Course Content
8TH STD – வானிலை மற்றும் காலநிலை
178 Q+ BOOK BACK
0/2
10TH STD – இந்தியா- காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்
0/2
WEATHER AND CLIMATE – 03
About Lesson
PART – 2
 
101. இந்தியாவில் கேரளா, ஆந்திரா தமிழ்நாடு மற்றும் தென் கர்நாடகாவின் உட்பகுதிகள்  மொத்த மழைப்பொழிவில் சுமார் எத்தனை சதவீதத்தைப் பெறுகின்றன?
 விடை: 35%
 
 
 
 
 
102.  வங்கக்கடலில் உருவாகும் புயலால் மழையை பெறும் இந்தியப் பகுதிகள்?
விடை: தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன .
 
 
 
 
 
103. இந்தியாவின் கடற்கரைப் பிரதேசங்களில் கனமழையுடன் கூடிய பலத்த புயல் காற்று ஏற்படுத்துவது?
விடை: பெரும் உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. 
 
 
 
 
 
104. இந்தியாவில் வடகிழக்கு பருவக்காற்றில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை எப்படி மாறுகிறது? 
விடை : பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.
 
 
 
 
 
2.3 மழைப் பரவல்
 
105. இந்தியாவில் ஆண்டு சராசரி மழையளவு?
விடை : 118 செ.மீ
 
106. இந்தியாவில் ஆண்டு சராசரி மழையளவு 118 செ.மீ இருப்பினும் நாட்டில் சீரற்று காணப்படுவது?
விடை: மழைவீழ்ச்சியின் பரவல் சீரற்று காணப்படுகிறது.
 
 
 
 
 
107. 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவை பெறுகின்ற இந்திய பகுதிகள் எவை? 
விடை: மேற்கு கடற்கரை, அசாம், மேகாலயாவின் தென்பகுதி, திரிபுரா, நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.
 
 
 
 
 
108. இந்தியாவில் 100 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறுகின்ற பகுதிகள் எவை?
விடை : இராஜஸ்தான் மாநிலம் முழுவதும், பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள், மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதி மற்றும் தக்காணப் பீடபூமி பகுதி மற்றும் தமிழக கடற்கரையின் ஒரு குறுகியப்பகுதி போன்றவை 100 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறுகின்றன.
 
 
 
 
 
109. இந்தியாவின் 100 முதல் 200 செ.மீ வரையிலான மழைப்பொழிவைப் பெறுகின்ற பகுதிகள் எவை? 
விடை: இந்தியாவின் மற்ற பகுதிகள்
 
 
 
 
 
2.4 இயற்கைத் தாவரங்கள்
 
110. இயற்கைத் தாவரம் என்பது எதை குறிக்கிறது?
விடை : நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது. 
 
 
 
 
 
111. இயற்கைத் தாவரங்கள் எந்த சூழலில் காணப்படுகின்றன?
விடை: இயற்கையான சூழலில் காணப்படுகின்றன. 
 
 
 
 
 
112. இயற்கைத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை: ஒரு பகுதியில் இயல்பாகவே நீண்ட காலமாக மனிதர்களின் தலையீடு இன்றி இயற்கையாக வளரும் மரங்கள், புதர்கள், செடிகள், கொடிகள் போன்ற அனைத்து தாவர உயிரினங்களையும் இயற்கைத் தாவரங்கள் என்கிறோம்.
 
 
 
 
 
113. இயற்கைத் தாவரங்களின் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துபவை?
விடை: காலநிலை, மண் வகைகள், மழைப்பொழிவு மற்றும் நிலத்தோற்றங்கள் ஆகியவை இயற்கைத் தாவரங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. 
 
 
 
 
 
114. காலநிலை, மண் வகைகள், மழைப்பொழிவு மற்றும் நிலத்தோற்றங்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்தியாவின் இயற்கைத் தாவரங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
 விடை: 
 அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்
 அயன மண்டல இலையுதிர்க் காடுகள்
 அயன மண்டல வறண்டக் காடுகள்
 இமயமலைக் காடுகள் 
 அல்பைன் காடுகள் 
 மாங்குரோவ் காடுகள்
 
 
 
 
 
அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்
 
115. இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறா காடுகளின் ஆண்டு மழை பொழிவு? 
விடை: 200 செ.மீட்டருக்கு அதிகமாக இருக்கும். 
 
 
 
 
 
116. இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறா காடுகளின் ஆண்டு வெப்பநிலை? 
விடை: 22°Cக்கு அதிகமாக இருக்கும். 
 
