானிலை மற்றும் காலநிலையின் முக்கியமான கூறு எது ?
விடை: வெப்ப நிலை (Temperature)

 

 

 

26. புவியும் அதன் வளி மண்டலமும் எதனால் வெப்பம் அடைகின்றன ?
விடை: சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்பம் அடைகின்றன.

 

 

 

27. புவியின் காற்றில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பது எது?
விடை: வெப்பநிலை ஆகும்.

 

 

 

28. சூரிய கதிர்வீசலால் மட்டுமின்றி புவியின் வளிமண்டல நிறையையும் சிறிதளவு சார்ந்துள்ள வெப்பம் எது ?
விடை: காற்றில் உள்ள வெப்பம் ஆகும்.

 

 

 

29. புவியில் வெப்பம் எப்படி மாறுபடுகிறது ?
விடை : புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தைப் பொறுத்தும் புவி வெப்பகதிர்வீச்சலின் அளவை பொறுத்தும் வெப்பம் இடத்திற்கு இடம் மாறுப்படுகிறது.

 

 

 

30. புவியின் வெப்பம் இடத்திற்கே இடம் மாறுபடுவதற்கான காரணங்கள் யாவை ?
விடை: புவியின் இயக்கங்கள், தன்சுழற்சி, சூரியனை வலம் வருதல் மற்றும் புவி அச்சின் சாய்வுத் தன்மை ஆகியனவாகும்.

 

 

 

31. புவியின் வெப்பநிலை எவைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
விடை: ஈரப்பதத்தின் அளவு, ஆவியாதல், திரவமாதல், மழைப்பொழிவு ஆகியவற்றின் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

 

 

32. சூரிய கதிர்வீச்சுகளிலிருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் புவியை வந்தடையும் வழிமுறைகள் எத்தனை ?
விடை: மூன்று . (வெப்ப கதிர் வீச்சு, வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம்).

 

 

 

33. புவியின் வளிமண்டலம் எந்த கதிர்வீசலால் அதிக வெப்பம் அடைகிறது ?
விடை: சூரிய கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் தான் அதிக வெப்பம் அடைகிறது.

 

 

 

வெப்பப்பரவலை தீர்மானிக்கும் காரணிகள்
34. புவியின் வெப்பப்பரவலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் யாவை ?
விடை: அட்சரேகை, உயரம், நிலத்தின் தன்மை, கடல் நீரோட்டம், வீசும் காற்று, சரிவு, இருப்பிடம், கடலிலிருந்து தூரம், இயற்கைத் தாவரங்கள், மண் ஆகியவை வெப்பப்பரவலை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

 

 

 

வெப்பநிலையை அளவிடுதல்
35. புவியின் வெப்பநிலை என்பது எவ்வாறு அளவிடப்படுகிறது ?
விடை : ஒரு குறிப்பிட்ட கனஅளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது.

 

 

 

36. புவியின் வெப்பநிலையை அளவிடும் அளவுகள் எவை ?
விடை : செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும்.

 

 

 

37. வானிலை ஆய்வாளர்கள் புவியின் வெப்பநிலையை கணக்கிட பயன்படுத்தும் கருவிகள் யாவை ?
விடை : வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மற்றும் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.

 

 

 

38. சூரியக் கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது எதனால் இழக்கப்படுகிறது ?
விடை: வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.

 

 

 

39. வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் புவி அதிக வெப்பமடையும் நேரம் என்ன?
விடை: பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.

 

 

 

40. புவியில் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை எப்போது பதிவாகிறது?
விடை: பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது.

 

 

 

41. புவியில் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகும் நேரம் என்ன ?
விடை: அதிகாலை 4.00 மணிமுதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

 

 

வெப்பநிலை வீச்சு (Mean Temperature)
42. புவியின் ஓர் இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகப்பட்ச மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விடை: வெப்பநிலை வீச்சு [(87°F+73°F) /2= 80°F]

 

 

 

43. புவியின் தின வெப்பவியாப்தி என்றால் என்ன?
விடை: புவியின் ஒரு நாளில் அமையும் உச்ச வெப்பநிலைக்கும் மற்றும் நீசவெப்பநிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு தின வெப்பவியாப்தி எனப்படும்.