 
 
 
 
117. இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறா காடுகளின் சராசரி ஆண்டு ஈரப்பதம்?
விடை: 70 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்.
 
 
 
 
 
118. இந்தியாவில் அயன மண்டல பசுமை  மாறாக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?
விடை : மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில்  அயன மண்டல பசுமை மாறாக்காடுகள் காணப்படுகின்றன.
 
 
 
 
 
119. இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக்காடுகளில்  காணப்படும் மரங்கள் எவை? 
விடை: இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள்  
 
 
 
 
 
120. இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக்காடுகளில் உள்ள மரங்கள் வியாபார ரீதியாக பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை ஏன்? 
விடை: போக்குவரத்து வசதியின்மை காரணமாக
 
 
 
 
 
அயன மண்டல இலையுதிர்க் காடுகள் 
 
121. இந்தியாவில் அயன மண்டல இலையுதிர்க் காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு?
 விடை : சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. 
 
 
 
 
 
122. இந்தியாவில் அயன மண்டல இலையுதிர்க் காடுகளின் வேறு பெயர்? 
விடை :பருவக்காலக்காடுகள் என்றும் அழைக்கலாம்.
 
 
 
 
 
123. இந்தியாவில் அயன மண்டல இலையுதிர் காடுகளில் ஆண்டு சராசரி வெப்பநிலை?
 விடை : 27°C
 
 
 
 
 
124. இந்தியாவில் அயன மண்டல இலையுதிர் காடுகளில் சராசரி ஒப்பு ஈரப்பதம்?
விடை:  60 முதல் 70 சதவீதமாகவும் உள்ளது.
 
 
 
 
 
125.  இந்தியாவில் அயன மண்டல இலையுதிர்க் காடுகளில் உள்ள மரங்கள் வறட்சியின் காரணமாக இலைகளை  எந்த  காலத்தில் உதிர்த்து விடுகின்றன?
விடை: வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகள் உதிர்ந்து விடுகின்றன.
 
 
 
 
 
126.  அயன மண்டல இலையுதிர் காடுகள் இந்தியாவில் எங்கு காணப்படுகிறது?
விடை: இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள், வட சமவெளிகள், பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய இந்தியா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தென் இந்தியா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் அயன மண்டல இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன.
 
 
 
 
 
 
127.  இந்தியாவில் அயன மண்டல இலையுதிர் காடுகளில் மிக முக்கியமான மரங்கள் எவை? 
விடை: தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும். 
 
 
 
 
 
128. இந்தியாவில் அயன மண்டல இலையுதிர் காடுகளில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் எவை?
விடை: தேக்கு மற்றும் சால் தவிர சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் ஆகியவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாகும். 
 
 
 
 
 
129. இந்தியாவில் அயன மண்டல இலையுதிர் காடுகள் அளிப்பவை? 
விடை : நறுமண திரவியங்கள், வார்னீஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.
 
 
 
 
 
அயனமண்டல வறண்டக் காடுகள்
130. இந்தியாவில் அயனமண்டல வறண்ட காடுகளின் ஆண்டு மழைப்பொழிவு?
விடை:  50 செ.மீ முதல் 100 செ.மீ வரை 
 
 
 
 
 
131.  இந்தியாவில் அயனமண்டல வறண்ட காடுகள் என்பது?
விடை : ஒரு இடைநிலை வகைக் காடாகும்.
 
 
 
  
 
132. இந்தியாவில் அயன மண்டல வறண்டக் காடுகள் காணப்படும் பகுதிகள் எவை?
விடை : கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ராவின் கிழக்குப்பகுதி, தெலங்கானா, மேற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளில் அயன மண்டல வறண்டக் காடுகள் காணப்படுகின்றன. 
 
 
 
 
 
 
133. இந்தியாவில் அயன மண்டல வறண்ட காடுகளின் முக்கிய மரவகைகள் எவை?
விடை : இலுப்பை (mahua), ஆலமரம், ஆவாராம் பூ மரம் (Amaldas), பலா, மஞ்சக் கடம்பு (Haldu), கருவேலம் (Babool) மற்றும் மூங்கில் ஆகியவை அயன மண்டல வறண்ட காடுகளின் முக்கிய மரவகைகளாகும்.
 
 
 
 
 
பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்:       
134. பாலைவன காடுகளின் வேறு பெயர்? 
விடை : “முட்புதர் காடுகள்” என்றும் அழைப்பர்.
 
 
 
 
135. இந்தியாவில் பாலைவனக்  காடுகள் எப்படி காணப்படுகிறது? 
விடை : ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.  
 