 

 

 

44. புவியில் தின வெப்ப வியாப்தியின் வேறு பெயர்?
விடை: தினசரி வெப்பநிலை வீச்சு

 

 

 

45. புவியின் ஆண்டு வெப்பவியாப்தி என்றால் என்ன ?
விடை: ஒரு ஆண்டின் அதிக வெப்பமான சராசரி மாதத்திற்கும் குறைந்த வெப்பமான சராசரி மாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு ஆண்டு வெப்பவியாப்தி என்று பெயர்.

 

 

 

46. புவியின் வெப்பநிலை பரவலை எந்தக் கோட்டின் மூலம் காணலாம்?
விடை: சமவெப்ப கோடுகள் மூலம் காணலாம்.

 

 

 

47. புவியின் சம அளவு வெப்பநிலைக் கொண்ட இடங்களை இணைத்து வரையப்படும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விடை : சமவெப்ப கோடுகள் என்று அழைக்கப்படுகிறது.

 

 

 

புவியின் வெப்ப மண்டலங்கள்
48. புவியின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலையைப் பெறுவதற்கு காரணமாக அமைவது?
விடை: புவியின் கோள வடிவமே காரணமாக அமைகிறது.

 

 

 

49. புவியின் கோள வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு புவி எத்தனை வெப்பமண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
விடை: மூன்று. அவை,
1. வெப்ப மண்டலம் (Torrid zone)
2. மித வெப்ப மண்டலம் (Temperate zone)
3. குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) (Frigid zone)

 

 

1. வெப்ப மண்டலம் (Torrid zone)
50. புவியில் வெப்பமண்டல பகுதி எங்கு அமைந்துள்ளது?
விடை: கடக ரேகைக்கும், மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

 

 

 

51. புவியில் வெப்பமண்டலம் அதிகபட்சமான வெப்பத்தைப் பெறுவதற்கான காரணம்?
விடை: வெப்பமண்டலம் சூரியனிடமிருந்து செங்குத்தான கதிர்களைப் பெறுவதால் அதிகபட்சமான வெப்பத்தைப் பெறுகிறது.

 

 

 

52. புவியில் வெப்பமண்டலத்தின் வேறு பெயர்?
விடை: அயனமண்டலம்

 

 

 

2. மித வெப்ப மண்டலம் (Temperate zone)

53. புவியில் மிதவெப்ப மண்டலம் வடஅரை கோளத்தில் எங்கு அமைந்துள்ளது?
விடை: கடகரேகைக்கும், ஆர்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது.

 

 

54. புவியில் மிதவெப்ப மண்டலம் தென் அரை கோளத்தில் எங்கு அமைந்துள்ளது?
விடை: மகரரேகைக்கும் அண்டார்டிக்கா வட்டத்திற்கும் இடைப்பட்டப் பகுதியாக அமைந்துள்ளது.

 

 

 

55. மித வெப்ப மண்டலத்தில் எப்படி புவியின் வெப்பநிலை குறைகிறது?
விடை: சூரியனின் சாய்வானக் கதிர்களைப் பெறுவதாலும் சூரிய கதிர்களின் படுகோணம் துருவத்தை நோக்கிச் செல்லச்செல்ல வெப்பநிலை குறைகிறது.

 

 

 

3. குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) (Frigid zone)
56. புவியில் குளிர் மண்டலம் (உறைப்பனி மண்டலம்) எங்கு அமைந்துள்ளது?
விடை: ஆர்ட்டிக் வட்டத்திற்கும், வடதுருவப்பகுதிக்கு இடையேயும், அண்டார்ட்டிக் வட்டத்திற்கும் தென்துருவப்பகுதிக்கு இடையேயும் அமைந்துள்ளது.

 

 

 

57. புவியில் குளிர் மண்டலம் ஏன் பனியால் சூழப்பட்டுள்ளது?
விடை: ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பத்தைப் பெறுவதால் குளிர் பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது.