 
 
 
136. இந்தியாவில் பாலைவன காடுகள் எந்தப் பகுதியில் காணப்படுகிறது?
விடை: வடமேற்கு இந்தியப் பகுதிகளான மேற்கு இராஜஸ்தான், தென்மேற்கு ஹரியானா, வடக்கு குஜராத் மற்றும் தென்மேற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும், தக்காண பீடபூமியின் கர்நாடகா, மகராஷ்ட்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன.
 
 
 
 
 
137.  இந்தியாவில் பாலைவன காடுகளில் வளரும் மரங்கள் எவை?
விடை: கருவேலம் (Babool), சீமை கருவேல மரம் (Kikar), ஈச்சமரம் போன்ற மரங்கள் பாலைவனக் காடுகளில் வளர்கின்றன.
 
 
 
 
 
அல்பைன் / இமயமலைக் காடுகள்
138. இமயமலைக் காடுகள் எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
 விடை: உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில்
 
 
 
 
139. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள கிழக்கு இமயமலைச் சரிவுகளில் 1200-2400 மீ உயரம் உள்ள பகுதிகளில் காணப்படும் இமயமலைக் காடுகளில்  காணப்படும் மரங்கள் எவை?
விடை: சால், ஓக், லாரஸ், அமுரா, செஸ்ட்நெட், சின்னமன் போன்ற மரங்கள் வளர்கின்றன.
 
 
 
 
140.  2400-3600 மீ உயரங்களில் உள்ள இமயமலை காடுகளில் காணப்படும் மரங்கள் எவை? 
விடை : ஓக், பிர்ச், சில்வர், பெர், பைன், ஸ்புரூஸ், ஜுனிப்பர் போன்ற மரங்கள் இமயமலைக் காடுகளில் காணப்படுகின்றன.
 
 
141. ஜம்மு காஷ்மீர் , இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப் பொழிவு உள்ள பகுதிகளில் சுமார் 900 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வளருபவை? 
விடை : அரை பாலைவனத் தாவரங்களான சிறு புதர் செடிகள், சிறு மரங்கள் போன்றவை வளருகின்றன. 
 
 
 
 
 
142. இமயமலை காடுகளில் சுமார் 900 -1800 மீ உயரம் உள்ள மலைகளில் அதிகமாக காணப்படுபவை?
விடை: சிர் எனப்படும் மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 
 
 
 
 
 
143. இமயமலை காடுகளில் மித வெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள்  பரவியுள்ள உயரம்?
 விடை: 1800 முதல் 3000 மீ உயரமுள்ள பகுதிகளில் பரவியுள்ளன.
 
 
 
 
 
அல்பைன் காடுகள்
144. இந்தியாவில் அல்பைன் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
விடை:  சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன.
 
 
 
 
 
145. இந்தியாவில் அல்பைன் காடுகள் எந்த மரங்களை கொண்டுள்ளன?
விடை : ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன.  
 
 
 
 
 
146. இந்தியாவில் அல்பைன் காட்டின் முக்கிய மரவகைகள் எவை?
 விடை : ஓக், சில்வர் பிர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள்  அல்பைன் காட்டின் முக்கிய மரவகைகளாகும். 
 
 
 
 
 
147.  இந்தியாவில் எந்தப் பகுதியில் அல்பைன் காடுகள் பரந்த அளவில் உள்ளன?
விடை: கிழக்கு இமயமலைப் பகுதியில் அல்பைன் காடுகள் பரந்த அளவில் உள்ளன.
 
 
 
 
 
அலையாத்திக் காடுகள்/ மாங்குரோவ் காடுகள்
148. இந்தியாவில் அலையாத்திக் காடுகள் எந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன? 
விடை : டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
 
 
 
 
 
149. இந்தியாவில் அலையாத்திக் காடுகள் ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் எப்படி அழைக்கப்படுகின்றன?
விடை: சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. 
 
 
 
 
 
150. உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள்  எங்கு அமைந்துள்ளன?
 விடை: கங்கை-பிரம்மப்புத்திரா டெல்டா பகுதிகளில் அமைந்துள்ளன.
 
 
 
 
 
151.  இந்தியாவில் அலையாத்திக் காடுகள்   காணப்படும் டெல்டா பகுதிகள் எவை?
 விடை: மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் காணப்படுகின்றன.
 
 
 
 
 
152. இந்தியாவில் அலையாத்திக் காடுகளின் வேறு பெயர்? 
விடை : “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.
 