 

 

 

58. புவியில் குளிர் மண்டலத்தின் வேறு பெயர்கள்?
விடை: உறைப்பனி மண்டலம் மற்றும் துருவ மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

 

 

 

மழைப்பொழிவு (Rain fall)

59. புவியில் மழை பொழிவு எப்படி ஏற்படுகிறது?
விடை: வளிமண்டல நீராவி நீர் சுருங்குதல் மூலம் பூரித நிலையை அடைந்து புவிஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி விழும் திரவ நீரே மழை பொழிவு எனப்படும்.

 

 

 

60. புவியின் நீர்சுழற்சியின் முக்கிய கூறு எது ?
விடை : மழை

 

 

 

61. மழைப்பொழிவு புவியில் எதை உருவாக்குகின்றது?
விடை: நன்னீரை உருவாக்குகின்றது.

 

 

 

62. புவியில் எல்லாவகையான நீருக்கும் முக்கியமான ஆதாரமாக விளங்குவது எது ?
விடை: மழைநீர்

 

 

 

63. புவியில் மழை பரவலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எது?
விடை: வெப்பநிலை

 

 

 

64. புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதி எவ்வளவு மழைப்பொழிவை பெறுகின்றன?
விடை : அதிகமாக மழைப்பொழிவை பெறுகின்றன.

 

 

 

65. புவியின் துருவப் பகுதி எவ்வளவு மழைப்பொழிவை பெறுகின்றன ?
விடை : குறைவாக மழைப்பொழிவை பெறுகின்றன.

 

 

 

66. புவியில் மழைப்பொழிவு எந்த கருவியால் அளவிடப்படுகிறது?
விடை: மழை மானியால் அளவிடப்படுகிறது.

 

 

 

காற்றின் அழுத்தம் (Air Pressure)
67. புவியின் வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன?
விடை: புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் எனப்படும்.

 

 

 

68. புவியின் வளிமண்டல அழுத்தத்தின் வேறு பெயர் ?
விடை: காற்றழுத்தம்

 

 

 

69. புவியில் காற்றின் அழுத்தம் எதனால் அளவிடப்படுகிறது?
விடை: காற்றழுத்த மானியால் அளவிடப்படுகிறது.

 

 

 

70. புவியின் கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு?
விடை : 1013.25 மில்லி பார் ஆகும்.

 

 

 

71. பூமியில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு ?
விடை : 1.03 கிலோ/ச.செ.மீ ஆகும்.

 

 

 

72. புவியில் நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் எப்படி காணப்படுகிறது?
விடை: கிடையாகவும் செங்குத்தாகவும் காணப்படுகிறது.

 

 

 

73. புவியில் நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் கிடையாகவும் செங்குத்தாகவும் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு காற்றின் அழுத்தத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை: இரண்டு. அவை
1. குறைந்த காற்றழுத்த மண்டலம்
2. அதிக காற்றழுத்த மண்டலம்

 

 

 

74. புவியில் குறைந்த காற்றழுத்தப் பகுதி என்பது?
விடை : வளி மண்டலப் பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் குறைவாக இருக்கும்.

 

 

 

75. புவியில் எந்த பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து காற்று வீசும் ?
விடை: குறைந்த காற்றழுத்தப் பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து காற்று வீசும்.

 

 

 

76. புவியில் அதிக காற்றழுத்தம் என்பது?
விடை : வளிமண்டலப் பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளைவிட அழுத்தம் அதிகமாக இருக்கும்.

 

 

 

77. புவியில் காற்று அதிக காற்றழுத்த பகுதியில் இருந்து எதை நோக்கி வீசுகிறது?
விடை: குறைந்த காற்றழுத்தம் பகுதியை நோக்கி வீசும்.

 

 

 

78. புவியின் வானிலை வரைப்படத்தில் குறைவான காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்து எதனால் குறிக்கப்படுகிறது?
விடை: ” L “

 

 

 

79. புவியின் வானிலை வரைப்படத்தில் அதிக காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்து எதனால் குறிக்கப்படுகிறது?
விடை: “H”

 

 

 

80. புவியின் குறைந்த அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் , சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

 

81. புவியின் அதிக அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: எதிர் சூறாவளி காற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.