 
 
 
 
2.5 வன உயிரினங்கள்
 
153. வன உயிரினங்கள் என்பது?
விடை: இயற்கைச் சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமாகக் கொண்டு வாழும் விலங்குகள் வன உயிரினங்கள் எனப்படுகின்றன. 
 
 
 
 
 
 
154. வன உயிரினங்கள் எத்தனை பிரிவுகளை உள்ளடக்கியது?
 விடை: இருபிரிவுகளை உள்ளடக்கியது.
1. முதுகெலும்பு உள்ளவை
2. முதுகெலும்பு இல்லாதவை. 
 
 
 
 
 
155. முதுகெலும்பு உள்ள வன உயிரினங்கள் எவை? 
விடை: மீன், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்
 
 
 
 
 
156. முதுகெலும்பு இல்லாத வன உயிரினங்கள் எவை? 
விடை: தேனீ, பட்டாம் பூச்சி மற்றும் அந்திப்பூச்சி
 
 
 
 
 
157. உலகில் அதிக வன உயிரினங்களையும், வன உயிரின வகைகளையும் கொண்ட நாடு?
விடை: இந்தியா
 
 
 
 
 
158. உலகில் எத்தனை வகையான வனவிலங்கு உயிரினங்கள் உள்ளன? 
விடை: 1.5 மில்லியன்
 
 
 
 
 
159. இந்தியாவில் எத்தனை வகையான வனவிலங்கு உயிரினங்கள் உள்ளன? 
விடை: 81,251க்கும் மேற்பட்ட வகையான வன விலங்கினங்கள் உள்ளன.
 
 
 
 
 
160. இந்தியா எந்தெந்த வன விலங்குகளின் வாழிடமாக திகழ்கிறது?
விடை:  புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, மலைப்பாம்பு, நரி, ஓநாய், கரடி, முதலை, காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகம், வரிக்குதிரை, காட்டுநாய், குரங்கு, பாம்பு, மான் வகை, காட்டு எருமை வகை, வலிமைமிக்க யானை வகை போன்ற வனவிலங்குகளின் வாழிடமாக இந்தியா திகழ்கிறது.
 
 
 
 
 
 
161. வன உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதற்கான காரணம்? 
விடை : வேட்டையாடுதல், காடழிப்பு மற்றும் இதர மனித குறுக்கீடுகளினால் வன விலங்குகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
 
 
 
 
 
இந்திய வனவிலங்கு வாரியம் 1952 (IBWL)
 
162. 1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு எது ?
விடை: இந்திய வனவிலங்கு வாரியம் ஆகும். 
 
 
 
 
 
 
163. இந்திய அரசு எப்போது வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது?
விடை: 1972 இல் இயற்றியது.
 
 
 
 
 
164. இந்திய அரசு 1972இல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை  இயற்றியதற்கான நோக்கம்?
விடை: வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும் சட்டவிரோத வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இயற்றியது.
 
 
 
 
 
165. இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க எத்தனை தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன? 
விடை:  102 தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
 
 
 
 
 
166. இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க எத்தனை வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன? 
விடை:  515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.
 
 
 
 
 
உயிர்க்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள்
 
167.  உயிர்க்கோள பெட்டகம் என்பது?
விடை: நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று. 
 
 
 
 
 
168. இந்திய அரசாங்கம் எத்தனை  உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது?
விடை: 18
 
 
 
 
 
169. இந்திய உயிர்க்கோள காப்பகத்தின் பணிகள் எவை?
விடை : இயற்கை வாழ்விடத்தின் பெரும் பகுதிகளைப் பாதுகாத்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய பூங்காக்களைப் பாதுகாத்தல் இவைகளின் பொருளாதார பயன்பாட்டு அண்மைப் பகுதிகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.
 
 
 
 
 
இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள்
170. இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பகத் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன? 
விடை: 11
 
 
 
 
 
171. யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பகத் திட்டத்தின் கீழ் செயல்படும் உயிர்க்கோள காப்பகங்கள் எவை? 
விடை: மன்னார்வளைகுடா, நந்தா தேவி, நீலகிரி, நோக்ரேக், பச்மாரி, சிம்லிபால், சுந்தரவனம், அகத்திய மலை,பெரிய நிக்கோபார், கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கண்டக்
 
 
 
 
 
BOX INFORMATION 
172. சமச்சீர் காலநிலையின் வேறு பெயர்? 
விடை: பிரிட்டிஷ் காலநிலை
 
 
 
 
 
173. புவியில் சமச்சீர் காலநிலை என்பது?
விடை: அதிக வெப்பமுடையதாகவோ அல்லது மிகக்குளிருடையதாகவோ இருக்காது.  
 