 

 

 

82. புவியில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக்குவது?
விடை: மேக மூட்டத்தையும், காற்றையும், மழைப் பொழிவையும் உருவாக்குகிறது.

 

 

 

83. புவியில் அதிக அழுத்த மண்டலம் தருவது?
விடை: அமைதியான வானிலையைத் தருகிறது.

 

 

 

84. புவியில் சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலை காணப் பயன்படுவது எது?
விடை: சமஅழுத்தக்கோடு (ஐசோபார்)

 

 

 

85. புவியில் மனிதர்கள் எந்த காற்றழுத்த வேறுபாட்டால் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை?
விடை: சிறிய அளவு காற்றழுத்த வேறுபாட்டால் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை.

 

 

 

86. புவியில் சிறிய காற்றழுத்த வேறுபாடு மிகப்பெரிய அளவில் உள்ள போது எதனை தீர்மானிக்கிறது ?
விடை: புவியின் காற்றமைப்பையும், புயல் காற்றையும் தீர்மானிக்கிறது.

 

 

 

87. புவியின் வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் எவை ?
விடை: உயரம், வளிமண்டல வெப்பநிலை, காற்று சுழற்சி, பூமியின் தன்சுழற்சி, நீராவி மற்றும் வளிமண்டலப் புயல்கள் போன்றவையாகும்.

 

 

 

காற்றழுத்தத்தை அளவிடுதல்
88. புவியில் வானிலை ஆய்வாளர்கள் காற்றழுத்தத்தை எந்த கருவி மூலம் அளக்கின்றனர்?
விடை : காற்றழுத்தமானி அல்லது அனிராய்டு காற்றழுத்தமானி மூலம் அளக்கின்றனர்.

 

 

 

89. புவியில் வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாகப் பதிவு செய்ய பயன்படுத்தப்படுவது ?
விடை: காற்றழுத்தப் பதிவுத்தாள் (Barograms) பயன்படுகிறது.

 

 

 

90. புவியில் ஈரப்பதம் என்றால் என்ன?
விடை: ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் என அழைக்கப்படுகிறது.

 

 

 

91. ஈரப்பதம் புவியில் வளிமண்டலத்தின் தொகுதியில் எத்தனை சதவீதம் இருக்கும் ?
விடை: 0 – 5% வரை இருக்கும்.

 

 

 

92. புவியில் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது எது ?
விடை: ஈரப்பதம்

 

 

 

93. புவியின் வளிமண்டலத்தில் ஈரப்பத்தின் அளவு எந்த அளவை பொறுத்து அமைகிறது ?
விடை: வெப்பநிலையின் அளவை பொறுத்து அமைகிறது.

 

 

 

94. புவியில் ஈரப்பதத்தின் அளவு எப்போது குறைகிறது ?
விடை : நிலநடுக்கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லும்போது குறைகிறது.

 

 

 

95. புவியின் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடும் முறைகள் எவை ?
விடை:
 சுய ஈரப்பதம் (Specific Humidity)
 உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity)
 ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity)

 

 

 

96. புவியில் சுய ஈரப்பதம் (Specific Humidity) என்றால் என்ன ?
விடை: ஒரு குறிப்பிட்ட எடைக்கொண்ட காற்றிழுள்ள நீராவியின் எடை சுய ஈரப்பதம் எனப்படும்.

 

 

 

97. புவியில் சுய ஈரப்பதம் எப்படி குறித்து காட்டப்படுகிறது ?
விடை: கிராம் நீராவி / கிலோகிராம் காற்று

 

 

 

98. புவியில் உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity) என்றால் என்ன?
விடை: ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் உள்ள நீராவியின் எடைக்கு உண்மையான ஈரப்பதம் என்று பெயர்.

 

 

 

99. புவியில் உண்மையான ஈரப்பதம் எதை குறித்து காட்டப்படுகிறது ?
விடை: உண்மையான ஈரப்பதம் ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கிராம் நீராவி உள்ளது எனக் குறித்துக் காட்டப்படுகிறது.

 

 

 

100. புவியில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) என்றால் என்ன ?
விடை: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கும், அதேசமயம் அக்காற்றில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கும் உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும்.

 

Join the conversation