 
 
 
 
174. வானிலை என்பது?
விடை : ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும். 
 
 
 
 
 
175. காலநிலை என்பது?
விடை:  ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
 
 
 
 
 
176. உலகில் மிக அதிக அளவு மழை பெறும் பகுதி எது? 
விடை: மௌசின்ராம் (Mawsynram)
 
 
 
 
 
177. மௌசின்ராம் (Mawsynram) பெறும் மழை அளவு? 
விடை: 1141 செ.மீ
 
 
 
 
 
178. மௌசின்ராம் (Mawsynram) எங்கு அமைந்துள்ளது? 
விடை: மேகாலயா
 
 
 
 
 
179. இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
விடை: 1973இல் தொடங்கப்பட்டது.
 
 
 
 
 
180. இந்தியாவில் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டதற்கான நோக்கம்?
 விடை: புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.
 
 
 
 
 
பயிற்சி 
சரியான விடையைத் தேர்வுசெய்க
1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி _____
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) பஞ்சாப்
ஈ) மத்தியப் பிரதேசம்
விடை: இ) பஞ்சாப்
 
 
 
 
 
2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ______ காற்றுகள்  உதவுகின்றன.
அ) லூ
ஆ) நார்வெஸ்டர்ஸ் 
இ) மாஞ்சாரல்
ஈ) ஜெட் காற்றோட்டம்
விடை: இ) மாஞ்சாரல்
 
 
 
 
3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு _____ ஆகும்.
அ) சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக் கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்
விடை: ஆ) சம மழைக்கோடுகள்
 
 
 
 
 
4.  இந்தியாவின் காலநிலை _____ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
அ) அயன மண்டல ஈரக் காலநிலை
ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை
இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
ஈ) மித அயனமண்டலக் காலநிலை
விடை: இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
 
 
 
 
 
 
5.  பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்
விடை: ஆ) இலையுதிர்க் காடுகள்
 
 
 
 
 
 
6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் _____.
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
 ஈ) கர்நாடகா
விடை: ஆ) ஆந்திரப் பிரதேசம்
 
 
 
 
 
7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது _____.
அ) நீலகிரி
ஆ) அகத்திய மலை
இ) பெரிய நிக்கோபார்
 ஈ) கட்ச்
விடை: ஈ) கட்ச்
 
 
 
 
 
II.  பொருத்துக. 
1. சுந்தரவனம்    1. பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்
 
2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் 2. அக்டோபர், டிசம்பர்
 
3. வடகிழக்குப் பருவக் காற்று            3. கடற்கரைக் காடுகள்
 
4. அயன மண்டல முட்புதர் காடுகள் 4. மேற்கு வங்காளம் 
 
5. கடலோரக் காடுகள் 5. இமயமலைகள
 
விடை: 4 3 5 1 2
 
 
 
 
III.   கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. கூற்று: இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
 காரணம்: இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றுக்கான காரணம் சரி
 
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றுக்கான காரணம் தவறு.
 
இ) கூற்று சரி காரணம் தவறு
 
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
 
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றுக்கான காரணம் சரி
 
 
 
 
 
V . பொருந்தாத விடையைத் தேர்வு செய்க
1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது. 
அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா
விடை: அ) பாலைவனம்
 
 
 
 
 
2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அ) அட்ச பரவல்
ஆ) உயரம்
இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
ஈ) மண்
விடை: ஈ) மண்
 
 
 
 
 
V . சுருக்கமாக விடையளிக்கவும்
1. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
 
2. “வெப்ப குறைவு விகிதம்” என்றால் என்ன?
 
3. “ஜெட் காற்றோட்டங்கள்”” என்றால் என்ன?
 
4. பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக. 
 
5. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக..
 
6. ‘பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?
 
7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
 
8. இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.
 
9. இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
 
 
 
 
 
VI. வேறுபடுத்துக
1. வானிலை மற்றும் காலநிலை.
 
2. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
 
3. வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.
 
 
 
 
VII . காரணம் கண்டறிக
1. மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது. 
 
2. இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
 
3. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.
 
 
 
 
 
VIII. விரிவான விடையளிக்கவும்
1. தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக. 
 
2. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
 
 
 
 
IX.  வரைபடப் பயிற்சி
இந்திய நிலவரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை. 
 
2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை. 
 
3. அதிக மழை பெரும் பகுதிகள்.
 
4. மலைக் காடுகள்.
 
5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
 
6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்
Join the conversation